விக்கிப்பீடியா:இணைத்தலில் செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கிப்பீடியா உள்ளிணைப்பு வழிகாட்டல்.
விக்கிப்பீடியா உள்ளிணைப்பு செய்யும்போது:
செய்யக்கூடியது:
உங்கள் இணைப்பு உத்தேசிக்கப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கிறதா எனச் சரிபார்த்தல்
இணைப்பு உரையை உரைநடையில் பொருத்த | என்ற குறியீட்டைப் பயன்படுத்தல்
இணைப்பு இலக்குகளை சூழலுக்கு ஏற்ப உருவாக்கல்
பயனுள்ள கட்டுரைகளை உருவாக்குவதற்கு ஏற்ற சிவப்பு இணைப்புகளைச் சேர்த்தல்
துணை தலைப்புகள் அல்லது மாற்று தலைப்புகளில் இருந்து வழிமாற்றுகளை உருவாக்கல்
விக்சனரியில் தெளிவற்ற வார்த்தைகளுக்கான இணைத்தல்
தொடர்புடைய விக்கி திட்டங்களில் உள்ள பக்கங்களுக்கு இணைத்தல்
செய்யக்கூடாதது:
பொதுவான சொற்கள், தேதிகள் அல்லது அலகுகளுடன் இணைக்க வேண்டாம்
கட்டுரைகளில் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்களை இணைக்க வேண்டாம்
கட்டுரைகளில் பயனர், திட்டம், வரைவு அல்லது பேச்சுப் பக்கங்களை இணைக்க வேண்டாம்
எதிர்பாராத இலக்குகளை இணைக்க வேண்டாம்
கட்டுரை உரைநடையில் வெளிப்புற இணைப்புகளை இணைக்க வேண்டாம்
தலைப்பு பிரிவுகளில் இணைக்க வேண்டாம்
இணைப்புகளின் நிறத்தை மாற்ற வேண்டாம்
வழிசெலுத்தலுக்கு செயல் பொத்தான்களைப் பயன்படுத்த வேண்டாம்