விக்கிப்பீடியா பேச்சு:மேம்பாடு/2024

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாட்டிற்காக சில பணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்கானக் காரணங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. பயனர்களின் கருத்துகள் / பரிந்துரைகளின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டிற்கான திட்டத்தில் மாற்றங்களைச் செய்துகொள்வோம்.

எண் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியும் அதற்கான காரணமும்
1 சனவரி 2024 2017 ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்கள் உருவாக்கிய கட்டுரைகளில் பெரும்பாலானவை சரிபார்க்கப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 730 கட்டுரைகளில் 365 கட்டுரைகளை சரிபார்க்கும் பணி முதல் மாதத்திற்காக கருதப்பட்டுள்ளது. நாள்தோறும் 12 கட்டுரைகளைக் கையாண்டால், இது சாத்தியப்படும்.
2 ஏப்ரல், மே, சூன் 2024 (இரண்டாம் காலாண்டு) 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 1,200 கட்டுரைகளில் சற்றேறக்குறைய 300 கட்டுரைகள் சரிபார்க்கப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டுள்ளன. 16-டிசம்பர்-2023 அன்றைய நாளின்படி, 887 கட்டுரைகள் சரிபார்க்கப்பட்டு, செம்மைப்படுத்தப்படல் வேண்டும். நாள்தோறும் 2 கட்டுரைகள் எனும் இலக்கோடு செயலாற்றினால், 91 நாட்களில் 182 கட்டுரைகளை (20.5%) கையாள இயலும்.
3 சூலை 2024 சனவரி மாதத்துப் பணியை தொடர்ந்து இந்த மாதத்திலும் செய்தால், 365 எனும் எண்ணிக்கையை சுழியம் ஆக்கிவிடலாம். நாள்தோறும் 12 கட்டுரைகளைக் கையாண்டால், இது சாத்தியப்படும்.
4 ஆகத்து 2024 கலைக்களஞ்சியக் கட்டுரைகளின் மிக முக்கியமான கூறு, மேற்கோள்கள் / சான்றுகளைக் கொண்டிருப்பதாகும். 17-டிசம்பர்-2023 அன்றைய நிலவரப்படி, மேற்கோள் சுட்டுதல் அல்லது ஆதாரம் இணைக்கப்படாத கட்டுரைகளின் எண்ணிக்கை சுமார் 6,900 ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவின் மொத்தக் கட்டுரைகளில் இது 4.28% ஆகும். 7,000 கட்டுரைகளில் மேற்கோள்களை இணைப்பது என்பது மிகப் பெரிய பணி. இப்பணியை எதிர்வரும் காலங்களில் செய்துமுடிப்பதற்கான ஒரு பயிற்சியாக இந்த மாதத்தில் ஆரம்பகட்டப் பணிகளைச் செய்யலாம். ஒரு புரிதல் ஏற்பட உதவிகரமாக இருக்கும்.
5 செப்டம்பர் 2024 ஆண்டுதோறும் நடக்கும் சிறப்பு நிகழ்வான விக்கி மாரத்தான் இந்த மாதத்தில் நடத்தப்படும்.
6 அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2024 (நான்காம் காலாண்டு) இரண்டாம் காலாண்டில் நடக்கவிருக்கும் பணியானது நான்காம் காலாண்டிலும் தொடரும். 705 எனும் எண்ணிக்கையிலிருந்து 521 எனும் எண்ணிக்கையாக குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாள்தோறும் 2 கட்டுரைகள் எனும் இலக்கோடு செயலாற்றினால், 92 நாட்களில் 184 கட்டுரைகளை (26.1%) கையாள இயலும்.

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:51, 23 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

சிறப்பான திட்டமிடல், எனது சில ஆலோசனைகள்
  • புதிய பயனர்களை பங்களிக்கச் செய்வதும் தேவையான ஒன்று அது குறித்தும் திட்டமிடல் தேவை. ஏதேனும் ஒரு மாதம் அதற்காக ஒதுக்கலாம்.
  • அந்தந்த மாதம் நடைபெறக் கூடிய நிகழ்விற்கு அறிவிப்புப் பலகை இடலாம். இதன்மூலம் இந்த உரையாடல் பற்றி அறியாதவர்கள் தொகுக்க வாய்ப்புள்ளது.
  • நிகழ்வின் முதல் வாரத்தில் ஒரு நாள் இணைய வழிக் கலந்துரையாடல் நிகழ்த்தினால் மற்றவர்களின் தேவை, கருத்துக்களை அறிய வாய்ப்புள்ளது.
நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 05:01, 22 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

@Sridhar G: தங்களின் பரிந்துரைகளுக்கு மிக்க நன்றி! அந்தந்த மாதத்தில் அறிவிப்புப் பலகை இடுதல், முதல் வாரத்தில் இணைய வழிக் கலந்துரையாடல் ஆகியனவற்றை செயல்படுத்துவோம். புதிய பயனர்கள் என நீங்கள் குறிப்பிடுவது கடந்த ஓராண்டு அல்லது ஈராண்டுகளாக பங்களித்து கற்றுவருபவர்களா? அல்லது முற்றிலும் புதிய பயனர்களா? ஏற்கனவே பங்களித்து வரும் புதிய பயனர்களை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் எனில், கட்டுரைகளில் மேற்கோள் சேர்க்கும் பணியில் அவர்களை பங்களிக்கச் செய்யலாம் என்பது எனது எண்ணம். ஏனெனில், இந்தப் பணிக்கு நிர்வாக அணுக்கம் அவசியமன்று. அவர்களுக்கு நல்லதொரு பயிற்சியாகவும் அமையும். அவர்களுக்கு விருப்பமான துறைசார் கட்டுரைகளை எடுத்துச் செய்யுமாறு வழிகாட்டலாம். சூலை 2024 மாதத்திற்கு திட்டமிடப்பட்டிருக்கும் இப்பணியை சனவரி 2024 மாதத்திற்கு நாம் நகர்த்திக்கொள்ளலாம். இது குறித்து உங்களுக்கு வேறு ஏதும் யோசனைகள் இருந்தால் தெரிவியுங்கள். முற்றிலும் புதிய பயனர்கள் எனில், யோசனைகளை தந்து உதவுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:24, 23 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

இற்றை[தொகு]

தற்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப, திட்டமிடப்பட்ட பணிகள் சற்றே மாற்றியமைக்கப்பட்டன. மார்ச் 31 அன்று போட்டி முடிந்ததும், கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை மேம்படுத்துவது கடினமாக இருக்கக்கூடும். எனவே, ஆசிரியர்கள் எழுதியக் கட்டுரைகளை ஏப்ரல் மாதத்தில் எடுத்துக்கொள்வோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:34, 8 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். மிக நீண்ட காலமாகவே குறையாகவுள்ளது. வேண்டுமாயின் சில மாற்றங்கள் செய்யலாம். எ.கா: முழு கட்டுரையாகத் திருத்தாமல், 300 - 500 சொற்கள் கொண்ட கட்டுரையாக மாற்றல். AntanO (பேச்சு) 14:40, 8 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
உங்களின் கருத்திற்கு நன்றி. திட்டங்களின் பட்டியலை பழைய நிலைக்கு கொண்டுவந்துள்ளேன். கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்தும் பணியில் பொதுவாக ஆர்வம் குறைவாக இருப்பதால், சற்று தள்ளிப்போடலாம் என நினைத்தேன். உங்களின் கருத்தைப் பார்த்ததும் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். தொடர்ந்து கல்லை நகர்த்திக்கொண்டே இருப்போம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:03, 8 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
//தொடர்ந்து கல்லை நகர்த்திக்கொண்டே இருப்போம்.// 👍 விருப்பம் ~AntanO4task (பேச்சு) 15:04, 8 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]