பயனர் பேச்சு:Balu1967

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருளடக்கம்

வாருங்கள்!

வாருங்கள், Balu1967, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


ஐயா, புதுப் பயனர் கட்டுரைப் போட்டியில் ஒரு புதுப்பயனர் எழுதிய கட்டுரைகளை பிற புதுப் பயனர் அறிய இயலவில்லை. உதாரணம் நான் எழுதிய நிர்மலாதேஷ்பாண்டே என்ற கட்டுரையை நான் சேமிப்புப் பக்கத்தில் சேமிக்க செல்லும் போது தான் வருகிறது. இதற்கு மாற்று வழி ஏதேனும் இருந்தால் உதவுங்கள். புது பயனர்களுக்கு உதவியாக இருக்கும்.

தங்களின் கோரிக்கையை பரிந்துரை செய்கிறேன். இதற்கான வழியை நாளைக்கு சொல்லுகிறேன். நீங்கள் அடுத்த கட்டுரையை எழுதுவதற்கான பணியைப் பாருங்கள். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:45, 12 சனவரி 2019 (UTC)
வணக்கம் @Balu1967: உங்களுக்கு முன்னெரே அக்கட்டுரை வந்ததால் உங்கள் கட்டுரையை நடுவர் குழு ஏற்காது என நினைக்கிறேன். உங்கள் கேள்விக்கான பதிலை இங்கே கொடுத்துள்ளேன் மேலும் சந்தேகமிருந்தால் அங்கே கேட்கவும். அன்புடன் - நீச்சல்காரன் (பேச்சு) 19:40, 12 சனவரி 2019 (UTC)

காட்டு ரோஜா[தொகு]

வணக்கம். காட்டு ரோஜா எனும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே இருக்கிறது. எனவே அக்கட்டுரையை நீங்கள் விரிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளை விரிவுபடுத்தினாலும் அதுவும் போட்டியில் கணக்கில் கொள்ளப்படும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:44, 19 சனவரி 2019 (UTC)

வணக்கம், பெயர்களை முதலெழுத்துகளுடன் எழுதும் போது, ஒவ்வொரு முதலெழுத்துகளின் இடையிலும் ஒரு இடைவெளி கட்டாயம் வரவேண்டும். உ+ம்: ஆர்.எஸ்.மனோகர் என எழுதுவது தவறு. அது ஆர். எஸ். மனோகர் என எழுத வேண்டும். பொதுவாகவே அனைத்து மொழிகளிலும் இரு சொற்களுக்கிடையே இடைவெளி வரவேண்டும். பத்மினி(நடிகை) என எழுதுவது தவறு. பத்மினி (நடிகை) என எழுதவேண்டும்.--Kanags (பேச்சு) 21:57, 19 சனவரி 2019 (UTC)

தவறினை சுட்டியமைக்கு நன்றி இனி எழுதும் கட்டுரையில் இதை கடைபிடிக்கிறேன்.

தகவலுக்காக...[தொகு]

கவிதா (1962 திரைப்படம்) எனும் கட்டுரையை இன்னொரு புதுப் பயனர் ஏற்கனவே எழுதியிருக்கிறார். எனவே உங்களின் கட்டுரை அக்கட்டுரையுடன் இணைக்கப்படும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:53, 21 சனவரி 2019 (UTC)

பதக்கம்[தொகு]

Wiki Lei Barnstar Hires.png அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரைகளை ஆர்வமுடன் எழுதிவருவதற்கு நன்றி பாராட்டி, இந்தப் பதக்கத்தை வழங்குகின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:26, 22 சனவரி 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:16, 22 சனவரி 2019 (UTC)
👍 விருப்பம்--- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:33, 22 சனவரி 2019 (UTC)
👍 விருப்பம்--அருளரசன் (பேச்சு) 04:35, 22 சனவரி 2019 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 04:41, 22 சனவரி 2019 (UTC)
👍 விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 04:52, 22 சனவரி 2019 (UTC)
👍 விருப்பம்--SRIDHAR G (பேச்சு) 11:01, 22 சனவரி 2019 (UTC)

திரைப் படம்[தொகு]

வணக்கம். திரைப்படம் என சேர்த்து எழுதுவதே சரியானது. உங்களின் கட்டுரைத் தலைப்புகளை திருத்தியுள்ளேன். உங்களின் கட்டுரைகளின் உள்ளே இந்தப் பிழை இருப்பின் அவற்றையும் திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:17, 24 சனவரி 2019 (UTC)

நன்றி திருத்திக் கொள்கிறேன்.

தோரணை[தொகு]

நண்பருக்கு வணக்கம். சிறப்பான முறையில் பங்களித்து வருவதற்கு வாழ்த்துகள். தோரணை திரைப்படக் கட்டுரையில் //இதற்காக சென்னையில் மிகப் பெரிய ஒரு சண்டையில் ஈடுபடுகின்றனர். அவன் அடிக்கடி அந்த அடிதடி கும்பலின் வழியில் குறுக்கிட அவர்கள் முருகன் மேல் பயங்கர கோபம் கொள்கின்றனர். குருவிடம் ரத்தக்களரி ஏற்படும் வண்ணம் சண்டையில் ஈடுபடுகிறான்.// இந்தமாதிரியான வார்த்தைகளைத் தவிர்த்தல் நலம் எனக் கருதுகிறேன். அதில் செய்துள்ள மாற்றங்களைக் கவனிக்க வேண்டுகிறேன். மேலும் சிவப்பு வண்ணங்களில் தோன்றும் எழுத்துக்களை மற்றவை போன்று மாற்ற

 • source edit
உள்ள [[]] இந்தக் குறிகளை நீக்க வேண்டுகிறேன். 
 • visual edit

தொகு சென்று [[]] இந்தக் குறிகளை நீக்க வேண்டுகிறேன் நன்றி.ஞா. ஸ்ரீதர்

தவறினை சரி செய்ததற்கு நன்றி.--பாலசுப்ரமணியன் (பேச்சு) 06:58, 24 சனவரி 2019 (UTC)

மீண்டும் ஒரு காதல் கதை (1985 திரைப்படம்)[தொகு]

மீண்டும் ஒரு காதல் கதை (1985 திரைப்படம்) எனும் கட்டுரையில் உள்ள ஆங்கில வார்த்தைகளை தமிழாக்கம் செய்யவும். நன்றிSRIDHAR G (பேச்சு) 02:51, 25 சனவரி 2019 (UTC)

வேண்டுகோள்[தொகு]

வணக்கம். தொடர் பங்களிப்புகளுக்கு நன்றி. எழுதும் ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவித்து, அவர்களை விக்கிப்பீடியாவில் பங்களிக்க வைப்பதற்காக 'புதுப் பயனர் போட்டி' நடைபெறுகிறது. கட்டுரைகள் தரமாக இருக்க வேண்டும் என்பதனையும் விக்கி சமூகம் உறுதிசெய்கிறது. அதன் காரணமாக, நீங்கள் எழுதும் கட்டுரைகளில் மற்ற பயனர்கள் திருத்தங்களை மேற்கோள்கிறார்கள். எவ்வகையான திருத்தங்களை அவர்கள் மேற்கொள்கிறார்கள் என்பதனை கவனித்து புதிய கட்டுரைகளில் அவற்றை செய்யுங்கள். இதன் மூலமாக மற்ற பயனர்களுக்கு வேலைப்பளு குறையும். சில உதவிக் குறிப்புகளை கீழே காணலாம். ஏதேனும் ஐயமிருப்பின் கேளுங்கள்.

 1. References என ஆங்கிலத்தில் இருக்காமல், மேற்கோள்கள் என துணைத் தலைப்பு இருக்க வேண்டும்.
 2. பகுப்புகள் இட வேண்டும். காண்க: விக்கிப்பீடியா:பயிற்சி (பகுப்புகள்)
 3. மணற்தொட்டியிலிருந்து கட்டுரையை பொதுவெளிக்கு நகர்த்தும் முன்பு, கட்டுரையை படித்துப் பார்த்து பிழைகளை திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், இலக்கணப் பிழைகள் இவற்றைத் தவிர்ப்பது நமக்கு இன்றியமையாதது என்பதனை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:02, 25 சனவரி 2019 (UTC)

நன்றி[தொகு]

எங்களைப் போல புதுப் பயனர்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி. எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், இலக்கணப் பிழைகள் இவற்றைக் கூடுமானவரை தவிர்க்கவே முயற்சிக்கிறேன். கட்டுரையை பொதுவெளிக்கு நகர்த்தும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை பிழையினை கவனித்து நீக்கிவிடுகிறேன், ஆனாலும் தவறுகள் நேர்ந்து விடுகிறது. மேலும் சரியான தொழில்நுட்பம் உபயோகிக்கத் தெரியவில்லை. பகுப்புகள் இடுவதற்கு முயற்சி மேற்கொள்கிறேன். தொடர்ந்து வழி காட்டுங்கள். பின்பற்றுகிறேன் .நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 10:23, 25 சனவரி 2019 (UTC)

ஜூங்கா (திரைப்படம்)[தொகு]

ஜூங்கா (திரைப்படம்) கட்டுரையில் கதைச் சுருக்கம் முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளது. அதனை தமிழாக்கம் செய்யவும் நன்றி.ஸ்ரீ (talk) 09:44, 31 சனவரி 2019 (UTC)

மீண்டும் தலைப்பை சமர்ப்பிக்கவும்[தொகு]

இந்த மூன்று கட்டுரைகளின் தலைப்பின் பெயர் மாற்றப்பட்டுள்ளது எனவே புதிய தலைப்பினை சமர்ப்பிக்கவும் . பழைய தலைப்பானது நீக்கப்படும். நன்றிஸ்ரீ (talk) 09:56, 31 சனவரி 2019 (UTC)

ஜூங்கா (திரைப்படம்)[தொகு]

ஜூங்கா (திரைப்படம்) கட்டுரையில் கதைச் சுருக்கம் முழுவதும் மருதமலைப் படத்தின் விவரங்கள் தவறுதலாக என்னால் பதியப்பட்டுள்ளது. அதனை சரி செய்து கொள்கிறேன்., மேலும், தங்களால் குறிபிடப்பட்ட தலைப்புகளான

 • ஒன்பதில குரு (திரைப்படம்)
 • களவு தொழிற்சாலை(திரைப்படம்)
 • புதிய ப்ரூஸ் லீ (திரைப்படம்)

இந்த மூன்று கட்டுரைகளின் தலைப்பின் பெயர் மாற்றப்பட்டு சமர்ப்பித்துள்ளேன். நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 11:53, 31 சனவரி 2019 (UTC)

பதக்கம்[தொகு]

Original Barnstar Hires.png அசத்தும் கலையுலகப் பயனர்
புதுப்பயனர் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து திரைப்படக் கட்டுரைகளை எழுதிக் குவிப்பதற்குப் பாராட்டுகிறேன். முதல் மாத இறுதியில் அதிகப்புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளதற்கும் வாழ்த்துக்கள் --நீச்சல்காரன் (பேச்சு) 14:22, 31 சனவரி 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:39, 31 சனவரி 2019 (UTC)
👍 விருப்பம்--அருளரசன் (பேச்சு) 14:44, 31 சனவரி 2019 (UTC)
👍 விருப்பம்..'சபாஷ் சரியான போட்டி!' எனச் சொல்லுமளவிற்கு களைப்படையாமல் கட்டுரைகளை ஆக்கியமைக்கும், முதலிடம் பெற்று முதல்மாதப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கும் வாழ்த்துகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:56, 1 பெப்ரவரி 2019 (UTC)

திரைப்படத் தலைப்புகள்[தொகு]

ஒரே பெயரில் இரண்டுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்தால், அவற்றுக்கு திரைப்படப் பெயருடன் (1960 திரைப்படம்) என ஆண்டுடன் தலைப்பிட வேண்டும். திரைப்படத்தின் பெயர் இரண்டு கட்டுரைகளுக்குப் பொதுவான பெயராக இருந்தால் தலைப்புடன் (திரைப்படம்) என்பதைச் சேருங்கள். (உ+ம்: வாணி ராணி, திரைப்படம், அல்லது தொலைக்காட்சித் தொடர், உ+ம்: வைரம்). அனைத்துத் திரைப்படக் கட்டுரைகளுக்கும் (திரைப்படம்) என்ற அடைமொழி தேவைப்படாது. உ+ம்: வசந்தம் வந்தாச்சு. இதற்கு திரைப்படம் என்ற அடைமொழி தேவையற்றது.--Kanags (பேச்சு) 09:49, 2 பெப்ரவரி 2019 (UTC)

நன்றி[தொகு]

இனி தொகுக்கும் கட்டுரைகளுக்கு இந்த அறிவுரையினை பின்பற்றுகிறேன். நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 09:53, 2 பெப்ரவரி 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- சனவரி மாத பரிசு[தொகு]

வணக்கம் பாலசுப்ரமணியன் புதுப்பயனர் போட்டிக்கான சனவரி மாதத்தில் 53 கட்டுரைகளை சிறப்பாக உருவாக்கி முதல் பரிசினைப் பெறுகிறீர்கள் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் மாதங்களிலும் தொடர்ந்து மாதாந்திரப் பரிசுகள் வழங்கப்படும். பரிசு பற்றிய விவரங்கள் தங்களுக்கு தனிமடலாக பின்னர் தெரிவிக்கப்படும். ஏனைய மாதப் போட்டிகளிலும் சிறப்பாகப் பங்காற்றி பரிசுகளை வெல்வதற்கும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பிற்கும் வாழ்த்துகளும், நன்றிகளும். வாழ்க வளமுடன்.ஸ்ரீ (talk) 14:13, 7 பெப்ரவரி 2019 (UTC)

நன்றி[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாக் குழுவிற்கு நன்றிகள் பல. மேலும் அதிக அளவில் பங்களிக்க முயல்கிறேன். வணக்கம்.--பாலசுப்ரமணியன் (பேச்சு) 14:37, 7 பெப்ரவரி 2019 (UTC)

fountain problem[தொகு]

வணக்கம். புதுப்பயனர் போட்டியில் சிறப்பாக பங்களித்து வருவதற்கு நன்றி. தற்போது fountain கருவி செயலபடவில்லை. இருந்தபோதிலும் தாங்கள் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கருவி மீண்டும் செயல்படத் தொடங்கிய பிறகு தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அப்போது உங்களின் கட்டுரைகளை மொத்தமாக சமர்ப்பிக்கலாம். நன்றிஸ்ரீ (talk) 01:35, 17 பெப்ரவரி 2019 (UTC)

தற்காலிக ஏற்பாடு[தொகு]

வணக்கம். புதுப்பயனர் போட்டியில் நீங்கள் விரிவாக்கிய அல்லது உருவாக்கிய கட்டுரைகளின் பெயர்களை இங்கு இட வேண்டுகிறோம். இது தற்காலிக ஏற்பாடு தான். கருவி செயல்படத் துவங்கிய பிறகு வழக்கம் போல் சமர்ப்பிக்கலாம். நன்றிஸ்ரீ (talk) 06:24, 19 பெப்ரவரி 2019 (UTC)

வாழ்த்துகள்[தொகு]

வணக்கம்பயனர்:Balu1967 தாங்கள் புதுப்பயனர் போட்டியில் 100 கட்டுரைகளை சிறப்பாக உருவாக்கி/ விரிவாக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள். ஸ்ரீ (talk) 11:41, 21 பெப்ரவரி 2019 (UTC)

பதக்கம்[தொகு]

Barnstar-camera.png களைப்படையாப் பங்களிப்பாளார் பதக்கம்
புதிய பயனர்களுக்கான கட்டுரைப்போட்டியில் சளைக்காமல் கட்டுரைகளை எழுதிக்குவித்து வரும் உங்கள் களைப்படையா பங்களிப்பை பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:41, 21 பெப்ரவரி 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 16:58, 21 பெப்ரவரி 2019 (UTC)
👍 விருப்பம்--அருளரசன் (பேச்சு) 17:10, 21 பெப்ரவரி 2019 (UTC)
👍 விருப்பம்ஸ்ரீ (talk) 10:51, 2 மார்ச் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- பிப்ரவரி மாதப் பரிசு[தொகு]

வணக்கம் பாலசுப்ரமணியன் புதுப்பயனர் போட்டிக்காக பிப்ரவரி மாதத்தில் 61 கட்டுரைகளை சிறப்பாக உருவாக்கி இந்த மாதமும் முதல் பரிசினைப் பெறுகிறீர்கள் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் மாதங்களிலும் (மார்ச்சு) தொடர்ந்து மாதாந்திரப் பரிசுகள் வழங்கப்படும். பரிசு பற்றிய விவரங்கள் தங்களுக்கு தனிமடலாகப் பின்னர் தெரிவிக்கப்படும். ஏனைய மாதப் போட்டிகளிலும் சிறப்பாகப் பங்காற்றி பரிசுகளை வெல்வதற்கும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பினை நல்குவதற்கும் வாழ்த்துகளும் நன்றியும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:45, 1 மார்ச் 2019 (UTC)

வாழ்த்துகள்[தொகு]

தற்போது வரை புதுப்பயனர் போட்டிக்காக 150 கட்டுரைகளை உருவாக்கியுள்ளீர்கள் . தற்போது தனிமாந்தர்கள் பற்றிய கட்டுரைகளை சிறப்பாக உருவாக்கி வருவதற்கு நன்றிகள்.ஸ்ரீ (talk) 02:26, 12 மார்ச் 2019 (UTC)

துர்கா கோட்[தொகு]

பயனர்:Vasantha Lakshmi Vஉருவாக்கிய துர்கா கோட் என்ற கட்டுரையை தங்கள் கணக்கில் இணைத்திருந்தீர்கள். அது நீக்கப்பட்டுள்ளது. நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:51, 12 மார்ச் 2019 (UTC)

மொழிபெயர்ப்பு மேம்படுத்தல்[தொகு]

வணக்கம் பாலு 1967. தாங்கள் புதுப்பயனர் போட்டிக்காக நன்முறையில் கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள். ஆயினும் தற்பொழுது உருவாக்கியுள்ள நபர்கள் பற்றிய கட்டுரைகளில் சிற்சில இடங்களில் மொழிபெயர்ப்பு மேம்படுத்தப்பட வேண்டும். தொடர்கள் சில முடிவடையாத நிலையிலும், பொருத்தமற்ற தொடர்களாகவும் உள்ளன. எனவே அவைகளுக்கு மதிப்பீடு வழங்கப்படாமல் உள்ளன. எனவே அவற்றை உள்வாங்கி மேம்படுத்தவும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:36, 12 மார்ச் 2019 (UTC)

பெயரிடல்[தொகு]

வணக்கம் பாலு 1967. விக்கிப்பீடியாவில் மெய்யெழுத்தில் அல்லது மொழிக்கு முதலில் வராத ட, ண போன்ற எழுத்துகளிலோ தலைப்பிடுவதில்லை. எனவே டினா தேசாய் என்ற பெயரை தினா தேசாய் என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். உதவிக்கு விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு காணவும் நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 07:30, 14 மார்ச் 2019 (UTC)

நன்றியுரை[தொகு]

நன்றி ஐயா, இது வரை இந்த பெயரிடல் மரபு பற்றி எனக்குத் தெரியாது, இனி மேல் மாற்றிக் கொள்கிறேன்.--பாலசுப்ரமணியன் (பேச்சு) 09:11, 14 மார்ச் 2019 (UTC)

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:33, 14 மார்ச் 2019 (UTC)

கட்டுரைகள் நகர்த்தப்பட்டுள்ளன[தொகு]

தாங்கள் உருவாக்கிய கட்டுரைகள் சுருதி ஹரிஹரன், விஜயலட்சுமி ரவீந்திரநாத், லீலா ஓம்செரி என்ற சரியான பெயருக்கு நகர்த்தப்பட்டுள்ளன. இவற்றை மீண்டும் சமர்ப்பிக்கவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:00, 17 மார்ச் 2019 (UTC)

மேம்படுத்தவும்[தொகு]

கமலா சொஹோனே கட்டுரை மேம்படுத்த வேண்டியுள்ளது. கவனிக்கவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:04, 17 மார்ச் 2019 (UTC

கமலா சொஹோனே[தொகு]

கட்டுரையை மேம்படுத்தியுள்ளேன் கவனித்து மதிப்பிடவும். நன்றி.--பாலசுப்ரமணியன் (பேச்சு) 17:02, 18 மார்ச் 2019 (UTC)

March 2019[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. ஆயினும், நாம் புத்தாக்க ஆய்வை ஏற்பதில்லை. நம்பகமான, வெளியிடப்பட்ட மூலங்கள் இல்லாத தரவுகள், குற்றச்சாட்டுகள், எண்ணங்கள், தனிப்பட்ட வினையறிவு போன்றவை புத்தாக்க ஆய்வில் அடங்கும். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. AntanO (பேச்சு) 03:06, 19 மார்ச் 2019 (UTC)

ஆங்கில தலைப்பு பெயர்கள்[தொகு]

நண்பருக்கு வணக்கம். சிறப்பான முறையில் பங்களித்து வருகிறீர்கள். தாங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் முதல் வரியில் தமிழ் தலைப்பிற்கு அடுத்தபடியாக அதனுடைய ஆங்கிலத் தலைப்புகளை அடைப்பிற்குள் எழுதவும் உ.ம் விராட் கோலி (Virat kohli) நன்றிஸ்ரீ (talk) 01:38, 20 மார்ச் 2019 (UTC)

200 கட்டுரைகள்[தொகு]

நண்பருக்கு வணக்கம். தாங்கள் புதுப்பயனர் போட்டியில் சிறப்பாக 200 கட்டுரைகள் உருவாக்கி/விரிவாக்கியுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி ஸ்ரீ (talk) 06:49, 23 மார்ச் 2019 (UTC)

👍 விருப்பம் வாழ்த்துகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:22, 23 மார்ச் 2019 (UTC)

நன்றியுரை[தொகு]

எனக்கு ஊக்கமளித்த அனைத்து நிவாகிகளுக்கும் குறிப்பாக பார்வதிஸ்ரீ அவர்களுக்கும் எனது நன்றி, மேலும் கீழ்க்கண்ட கட்டுரைகள் சரி செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

 1. சாரதா இராமநாதன்
 2. கோயம்பேடு மொத்த சந்தை வளாகம்
 3. மரியா ரோ வின்சென்ட்

--பாலசுப்ரமணியன் (பேச்சு) 09:58, 23 மார்ச் 2019 (UTC)

முனைப்பான பங்களிப்பு[தொகு]

கட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:19, 23 மார்ச் 2019 (UTC)

பதக்கம்[தொகு]

Editors Barnstar Hires.png விக்கிப்புயல் பதக்கம்
புதுப்பயனராக நுழைந்து 200 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை சளைக்காமல் உருவாக்கி வருவதைப் பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:43, 23 மார்ச் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

சென்னைக் கலாச்சாரம்[தொகு]

வணக்கம். கட்டுரை சென்னைக் கலாச்சாரம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. மேலும் இக்கட்டுரைக்கு கூடுதல் மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. அதனைச் சேர்ந்த்து கட்டுரையை மேம்படுத்துங்கள் நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:41, 25 மார்ச் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- 2019[தொகு]

நன்றி balu

வணக்கம்.விக்கிப்பீடியா புதுப்பயனர் போட்டியில் கலந்துகொண்டதற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். இந்தப் போட்டியில் தாங்கள் 226 கட்டுரைகள் உருவாக்கி/ விரிவாக்கியுள்ளீர்கள். தங்களின் விக்கிப்பீடியா பங்களிப்பு தொடர்வதற்கு எனது வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஸ்ரீ (talk) 12:57, 1 ஏப்ரல் 2019 (UTC)

வேண்டுகோள்[தொகு]

இன்று நடிகர் சஞ்சீவ் குமார் பற்றிய ஒரு கட்டுரையை விரிவாக்கினேன், அதில் இடம்பெற்ற infobox மூலத்தைவிட பெரியதாக தோற்றம் காட்டுகிறது, அதை சரி செய்யவும், மேலும் எவ்வாறு அது நிகழ்ந்தது என தெரிவித்தால் உதவியாக இருக்கும். நன்றி. --பாலசுப்ரமணியன் (பேச்சு) 16:44, 4 ஏப்ரல் 2019 (UTC)


Yes check.svgY ஆயிற்று பாலு. அந்த மாற்றங்களை இங்கு காணலாம் நன்றிஸ்ரீ (talk) 01:40, 5 ஏப்ரல் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி முடிவுகள்[தொகு]

வாழ்த்துகள் பாலு. புதுப்பயனர் போட்டியில் 226 கட்டுரைகளை உருவாக்கி முதலிடத்தில் உள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு விவரங்களுக்கு இப்பக்கத்தைக் காணவும். மேலும் தங்கள் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் தொடருங்கள். நன்றி பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:39, 7 ஏப்ரல் 2019 (UTC)

சிம்லா ஒப்பந்தம்[தொகு]

சிம்லா ஒப்பந்தம் என்னும் கட்டுரையை விரிவாக்கம் செய்துள்ளேன். சிம்லா ஒப்பந்தம் (1972) என்னும் கட்டுரையை நீக்கி விடவும். நன்றி. --பாலசுப்ரமணியன் (பேச்சு) 07:33, 25 ஏப்ரல் 2019 (UTC)

Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 19:35, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 17:30, 4 அக்டோபர் 2019 (UTC)

லட்சுமி[தொகு]

உங்கள் கட்டுரை லட்சுமி ஏற்கனவே தமிழ் விக்கிபீடியாவில் உள்ளது. இதை லக்ஷ்மி உடன் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.- Saroj Uprety (பேச்சு) 04:36, 11 அக்டோபர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

உங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

Thank you and Happy Diwali[தொகு]

Feuerwerks-gif.gif
Emoji u1f42f.svgThank you and Happy Diwali Emoji u1f42f.svg
"Thank you for being you." —anonymous
Hello, this is the festive season. The sky is full of fireworks, tbe houses are decorated with lamps and rangoli. On behalf of the Project Tiger 2.0 team, I sincerely thank you for your contribution and support. Wishing you a Happy Diwali and a festive season. Regards and all the best. --Titodutta (பேச்சு) 13:12, 27 அக்டோபர் 2019 (UTC)

ஆசிய மாதம், 2019[தொகு]

Ta Asian Month Banner Logo 2019.png

வணக்கம்.

இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பினை நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:00, 4 நவம்பர் 2019 (UTC)

முகலாய அரசர்கள்[தொகு]

தாங்கள் உருவாக்கிய முகலாய அரசர்கள் எனும் கட்டுரை 6000 பைட்டுகள் அளவில் குறைவாயுள்ளது, மேம்படுத்தவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:01, 7 நவம்பர் 2019 (UTC)

சிறந்த உழைப்பாளர்[தொகு]

NPPbarnstar.jpg சிறந்த உழைப்பாளர் பதக்கம்
நீங்கள் புயலா? தானியங்கியா? என்று வியக்கும் அளவுக்கு உங்கள் பொன்னான ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிக்குச் செலவிட்டு வருகிறீர்கள். வேங்கைத் திட்டத்தில் உங்கள் பங்களிப்புகள் அருமை. தொடர்ந்து உங்கள் பங்களிப்புகள் சிறக்க வாழ்த்துகிறேன். --இரவி (பேச்சு) 10:27, 8 நவம்பர் 2019 (UTC)

நன்றி --பாலசுப்ரமணியன் (பேச்சு) 15:24, 8 நவம்பர் 2019 (UTC)

👍 விருப்பம்--Fathima (பேச்சு) 12:49, 8 நவம்பர் 2019 (UTC)

👍 விருப்பம் புதுப்பயனர் போட்டிகளில் விக்கிக்கு கிடைத்த பரிசு நீங்கள் வாழ்த்துக்கள். ஸ்ரீ (✉) 15:52, 9 நவம்பர் 2019 (UTC)

👍 விருப்பம் -நீச்சல்காரன் (பேச்சு) 13:08, 11 நவம்பர் 2019 (UTC)

நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 15:23, 8 நவம்பர் 2019 (UTC) 👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:06, 15 நவம்பர் 2019 (UTC)

நிசாபூர் கட்டுரை[தொகு]

வணக்கம் தாங்கள் உருவாக்கிய நிசாபூர் கட்டுரையையின் உரையை சற்று மேம்படுத்தவேண்டும் என்று கருதுகிறேன். எடுத்துக்காட்டாக கட்டுரையின் துவக்கத்தில் நிசாபூர் என்பது " உள்ள ஒரு நகரமாகும். ஈரானில் இராசவி கொரசான் மாகாணத்தில், நிசாபூரின் தலைநகரக உள்ளது. முன்னாள் தலைநகரின் வடகிழக்கு ஈரானில் உள்ள கொரசான் மாகாணத்தின், ... என்ற பகுதி தெளிவற்று உள்ளது எனவே இதை சற்று கவணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 13:19, 9 நவம்பர் 2019 (UTC)

நிசாபூர் கட்டுரை மேம்படுத்துதல்[தொகு]

வணக்கம், பிழையை கவனித்து சுட்டிக்கட்டியதற்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்ட வரிகளை கட்டுரையில் திருத்தம் மேற்கொண்டுள்ளேன். நன்றி.--பாலசுப்ரமணியன் (பேச்சு) 16:13, 9 நவம்பர் 2019 (UTC)

பகுப்பு[தொகு]

வணக்கம், நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளைத் தகுந்த பகுப்பிற்குள் சேருங்கள். நீங்கள் புதிதாகப் பகுப்புகள் உருவாக்கவேண்டிய அவசியமில்லை. தகுந்த பகுப்பு இல்லையானால், குறைந்தது தாய்ப்பகுப்புக்குள்ளாவது சேர்க்கலாம். உதாரணமாக, பூட்டானில் சுற்றுலா என்ற கட்டுரையை பகுப்பு:பூட்டான் இல் சேர்க்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 21:29, 15 நவம்பர் 2019 (UTC)

கூகுள் மொழியாக்கக் கருவியின் பயன்பாடு[தொகு]

இங்கு பார்க்கவும். மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை மேம்படுத்தவும். நன்றி--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 01:47, 21 நவம்பர் 2019 (UTC)

கட்டுரைகளை சரிபார்த்தல்[தொகு]

வணக்கம், நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளை உருவாக்கியபிறகு ஒருமுறை சரிபார்த்துவிடவும். சரிபாரத்தால் இது போன்ற சிறிய பிழைகளை தவிர்த்து மேம்படுத்த இயலும் நன்றி--அருளரசன் (பேச்சு) 15:57, 21 நவம்பர் 2019 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்[தொகு]

வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:00, 25 நவம்பர் 2019 (UTC)

நானூறு கட்டுரைகள்[தொகு]

மிகவும் பிரம்மிப்பாக உள்ளது.வேங்கைப் போட்டியில் நானூறு கட்டுரைகள் எழுதி இன்னும் எழுத உள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 05:51, 14 திசம்பர் 2019 (UTC)

👍 விருப்பம்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:52, 14 திசம்பர் 2019 (UTC)

👍 விருப்பம் -- இந்திய அளவில் தாங்கள் முதலிடம் பிடிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்.ஸ்ரீ (✉) 13:03, 14 திசம்பர் 2019 (UTC)

👍 விருப்பம் வாழ்த்துகள் அண்ணா. நீண்ட காலப் பயனராக இருந்தும் நான் கூட இத்தனை விரைவாகக் கட்டுரைகள் எழுதவில்லை. தங்களின் பங்களிப்புகள் தொடரட்டும். முதலிடம் பிடிக்க வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:30, 15 திசம்பர் 2019 (UTC)

கவனிக்க[தொகு]

மொழியாக்கம் செய்யும் போது பேச்சு:வி. கே. என். , பேச்சு:அப்துல் சத்தார் எதி போன்றவற்றைக் கருத்தில் கொள்ளவும் நன்றிஸ்ரீ (✉) 10:36, 17 திசம்பர் 2019 (UTC)

வாழ்த்துகள்[தொகு]

Congrats. விக்கி ஆசிய மாதம் 2019 போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். விரைவில் உங்கள் முகவரி கேட்டு தொடர்புகொள்வார்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:34, 20 திசம்பர் 2019 (UTC)

வாழ்த்துகள் ஸ்ரீ (✉) 13:19, 21 திசம்பர் 2019 (UTC)

கவனிக்க[தொகு]

வேங்கைத் திட்டம் போட்டியில் சிறப்பாக எழுதிவருவதற்கு வாழ்த்துகள். மொழியாக்கம் செய்யும் போது அந்தந்த இடத்திற்கேற்ப எழுதுவது சிறப்பாக இருக்கும். (உம். நசீர் சபீர்) மேலும் தனி நபர் பற்றிய கட்டுரைகளில் அவர் என்று எழுதுவதை விட இவர் என்று எழுதுவது சிறப்பாக இருக்கும். முதலிடம் பெற வாழ்த்துகள்.நன்றி --ஸ்ரீ (✉) 13:19, 21 திசம்பர் 2019 (UTC)

வேங்கை 500[தொகு]

வேங்கைத் திட்டத்தில் 500 கட்டுரைகளை எழுதியமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்கவும். வாழ்க வளாமுடன்.ஸ்ரீ (✉) 14:25, 27 திசம்பர் 2019 (UTC)

👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:49, 30 திசம்பர் 2019 (UTC)
👍 விருப்பம்Fathima (பேச்சு) 14:35, 31 திசம்பர் 2019 (UTC)

கொங்கணி[தொகு]

கோவா மற்றும் கொங்கணி குறித்த பல கட்டுரைகளில் கொங்கனி என ற’னகரத்திற்குப் பதில் கொங்கணி ட ணகரத்தைத் திருத்தப்பட வேண்டியுள்ளது சரிசெய்யவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:49, 30 திசம்பர் 2019 (UTC)

கேரவன்செராய்,வி. கே. என்., நாபா, நகரம்,கவார் ரிஸ்வி ஆகிய கட்டுரைகளின் மொழிபெயர்த்தலை மேம்படுத்தவும்.அவற்றை நீக்கியுள்ளேன். மேலும் சில கட்டுரைகள் ஏற்கப்பட்டு பின்னூட்டம் வழங்கப்பட்டுள்ளன. அதனையும் சரிபார்க்கவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:56, 31 திசம்பர் 2019 (UTC)

WAM 2019 Postcard[தொகு]

Dear Participants and Organizers,

Congratulations!

It's WAM's honor to have you all participated in Wikipedia Asian Month 2019, the fifth edition of WAM. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the WAM International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2019. Please kindly fill the form, let the postcard can send to you asap!

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team --MediaWiki message delivery (பேச்சு) 08:16, 3 சனவரி 2020 (UTC)

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி[தொகு]

வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:41, 4 சனவரி 2020 (UTC)

பரிசு[தொகு]

வணக்கம் வேங்கைத் திட்டம் 2.0 வின் முதல் மாதத்தில் 141 கட்டுரைகளை உருவாக்கி/விரிவாக்கி இரண்டாம் இடத்தினைப் பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தாங்கள் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறோம். நன்றிஸ்ரீ (✉) 14:49, 5 சனவரி 2020 (UTC)

Chocolates(English New year greeting in Tamil Language)Tamil Nadu162.jpg


விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020[தொகு]

விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:18, 17 சனவரி 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Balu1967&oldid=2896072" இருந்து மீள்விக்கப்பட்டது