பயனர் பேச்சு:Sriveenkat

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Sriveenkat, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- குறும்பன் (பேச்சு) 16:31, 27 சனவரி 2023 (UTC)[பதிலளி]

தானியங்கித் தமிழாக்கம்[தொகு]

--AntanO (பேச்சு) 07:04, 3 பெப்ரவரி 2023 (UTC)

சரி AntanO அவர்களே Sriveenkat (பேச்சு) 12:40, 3 பெப்ரவரி 2023 (UTC)

உங்கள் கட்டுரைகள் தானியங்கி மொழிபெயர்ப்பியினால் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை விரைந்து திருத்துங்கள், இல்லையேல் அனைத்தும் நீக்கப்படும் வாய்ப்புள்ளது.--Kanags \உரையாடுக 23:33, 8 பெப்ரவரி 2023 (UTC)
சரி ஶ்ரீ.வேகி (பேச்சு) 15:10, 9 பெப்ரவரி 2023 (UTC)

"BCE" தமிழாக்கம்[தொகு]

"BCE" ஆங்கிலத்தில் ஆண்டுகளை குறிப்பதற்கு இதை தமிழாக்கம் தமிழ் விக்சனரி இல்லை. BC தமிழாக்கம் கி.மு ஆனால் இதற்கு எனக்கு தெரியவில்லை உதவி செய்யுங்கள்ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 18:29, 23 பெப்ரவரி 2023 (UTC)

April 2023[தொகு]

தகவற் படவுரு வணக்கம், அண்மையில் நீங்கள் எந்த விளக்கத்தையும் தராமல் உள்ளடக்கத்தை நீக்கியுள்ளீர்கள். எதிர்காலத்தில் உள்ளடக்கத்தை நீக்கும்போது பொருத்தமான தொகுப்புச் சுருக்கத்தை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் தவறுதலாக இவ்வாறு செய்திருந்தால் வருந்தவேண்டாம். நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை நான் மீட்டெடுத்துள்ளேன். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. நந்தகுமார் (பேச்சு) 05:58, 30 ஏப்ரல் 2023 (UTC)

சரி நான் இனிமேல் நீக்கும்பொழுது தொகுப்பின் சுருக்கத்தில் சரியாகத் தெரிவிக்கிறேன். நான் எப்பொழுதும் சுருக்கத்தில் தெரிவிப்பேன் மறந்து விட்டேன் மன்னிக்கவும். நன்றி @நந்தகுமார் ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 07:12, 30 ஏப்ரல் 2023 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 12:24, 1 மே 2023 (UTC)[பதிலளி]

May 2023[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 08:58, 2 மே 2023 (UTC)[பதிலளி]

வணக்கம், Sriveenkat!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 08:59, 2 மே 2023 (UTC)[பதிலளி]

@AntanO தெளிவாக கூறவும் எனக்கு விளங்கவில்லை. ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 09:07, 2 மே 2023 (UTC)[பதிலளி]
@AntanO இப்பொழுது நான் புரிந்து கொண்டேன், கவனிப்பு பட்டியலை பார்த்த பிறகு. அதையும் நான் இப்பொழுதே சரி செய்கிறேன். உங்கள் வழிகாட்டுதல் எனக்கு படிக்கட்டுகளாக இருக்கட்டும். நீங்கள் முன்பு கொடுத்த எனக்கு வழிகாட்டுதல் தானியங்கித் தமிழாக்கம், இப்பொழுது நாம் ஓரளவிற்கு தமிழாக்கம் செய்ய கற்றுக்கொண்டு உள்ளேன், என்னது தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்டினால் நான் அதை திருத்திக்கொள்வேன் நன்றி. ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 09:16, 2 மே 2023 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும், [தமிங்கிலம்] --AntanO (பேச்சு) 04:00, 3 மே 2023 (UTC)[பதிலளி]

தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம்.

இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். AntanO (பேச்சு) 03:53, 6 மே 2023 (UTC)[பதிலளி]

வணக்கம் AntanO நான் தற்போது ஒரு புதிய கட்டுரையை உருவாக்கியுள்ளேன். அவற்றை ஏதாவது சிக்கல்கள் இருந்தால் தெரிவியுங்கள். நான் தெரியாமல் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள நான் கடமைப்பட்டுள்ளேன். இனிமேல் அது போன்ற தவறுகளை அறவே தவிப்பேன். மன்னியுங்கள் நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 05:19, 20 செப்டம்பர் 2023 (UTC)

விக்கி மாரத்தான் 2023[தொகு]

வணக்கம். இங்கு காணுங்கள்: விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2023/பேச்சுக் கட்டுரைகள். வாழ்த்துகள்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:06, 23 செப்டம்பர் 2023 (UTC)

தங்களுடைய பரிந்துரைகளுக்கு நன்றி. சிறப்பான கட்டுரைகளை நீங்கள் பரிந்துரைத்துள்ளீர்கள். இன்று முதல் மாரத்தான் எனக்கு துவங்குகிறது :) நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 07:09, 23 செப்டம்பர் 2023 (UTC)

உங்களின் பார்வைக்கு: பயனர்களின் விருப்பம்/ இலக்கு/ திட்டம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:12, 26 செப்டம்பர் 2023 (UTC)

விக்கித் திட்டம் கருநாடக இசை[தொகு]

வணக்கம். இந்தத் திட்டத்திலும் உங்களின் பங்களிப்பைச் செய்யலாம். காப்புரிமைச் சட்டத்தின்படி, 30 நொடிகளுக்குள் மட்டுமே இருக்கவேண்டும் என்பதனை நினைவிற் கொள்ளுங்கள்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:53, 2 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m சரி கண்டிப்பாக பங்களிக்கிறேன். காப்புரிமை உள்ள இசை கோப்புகளை பதிவேற்ற நான் விரும்பவில்லை, ஆனால் நான் காப்புரிமையற்ற (பொது உரிமைப் பரப்பு) இசைகளை பொதுவகத்திலேயே பதிவேற்றுகிறேன். இந்தியாவில் Audiovisual-கள் அனைத்தும் 60 வருடங்களில் காப்புரிமை காலாவதி ஆகிவிடும். ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 05:43, 11 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

நகர்த்தல்[தொகு]

தாங்கள் உருவாக்கிய பக்கம் விக்கிப்பீடியா:கோரப்படும் விக்கி பேச்சுக் கட்டுரைகள் என்பதற்கு நகர்த்தப்பட்டுள்ளது. நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 08:40, 10 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

@Sridhar G நன்றி. நான் தற்போது பேச்சு விக்கிப்பீடியா கட்டுரைகளை உருவாக்கி வருகிறேன். நீங்கள் விரும்பும் கட்டுரைகளை நீங்கள் எனக்கு பரிந்துரைக்கலாம். எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது அவற்றினை உருவாக்குவேன். நீங்கள் விரும்பும் கட்டுரையை எனக்கு பரிந்துரைங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 08:57, 10 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
முதற்பக்கக் கட்டுரைகளுக்கு உருவாக்குங்கள். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 09:00, 10 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

தானியங்கி தமிழாக்கம்[தொகு]

தானியங்கி தமிழாக்கத்தை கொண்டு இயல்பாக திருத்தப்படாத கட்டுரைகள் உடன் நீக்கப்படும். இயல்பாக எழுதக்கூடிய இடங்களில் கிரந்தம் திணிக்க வேண்டாம். தமிங்கிலம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். தயவுசெய்து வழிகாட்டல்களை ஊதாசீனம் செய்ய வேண்டாம். AntanO (பேச்சு) 03:18, 11 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

@AntanO மாடலிங் என்பதை நாம் எப்படி தமிழாக்கம் செய்ய வேண்டும்? தானியங்கி தமிழாக்கத்தை கொண்டு இயல்பாக திருத்தப்படாத கட்டுரைகள்? ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 03:26, 11 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
மாடலிங் என்பது தமிங்கிலம். தமிழ்ச்சொல் அல்ல. அகராதிகளில் அதற்கான தமிழ்ச்சொல்லைக் காணலாம். நீங்கள் எவ்வாறு மொழிபெயர்க்கிறீர்கள்? AntanO (பேச்சு) 03:30, 11 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வரும் புதியவர்களுக்கு தமிங்கிலம் தவிர்ப்பது எப்படி என்பது தெரியாது (உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்ளுங்கள்). மாடலிங் சொல்லை கொண்டு பல கட்டுரையை உள்ளது. [1] நீங்கள் கூறுவதுபோன்று இவை எல்லாம் மாற்றப்படவேண்டும் தமிங்கிலம் தவிர்ப்பது எப்படி என்பதை விரிவாக்க உதவி பக்கமாக ஆவணப்படுத்தவும். நன்றி. //அகராதிகளில் அதற்கான தமிழ்ச்சொல்லைக் காணலாம்// எந்த அகராதி?
//நீங்கள் எவ்வாறு மொழிபெயர்க்கிறீர்கள்?// அண்மையில் நான் தானியங்கி மொழிபெயர்ப்பு இல்லாமல் மொழிபெயர்க்க முயற்சிக்கிறேன். சில நேரங்களில் நான் அடிப்படைக்கு தானியங்கி மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துகிறேன். ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 03:41, 11 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
வரிக்கு வழி வழிகாட்டல் என்பது இங்கு சற்று சிரமமானது. தமிழ் தெரிந்த ஒருவருக்கு தமிழில் எழுதுவது என்பது சிரமமல்ல. தமிழ் எது தமிங்கிலம் எது என்ற  குழப்பமும் அவருக்கு இருக்காது. உங்களுக்கு இயல்பாக எழுத முடியாவிடின் மணல் தொட்டியில் பயிற்சி பெற்ற பின் பொது வெளியில் தொகுக்கலாம். AntanO (பேச்சு) 03:49, 11 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
@Sriveenkat: மாடலிங் - வடிவழகி. மாடலிங் பயிற்சி என்ற சொல்லிற்கு வடிவழகுப் பயிற்சி என்று எழுத வேண்டும். பல கட்டுரைகளில் உள்ள மாடலிங் என்ற சொல்லைத் திருத்த வேண்டும். ஒரு சில கட்டுரைகளில் ஒப்புரு வடிவழகி என்றும் பயன்படுத்தியுள்ளனர்-- சா. அருணாசலம் (பேச்சு) 04:02, 11 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
@சா அருணாசலம் உங்கள் கனிவான பதிலுக்கு நன்றி! :) ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 04:18, 11 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
அகராதி எனக் குறிப்பிடப்படுவது Dictionary. உதாரணமாக தமிழ் விக்சனரியை காணலாம். modelling. ஆங்கிலச் சொற்களை தமிழாக்கம் (translation) செய்யவேண்டும். எழுத்துப்பெயர்ப்பு (transliteration) செய்யக்கூடாது. modelling எனும் ஆங்கிலச் சொல்லை அப்படியே எழுத்துப்பெயர்ப்பு செய்து மாடலிங் என எழுதக் கூடாது. இவற்றையே அன்ரன் குறிப்பிட்டுள்ளார். 20 ஆண்டுகளாக பல்வேறு காலச்சூழல்களில் பலர் எழுதி வந்துள்ளனர். பிழையாக இருப்பவனவற்றை திருத்துவதும் எங்கெல்லாம் மேம்பாடு தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் செய்வதும் நமது கடமை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:41, 11 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
வணக்கம்@Sriveenkat இது தொடர்பாக இங்கு மேலும், என் எண்ணங்களை வெளிபடுத்துகிறேன்...@சா அருணாசலம் நன்றி. மகிழ்ச்சி. சேலம் மாவட்டத்தில், 'வடிவு' என்று பெண்களுக்குப் பெயர் வைப்பதுண்டு. 'சாயல்' என்ற சொல்லினைக் கொண்டு, இதற்கு மேலும் ஒரு சொல் உருவாக்க இயலுமா? எடுத்துக்காட்டு, குழுந்தை அம்மா சாயலில் உள்ளது.பறநானூறு: திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே, மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து எனவே, 'சாயலழகி' எனப் பரிந்துரைக்கிறேன். சாயம் பூசும் அழகி! உழவன் (உரை) 04:46, 11 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
@Info-farmer: சாயலழகி இதுகுறித்து விக்கிப்பீடியா:ஆலமரத்தடி புதிய கருத்துக்களில் பதிவிடுங்கள். பயனர்களின் ஒப்புதலோடு அச்சொல்லைப் பயன்படுத்தலாம்.-- சா. அருணாசலம் (பேச்சு) 07:00, 11 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
ஆம். உரிய கட்டுரைகள் உருவாகும் என நம்புகிறேன். அப்பொழுது அதனதன் பேச்சுப்பக்கத்தில் தொடர்வோம்.அனைவருக்கும் நன்றி. உழவன் (உரை) 02:03, 12 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
@சா அருணாசலம்: சாயலழகி என்பது முற்றிலும் பொருத்தமற்றது என்பது எனது பார்வை. தவிர, ஆண்களும் Modelling செய்கிறார்கள். விக்சனரியில் தரப்பட்டுள்ள விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு கலைச்சொல்லை உருவாக்குதல் நல்லது. தேவையெனில் பொதுவானதொரு பக்கத்தில் தொடர்ந்து உரையாடலாம். இன்னொரு தகவல்: இலங்கைத் தமிழர்கள், அழகைக் குறிக்க வடிவு எனும் சொல்லை பயன்படுத்துகிறார்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:42, 11 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

அதிகப்படியான சிவப்பு இணைப்புகள்[தொகு]

அதிகப்படியான சிவப்பு இணைப்புகள் கட்டுரைகளின் இணைப்பது தவிர்க்கப்பட வேண்டியது. காண்க: ஜீ திரைப்பட விருதுகள் ~AntanO4task (பேச்சு) 06:35, 21 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

தகவல்[தொகு]

வணக்கம். வடலூர் நகராட்சி எனும் கட்டுரை இருக்கிறது. எனவே, வடலூர் கட்டுரையில் நீங்கள் செய்துள்ள மாற்றங்களைத் திருத்தியுள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:08, 2 சனவரி 2024 (UTC)[பதிலளி]

உதவிக் குறிப்புகளுக்கு உதவி:தமிழ்நாடு அரசின் நிருவாகம் தொடர்பான கட்டுரைகளுக்கான வழிகாட்டல்கள் எனும் பக்கத்தில், உள்ளடக்கத் தகவல்கள், பகுப்புகள் ஆகிய தலைப்புகளின் கீழ் காணுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:43, 2 சனவரி 2024 (UTC)[பதிலளி]

சரி நன்றி நண்பரே :) ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 12:54, 2 சனவரி 2024 (UTC)[பதிலளி]

மீண்டும்[தொகு]

இது குறித்து முன்னரும் ஒரு தடவை குறிப்பிட்டிருக்கிறேன். மீண்டும் நினைவு படுத்துகிறேன். கட்டுரையின் தொடக்கப் பகுதியில்; தமிழ்த் தலைப்பு தடித்த எழுத்திலும், கட்டுரை வேறு மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டிருந்தால், அதன் ஆங்கிலத் தலைப்பும், அவசியமானால் தாய்மொழித் தலைப்பும் அடைப்புக் குறிகளுக்குள் எழுதப்பட வேண்டும் என்பது விதிமுறை. எடுத்துக்காட்டுக்குப் இதனைப் பாருங்கள். மேற்கோள்கள் தவிர்த்து வேறு எந்த இடத்திலும் ஆங்கிலச் சொற்கள் இருத்தல் கூடாது. நீங்கள் எழுதும் ஒவ்வொரு கட்டுரையையும் மற்றவர் திருத்திக் கொண்டிருக்க முடியாது.--Kanags \உரையாடுக 10:11, 9 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

வணக்கம் @Kanags, சரி பின்பற்றுகிறேன் நான் உருவாக்கிய கட்டுரைகளிலும் இதுபோன்று மாற்றிவிடுகிறேன்/
// இது குறித்து முன்னரும் ஒரு தடவை குறிப்பிட்டிருக்கிறேன். // நீங்கள் எனது பேச்சுப் பக்கத்தில் குறித்து முதல் முறை கூறுகிறீர்கள். நீங்கள் எந்தப் பக்கத்தைப் கூறினீர்கள்? தெளிவுபடுத்திக் கொள்வதற்காக கேட்கிறேன். ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 15:30, 9 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
மன்னிக்கவும், அது உங்களுக்கு எழுதவில்லை, வேறு ஒரு பயனருக்கு எழுதியிருந்தேன்.--Kanags \உரையாடுக 11:18, 11 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

ஐயம்[தொகு]

வணக்கம். உங்களின் பெயரை ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் என்பதாக கையொப்பம் இடுகிறீர்கள். தமிழில் எழுதும்போது கிருஷ்ணன் (அல்லது) கிரந்தம் தவிர்த்து, கிருட்டிணன் என்றே எழுதுகிறார்கள். நீங்கள் கவனிக்கவில்லையா அல்லது ண் எனும் எழுத்தை இடுவதற்கு தனிப்பட்ட காரணம் ஏதேனும் உள்ளதா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:26, 27 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

நான் கவனிக்கவில்லை மாற்றப்பட்டது. ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 03:37, 27 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

பக்க நகர்த்தல்[தொகு]

வணக்கம், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி என்பதனை கலர்சு தமிழ் தொலைக்காட்சி என நகர்த்தியுள்ளீர்கள். பக்கத்தை நகர்த்தும் முன் குறிப்பாக கிரந்தத் தவிர்ப்பு போன்ற சூழல்களில் தகுந்த உரையாடலுக்குப் பின் இணக்கச் சூழல் எட்டப்பட்டால் மாற்றவும். நன்றி-- ஸ்ரீதர். ஞா (✉) 04:20, 27 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

Y பின்பற்றுகிறேன் ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 04:34, 27 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

சி. விசயதரணி[தொகு]

வணக்கம். இந்தக் கட்டுரையை விரிவாக்கம் செய்தமைக்கு நன்றி. கட்டுரையின் ஆரம்பத்திலிருக்கும் அறிமுகத்தைக் கவனித்தீர்களா? மிக நீண்டதாக உள்ளது. முதலில் சுருக்கமான அறிமுகத்தைத் தந்தால், நன்றாக இருக்கும். இந்த வாக்கியத்தை நீங்கள் உருவாக்காவிட்டாலும், வாய்ப்பிருந்தால் உரைத் திருத்தம் செய்யுங்கள். நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:16, 9 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 22:20, 10 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

அம்ஜத் அலி (அசாம் அரசியல்வாதி)[தொகு]

வணக்கம், அம்ஜத் அலி (அசாம் அரசியல்வாதி) கட்டுரையினைச் சிறப்பாக உருவாக்கியுள்ளீர்கள் வாழ்த்துகள். இந்தத் திருத்தங்களும் உங்களது எதிர்காலப் பங்களிப்பிற்கு உதவலாம். அதிக முறை ஒரு கட்டுரையில் இவர் எனும் சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 09:33, 21 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 02:07, 22 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்துதல்[தொகு]

வணக்கம். இந்தத் திட்டத்தில் உங்களையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றி. இப்பணி உங்களுக்குப் புதியது என்பதால், வழிகாட்டல், செயலாக்கம் ஆகிய குறிப்புகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் எடுத்துக்கொள்ளவிருக்கும் கட்டுரைத் தலைப்புகளையும் இங்கு பதிவு செய்யலாம். இச்செயல் மற்றவர்களை உற்சாகப்படுத்தும்; வாழ்த்துகள்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:57, 2 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

சரி, கொஞ்சம் படித்துவிட்டு தான் இணைந்தேன். ஓரிரு வாரம் கழித்து இத்திட்டத்தில் செயல்படத் திட்டமிட்டு உள்ளேன். உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி! :) ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 14:39, 2 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

கருத்து[தொகு]

வணக்கம். யசோதை கட்டுரையில் 'சான்றில்லை' எனும் வார்ப்புருவை நீங்கள் இட்டது சரியே. ஏனெனில் பாகவத புராணத்தை பொத்தாம்பொதுவாக ஒரு உசாத்துணையாக கருத இயலாது. பாகவத புராணத்தை ஒரு உசாத்துணையாகக் கருதினால்... திருக்குறள், இராமாயணம், மகாபாரதம் என உசாத்துணையாக இட ஆரம்பித்துவிடுவர்! உசாத்துணையாக ஒரு நூலினைக் கருதலாம். ஆனால், முழு விவரங்களை இடவேண்டும். எடுத்துக்காட்டு: குழிக்கரை காளிதாஸ் பிள்ளை எனும் கட்டுரை.

அங்கு இவ்வாறு காணலாம்: //உசாத்துணைகள்: * பக்கம் எண்கள்:200 - 203, பி. எம். சுந்தரம் எழுதிய மங்கல இசை மன்னர்கள் நூல் (முதற் பதிப்பு, டிசம்பர் 2013; வெளியீடு: முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - 17.) // மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:11, 5 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m ஆமாம் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன், தமிழ் விக்கிப்பீடியாவின் உசாத்துணை புரிதல் எனக்கு அதிகமாக இல்லை (தொகுப்பை திரும்பிப் பெற்றுக் கொண்டதற்கான ஒரு காரணம்), நான் திரும்பி பெற்ற கொண்ட தொகுப்பை முன்னிலையாக்கி விடுங்கள்.
// விக்கித்தரவு // மங்கல இசை மன்னர்கள் நூலை விக்கித்தரவில் மேம்படுத்தியுள்ளேன். நன்றி! ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 13:18, 5 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sriveenkat&oldid=3922461" இலிருந்து மீள்விக்கப்பட்டது