உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை/தொகுப்பு 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாக அணுக்கம் உடையவர்களின் கவனத்துக்கு வர வேண்டிய விசயங்களைப் பற்றி குறிப்பிடலாம்.

உதவி தேவை

[தொகு]

நீங்கள் செய்ய விரும்பும் பணிக்கு நிருவாக அணுக்கம் தேவைப்படுகிறதா? இங்கு கேளுங்கள். பொதுவான உதவிக்கு விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் செல்லுங்கள்.

மீளாய்வு தேவை

[தொகு]

ஒரு நிருவாகியின் பக்க மீளமைப்பு, பயனர் தடை, பக்கம் நீக்கம் பற்றி மற்றவர்கள் மீளாய்வு செய்ய வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? இங்கு அறியத்தாருங்கள்.

முறையீடுகள்

[தொகு]

தொடர்ந்து ஒரு நிருவாகி தமது பணியில் இருந்து விலகி நடப்பதாக எண்ணுகிறீர்களா? இங்கு அறியத்தாருங்கள்.

பயனர் தனிமனிதத்தாக்குதல்

[தொகு]

பயனர் பேச்சு:Jaivanth --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:38, 2 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

பேசாம இந்தப்பக்கம் காலாவதியா ஆயிட்டுன்னு போட்டுரலாமா? :P அந்த பயனரின் லொள்ளு தாங்க முடியவில்லை. சீக்கிரம் தடை பண்ணுங்கப்பா!--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:28, 5 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று --AntonTalk 03:43, 6 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

இங்கு நீங்கள் குறிப்பிடுவது விளங்கவில்லை. சற்று தெளிவுபடுத்த முடியுமா? தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். --AntonTalk 20:19, 29 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

இப்பயனரின் அனானிப் பங்களிப்பை குறிப்பிட முடியுமா? --AntonTalk 03:42, 6 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

User:AntanO

நினைவில்லை. ஆனால் கனகசிறிதரன் தான் அந்த ஐ.பி. முகவரியில் இருந்து தாக்கியதை பயனர் பக்கத்தில் இருந்து நீக்கினார் என நினைக்கிறேன். இந்த ஜய்வந்து எனக்கு முகநூலில் அந்த பக்கத்தை சுட்டினார். அதை தேடிப்பார்த்து கிடைக்கவில்லை. ஒருவேளை கனக சிறீதரன் செய்திருந்தால் அவருக்கு நினைவில் இருக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:21, 7 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

பயனர் ஆதங்கம்

[தொகு]

கணேஷ் மற்றும் வசந்த் கட்டுரையில் "மாயா" தலைப்பிலான கதையை பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அப்பகுதியை எவ்வாறு தமிழ் விக்கி கையாள விரும்புகின்றது என்பதை தமிழ் விக்கியின் நிர்வாகத்தினர் கையாளுவார்கள் என்று கருதுகின்றேன்.தவறுதலாக அனுமதிக்கப்பட்டதா இல்லை தவறான தகவலைப் பரப்புரை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டதா என்று புரியவில்லை.

தமிழ் விக்கியின் நிலையை இதில் தெளிவுபடுத்த வேண்டும்.

பல பக்கங்கள் உருவாக்கப்படும் தமிழ் விக்கியில் கவனித்து திருத்துவது என்பது சிரமமான செயலாக இருப்பினும், மற்ற மதம் குறித்த உண்மையான சிறு கருத்துகள் கூட மிகக் கவனமாகக் கையாளப்படுகின்றன நீக்கப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உதாரணம் : [[1]] [[2]]

உண்மைச் செய்திகளைக் கூட மனவருத்தம் நேரும் என்று நீக்கும் தமிழ் விக்கி பொய்யான ஒரு கதையை 11 மாதங்களாக திருத்தப்படாமல் எவ்வாறு அனுமதித்தது?

இவ்வாறு மற்ற மதத்தினரை தவறியும் காயப் படுத்திவிடக்கூடாது என்று கருதும் தமிழ் விக்கி இந்துக்கள் வருந்தினால் பரவாயில்லை என்று நினைப்பது போன்று தோன்றிவிடுகின்றது. மிகுந்த மனவருத்தம் ஏற்படுத்துகின்றது தமிழ் விக்கியின் சிறிதும் நியாயமற்ற இத்தகைய அணுகுமுறை.

நன்றி. - Kuzhali.india (பேச்சு) 17:39, 14 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

சர்ச்சைக்குரிய பகுதியினை உடனடியாக நீக்கியுள்ளேன் (damage control). --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:07, 14 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
சனவரி 6, 2014 அன்று செய்யப்பட்ட ஒரு தொகுப்பு, மற்ற பயனர்களின் கண்களில் படாமல் போனது, தற்செயலானது என்றே புலப்படுகிறது. இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்ட தவறான தகவல்கள் குறித்து யாரும் வருந்தவேண்டாம் என்பது எனது வேண்டுகோள். கவனிப்பின் தன்மையை மேலும் மேம்படுத்தி (வலுப்படுத்தி), செயற்பட முனைவோம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:16, 14 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

அக்கட்டுரை இணைய தளத்தில் இருந்து பிரதி செய்யப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரை ஏற்கெனவே ஒரு முறை நீக்கப்பட்டிருந்தது. அடுத்த முறை எப்படியே நுழைந்துவிட்டது. இதற்கு பக்கச் சார்போ அல்லது "அனுமதிக்கப்பட்டது" என்றோ அர்த்தம் இல்லை. கட்டுரையின் சிக்கலை எவரும் கேட்விக்குட்படுத்தலாம். அதைவிடுத்து, தமிழ் விக்கி நியாயமற்றது என்ற கூறுவது மிகையானதே. மேலும், குறித்த சமயத்தை அல்லது பயனர்களை தூண்டுவது போன்ற நேரடி சொற்பிரயோகங்களைத் தவிருங்கள். நன்றி! --AntonTalk 19:08, 14 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 19:48, 14 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

Anton குற்றம் கூறுகின்றேன் என்று மட்டுமே கருதாதீர்கள்..தமிழ்விக்கிபீடியா கையாளும் சில நீக்குபோக்கான வழிமுறைகள் பல சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சில உதாரணங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்:

  • சாதாரணமாக இதுவரை நான் கவனித்த அளவில் ஏதேனும் புது பயனர் இந்து சமயப் பெரியோர்களை பற்றி எழுதும் போது உயர்வு நவிற்சி வந்து விடக்கூடாது என்று பெருமுயற்சி எடுக்கப்படுகின்றது. (பார்க்க: [[3]]) அதே அளவு பெருமுயற்சி எடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு மற்ற சமயக் கட்டுரையைக் காட்ட முடியுமா? குறிப்பாக பல நீண்ட கிறித்துவக் கட்டுரைகள் உள்ளன. ஏதேனும் இவ்வாறு திருத்தங்களுக்கும் கண்டனங்களுக்கும் ஆளாகின்றனவா?
  • மேலும் தங்கள் கவனத்திற்கு: தங்களால் பல வார்ப்புருக்கள் இடப்பட்ட மனனம் கட்டுரை குறித்து, இன்றுவரை பேச்சு:மனனம் கட்டுரையில் மனனம் சொல்லுக்கான எதிர்பார்க்கப்படும் பொருள் வழங்கத் தாங்கள் தயாராயில்லை. ஒருவேளை தங்கள் கவனத்திற்கு தப்பியிருக்கலாம். மறக்கப்பட்டும் இருக்கலாம்.
  • தங்களால் திருச்சபை கட்டுரையின் இந்து சமயம் தொடர்பான உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டன அது கிறித்துவக் கட்டுரை என்று குறிப்பிடப்பட்டு,பின்னர் பேச்சுப் பக்கத்தில் பெயர் மாற்றப்படலாம் என்ற பரிந்துரை மட்டும் தந்தீர்கள். [[4]] பின்னர் கிறித்தவத் திருச்சபை என்ற வழிமாற்று உருவாக்கப்பட்டது. வேண்டுகோள் விடுத்தும் கட்டுரை பெயர்மாற்றம் பெறவில்லை.

அதே சமயம் சுவாமி விவேகானந்தர் தலைப்பு எந்த பெயர் மாற்ற வேண்டுகோளும் இன்றி மற்றோர் நிர்வாகியால் விவேகானந்தர் தலைப்பிற்கு மாற்றப்பட்டது.[[5]] (சாதாரண பயனர்கள் கட்டுரைத் தலைப்பை மாற்ற இக்கட்டுரைத் தலைப்பை இயலாது). எந்த திருத்தந்தை அடைமொழி உடைய கட்டுரையும் திருத்தந்தை என்று பெயர் நீக்கம் செய்யப்பட்டு வழிமாற்று செய்யப்பட்டாற்போன்று எனக்குத் தெரியவில்லை.

இதேபோன்று, கட்டுரையின் உள்ளே அடைமொழிகள் பயன்படுத்தப்படலாம் என்று கூறிய பயனர்:Kanags எங்கே எப்படி எத்தகைய அடைமொழிகள் பயன்படுத்தப்படலாம் தவிர்க்கப்படலாம் என்பது தனித்தனியான ஆராய்ச்சிக்குரியது என்று கூறிவிட்டுவிட்டார். (பார்க்க [[6]]

திருச்சபை எனும் பொதுத்தலைப்பில் இந்து சமய கருத்துக்கள் அனுமதிக்கப்படாத அதேசமயம், இராமாயணம் போன்ற இந்து சமய நூல்களில் மட்டும் இராமாயணத்திற்கு எதிர்ப்பு நூல்களையும் அனுமதிக்கிறோம்.உதாரணம்: இராமாயணம் இங்கு இதுகுறித்த கேள்விக்கு [[7]] சரியான தெளிவான பதில் கிடைக்கவில்லை.

தமிழ் விக்கியில் சரியான நெறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டாலன்றி இந்து சமயங் குறித்து எழுதும் எழுத்தாளர்கள் ஊக்கம் குன்ற நேரும் என்பதை எனது இறுதி கருத்தாக வைத்து நகர்கிறேன்.நன்றி Kuzhali.india (பேச்சு) 08:42, 15 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

  • உயர்வு நவிற்சி வந்து விடக்கூடாது என்பது சரிதானே. கிறித்துவக் கட்டுரைகள் இவ்வாறு திருத்தங்களுக்கும் கண்டனங்களுக்கும் ஆளாகியுள்ளனவே. நானே அதைச் செய்தும் இருக்கிறேன். உயர்வு நவிற்சியுடன் எழுதாதீர்கள். யாரும் எழுதினால் குறித்த கட்டுரையில் உரையாடுங்கள்.
  • மனனம் கட்டுரையில் நீங்கள் பொதுப் பார்வையின்றி உள்ளீர்கள். நீங்கள் தெளிவடையாதவரை பேசுவதில் பயனில்லை.
  • வேண்டுகோள் விடுத்ததும் பெயர்மாற்றம் உடனே இடம்பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பல கட்டுரைகள் இவ்வாறு உள்ளன. மேலும் பெயர் மாற்றம் பற்றி ஆரம்பித்ததே நான். நானே அவற்றை மீளப் பெற்று விட்டேன். மேலும், பெயர் மாற்றக் கோரிக்கை பேச்சுப்பக்கத்தில் இல்லையே. திருச்சபை என்பது பொதுத்தலைப்பு என்றால் அங்கு அதுபற்றி உரையாடுங்கள்.

மேலும், சைவ சமயப் பயனர்கள் வேறு சமயங்கள் பற்றிய கட்டுரையில் பெருந்தன்மையாக அல்லது விடய தெளிவின்மை என்பவற்றால் ஒதுங்கியிருக்கலாம். அவ்வாறானவர்கள் தங்களுக்குத் தெரிந்த சைவம் பற்றி மட்டும் கருத்திடுவதில் தப்பில்லை. இதற்காக அவர்கள் சார்ப்புப் போக்குள்ளவர்கள் என்ற தொனியில் கருத்திடுவது முறையாகாது. விக்கிப்பீடியாவின் கொள்கை மற்றும் நோக்கம் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள். இப்புரிதல் இல்லாததனாற்தான் நீங்கள் சில விடயங்களை பக்கச்சார்பு எனும் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள். உங்கள் விருப்பத்திற்குத்தான் விக்கிப்பீடியா அமைய வேண்டும் என்றில்லை. இங்கு சமுகமாகவே முடிவினை எடுக்கலாம். குறைவுகள் இருப்பது சகம். இதற்கு விக்கிப்பீடியாவும் விதிவிலக்கல்ல. --AntonTalk 13:29, 15 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

பயனர்:Kuzhali.india நீங்கள் இப்படி நினைப்பதற்கு பலக்காரணங்கள் உண்டு. ஈழம், தமிழ்நாட்டில் தமிழ் தெரிந்த இந்துக்கள் 70% மேல். ஆனால் அரபி, உருதும் தெரிந்த இசுலாமியரோ, ஆங்கிலக் கிறுத்துவரோ அதிகம் கிடையாது. அதனால் பிறக்கும் போது இந்து மதத்தில் பிறந்து பிற்பாடு அதை விரும்பாமல் ஒதுங்கும் மக்களின் சதவீதமும் எண்ணிக்கையும் தான் தமிழ் எழுத்துலகில் அதிகம். அதனால் அப்படித் தென்படலாம். இதே அங்கில விக்கிப்பீடியாவில் போனால் நிலைமை நேர்மாறாக இருக்கும். ஏன் என நான் காரணம் சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:10, 16 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

[Global proposal] m.விக்கிப்பீடியா.org: (அனைத்து) பக்கங்களைத் தொகு

[தொகு]
MediaWiki mobile

Hi, this message is to let you know that, on domains like ta.m.wikipedia.org, unregistered users cannot edit. At the Wikimedia Forum, where global configuration changes are normally discussed, a few dozens users propose to restore normal editing permissions on all mobile sites. Please read and comment!

Sorry for writing in English but I thought as administrators you would be interested. Thanks, Nemo 22:26, 1 மார்ச் 2015 (UTC)

பயனர்:Balurbala

[தொகு]

இங்கு நடந்த உரையாடலை நிறைவுக்குக் கொண்டு வந்துள்ளேன். இது வீணாகத் தொடர்ந்தால் மற்ற நிருவாகிகளும் கவனிக்கவும். நன்றி. --AntonTalk 04:24, 6 ஏப்ரல் 2015 (UTC)

இரண்டாவது அறிவிப்பு: தொடர்ந்து பயனர்:Balurbala ஏரணச் சுழற்சி முறையிலான விவாதத்திற்கே என்னை இட்டுச் செல்கிறார். இவருடைய கேள்விகளுக்கு பதிலை என்னால் அளிக்க முடியும். ஆனால், இந்த ஏரணச் சுழற்சி ஆக்கபூர்வமற்ற விவாதம் தேவைதானா? ஓரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி செயற்படுகையில் சிலர் இவ்வாறு ஆரோக்கியமற்ற விவாதத்தில் இழுத்துவிட்டு முட்டுகை்கட்டை போடுவது விக்கியின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல. இங்கு நடந்த உரையடலைக்கூட தொடராமல் விட்டுவிட்டேன். குறிப்பிட்ட சில காலமாக ஏரணச் சுழற்சி முறையில் என்னுடன் விவாதிப்பதில் சிலர் குறியாய் இருப்பதாகத் தோன்றியதால் அல்லது என்னில் குறை காண்பதில் குறியாய் இருப்பதைக் காண்கிறேன் அல்லது நான் என்ன செய்கிறேன் என்பதை வேவு பார்ப்பதாய் உணர்கிறேன். எனவேதான், இதற்கு மேலும் உரையாடுவதில் பயனில்லை என்பதால் அன்னை தெரேசா தலைப்பு மாற்றல் விடயத்தை நிருவாகிகள் பக்கத்திற்குக் கொண்டு வந்தேன். நான் "பதிலளிப்பதாய்" இருப்பின் விக்கி நியமங்களுக்கு ஏற்பவே அமையும். ஆனால், அது ஒருதலைப்பட்டசமாகக்கூட கருதப்பட வாய்ப்புண்டு. நன்றி. --AntonTalk 17:46, 6 ஏப்ரல் 2015 (UTC)
அன்டன், தொடர்ந்து பல கட்டுரைகள், செயற்பாடுகள் தொடர்பாக விக்கி கொள்கைகள், நடைமுறைகளை உரையாடும் போது, அதுவும் ஒரு சில பயனர்களே இவ்வாறு ஈடுபடும் போது, இவ்வாறான உணர்வு வருவது வழமையே. நானும் இவ்வாறு உணர்ந்துள்ளேன். என்னளவில், எனது பங்களிப்பு ஈடுபாடுகளைச் சுழற்சி முறையில் மாற்றி வருவது இவ்வுணர்வில் இருந்து விடுபட உதவியுள்ளது. பயனர்:Balurbala இங்கு இறுதியாக எழுதியுள்ளது பெரும்பாலும் தன்னிலை விளக்கமாகவே உள்ளது. தமிழ் விக்கிப்பீடியா பயனர்களுக்கு இவ்வாறான பயனர் எச்சரிக்கைச் செய்திகள் புதிது என்பதால் ஏன் இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி மட்டும் அறிய விரும்புகிறார். இதற்கு நான் அவருக்கு விளக்கம் அளிக்க முனைகிறேன். தனியொரு கட்டுரை, பயனர் என்பதில் இருந்து நகர்ந்து தமிழ் விக்கிப்பீடியா பல்வேறு கொள்கைகள், வழிகாட்டல்கள், நடைமுறைகள் தொடர்பான தெளிவுகளைப் பெற வேண்டியுள்ளது. இவ்வாறான உரையாடல்களில் உங்கள் ஆங்கில விக்கிப்பீடியா வழமைகளை ஒப்பிட்ட உங்கள் சிறப்பான முன்மொழிவுகளை எதிர்பார்க்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:17, 6 ஏப்ரல் 2015 (UTC)

பண்பாடற்ற பேச்சு

[தொகு]

@Arunnirml: இப்பயனர் நாகரீகமற்ற உரையாடலில் ஈடுபடுகிறார். --AntanO 17:01, 17 ஏப்ரல் 2015 (UTC)

என்னால் இயன்றளவு நற்சொற்களை அவரின் பேச்சுப் பக்கத்தில் தந்துள்ளேன்; தனது தவறினை உணர்வார் என நம்புகிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:47, 17 ஏப்ரல் 2015 (UTC)
உரிய நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி செல்வசிவகுருநாதன். என் பேச்சுப் பக்கத்தில் பதிலளித்துள்ளார். --AntanO 18:23, 21 ஏப்ரல் 2015 (UTC)

@Arunnirml: இப்பயனர் அநாகரீக உரையாடலை விடுவதாகத் தெரியவில்லை. தற்போது ஆணவம், அழிவு என்று தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுகிறார். என் ஆணவம், அழிவு பற்றிப் பேச என்ன உரிமை இவருக்குள்ளது? அநாகரீக உரையாடல் செய்வதும், பின்பு அதை நீக்குவதும் மன்னிப்புக் கேட்பதும் என்ற இத்தந்திரோபாய முறை ஆரோக்கியமானதல்ல. கைக்கெட்டாத தூரத்தில் இருந்து கொண்டு, இவ்வாறு வசைபாடுபவருக்கு என்னால் "பதில் கொடுக்க முடியும். அப்போது நிருவாகி ஒருவர் இப்படிச் செய்யலாமா என்று கேட்காது இருக்கும் பொருட்டே மீண்டும் இங்கு பதிவிடுகிறேன். மேலும், இப்பயனரின் தொகுப்புக்களில் சொந்தக் கருத்துக்கள் காணப்படுகின்றன. ஆகவே, இவை இரண்டையும் கருத்திலெடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும். நன்றி. --AntanO 06:53, 22 ஏப்ரல் 2015 (UTC)

அன்டன் பேச்சுப்பக்கத்தில் அன்டனுக்கும் எனக்கும் நடந்த உரையாடலை தெளிவாக படித்துப்பார்க்க சக நிர்வாகிகளை அழைக்கிறேன். என்னுடைய உரையாடலில் 1000 கட்டுரைகள் அழிந்த காரணத்தாலும் என்னுடைய தவறான புரிந்து கொள்ளலினாலும் சில வார்த்தைகள் அன்டனிடம் என்னுடைய பேச்சுப் பக்கத்தில் கடுமையாக பேசியிருந்தேன். தோழர் செல்வ குருநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அன்டன் பேச்சுப்பக்கத்தில் வருத்தம் தெரிவித்தும், கட்டுரைகள் அழியாமல் காக்க வேண்டும் என்ற சிறிய வேண்டுகோளும் விடுத்திருந்தேன். தோழர் இரவி அவர்களின் விளக்க உரைக்கு பின் கட்டுரை அழிவத்தற்கான தெளிவான காரணத்தை புரிந்து கொண்டேன். ஆனால் இதற்கு பதிலளிக்கும் விதமாக அன்டன் வேண்டுகோள் வைக்கக்கூடாது என்று பதிலளித்திருந்தார். வேண்டுகோள் வைப்பது என்ன தவறான விசயமா? அவருடைய பேச்சில் நான் என்ற ஆணவம் மிகுதியாக வெளிப்பட்டத்தை உணர்ந்தேன். சுட்டியும் காட்டினேன். இதில் தவறாக பேசியதாக எனக்கு தெரியவில்லை. இல்லை என் மேல்தான் தவறு என்னை நீங்குவேன் என்றால் அதைப்பற்றி நான் கவலைப்படபோவதில்லை. மேலும் என்னுடைய கட்டுரைகளில் சொந்தக் கருத்துக்கள் இடப்பெறுவதாக குற்றம் சாட்டியுள்ளார். என்னுடைய சில கட்டுரைகளில் நான் எழுதியத்திற்கு இணையத்தில் ஆதாரம் இல்லை. அதற்காக நான் எழுதியவை சொந்த கருத்துகள் என கூறமுடியாது. அவை புத்தகங்கள் வாயிலாக நான் படித்தவை, முன்னோர்களின் வாயிலாக தெரிந்து கொண்டவை. தமிழின் சிறப்புகள் பெரும்பாலும் இணையத்தில் இல்லை. வெறும் இணையத்திலுள்ளவை மட்டும்தான் விக்கிபீடியாவில் எழுதவேண்டும் என்றால் விக்கிபீடியாவிற்கு நான் தேவையில்லை என நினைக்கிறேன். நன்றி. --நிர்மல் (பேச்சு) 13:48, 22 ஏப்ரல் 2015 (UTC)

மீண்டும் தனி நபர் தாக்குதல் - // நான் என்ற ஆணவம் // --AntanO 19:04, 22 ஏப்ரல் 2015 (UTC)'

'அன்டன்' ஏற்கனவே நடந்தவற்றை தான் குறிப்பிட்டுள்ளேன். புதிதாக எதையும் கூறவில்லை. பதிலுக்கு பதில் பேசுவதால் பிரச்சனை வளர்ந்து கொண்டேதான் இருக்கும். அது என் நோக்கமும் அன்று. அதை நான் விரும்பவும் இல்லை.--நிர்மல் (பேச்சு) 20:34, 22 ஏப்ரல் 2015 (UTC)

நிர்மல், //தங்களது பேச்சில் ஆணவம் மிகுதியாக தென்படுகிறது. ஆணவத்தில் ஆடுபவர்கள் கடைசியில் அழிந்து போவார்கள். // என்பது போன்ற கூற்றுகள் தனிநபர் தாக்குதலே. இது போன்ற உரையாடலைத் தவிர்த்து, கட்டுரையாக்கம் போன்ற வளர்முகப் பணிகளில் ஈடுபட வேண்டுகிறேன். நீங்கள் தாராளமாக இணையத்துக்கு வெளியே உள்ள நம்பகமான நூல்களில் இருந்து ஆதாரங்களை முன்வைக்கலாம். ஆனால், இன்ன நூல், இன்ன பதிப்பு, இன்ன பக்கம் என்பது போன்ற விவரங்களைத் தர வேண்டும். உடனடியாக இவை கிட்டாத நிலையில் மற்ற பயனர்கள் சான்று கோரும் வார்ப்புருக்களை இடுவது வழமையான பராமரிப்புப் பணியே. இவற்றைத் தனிப்பட எடுத்துக் கொள்ள வேண்டாம். இவ்வாறான தரக் கண்காணிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்தவே உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 06:06, 23 ஏப்ரல் 2015 (UTC)

நன்றி இரவி. இனி நான் இது போன்ற உரையாடல்களில் ஈடுபடப்போவதில்லை. தமிழ் மொழி மற்றும் தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படபோகிறேன்.--நிர்மல் (பேச்சு) 06:18, 23 ஏப்ரல் 2015 (UTC)

நன்றி, நிர்மல். ஏதேனும் உதவி தேவையெனில் எனது பேச்சுப் பக்கத்தில் கேட்கவும். அவியல் கட்டுரையில் தங்களுக்கு உதவியுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:56, 23 ஏப்ரல் 2015 (UTC)

தனிநபர் விமர்சனம் செய்துவிட்டு, அதிலிருந்து தப்ப இங்கு பாவ சங்கீர்த்தனம் செய்யலாம் என்ற முன்மாதிரி உருவாகியுள்ளதுபோல் தெரிகிறது. நல்லது, இந்த முன்மாதிரி நாளைக்கு உதாரணமாக இருக்கட்டும். கடந்த காலங்களில் என்மீது வைக்கப்பட்ட தனிநபர் விமர்சனங்களின்போதும், ஒருசிலர் தவிர்த்த பலர் தவிர்ப்புப் போக்கையே கடைப்பிடித்துள்ளீர்கள் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவையெல்லாம் விக்கிப்பீடியாவிற்கு எவ்வகையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதற்கான படிப்பினைகள். நன்றி. --AntanO 14:30, 23 ஏப்ரல் 2015 (UTC)

தனிநபர் விமர்சனம் செய்ய வேண்டுமென்பது என் கொள்கை அல்ல. சந்தர்ப சூழ்நிலை என்னை அவ்வாறு இட்டு சென்றது அவ்வளவு தான். மனிதன் என்றாலே தவறு செய்பவன் தான். தவறுகளை பொறுத்துக்கொள்வதுதான் சிறந்த மானிட பண்பு. இந்த நிகழ்வை மறந்து விட்டு தங்களின் பங்களிப்பை தொடர்ந்து சிறப்புடன் ஆற்ற கேட்டுக்கொள்கிறேன். --நிர்மல் (பேச்சு) 14:57, 23 ஏப்ரல் 2015 (UTC)

அன்ரன் இந்தத் தனிபர் சர்ச்சையை இன்னும் வளர்த்துக் கொண்டு போகவே விரும்புகிறார் எனத் தெரிகிறது. இப்போக்கு சாதகமானதாக இல்லை. //ததவிர்ப்புப் போக்கையே கடைப்பிடித்துள்ளீர்கள்// என்ன செய்திருக்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள்? யார் யாரைத் தடை செய்ய வேண்டும் எனக் கருதுகிறீர்கள்? ஆங்கில விக்கியில் இருந்து இன்னும் மேற்கோள்கள் காட்டினால் அதனையும் நாங்கள் இங்கு அறிமுகப்படுத்தி இன்னும் விரிவாக (முடிந்தால் சமூக வலைத்தளங்களிலும்) விவாதித்து முடிவெடுப்போம்.--Kanags \உரையாடுக 21:11, 23 ஏப்ரல் 2015 (UTC)
Kanags, விக்கியில் தனியொருவர் அழுத்தத்துக்கு உள்ளாகும் போது, பெரும்பாலானோர் ஒதுங்கி நிற்கும் போக்குக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. இந்த அயர்ச்சியை நானும் உணர்ந்திருக்கிறேன். ஒரு வகையில், இது நமது சமூக உளப்பாங்கின் எதிரொளிப்பே. நாம் இன்னும் நிறைய பங்களிப்பாளர்களைப் பெறும்போது, பிணக்குத் தீர்வில் ஈடுபாடுள்ள மேலும் சில பங்களிப்பாளர்களைப் பெற்றால் இந்நிலை மாறும் என்று எதிர்பார்க்கிறேன். எனவே, அன்டனின் கூற்றைத் தனிப்பட எடுத்து மேலும் இவ்வுரையாடலை தனிப்பட நகர்த்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அன்டன், இதனைத் தொடர்ந்து சுட்டிக் காட்டிய பின், சிவகுரு, செகதீசுவரன் போன்றோர் தங்களால் இயன்ற இடங்களில் பிணக்குத் தீர்வில் ஈடுபடுவது நல்ல முன்னேற்றம். இப்போக்கு தொடர வேண்டும். அருள்கூர்ந்து இந்த உரையாடல் இழையை முடிவுக்குக் கொண்டு வர அனைவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 03:49, 24 ஏப்ரல் 2015 (UTC)
ஒரு விக்கிப்பீடியனுக்கு எதிரான சிக்கலான நிலை தோன்றும்போது எவ்வாறு விக்கிச்சமூகம் இயங்குகிறது என்பது மிக முக்கியம். இங்கு சார்பு நிலை தேவையில்லை. விக்கிக் கொள்கையில் சரியாக இருக்கும் ஒருவரைக் காக்க வேண்டியதும், எதிரானவரைக்கு (நன்கு அறியப்பட்டவராயினும்) எதிராக முறையான நடவடிக்கை எடுப்பதும் முக்கியம். எனக்கு எதிராக பொதுவிலும், ஆ.வி.யிலும் முறையீடுகள் முன்வைத்த போதெல்லாம் அங்குள்ளவர்கள் என் சார்பாகவே நின்றனர். காரணம்; நான் விக்கிக் கொள்கைகைக்கு எதிராக இருக்கவில்லை. ஆனாலும், என் பங்களிப்பை ஒப்பிட்டால் அங்கு சிறிதளவே. இங்கு பராமரிப்பு வார்ப்பு இட்டாலே எதிரியாகப் பார்க்கின்றனர். அங்கு awesome Wikipedian என்கின்றனர். யார் யாரையும் தடை செய்ய வேண்டாம். இதை முடித்துக் கொள்வோம். உங்களில் யாருக்காவது தனி நபர் விமர்சனம் வரும்போது என்ன செய்ய வேண்டும் என்று இங்கு நான் படிப்பினையைக் கற்றுக் கொண்டேன். பங்களிப்பின் தன்மையை மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அறிந்து கொண்டேன். ஆ.வி.யில் en:Wikipedia:Closing discussions என்ற ஓர் முறை உள்ளது. அதன்படியாவது இவ்வுரையாடலை முடிவுக்குக் கொண்டு வரலாம். இதுபற்றி மேலும் பேச விரும்பவில்லை. நன்றி. --AntanO 04:30, 24 ஏப்ரல் 2015 (UTC)

பயனர்:Rkaartikeyan

[தொகு]

@Rkaartikeyan: இவர் என் முகநூலுக்கு வந்து சட்ட மிரட்டல் விடுக்கிறார். தன் பக்கத்தில் எனக்கெதிராக சாதி வெறிக் கருத்திடுகிறார். ஆதாரங்கள் உள்ளன. முகநூலிலும் முறையிட்டுள்ளேன். --AntanO 04:46, 6 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

@Ravidreams:, @Sundar:, @Mayooranathan:, உடனடியாக கவனித்து ஆலோசனைகளைக் கொடுக்கவும்.--நந்தகுமார் (பேச்சு) 05:12, 6 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
எக்காரணம் கொண்டு விக்கிப்பீடியா தொகுப்புகளுக்காக சட்ட மிரட்டல் விடுப்பதை விக்கிமீடியா இயக்கம் பொறுத்துக் கொள்வதில்லை. இவ்வாறு செய்வது பயனரின் கணக்கு மற்றும் IP முகவரி தடைக்கு இட்டுச் செல்லும். பயனர் புதியவர் என்பதால் ஒரே ஒரு எச்சரிக்கை மட்டும் இடுகிறேன். மீண்டும் தொந்தரவு தொடர்ந்தால் இங்கு குறிப்பிடுங்கள். அன்டன் மேல் வழக்கு தொடர்வதாக எனது விக்கிமீடியா இந்தியா அலுவல் மின்மடல் முகவரிக்கு கார்த்திகேயன் மடல் அனுப்பியுள்ளார். எனவே, ஆதாரம் எதையும் முன்வைக்கத் தேவையில்லை. நன்றி.--இரவி (பேச்சு) 05:19, 6 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
பயனர்களை தனிமனிதத் தாக்குதலுக்கு உட்படுத்துவது, அச்சுறுத்தல் செய்வது மிகவும் உச்சமாக கண்டிக்க வேண்டியது. --Natkeeran (பேச்சு) 14:35, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

மாகிர்

[தொகு]

Mdmahir (பேச்சு · பங்களிப்புக்கள்)

பதிப்புரிமை மீறல் > முரண்பாடு

[தொகு]
  • மாகிர் முரண்பாடு முதலில் இந்த பிழையான தொகுப்பை மீளமைத்தால் ஆரம்பமானது. இத்தொகுப்பை மீளமைக்காதிருந்தால் விக்கி முதற்பக்கம் முதற்கொண்டு எனைய பக்கங்கள் எப்படிக் காட்சியளித்ததென்று நீங்களே பழைய தொகுப்புக்கு மாற்றிவிட்டுக்காணலாம். இங்கும் பிழையான தொகுப்பு இருந்ததால் மீளமைத்திருந்தேன். இதுபற்றிய உரையாடலை இங்கு காணலாம். அதில் முறையான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மாகிர் பதில் எதுவும் சொல்லவில்லை.
நான் நுட்ப ரீதியில் பங்களிப்புகளை விக்கிக்கு செய்திருக்கிறேன். அதன்படி விக்கிடேட்டா தரவுகளை தவிக்கு கொண்டுவரும் முகமாக செய்த முயற்சி, பழைய பயனர்களுக்கு எனது பங்களிப்புகள் தெரியும். ஆங்கில விக்கியிலேயே இது ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. இதில் வழுக்கள் இருந்தால் தெரிவித்திருக்கலாம் என்று உங்களிடம் கடிந்துகொண்டது உண்மைதான், இங்கும் அது பிரச்சினை அல்ல என்றே நினைக்கிறேன். -- மாகிர் (பேச்சு) 11:17, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
  • [https://ta.wikipedia.org/w/index.php?னAccording to the terms of the Treaty of Hudaybiyyah, the Arab tribes were given the option of joining either of the parties, the Muslims or Quraish. Should any of these tribes face aggression, the party to which it was allied would have the right to retaliate. As a consequence, Banu Bakr joined Quraish, and Khuza'ah joined Muhammad. They thus lived in peace for some time; but ulterior motives stretching back to the pre-Islamic period, ignited by unabated fire of revenge, triggered fresh hostilities. Banu Bakr, without concern for the provisions of the treaty, attacked Banu Khuza'a in a place called Al-Wateer in Sha'ban, in 8 AH. Quraish helped Banu Bakr with men and arms, taking advantage of the dark night. Pressed by their enemies, the tribesmen of Khuza'ah sought the Holy Sanctuary, but here too, their lives were not spared, and, contrary to all accepted traditions, Nawfal, the chief of Banu Bakr, chased them in the sanctified area — where no blood should be shed — and massacred his adversaries. Khuza'ah at once sent a delegation to Medina to inform the Islamic prophet, Muhammad, of this breach of truce and to seek help from Muslims of Medina being their allies.
After the incident, Quraysh sent a delegation to Muhammad, petitioning to maintain the treaty with the Muslims and offering material compensation. The Muslim forces had gathered in strength to settle account with Quraysh and for the final attack and the occupation of Mecca."
ஆங்கில விக்கியிலிருந்து தமிழாக்கம் செய்தது என்று சொல்லியபிறகும், ஒப்பு நோக்காமல், பதிப்புரிமை வழிகாட்டுதல்களை கடைபிடிக்காமல் எனது பயனர் பக்கத்தில் வார்ப்புரு தந்தது.
  • இங்கு மாகிர் தான் பதிப்புரிமை மீறல் செய்யவில்லை, மாறாக தமிழாக்கம் என்பதை தெளிவாகத் தெரிவிக்கிறார். எ.கா: அ) ஆங்கில விக்கியிலிருந்து தமிழாக்கம் செய்வதும்..., ஆ) ஆங்கில விக்கியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது என்று குறிப்பு கொடுத்திருக்கிறேனே. ஒருமுறை ஆங்கில விக்கியில் (background section) அந்த பகுதியை ஒப்பிடுங்கள். அடிப்படையில் ஆங்கில விக்கியிலிருந்து தமிழாக்கமாக துவங்கப்பட்ட கட்டுரை அது..., இ) மதனாகரனுக்கு தான் எவ்வாறு தமிழாக்கம் செய்தார் என்பதை இவ்வாறு விளக்குகிறார். taking advantage of the dark night. -- //இருளை பயன்படுத்திக் கொண்டு// ஆனால் இவர் தமிழாக்கம் செய்ய முன்னனரே இங்கு அதே தமிழாக்கம் பல இடங்களிலும், குறிப்பாக இங்கும் அப்படியே உள்ளது.
நான் பதிப்புரிமை மீறல் செய்யவில்லை என்று சொல்லவில்லை. வரலாற்றுபெயர்கள் திருத்துவதற்கு சிரமம் இருக்கும் அதனை பதிந்து திருத்தலாம் என்றுதான் சொன்னேன். கட்டுரையில் நீக்கல் வார்ப்புருவை இட்டிருக்கலாம், பேச்சுப்பக்கங்களில் கலந்துரையாடியிருக்கலாம். மாறாக இங்கு நான் தொகுத்தை என் மீது நல்லெண்ணம் இல்லாதிருந்திருக்கலாம் அதனால் எடுத்தவுடன் எனது பேச்சுப்பக்கத்திலே வார்ப்புருவை தந்துவிட்டார்.

ஆகவே, அத்தொகுப்பு கட்டற்ற உரிமத்தில் கிடைக்கிறதா, பதிப்புரிமை மீறலா அல்லது ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கமா? இதில் மாகிரின் கூற்று என்ன?

மீண்டும் நான் பதிப்புரிமை மீறல் செய்யவில்லை என்று சொல்லவில்லை. முதலில் கட்டுரையில் நீக்கல் வார்ப்புருவும், கால அவகாசமும் தரப்பட்டிருக்க வேண்டும், இரண்டாவதாக நீங்கள் துப்புரவு செய்ததை ஆவியில் ஒப்பு நோக்கவில்லை என்பதே எனது வாதம். --மாகிர் (பேச்சு) 11:44, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்கியின் தமிழாகத்தை தரவும். -- மாகிர் (பேச்சு) 11:17, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
  • அந்த நூல் இலவச இணைப்பாக கிடைக்கக்கூடிய ஒன்று, (பொதுவில் உள்ளதா என்று அந்த ஆசிரியரை விணவ எண்ணியிருந்தேன் என பதிப்புரிமை மீறல் அல்ல மாறாக கட்டற்ற பகுதி என கருத்திட முயல்கிறார். கட்டற்ற பகுதி என்றாலும் விக்கியில் பயன்படுத்துவதற்கு விதி மாகிருக்குத் தெரியாதா? இவற்றின் பின் இந்த நடைமுறைகளை விடுத்து (நேர அவகாசம் - ஆங்கில விக்கியில் ஒருவாரகாலம் சொல்கிறார்கள், நீக்கல் வார்ப்புரு போன்றவற்றை கட்டுரைகளில் தராமல்... என மாகிர் பதிப்புரிமை மீறலுக்கு கால அவகாசம் கேட்கிறார்.
அந்த புத்தகத்தை வெளியீடு செய்த நிறுவனம் ஏற்கெனவே சில நூல்களை பொது உரிமத்தின்கீழ் வழங்கியிருக்கிறது. ஒரு தமிழ் நூலை ஆண்டிராய்ட் செயலியாக நானே அனுமதி பெற்ற வெளியிட்டு இருக்கிறேன். (அதனால் தான் கால அவகாசம் பற்றி திரும்ப திரும்ப சொல்கிறேன். ) பதிப்புரிமை ஆக்கங்களை உரிமையாளர்களின் அனுமதியை பெற ஆங்கில விக்கி அறிவுறுத்துகிறது.
  • பதிப்புரிமை மீறலை நீக்குவதை தொகுப்புப் போர் என உரையாடலை திசை திருப்புகிறார். இங்கு

மாகிர் பொய் சொல்வதும், அதனை மறுக்க விக்கிக் கொள்கை அடிப்படையில் அன்றி தன்னிலையிலும் விளக்க முயல்கிறார்.

விக்கி நடைமுறைகளை சுட்டினால் பொய் சொல்வதாக தனிமனித தாக்குதல் நடத்தவேண்டாம். பொய் சொல்லி கட்டுரை எழுதி, பங்களித்து பெருமை சேர்க்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. நீக்கல் வார்ப்புரு இடாமல், கட்டுரை பேச்சுப்பக்கங்களில் கலந்துரையாடாமல், "ஆசிரியரை பார்க்காதே, கட்டுரையைப் பார்" என்றில்லாமல் எனது பக்கத்தில் வார்ப்புரு இட்டதை, மேற்கண்ட தமிழாக்கத்தை (இரண்டாவதாக) நீக்கியதை தான் தொகுத்தல் போர் என்கிறேன்.

வம்புக்கு இழுத்தல் > பிரச்சார உத்தி

[தொகு]
  • ஒரு பயனரிடம் விளக்கம் கேட்க வேண்டுமாயின் அவரது பேச்சுப்பக்கத்தில் உரையாட வேண்டும் என்பது விக்கி முறை. அப்படியிருக்க, மாகிர் ஏன் ஆலமரத்தடியில் வினவ வேண்டும். நானே வலிந்து என் பேச்சுப் பக்கத்தில் பேச்சை தொடர்ந்தாலும் மாகிர் விடாப்பிடியாக இருப்பதன் அர்த்தம் என்ன? விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#புதுப் பயனர் தடை தொடர்பாக
கொள்கை மேம்படுத்தல் தொடர்பானது என்று விளக்கியிருக்கிறேன். உங்களை மட்டும் சுட்டுவதல்ல என்றும் விளக்கியிருக்கிறேன்.
  • என் பேச்சுப் பக்கத்தில் நக்கீரனை மட்டும் அழைப்பது எதற்காக? இதன் உள்நோக்கம் என்ன? (நக்கீரன், இது உங்களுக்கெதிரான குற்றச்சாட்டல்ல) சம்பந்தமே அற்ற நக்கீரனை கோர்த்துவிட முயல்வதும், ஆலமரத்தடியை பயன்படுத்தியதும் en:Wikipedia:Canvassing - பிரச்சார உத்தியாகும்.
பதிப்புரிமை என்கிற பெயரில் கட்டுரைகளை நீக்குவது தொடர்பில் நக்கீரன் வைத்த கருத்துக்களின் பொருட்டே அவரை அழைத்தேன். அதன் அடிப்படையிலே அவரது கருத்துக்களை வினவியிருந்தேன். (இங்கு பதிப்புரிமை கட்டுரைகளை அப்படியே பதியவேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. அவற்றை திருத்தி விக்கிப்படுத்தலாம். கால அவகாசம் தரவேண்டும். சில மணித்தியாளங்கள் மட்டும் போதுமானதல்ல.)
  • விக்கி நடைக்கு உட்பட்டே குறித்த பயனரை தடை செய்தேன். அதை விளக்கியுமிருக்கிறேன். இதுபற்றிய கொள்கை தெளிவற்று இருந்தால் உரையாடவும் ஆயத்தமாகவுமுள்ளேன். மேலும், நான் பேச்சுப் பக்கத்தில் குறித்த பயனருக்கு அறிவிப்பு வழங்கியிருந்தேன். அவரும் ஏற்றுக் கொண்டிருந்தார். ஆனால், அவர் கிரந்த தலைப்புக்குக்கு மாற்றுவதில் குறியாக இருந்தார். கிரந்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த பயனர்களில் ஒருவருக்கு இவர் கைப்பாவையாக செயற்படுகிராரோ என நினைப்பதில் என்ன தவறு. விக்கியில் அறிவிப்பின்றி தடை செய்யப்பட்ட சம்பவங்கள் பல இருக்க மாகிருக்கு நான் மட்டுமா தெரிகிறேன்?
பயனர் தடைகள் தொடர்பில் விக்கி கொள்கைகள் மேம்படுத்தப்படவேண்டும் என்பதே எனது கோரிக்கை. கொள்கைகள், வழிகாட்டுதல்களை மேம்படுத்துவதற்காக, ஏற்கெனவே தடை செய்யப்பட்ட பயனர்களின் விவரங்களும் மீளாய்வுக்கு (auditing) உட்படுத்துதலும் தவறில்லை.

தெளிவின்மை > அவதூறு

[தொகு]
  • இங்கு இன்னுமொரு பயனர் மீது அவதூறு கூறுகிறார். ஆனால், குறித்த பயனர் இது பற்றி இரவிக்கும் எனக்கும் தாக்குதல் செய்த மின்னஞ்சல்களின் நகல் அனுப்பியிருந்தார். நாங்கள் இருவரும் கவனிக்காததால் அல்லது அவ்வேளை விக்கியில் இல்லாததால், அவரே தடுக்க வேண்டியதாயிற்று. இதில் என்ன குற்றம்?
விக்கி பொதுவெளியில் நடக்கிறது. அதன்படி தனிப்பட்ட ரீதியில் உதவி கேட்டிருந்தால், அதுபற்றி தெரியாத பட்சத்தில் பிறகு பயனர்கள் கேள்வி கேட்க உரிமையுண்டு. தடை செய்வதற்கு முன் பயனருக்கு அறிவிக்கப்படுகிறதா என்பதே எனது கேள்வி. -- மாகிர் (பேச்சு) 11:17, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

நடவடிக்கை

[தொகு]

நிருவாக அணுக்கம் உள்ள ஒரு பயனர் இவ்வாறு பழி உணர்வுடன் என்னுடன் நடந்து கொண்டதும், விக்கிக் கொள்கைகளை விளங்கிக் கொள்ளாமலும், தன்னிலை விளக்கமும், உண்மைக்குப் புறம்பாக நடத்து கொண்டதற்காகவும், மற்ற பயனர்கள் மீது நல்லெண்ணம் கொள்ளமல் குற்றஞ்சாட்டியதாலும், வழமையான என் விக்கி செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாலும் விக்கி சமூகம் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மகிர் பதில் அளிப்பதாயின் கேட்கப்பட்ட கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் அளிக்க வேண்டும். இங்கு விருப்பப்பட்ட வேள்விக்கு மட்டும் பதில் அளிக்க முடியாது. அல்லது வேறு பயனர்கள் இவ்விடயத்தைக் கையாளவும். நன்றி. --AntanO 10:01, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

இத்தனை ஆண்டுகாலம் விக்கி சமூகத்துடன் இணைந்தே பயணித்திருக்கிறேன். பழி உணர்வு என்பது தவறான எண்ணம். மாறாக பதிப்புரிமை, பயனர் தடைகளில் வழிகாட்டுதல் தெளிவுபடுத்தவேண்டும், நடைமுறைப் படுத்தப்படுவதை சமூகம் கண்கானிக்க வேண்டும் என்பதை நோக்கித்தான் எனது செயல்பாடு அமைந்துள்ளதை அறியலாம். நன்றி. --மாகிர் (பேச்சு) 11:17, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
இங்கு மகிரின் பதிலுக்கு (அவை மழுப்பலாக இருப்பதால்) மாற்றுப் பதில் அளிக்க விரும்பவில்லை. மற்றப் பயனர்களின் கருத்துக்காகக் காத்திருக்கிறேன். குறிப்பு: என்னால் விக்கிக் கொள்கைக்கு உட்பட்டு பதில் அளிக்க முடியும். --AntanO 11:43, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நாகரிகமாக திருப்தியில்லை என்று சொல்லலாம். மளுப்பலாக இருப்பதால் என்று வாதத்தை மட்டம் தட்டவேண்டியதில்லை. இது விக்கி உரையாடல் பண்பாடல்ல. எனது பதில் மளுப்பலா, திருப்தியா என்பதை மற்றவர்கள் முடிவுசெய்வார்கள். -- மாகிர் (பேச்சு) 12:04, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
//ஆங்கில விக்கியிலிருந்து தமிழாக்கம் செய்தது என்று சொல்லியபிறகும்// //நான் பதிப்புரிமை மீறல் செய்யவில்லை என்று சொல்லவில்லை.//
மாகிர் கூறியவற்றை ஒப்புநோக்குக. இப்பக்கத்தில் ஆண்டனின் சில குறிப்புகளை மாகிர் நீக்கியிருந்தார். ஏன்? பின்னர், ஆண்டன் மீண்டும் அவற்றைச் சேர்த்திருந்தார். --மதனாகரன் (பேச்சு) 12:16, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
வரிக்கு வரி நான் பதில் தந்திருக்கிறேன். இது தொகுத்தல் முரண்பாட்டில் ஏற்பட்ட பிழை. //நான் பதிப்புரிமை மீறல் செய்யவில்லை என்று சொல்லவில்லை.// - இது முதல் தொகுத்தல். //ஆங்கில விக்கியிலிருந்து தமிழாக்கம் செய்தது என்று சொல்லியபிறகும்// - இது இரண்டாவதாக தொகுத்தை குறிக்கும் - மாகிர் (பேச்சு) 12:38, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
குறிப்பு: மழுப்பல் = elusion, திருப்தி = satisfaction --AntanO 12:20, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

மறுப்புரை

[தொகு]

ஆண்டனின் கருத்துகளை நீக்கியது தொகுப்பு முரணா?

  • ஆண்டனின் இறுதித் தொகுப்புக்கும் மாகிரின் முதல் தொகுப்புக்கும் 41 மணித்துளிகள் வேறுபாடு உள்ளது. ஆண்டனின் முதல் தொகுப்புக்கும் மாகிரின் முதல் தொகுப்புக்கும் இடையே 76 மணித்துளிகள் வேறுபாடு உள்ளது. ஆகவே, மாகிர் 41இலிருந்து 76 வரையான மணித்துளி நேரத்திற்குப் பக்கத்தைத் தொகுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
  • அவ்வாறே நடந்தது என வைத்துக்கொண்டாலும் அந்நேர இடைவெளியினுள் ஆண்டன் செய்த பதிப்புரிமை மீறல் > முரண்பாடு போன்ற மாற்றங்கள் அவ்வாறே இருக்க, ஆண்டனின் முதல் தொகுப்பில் இடப்பட்ட சில கருத்துகள் மட்டும் நீக்கப்பட்டிருப்பது தொகுப்பு முரணா?
  • தொகுப்பு முரணில் இவ்வாறும் கூட ஏற்படும் என்பது புதியதாய் உள்ளது. --மதனாகரன் (பேச்சு) 13:06, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
உள்நோக்கம் கற்பிக்கும் உங்களுக்கு இதற்கு மேல் பதில் தர இயலாது.
இங்கு விவாதம் நிருவாகிகளுக்கான அறிவிப்புப் பலகை தொடர்பானதல்ல. தொகுத்தல் முரண்பாட்டில் விடுபட்டவற்றிற்கும் பதில் தந்திருக்கிறேன். பதிலளிக்கையில் நிமிடங்களிலேயே தட்டச்சிட்டு பதில் தந்துவிடமுடியாது. -- மாகிர் (பேச்சு) 13:41, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தொகுப்பு வரலாற்றை ஆய்ந்து பார்க்கும் எவருக்கும் உண்மை புலப்படும். எனது இரண்டாவது குறிப்பைக் கவனத்திற் கொள்க. --மதனாகரன் (பேச்சு) 13:53, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

கருத்துகள்

[தொகு]
  • /மீண்டும் நான் பதிப்புரிமை மீறல் செய்யவில்லை என்று சொல்லவில்லை./ என மேலேக் கூறியுள்ளீர்கள். உடனடியாகப் பதிப்புரிமை மீறல் கட்டுரையை நீக்கியதில் என்ன தவறு இருக்க முடியும்? இத்தகுக் கட்டுரைகளை எப்படி அனுமதிக்கக் கூறுகிறீர்கள்?
  • கட்டுரைகள் முறையற்று இருக்கும்போது அதை உடனடியாக நீக்குவதில் என்ன தவறு?
பதிப்புரிமை மீறல் கட்டுரைகளில் உள்ளடக்கத்தை நீக்கிவிட்டு நீக்கல் வார்ப்புரு இடலாம்.
  • பயனர் தடை விளக்கம்: வலைப்பதிவினைப் போன்று எழுதியிருந்ததைக் காரணத்தைக் குறிப்பிட்டு நீக்கியவுடன், என் பயனர் பக்கத்திலிருந்து தகவல்களை நீக்கியதற்காகவும், நீக்கியப் பக்கத்தை மீண்டும் பதிவிட்டு தொகுத்தல் போர் ஆரம்பித்ததற்காகவும், அவதூறான மின்மடல் செய்திகளுக்காகவும் அப்பயனரைத் தடை செய்திருந்தேன். மாகிர் நீங்கள் கூற வரும் செய்தி என்ன? இது எப்படி இயற்கை நீதிக்குப் புறம்பானதாக இருக்க முடியும்? ஒரு பயனர் நேரடியாகத் தாக்கும்போது, பொறுமையாக இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறீர்களா? அல்லது அவதூறான மின்மடல்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும் என்கிறீர்களா? இங்கு நாம் அனைவரும் பங்களிப்பது தன்னார்வலர் என்ற முறையில்தான். தனிமனிதத் தாக்குதல்கள் எந்த வெளியிலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல.

--நந்தகுமார் (பேச்சு) 12:19, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

ஒரு பயனர் இதுபோன்ற செயலால், அவரது பேச்சுப் பக்கத்தில் எச்சரித்து விட்டே மீண்டும் தொடர்ந்த போது தடை செய்யப்பட்ட நல்ல நடைமுறையை கடந்த வாரம் பார்த்தேன்.
இதுபோன்றே அவருக்கு எச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றுதான் எனது விருப்பம். தனிமனித தாக்குதலே ஆனாலும் விக்கி போன்ற பொது நல அமைப்புகளில் நடைமுறைகளை பேணவேண்டும். பாதிக்கப்பட்டவரே நீதிபதியாக இருக்கமுடியுமா? உங்கள் பயனர் பக்கத்தில் உள்ளடக்கத்தை நீக்கியதால் தான் நீங்கள் அவரை தடை செய்தீர்களோ என்று வெளிப்படையாக பார்க்கும் போது எனக்குத் தெரிகிறது. பயனர் பக்கத்தில் நீக்கியது தவறு என்றாலும் அதனை அவருக்கு தெரிவித்து எச்சரித்திருக்கலாம் என்பதுதான் எனது வாதம். இது ஒரு வழிகாட்டுதல் குறைபாடாகத்தான் பார்க்கிறேன். உங்கள் மீதான குற்றச்சாட்டாக பார்க்கவில்லை. -- மாகிர் (பேச்சு) 12:55, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

மாகிர், நந்தகுமாரின் வழமையான துப்புரவுப் பணிச் செயற்பாட்டினை ஏற்றுக் கொள்ளாத பயனர்:Nadarsonline அவருக்கு முறையற்று மின்மடலில் எழுதியிருந்தார். அதற்குப் பொறுமையாக விளக்கம் அளித்து எனக்கு ஒரு படியும் இணைத்திருந்தார். நானும் அப்பயனருக்கு விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள் உள்ளிட்ட கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுத்தேன். ஆனால், அப்பயனர் தொடர்ந்து பொறுப்பற்று மின்மடலில் பதில் உரைத்து இருந்தார். அவரின் இத்தகையை போக்கு தொடரும் எனில், பயனரைத் தடுக்கலாம் என்று நான் தான் பரிந்துரைத்திருந்தேன். அம்மின்மடல் அவை நாகரிகம் அற்று இருந்ததால் அதனை விக்கியில் அப்படியே குறிப்பிட வேண்டாம் என்று விட்டு விட்டேன். எனினும், தற்போது இந்த உள் தகவல் பரிமாற்றம் அறியாமல் வெளியில் இருந்து பார்ப்போருக்கு நிருவாக அணுக்கம் சரியாகப் பயன்படுத்தப்படவில்லையோ என்ற புரிதற் பிழை வர வாய்ப்பிருப்பதை உணர முடிகிறது. எனவே, இவ்வாறான சூழலில் தடுக்கும் முன் பேச்சுப் பக்கத்திலும் ஒரு முறை சிக்கலை விளக்கி விட்டுத் தடுக்கலாம் என்ற வழிமுறையைப் பின்பற்றுவோம். அதே போல் பாதிக்கப்படும் பயனரே நேரடியாகத் தடுக்காமல் மற்ற நிருவாகிகள் நடவடிக்கை எடுக்கக் கோரலாம். எனவே, நந்தகுமார் - Nadarsonline தொடர்பான இம்முறையீட்டைக் கைவிடுமாறு வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 19:33, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

மாகிரின் கருத்து

[தொகு]
  • விக்கி நடைமுறை, மேம்பாடு தொடர்பாக கேள்வி கேட்பவர்களை நடவடிக்கை என்று கொண்டுவருவது ஆபத்தான போக்கு, தவறான முன்னுதாரணம் என்பதை கவனத்தில் கொள்ள விக்கி சமூகத்தை கேட்டுக் கொள்கிறேன். நன்றி -- மாகிர் (பேச்சு) 13:17, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

அன்ரன் கருத்து > விக்கி வழிகாட்டல், கொள்கைகளிலிருந்து

[தொகு]
விக்கிப்பீடியா:பதிப்புரிமை
  • பிறரது படைப்புகளை விக்கிப்பீடியாவில் இணைக்க அவரது எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும். எப்படி இதைச் செய்வது, அதற்கான வழிமுறைகள் இப்பக்கத்தில் - Requesting copyright permission தரப்பட்டுள்ளன.
  • மேற்குறிப்பிட்ட விதிகளை மீறி பதிவேற்றப்படும் படங்களோ சேர்க்கப்படும் கட்டுரைகளோ படங்களோ எந்நேரத்திலும் நீக்கப்படலாம். ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட பகுதி பதிப்புரிமை மீறி படியெடுத்து சேர்க்கப்பட்டிருந்தாலும், அக்கட்டுரை முழுமையாகவும் நீக்கப்படலாம்.
en:Wikipedia:Blocking policy
  • Blocks should be used to prevent imminent or continuing damage and disruption to Wikipedia. Deterrence is based upon the likelihood of repetition. For example, though it might have been justifiable to block an editor a short time ago, such a block may no longer be justifiable right now, particularly if the actions have since ceased or the conduct issues have been resolved.
  • Blocks should be used to deter the continuation of present, disruptive behavior
  • Blocks should be used to and encourage a more productive, congenial editing style within community norms.
en:Wikipedia:Revert only when necessary
  • In the case of a good faith edit, a reversion is appropriate when the reverter believes that the edit makes the article clearly worse and there is no element of the edit that is an improvement.
en:Wikipedia:Canvassing
  • Inappropriate notification > Mass posting & Partisan

I don't want to divert discussion. These are policies and guidance. --AntanO 13:58, 23 ஆகத்து 2015 (UTC) 👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 14:14, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

விக்கி நடைமுறை, கொள்கை என்பவற்றின் அடிப்படையில் செயற்படுபவர்களை, விளக்கமற்று கேள்வி கேட்பவர்களை வழிநடத்த அணுகுமுறை அவசியம். அல்லது குறித்த பயனர் பக்கத்தில் பண்பாக உரையாடுவதை ஊக்கிவிக்கலாம். அதைவிடுத்து வழக்குத்தொடர்ந்து, குற்றவாளிக் கூண்டில் வைத்து விசாரிப்பதுபோல் உள்ள அணுமுறை உகந்ததல்ல. விக்கியில் துப்புரவுப் பணி ஆற்றுபவர்கள் இயந்திரங்கள் அல்ல, அவர்களும் மனிதர்கள் என்ற புரிதல் வேண்டும். கேள்வி கேட்பவரைவிட, களத்தில் முழுமூச்சில் இயங்குபவருக்கு பொறுப்புணர்வு அதிகம் இருக்கும். கூடவே விசமத்தனம் செய்தால் கோபமும் வரும். தன்னார்வத்துடன் முன்னின்று செயல்டுபவர்களை காக்க விக்கி சமூக தவறிவிடக் கூடாது. நன்றி. --AntanO 14:16, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தீர்வு நோக்கி

[தொகு]

மாகிர், Antan, இவ்வுரையாடலில் பல கருப்பொருள்கள் இருப்பதால் ஒவ்வொன்றாக அணுகுவோம்.

பயனர் தடைகள்

[தொகு]

பயனர்களைத் தடுப்பது பற்றிய தமிழ் விக்கிப்பீடியா கொள்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது:

"தொகுப்பவர்கள், யாரேனும் தவறான முறையில் தடை செய்யப்பட்டிருந்தால், தடை குறித்து மீள்விசாரணை செய்யலாம். பயனர் தடை தவறானது என்றோ, இனி தடை செய்வது தேவையில்லை என்றோ நினைத்தால், பயனரை தடைப் பதிகையிலிருந்து நீக்கி, பயனரைத் தொகுக்க அனுமதிக்கலாம்."

இதன் அடிப்படையில் பயனர் தடை பற்றிய மீளாய்வு கோரிக்கைகளை இங்கு முன்வைக்கலாம். விக்கிப்பீடியா:பயனர் தடை வேண்டுகோள்கள் என்ற பக்கத்தையும் ஒப்பு நோக்கலாம்

அதே வேளை, நாம் ஆங்கில விக்கிப்பீடியா கொள்கை போன்று விரிவான வழிகாட்டுதல்களைத் தருவது அவசியம் ஆகிறது. இதன் மூலம் நிருவாகிக்கு நிருவாகி மாறும் அகவயமான மதிப்பீட்டு முறைகளை ஓரளவு சீராக்கலாம். ஏற்கனவே ஓரளவு விரிவான வழிகாட்டுதல்களை ஒரு பக்கத்தில் கண்டதாக நினைவு. ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.

பயனர்:Winnan Tirunallur மீதான தடையை மேற்கண்ட மீளாய்வு வழிமுறையில் அணுகினால் போதுமானதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.--இரவி (பேச்சு) 20:13, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தோழர் @AntanO: அவர்களுக்கு வணக்கம், முதற்கண்ணாக எவ்வித முன்னறிவிப்பும் தராமல், எவ்வித முன்னெச்சரிக்கையும் வாய்ப்பும் நல்காமல் என்னை தடாலடியாக தடை செய்த தங்கள் மாண்பிற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். அது மட்டுமின்றி, தங்களையோ வேறு எந்தவொரு நிர்வாகியையோ தொடர்பு கொள்ள வழிவகையும் கொடுக்காமல் என்னை முடக்கியமைக்காக பேருவகை அடைந்தேன். சரி போகட்டும் அது தங்களின் விருப்பம், அதற்கான அதிகாரமும் வசதியும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது அதை நான் மதிக்கின்றேன். --Winnan Tirunallur (பேச்சு) 13:30, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
ஆனால் என்னை எக் காரணத்திற்காக முடக்கினீர்கள் என்பதை அறிய வேண்டியவனாய் நான் இருக்கின்றேன். தலைப்பு மாற்றம் என்பது விக்கிபீடியா தந்திருக்கும் ஒரு வாய்ப்பு, இதை புதுப்பயனர், பழைய பயனர், நிர்வாகி என தனித்தனியாக வழங்கப்படவில்லை. பொதுவில் வழங்கப்படும் தலைப்புகளுக்கு முரணான தலைப்புகளைக் கட்டுரைகள் கொண்டிருந்தால் அதை மாற்றலாம் என்பதே விக்கிபீடியாவின் கொள்கையாக நான் வாசித்தவரையில் நான் அறிந்து கொண்டது. --Winnan Tirunallur (பேச்சு) 13:30, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
ஒருவேளை அத்தகைய கொள்கைகளை நான் தவறாக புரிந்து கொண்டேனா, அல்லது என்ன என்பதை புதியவனான எனக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு தங்களைப் போன்ற நிர்வாகிகளுக்கு இருக்கின்றது என நான் நினைக்கின்றேன். அல்லது எவ்வித வாய்ப்பும் நல்காமல் புதுப் பயனர் ஒருவருக்கு போதிய அவகாசமும் வழங்காமல் தடை செய்வது தான் தமிழ் விக்கிபீடியாவின் நடைமுறையா என்பதையும் நான் அறிந்து கொள்ள விரும்புகின்றேன். --Winnan Tirunallur (பேச்சு) 13:30, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
என்னை எந்தக் கட்டுரைக்காக தடை செய்தீர்கள் என்ற விளக்கத்தை அறிந்து கொள்ள ஆர்வமுடையவனாயிருக்கின்றேன். அறியத் தந்தால் தொடர்ந்து பேச பேருதவியாக இருக்கும். --Winnan Tirunallur (பேச்சு) 13:29, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]


பதிப்புரிமை மீறல்

[தொகு]

இப்போது நான் தொகுத்துக் கொண்டிருக்கும் தொகுப்புப் பெட்டியின் கீழ் "பக்கத்தைச் சேமிக்கவும்" என்ற பொத்தானுக்கு மேல் பின்வரும் வாசகம் உள்ளது:

"இந்த ஆக்கத்தைச் சேமிப்பதன் மூலம் நீங்கள் Creative Commons Attribution/Share-Alike License 3.0 மற்றும் GFDL பதிப்புரிமை விதிகளுக்கு உட்பட்டு உங்கள் பங்களிப்புகளைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளிக்கிறீர்கள். இந்த ஆக்கத்தினை மறுபயன்பாடு செய்பவர்கள், குறைந்த பட்சம் இந்தப் பக்கத்துக்கு ஒரு மீத்தொடுப்பு தருவதன் மூலம் பங்களிப்பு உங்களுடையது என்று அறிவித்துவிட்டு, இதனைப் பயன்படுத்தவும் ஒப்புதல் அளிக்கிறீர்கள். "

இந்த அடிப்படையில் ஒரு பயனர் தெரிந்தோ தெளிவற்ற நிலையிலோ கூட பதிப்புரிமையுள்ள உள்ளடக்கங்களை கட்டுரைப் பெயர் வெளி, பேச்சுப் பக்கம், மணல் தொட்டி உட்பட விக்கிமீடியா திட்டத்தின் எந்த ஒரு இடத்திலும் சேர்ப்பது தவறு மட்டுமன்று விக்கிமீடியா அறக்கட்டளைக்கு சட்ட நோக்கிலான சிக்கலையும் தரும். எனவே, பதிப்புரிமை தொடர்பாக சற்று ஐயம் இருந்தாலும் அதனைச் சேர்க்காமல் விடுவதே நன்று. ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒருவர் பதிப்புரிமையுள்ள ஆக்கத்தைத் தன் சொந்த சொற்களில் ஓரளவு ஒட்டி எழுதுவது கூட வரவேற்கப்படுவதில்லை. பார்க்க - en:Wikipedia:Close paraphrasing. பல்வேறு வகையில் தர மேம்பாட்டுக்கு உழைக்கும் தமிழ் விக்கிப்பீடியர்கள் இது தொடர்பான விழிப்புணர்வு கொண்டிருந்தல் நன்று. ஏனெனில் பல நெடுநாள் பங்களிப்பாளர்கள் கூட (குறிப்பாக, அவர்கள் பங்களிக்கத் தொடங்கிய நாட்களில்) அறியாமல் இப்பிழை விட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது. இந்த வகையில், பதிப்புரிமை மீறலைச் சோதித்தல் என்னும் அலுப்பூட்டும் பணியை பக்கம் பக்கமாக மேற்கொள்ளும் துப்புரவுப் பங்களிப்பாளர்களை புரிந்து கொண்டு அவர்கள் பணிக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறேன். ஒரு ஆக்கம் பதிப்புரிமைச் சிக்கல் கொண்டிருக்கிறதா என்ற தெளிவற்ற நிலையில் கட்டுரையில் வார்ப்புரு இட்டு பேச்சுப் பக்கத்தில் உரையாடுவதில் பயன் உண்டு. ஆனால், கூகுள் தேடல் மூலம் மிகத் தெளிவாக பதிப்புரிமை மீறல் என்று தெரியும் உள்ளடக்கத்தை நீக்குவது துப்புரவுப் பணிக்கு உட்பட்டதே. இதனைத் தொகுப்புப் போராக கருத முடியாது. பயனர்கள் இணக்கச் சூழலைக் காக்க வேண்டியது முக்கியம் தான் என்றாலும், துணிவுடன் செயற்படு என்ற அடிப்படைக் கொள்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வழமையான துப்புரவுப் பணிகளுக்கே பக்கம் பக்கமாக பேச்சுப் பக்கத்தில் உரையாடினால் தர மேம்பாட்டில் போதுமான வேகம் இருக்காது. ஒரு சில விக்கிப்பீடியர்கள், பொது மக்களிடம் பேசும் போது தாங்கள் எழுதியதைத் தங்களைக் கேட்காமல் யாரும் மாற்றக் கூடாது என்ற எதிர்பார்ப்பு நிலவுவது தெரிய வருகிறது. இது நடைமுறைச் சாத்தியமற்றது மட்டுமன்று விக்கி தத்துவத்துக்கும் கிரியேட்டிவு காமன்சு உரிமத்துக்கும் முரணானதும் கூட.

தமிழ்ச் சூழலைப் பொருத்த வரை, பல உள்ளடக்கங்களின் ஆசிரியர்களுக்கு பதிப்புரிமை குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லை. இலவசமாக அனைவரும் படிக்கும் வகையில் இணையத்தில் போட்டாலே போதுமானது என்று எண்ணுகிறார்கள். மற்றவர்கள் படியெடுத்துப் பரப்புவதையும் அவர்கள் தடுப்பதில்லை. உண்மையில், அவர்கள் நோக்கம் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதே. ஆனால், அதற்கு முறையான சட்ட உரிமம் கொடுப்பது என்ற தெளிவு இல்லை. இங்கு மாகிர் பயன்படுத்த முனைந்த உள்ளடக்கம் அவ்வாறானதே. இது போன்ற உள்ளடக்கங்கள் பயன்படுமேயானால், நாம் முறையாக அவர்களைத் தொடர்பு கொண்டு தகுந்த கிரியேட்டிவு காமன்சு உரிமத்தில் ஆக்கங்களைப் பெற முனைவோம். எல்லா ஆசிரியர்களையும் தொடர்பு கொள்ள முடிவதோ அவர்கள் நம் வேண்டுகோளுக்கு இணங்குவதோ இல்லை. அத்தகைய வேளையில், அப்படியே படி எடுத்துப் போடாமால் பதிப்புரிமைச் சிக்கல் வராதவாறு சொந்தச் சொற்களில் சுருக்கத்தை மட்டும் தருவது நன்று. இதனைத் தத்தம் கணினியிலேயே செய்து செப்பனிட்டு அதன் பிறகு விக்கிப்பீடியாவில் ஏற்றுவது வரவேற்கத்தக்கது. இறுதியில் பதிப்புரிமைச் சிக்கல் இன்றி திருத்துவது தான் நோக்கம் என்றாலும் பதிப்புரிமை உள்ள ஆக்கங்களைத் திருத்துவதற்கான மணல் தொட்டியாகவோ பணி மேசையாகவோ விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

புதிய பயனர்களுக்கு இவ்வாறான விசயங்களில் கூடுதல் வழிகாட்டுதல் தேவைப்படும். ஆனால், நிருவாகப் பொறுப்பில் உள்ளோரிடம் இது தொடர்பான கூடுதல் எதிர்பார்ப்பு இருப்பதில் தவறு இல்லை :) அதே வேளை, புதியவர்களை விட நெடுநாள் பங்களிப்பாளர்களிடம் எளிதில் உரையாடிப் புரிய வைக்க முடியும் என்பதால் நேரடியாக பயனர் பக்கத்தில் எச்சரிக்கை வார்ப்புரு இடாமல் இயல்பாகவே கவனம் ஈர்க்க முனையலாம். எச்சரிக்கை வார்ப்புருக்கள் இடுவது குறித்து அண்மையில் இன்னும் மேம்பட்ட புரிதல் பெற்றிருக்கிறோம். இவற்றை ஆலமரத்தடியில் இடுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 20:34, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

காலம் கடந்து விட்டதால், எனது பதில் கருத்துக்களை முன்வைப்பதைத் தவிர்க்கிறேன். [விக்கிப்பீடியா:பயனர் தடை மீளாய்வு] என்ற புதிய பகுதி தேவையில்லை. பயனரின் பேச்சுப் பக்கத்திலேயே இது குறித்து உரையாடலாம். எனவே விக்கிப்பீடியா:பயனர் தடை மீளாய்வு பக்கத்தை நீக்கப்பரிந்துரைக்கிறேன். குறிப்பு: நான் தடைசெய்த பயனர் கைப்பாவை என பின்னர் தெரிய வந்துள்ளது. --AntanO 05:17, 14 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

இக்கட்டுரை தொகுப்புப் போரை நோக்கிச் செல்வதாக உணர்கிறேன். பிற நிருவாகிகள் கவனத்திற்கு. --மதனாகரன் (பேச்சு) 13:30, 8 செப்டம்பர் 2015 (UTC)

நற்கீரன்

[தொகு]

Natkeeran (பேச்சு · பங்களிப்புக்கள்) இப்பயனர் அழிக்கப்படும் கட்டுரைகளை மீட்டமைக்கிறார்.

இலங்கை வணிகச் சின்னங்கள் என்ற கட்டுரை நற்கீரனால் 1-4-2008 அன்று உருவாக்கப்பட்டது. கட்டுரை என்ன என்றே விளங்காத உள்ளடக்கம் இருந்ததால் என்னால் 15 ஆகத்து 2015‎ அன்று "குறிப்பிடத்தக்கமை" வார்ப்புரு இணைக்கப்பட்டது. கட்டுரையில் முன்னேற்றம் இல்லாததாலும், பேச்சுப்பக்கத்தில் எவ்வித உரையாடலும் இல்லாததாலும் 25 திசம்பர் 2015 அன்று என்னால் நீக்கப்பட்டது (4 மாதங்களுக்கு மேல்). ஆனால், காரணம் எதுவும் இன்றி (சுருக்கத்திலும் இல்லை) 26 திசம்பர் 2015 அன்று குறிப்பிட்ட பயனரால் மீட்கப்பட்டது. தற்போது "குறிப்பிடத்தக்கமை" வார்ப்புரு நீக்கப்பட்டு, இரு உசாத்துணைகள் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கமைக்கும் சான்று கோரலுக்கும் வித்தியாசம் உள்ளது.

இவ்வாறே குலாம் ஹுஸைன் முபஷர் என்ற கட்டுரை 7 சூலை 2015 அன்று இன்னொரு பயனரால் குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு இணைக்கப்பட, 10 திசம்பர் 2015 அன்று என்னால் நீக்கப்பட்டது (5 மாதங்கள்). ஆனால், காரணம் எதுவும் இன்றி அதேநாளில் குறிப்பிட்ட பயனரால் மீட்கப்பட்டது. இவ்வாறு முன்னரும் பல முறை நிகழ்ந்துள்ளது. (எ.கா: ஆப்பிரிக்க-அமெரிக்கக் கணிதவியலாளர்கள் பட்டியல் ......)

கட்டுரைகள் விக்கிப்பீடியா கொள்கை/வழிகாட்டல் அடிப்படையில் அழிக்கப்படுகின்றன. மீட்கப்படும் கட்டுரைகள் எக்கொள்கை/வழிகாட்டல் அடிப்படையில் மீட்கப்படுகின்றன. தான் உருவாக்கிய கட்டுரைகள் அழிபடக்கூடாது என்ற எண்ணமா? அல்லது தன் நிருவாக, அதிகாரி அணுக்கங்களை பிழையாகப் பயன்படுத்துகிறாரா? நீக்கல், குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு இடப்பட்டு இருக்கும் வரை இப்பயனர் ஏன் கட்டுரைகளை மேம்படுத்தவில்லை. அல்லது அது குறித்து உரையாடவில்லை. இவர் நிருவாக அணுக்கத்தை பிழையாகப் பயன்படுத்துகிறார். அப்படியென்றால் மற்றவர்களின் நிருவாக அணுக்கத்தை நீக்கிவிட்டு இவருக்கு மட்டும் கொடுங்கள்.

இப்பயனரின் தன்னிச்சையான போக்கை சுட்டிக்காட்டி, இனி இவ்வாறு நடக்க வேண்டாம் என்று அறிவுறுத்த நிருவாகிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். தவறும்பட்சத்தில் நான் நடவடிக்கை எடுப்பேன். நன்றி. --AntanO 17:15, 26 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]


இலங்கை வணிகச் சின்னங்கள் ஏன் குறிப்பிடத்தக்து இல்லை என்று விளக்காமல் நீக்கப்பட்டுள்ளது. கட்டுரை அன்ரனுக்கு விளங்கவில்லை என்பது தகுந்த காரணம் இல்லை. இவருக்கு விளங்காத பல கட்டுரைகள் துறைகள் இருக்கலாம். செல்வா, மயூரநாதன் ஆகியோர் திருத்தம் செய்துள்ளார்கள் என்பது குறிக்கத்தக்கது. குறிப்பிடத்தக்கமையை சான்றுகளால் வலுயுறுத்த முடியும். ஒரு கட்டுரையின் பொருள் எவ்வாறு முக்கியம் பெறுகின்றது என்பது தொடர்பாக சான்று சேர்க்கப்பட்டு குறிப்பிடத்தக்கமையை நிறுவ முயன்று உள்ளேன். அன்ரனின் கற்பனை சீர்தரங்களுக்கு ஏற்ப செயற்படுதல் கடினம் ஆகும். குலாம் ஹுஸைன் முபஷர் பேச்சுப் பக்கத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க-அமெரிக்கக் கணிதவியலாளர்கள் பட்டியல் தமிழ்ப் படுத்தப்படவில்லை என்று கூறப்பட்டது. பின்னர் இரண்டு நான் உருவாக்கிய கட்டுரைகள் இல்லை. குறுங்கட்டுரைகள், குறிப்பிடத்தக்கமை தொடர்பாக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுக்கமான கொள்கை இல்லை. ஒருவகை மிதவான அணுகுமுறையையே பின்பற்றப்படுகின்றது. ஆனால் அன்ரன் அதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர் அழிக்கும் பல கட்டுரைகள் நியாமானைவையாக நான் கருதவில்லை எனினும் எல்லாவற்றையும் மீட்கவில்லை. --Natkeeran (பேச்சு) 17:47, 26 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

எனக்கு கட்டுரை விளங்கவில்லை என்றால் அது எனக்குத் தெரியாத மொழியில்தான் இருக்க வேண்டும். ஆனால் நக்கீரனுக்கு கலைக்களஞ்சியம் என்றால் என்வென்று விளங்கவில்லை போல் உள்ளது. 4 மாதங்களுக்கு குறிப்பிடத்தன்மை கேள்விக்குட்பட்டபோது "எது" விளங்கவில்லை? //அன்ரனின் கற்பனை சீர்தரங்களுக்கு ஏற்ப செயற்படுதல்// இதனை விளக்கவும்? அமெரிக்க முதற்குடித் தலைவர்கள் என்பது யாருடைய கற்பனைக் கட்டுரை? சுவைப்பொருட்கள் படத் தொகுப்பு என்ற கட்டுரையை மீட்டு படக்களஞ்சியந்தான் உருவாக்க வேண்டும். நிற்க, என்னுடைய கேள்விக்கு அப்பால் கற்பனையாக பதில் சொல்ல வேண்டாம். திரும்பவும் குறிப்பிடுகிறேன்:

  • நீக்கல், குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு இடப்பட்டு இருக்கும் கட்டுரைகளை ஏன் மேம்படுத்தவில்லை, அல்லது அது குறித்து உரையாடவில்லை?
  • தன்னிச்சையாக மீட்பது ஏன்? நீக்கிய நிருவாகியுடன் ஏன் கலந்துரையாடப்படவில்லை? அல்லது காரணமும் குறிப்பிடப்படவில்லை. (மீட்ட பின் சான்று சேர்த்தது வேறு கதை.)
  • தன்னிச்சையாக கட்டுரைகளை மீட்டல் தொடருமா?

--AntanO 18:30, 26 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

//குறுங்கட்டுரைகள், குறிப்பிடத்தக்கமை தொடர்பாக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுக்கமான கொள்கை இல்லை.// ஆகவே, மு. கணேசன் (தள்ளுவண்டி கடைக்காரர்) என்ற கட்டுரையையும் மீட்கலாம்.
//ஒருவகை மிதவான அணுகுமுறையையே பின்பற்றப்படுகின்றது.// எது மிதவாதம்?
//அவர் அழிக்கும் பல கட்டுரைகள் நியாமானைவையாக நான் கருதவில்லை எனினும் எல்லாவற்றையும் மீட்கவில்லை. // நான் விக்கிக் கொள்கை, வழிகாட்டல்களையே கருதுகிறேன். நிற்க, மேலேயுள்ள 3 குறிப்புக்களையும் கவனிக்க. அதன்படி உரையாடுக.

--AntanO 18:41, 26 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

நற்கீரன் தினமும் விக்கியில் உலாவுபவர் அல்ல. அப்படி இருக்கையில் நீங்கள் வார்ப்பு இட்டது அவருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆங்கில விக்கியில் எந்த சிறிய கட்டுரை என்றாலும், கட்டுரை நீக்கப்படும் முன் கட்டுரையாளருக்குத் (அது எவராக இருந்தாலும்) அவரது உரையாடல் தெரிவிப்பது கட்டாயமாக உள்ளது. அது இங்கு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. எனவே இந்நடைமுறை இங்கு உடனடியாக கட்டாயமாக்கப்பட வேண்டும் எனப் பிரேரிக்கிறேன். இதற்கென ஆங்கில விக்கியில் உள்ளது போன்ற ஒரு வார்ப்புருவும் உருவாக்குதல் நல்லது. மேலும், ஒரு கட்டுரை நீக்கப்பட்டால், அக்கட்டுரையை ஒரு நிருவாகி (அது கட்டுரையாளராகவும் இருக்கலாம்) மீள்விக்க முடியும். அது ஏன் நீக்கப்பட்டது என்பதை அறிந்து அதனை அவர் மேம்படுத்தலாம். அதில் என்ன தவறுண்டு? இலங்கை வணிகச் சின்னங்கள் என்ற கட்டுரையில் இரண்டு அனுபவம் வாய்ந்த பயனர்கள் இருவர் கருத்துத் தெரிவித்தும் உள்ளனர். எனவே இதனை நீக்கும் முன்னர் உரையாடியிருக்கலாம்.--Kanags \உரையாடுக 22:33, 26 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
உரையாடல் பக்கத்தில் தெரிவிப்பது, மற்றும் நீக்கப்படும் கட்டுரைகளை இரண்டு நிர்வாகிகள் உறுதி செய்வது போன்ற நடவடிக்கைகள் நீக்கல் செயற்பாடுகளை நெறிப்படுத்தலாம். தன்னிச்சையாக நீக்குவதால், தன்னிச்சையாக மீட்க்க வேண்டி உள்ளது. ஆங்கில விக்கியில் இருக்கும் கட்டுரைகளுக்கு நேரடி மொழிபெயர்ப்புக்களுக்கே அங்கேயும் பார்க்க கூடிய குறிப்பிடுதல் குறிப்பிடத்தக்க கெடுபிடிகளை இங்கு உருவாக்கி நீக்குவது இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய முக்கியமான ஒரு விடயம். கொள்கை என்று அன்ரன் சுட்டுவதில் இருக்கும் முக்கிய முரண்பாடு இது. இதில் கிறிக்கட் வீரர்கள் உட்பட்ட கட்டுரைகளுக்கும் அடங்கும். அமெரிக்க முதற்குடித் தலைவர்கள் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் விபரம் தரப்பட்டுள்ளது. en:List of Native American leaders of the Indian Wars என்பது தமிழில் இருக்க வேண்டிய பட்டியலே. ஆனால் எனக்குத் தற்போது தமிழ்ப் படுத்த விரும்பவில்லை. அதற்காக கட்டுரை குறிப்பிடத்தக்கது அன்று அல்ல. படத் தொகுப்புக்களை உருவாக்குவது தமிழ் விக்கியில் தொடக்க காலத்தில் இருந்தது. அப்போது பொதுமம் பயன்படுத்துவது சிக்கலாக இருந்தது. இன்னும் இருக்கின்றது. ஆனால் மேம்பட்டு இருக்கின்றது. அவை நீக்கப்பட்ட போது, அவற்றை மீள்விக்கவும் என்று நான் கூறவில்லை. --Natkeeran (பேச்சு) 01:44, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

இங்கு முன்வைக்கப்பட்டுள்ள சிக்கல் குறித்து:

  • ஒரு நிருவாகியின் செயற்பாட்டை இன்னொரு நிருவாகி மீட்டமைக்கலாம். இது பிழையில்லை. ஆனால், மீட்டலுக்கான காரணம் தொகுப்புச் சுருக்கத்திலோ உரையாடல் பக்கத்திலோ தெரிவிக்க வேண்டும். அவ்விளக்கத்தைக் கண்டு மற்றவர்கள் குறிப்பிடத்தக்கமை போன்ற பராமரிப்பு வார்ப்புருக்களை நீக்குவதற்கான உரிய காலத்தைத் தர வேண்டும். ஆனால், இவ்வாறு மீட்டமைப்பது இரண்டாம் சுற்றுக்குச் செல்வது தொகுப்புப் போராக கருதப்படும். எனவே, அன்டன் அவ்வாறு செயற்படாமல் இங்கு கவனம் ஈர்த்தது முறை.
  • ஒரு நிருவாகி நேரடியாகத் தொடர்புடைய கட்டுரைகளில் தன்னுடைய நிருவாக அணுக்கத்தைப் பயன்படுத்தி மீள்வித்தல் உள்ளிட்ட தொகுப்புகளைச் செய்யாமல் இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது. Administrators should not use their tools to advantage, or in a content dispute (or article) where they are a party (or significant editor), or where a significant conflict of interest is likely to exist. மேலும் பார்க்க: Administrators should not normally use their tools in matters in which they are personally involved (for example, in a content dispute in which they are a party).
  • ஒரு தலைப்பைப் பற்றிய நேரடி அறிமுகம் இல்லாதவர் கூட, கட்டுரையில் இருக்கும் தகவலைக் கொண்டே அதன் குறிப்பிடத்தக்கமையை உணர்ந்து கொள்ளுமாறு இருக்க வேண்டும் என்பதே அடிப்படை. எனவே, ஒருவருக்குத் துறை அறிமுகம் இல்லையென்பதால் குறிப்பிடத்தக்கமையைக் கேள்வி எழுப்புவது செல்லுபடியாகாது என்று சொல்ல முடியாது. அதே போல, நெடுநாள் பயனர்கள் சிலர் பங்களித்திருப்பதால் மட்டுமே ஒரு தலைப்பின் குறிப்பிடத்தக்கமையை உறுதி செய்ய முடியாது. யார் எழுதியுள்ளார்கள் என்பது பொருட்டன்று. என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே முக்கியம்.
  • தனிப்பட்ட எந்த ஒரு கட்டுரையின் குறிப்பிடத்தக்கமை பற்றியும் அந்தந்த கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் உரையாடலைத் தொடர்வோம். குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு இடுதல், கட்டுரையை நீக்கல், மீட்டல் தொடர்பான வழிமுறைகளை மட்டும் இங்கு உரையாடுவோம்.
  • குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு இடுபவர் அக்கட்டுரையின் குறிப்பிடத்தக்கமை பற்றி எந்த முன்முடிவும் எடுப்பதில்லை. வார்ப்புரு இடுவது என்பது கேள்விக்குட்படுத்துவதே. கேள்விக்கு உரிய பதில் அளிக்க 3 மாத காலம் அளிக்கப்படுகிறது. கேள்விக்குப் பதில் கிடைக்காத பட்சத்தில் வார்ப்புருவில் உள்ள அறிவித்தலின் படி 3 மாத காலம் கழித்து கட்டுரையை நீக்கலாம். இதுவே நாம் துப்பரவுக்குப் பின்பற்றி வரும் வழிமுறை. 3 மாத காலத்தில் கட்டுரையை மேம்படுத்தவும் விளக்கம் அளிக்கவும் யாரும் முன்வராத நிலையில் துப்புரவு செய்பவரிடம் இருந்து கட்டுரையை அழிப்பதற்கான விளக்கம் எதிர்பார்ப்பதின் ஏரணம் சரியன்று.
  • குறித்த கால நீக்கல் வார்ப்புருக்கள் உள்ள கட்டுரைகள் குறித்து கட்டுரைகளை உருவாக்கிய பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் அறியத்தருவது நல்ல பரிந்துரை. பொதுவகம் உள்ளிட்ட இடங்களில் இதனைத் தானியக்கமாகத் தான் செய்கிறார்கள் என்று எண்ணுகிறேன். இதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுத்த வேண்டும்.
  • குறிப்பிடத்தக்கமை உள்ளிட்ட குறித்த கால நீக்கல்கள் குறித்து நாம் ஏற்கனவே மிதமான அணுகுமுறை தான் கொண்டிருக்கிறோம். போதிய உள்ளடக்கம் இல்லாத கட்டுரைகளை மேம்படுத்த ஒரு மாத காலம் தருகிறோம். குறிப்பிடத்தக்கமை நிறுவ 3 மாதம் தருகிறோம். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை இப்படிக் கேள்விக்குட்படுத்துவதில்லை. எப்போதும் ஏறத்தாழ 100+ கட்டுரைகளே காலக்கெடு உள்ள நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் பகுப்பில் தென்படுகின்றன. கட்டுரைகளைத் தக்க வைக்க முனைவோர், இப்பகுப்பைக் கவனித்து வரலாம்.
  • தரவுத்தளங்கள் தவிர வேறு எங்கும் காணப்படாத தலைப்புகள் கலைக்களஞ்சிய முக்கியத்துவம் வாய்ந்தவை தானா என்பது துறைக்குத் துறை முடிவுறா உரையாடலாக உள்ளது. துறை சார்ந்து முடிவு எட்ட இயலாவிட்டாலும், தனிப்பட்ட கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கமை கேள்விக்குட்படுத்தும் போதாவது அதனை நிறுவுவதற்கான முனைப்புகள் தேவை.
  • நீக்கப்படும் கட்டுரைகளை இரண்டு நிருவாகிகள் உறுதி செய்தல் போன்றவை துப்புரவுப் பணிக்கு நடைமுறைச் சாத்தியமற்ற, தேவையற்ற நடைமுறைகள். ஒரு நிருவாகியின் நடவடிக்கை, மதிப்பீட்டில் நம்பிக்கை கொள்ள முடியாது என்றால் நிருவாக வாக்கெடுப்பின் போதே சுட்டுதல் முறை. ஏற்கனவே உள்ள நிருவாகி ஒருவரின் நடவடிக்கையில் நம்பிக்கை இல்லை என்றால் நிருவாக அணுக்கத்தை மீளப் பெற முனையலாம். நிருவாகி மீதான பொதுவான மதிப்பீடாக அன்றி, ஒரு சில கட்டுரைகள் குறித்து தான் மாற்றுக் கருத்து என்றால் கட்டுரைகளின் உரையாடல் பக்கத்தில் சுட்டிக் காட்டினால் போதுமானது.
  • வார்ப்புரு இட்டு உரிய காலம் தந்து கட்டுரையை நீக்குவது தன்னிச்சையான செயற்பாடு அன்று. அது தான் துப்புரவாளர்களின் பணி.--இரவி (பேச்சு) 17:01, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
குறிப்பிடத்தக்கமை வார்ப்புருவும், speed-delete-on வார்ப்புருவும் இடப்பட்ட கட்டுரைகள் குறிப்பிட்ட கால எல்லை முடிந்தவுடன் நீக்கப்படுகின்றன. எனவே இந்த இரண்டு வார்ப்புருக்கள், மற்றும் delete வார்ப்புரு இணைக்கப்பட கட்டுரைகளின் ஆக்குனருக்கு இதுபற்றி முறைப்படி அறிவிக்கும் நடைமுறை இருக்க வேண்டும். //கட்டுரைகளைத் தக்க வைக்க முனைவோர், இப்பகுப்பைக் கவனித்து வரலாம்// என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாதது. ஒவ்வொரு நாளும் விக்கியில் உலா வரும் எனக்கு இப்பகுப்புகள் எங்குள்ளன என்பதை அறிய வார்ப்புருவைத் தேடி செல்ல வேண்டியுள்ளது. இப்பகுப்புகளைத் தேடிக் கண்டுபிடிப்பது அவ்வளவு இலகுவானதல்ல. அப்படியிருக்கையில், எப்போதாவது எழுதுபவர் ஒருவர் எவ்வாறு அடையாளம் காண்பது. //கட்டுரைகளைத் தக்க வைக்க முனைவோர், இப்பகுப்பைக் கவனித்து வரலாம்// அப்படி எவருக்கும் ஒரு கடப்பாடும் இல்லை. நான் உண்டு என் கட்டுரைகள் உண்டு என்று இருந்து விட்டுப் போகலாம். தனது கட்டுரை ஒன்றுக்கு இவ்வாறு வார்ப்புரு இடப்பட்டது தெரியாமல் பலர் இருப்பார்கள். எனவே அவர்கள் அறியாமல் கட்டுரைகளை நீக்குவது ஒரு தன்னிச்சையான செயல்பாடே.--Kanags \உரையாடுக 23:17, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
//எனவே அவர்கள் அறியாமல் கட்டுரைகளை நீக்குவது ஒரு தன்னிச்சையான செயல்பாடே// கட்டுரைகளை உருவாக்கியோருக்கு அறிவிப்பு தரலாம் என்ற பரிந்துரையை ஏற்கனகவே வரவேற்றிருக்கிறேன். ஆனால், விக்கிப்பீடியா உரிமம், கட்டுரையை நீக்குவது உட்பட்ட அனைத்து உரிமங்களையும் அனைவருக்கும் தருகிறது. ஒரு கட்டுரை எப்படி ஒருவருக்குச் சொந்தமன்றோ அதே போல் ஒரு கட்டுரையைக் காப்பதற்கும் அனைவருக்கும் கடப்பாடு உள்ளது. மாற்றுக் கருத்துள்ள கட்டுரைகளில் கூட சமூகத்தின் இணக்க முடிவே முக்கியமே தவிர, கட்டுரையை முதலில் உருவாக்கியவருக்குத் தகவல் தர வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. இங்கு நிருவாக அணுக்கம் என்பதை ஏதோ "பதவி" போல எண்ணுவதால் இக்குழப்பம் வருகிறது. Sysop என்ற ஆங்கிலச்சொல்லின் மூலத்தை ஆய்ந்து பார்த்தால், இது வழமையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான அணுக்கம் தான் என்பதை அறியலாம். --இரவி (பேச்சு) 06:06, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
குறிப்பிடத்தக்கமை கொள்கை தெளிவற்று இருக்கையில், ஆங்கில விக்கியில் அக்கட்டுரைகள் இருக்கையில் அக் கட்டுரைகளை இங்கு நீக்குவது தவறு. அதை அன்ரன் மீண்டும் மீண்டும் செய்கிறார். அதற்கு கொள்கையை அவர் மேற்கோள் காட்டுவது பொருத்தம் இல்லை. இரண்டு பேர் திருத்திய கட்டுரை அன்ரனுக்கு விளங்கவில்லை என்றால் விளக்கம் கோரி இருக்கலாம். குறிப்பிடத்தக்கமை இடுவது பொருத்தமாகத் தெரியவில்லை. அறிவித்தல் கட்டாயம் செய்ய வேண்டும். அன்ரன் பயனர் ஊடாட்டம், கொள்கை புரிதல் தொடர்பான எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால் நிர்வாக நீக்கம் போன்ற நீண்ட நேர விரய செயறாடுகளில் ஈடுபட எனக்கு ஆர்வம் இல்லை.. எழுதும் கட்டுரைகள் எல்லாம் பெரும்பாலும் நீக்கப்படும் என்றால் எனது விக்கியின் புரிந்தலில் பாரிய குறைபாடு உண்டு. அன்ரன் விரும்புவது போல நான் விக்கியில் எழுதுவதைக் குறைப்பது அல்லது நிறுத்துவதே சரி. எனது அணுக்கங்களையும் மீள்பெறுவதை வரவேற்கிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 15:43, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
// குறிப்பிடத்தக்கமை கொள்கை தெளிவற்று இருக்கையில் // - ஆகவே கண்டதையெல்லாம் எழுதலாமா? இதைத்தான் ஊக்குவிக்கப் போகிறீர்களா?
// ஆங்கில விக்கியில் அக்கட்டுரைகள் இருக்கையில் அக் கட்டுரைகளை இங்கு நீக்குவது தவறு. // - தமிழ் விக்கியில் இருக்கிறது என்பதற்கான ஆ.வியில் நீக்காமல் விடமாட்டார்கள். எடுத்துக்காட்டு தேவையா?
// அன்ரனுக்கு விளங்கவில்லை என்றால் விளக்கம் கோரி இருக்கலாம். குறிப்பிடத்தக்கமை இடுவது பொருத்தமாகத் தெரியவில்லை // - குறிப்பிடத்தக்கமை எதற்கு என்று தெரியாமல் நான் இடவில்லை. தற்போதும் கூட அக்கட்டுரை பலவீனமானதாகவே உள்ளது. குறிப்பிடத்தக்கமை பற்றிய உங்கள் புரிதல் பற்றிய ஐயம் எனக்குள்ளது. 10 பேர் கட்டுரையை திருத்துவதாலோ, 10 உசாத்துணை இணைப்பதாலோ கட்டுரை குறிப்பிடத்தக்கதாகாது.
// அன்ரன் பயனர் ஊடாட்டம், கொள்கை புரிதல் தொடர்பான எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால் நிர்வாக நீக்கம் போன்ற நீண்ட நேர விரய செயறாடுகளில் ஈடுபட எனக்கு ஆர்வம் இல்லை. // - தாராளமாக என் நிருவாக அணுக்க நீக்கலுக்கு பரிந்துரைக்கலாம். எனக்கு அதைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதை தக்க வைக்க நான் இங்கு கெஞ்சப் போவதுமில்லை. இன்றே அதைச் செய்யுமாறு கேட்கிறேன். அதற்கு நீண்ட நேர விரயம் ஏற்படாது.
// அன்ரன் விரும்புவது போல நான் விக்கியில் எழுதுவதைக் குறைப்பது அல்லது நிறுத்துவதே சரி. எனது அணுக்கங்களையும் மீள்பெறுவதை வரவேற்கிறேன். // - எழுதுவதைக் குறைப்பது அல்லது நிறுத்துவது, அணுக்கங்களையும் மீள்பெறுதல என்பன உங்களுடைய விரும்பம். முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுவது என்பது இதைத்தான். "நான் விரும்புவது" என்ன என்பதை எவ்வாறு கண்டுபிடித்தீர்களோ தெரியாது!? "நக்கீரன் விரும்புவது" என்று நானும் பதிலுக்குச் சொல்லலாம். ஆனால் அது ஆரோக்கியமாக உரையாடலுக்கு உதவாது.
மேலும், குறித்த கட்டுரையைப் பற்றி மட்டுமே திருப்பத்திரும்ப பேசிக் கொண்டிருக்கிறீர்கள். என்னில் குற்றம் சுமத்துவதையும் இலக்காகக் கொண்டிருக்கிறீர்கள். அன்ரனின் கற்பனை சீர்தரங்களுக்கு.... என மட்டமான கருத்திட்டது முதல் மிதவாதம் என கருத்திட்டது வரை உங்களுக்கு ஆரோக்கிய உரையாடலில் ஆர்வம் இல்லை எனக் காட்டுகிறது. என்னாலும் ஏரணத்துடன் கூடிய எதிர்வாதம் முன்வைக்க முடியும். காரசாரமாகவும் பதிலளிக்க முடியும். நிற்க, என்னுடைய பிற கேள்விகளுக்குப் பதிலும் இல்லை. இரவி சுட்டிய கொள்கை/வழிகாட்டல் பற்றியும் எதுவும் பேச விரும்பவில்லை. கட்டுரையை மீட்கும்போது ஏன் காரணம் குறிப்பிடவில்லை? காரணம் குறிப்பிடாது மீட்கும் கட்டுரையை நான் எவ்விதத்தில் விளங்கிக் கொள்வது? --AntanO 16:37, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
அன்ரன், நான் கூறியவற்றை மீள் பெற்றுக் கொள்கிறேன். எனது பக்கத்தில் தவறு உண்டு. நான் எழுதிய கட்டுரைகள் பல நீக்கபப்டவேண்டியவையாக இருக்கலாம். ஆனால் அதற்கு குறிப்பிடத்தக்கமை பயன்படுத்த வேண்டியது இல்லை. பட்டியலை சுட்டினால், ஆமாம் சரியில்லை நீக்கிவிடலாம் என்று நானே நீக்கிவிட்டுருவேன். ஆனால் ஆங்கில விக்கியிலும் காட்டிலும் கூடிய கொடுபிடிலிலோடான குறிப்பிடத்தக்கமை தமிழ் விக்கியில் நடைமுறைப்படுத்துவது பொருத்தமாகப் படவில்லை. --Natkeeran (பேச்சு) 16:52, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
நக்கீரன், உங்களையோ வேறு யாரையுமோ தவறு காண வேண்டும் என்ற மனக் கோளாறு எனக்கில்லை. நான் சொல்வதே வேத வாக்கு என்ற தன்னிலை மறந்த நபரும் நானல்ல. தரமான தமிழ் விக்கிப்பீடியா அமைய வேண்டும் என்ற காரணத்தினாலேயே நான் இங்கு இயங்குகிறேன். விருப்பு வெறுப்பின்றி, யார் என்பதைப் பாராதே செயற்படுகிறேன். இனிக் கூடியவரை உங்களோடு உரையாட முயற்சிக்கிறேன். அவ்வுரையாடலை நட்புடன் எடுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். விக்கிப்பீடியா:மின்னல் கருவி இங்கு ஏற்பட்ட ஆதங்கங்களுக்கு தீர்வாக அமையும் என நம்புகிறேன். --AntanO 17:06, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
எனது ஊடாட்ட அணுகுமுறையில் முன்னேற்றம் தேவை என்பதை உணர்கிறேன். உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருந்தால் மன்னிக்க. முன்னேற்ற நோக்கில் உங்கள் செயற்பாடுகள் அமைகின்றன என்றே கருதுகிறேன். சில இடங்களில் வேறுபடுவோம், குறிப்பாக குறிப்பிடத்தக்கமை தொடர்பாக. தவறில்லை. நட்புடன் எடுத்துக்கொள்வோம். நன்றி. --Natkeeran (பேச்சு) 17:21, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
உண்மையில், எதிர்க்கருத்துக்களையும் விமர்சனங்களையும் நான் வளர்முகமாகவே கருதுபவன். ஆனால் பலமுறை எதிர்க்கருத்துக்கள் சண்டையாகவோ, மறைமுக புரிதலுக்கு இட்டுச் செல்லுதல், மனச்சஞ்சலத்தை ஏற்படுத்தல் என்பன விவாதத்தின் நோக்கத்தை சிதறச் செய்துவிடுகின்றன. முதிர்ச்சியுள்ளவர்கள் விவாதிப்பது ஆக்கத்திற்கு வழிவகுக்கும். நீங்கள் உளவியல், மெய்யியல், சமயச்சார்பற்ற கட்டுரைகளை உருவாக்கியிருப்பதால், உங்களுடனும் ஆரோக்கியமாக விவாதம் செய்யலாம் என நான் பல தடவைகள் எண்ணியதுண்டு. மன்னிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள். பொதுநலனுக்காக செயல்படும் எம்மிடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இலக்கு ஒன்றாக இருக்கட்டும். --AntanO 17:39, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
//பொதுநலனுக்காக செயல்படும் எம்மிடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இலக்கு ஒன்றாக இருக்கட்டும்.//👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 17:48, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

பாகிம்

[தொகு]

Fahimrazick (பேச்சு · பங்களிப்புக்கள்) இப்பயனர் தொடர்பான அறிக்கை:

பொத்துவில் படுகொலை என்ற கட்டுரையில் ஒருபக்க நிலைப்பாடான கருத்துக் கொண்ட, "வாசிப்பவரை ஏமாற்றும் விதமான" தகவல் உருவாக்கப்பட்டதால், Hoax, POV ஆகிய வார்ப்புருக்கள் இடப்பட்டன. ஆனால் பயனர் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதிருக்கையிலே 4 முறை வார்ப்புருவை நீக்கினார். ஆகவே அவருக்கு இறுதி எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பயனர் கட்டுரை தொடர்பாக பேசுவதைவிடுத்து வேறு விடயங்கள் குறித்து தேவையற்ற விவாதம் செய்துள்ளார். காண்க: பேச்சு:பொத்துவில் படுகொலை வேறு ஒரு இடத்திலும் விவாதம் செய்வதையே குறியாகக் கொண்டுள்ளார். காண்க: பேச்சு:பல்லியகொடல்லை படுகொலை. இதில் குறிப்பாக, உங்களுக்கு நினைத்தவாறெல்லாம் நடப்பதற்கு விக்கிப்பீடியா ஒன்றும் உங்களது சொந்தப் பொருளன்று. என்ற குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. நீங்கள் கொடுத்திருக்கும் தமிழ்நெற் இணைப்பு விடுதலைப் புலிகளின் வலைத்தளம். குற்றமிழைத்தவர்கள் நேர்மையாகக் கருத்துச் சொல்வார்களென்று எதிர்பார்க்க முடியாது. என்ற கருத்தும் தேவையற்றது. அவர்கள் யார் என்று தீர்ப்பிட பயனர்கள் முயலக்கூடாது.

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (கொள்கை) பக்கத்திலும் பொருத்தமற்ற பேச்சை ஆரம்பித்தார். அவ்விடம் பொருத்தமற்றது என்றும் தெரிவித்தும் கேட்காமல் திரும்பவும் தேவையற்ற தொகுத்தல் செய்தார். காண்க: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (கொள்கை) வரலாறு.

தனிநபர் தாக்குதல்

பயனர் பேச்சு:Fahimrazick, இங்கும் தேவையற்ற விவாதம் செய்துள்ளார். நிருவாக அணுக்கத்தை விளங்கிக் கொள்ளாத பேச்சு இடம்பெற்றுள்ளது. தெளிவான தனிநபர் தாக்குதலாக உங்களது அடாவடித்தனத்தை (3 இடங்களில் உள்ளது), மமதை, போகிறீரா (ஒருமையில் அழைத்தமை), உணர்ச்சி மிகுதியால், மிரட்டுகிறீர்கள் ஆகிய சொற்பிரயோகங்கள் மூலம் மேற்கொண்டுள்ளார்.

தனிநபர் தாக்குதல், தேவையற்ற விவாதம் செய்தல், விக்கி நடைமுறையினைப் பின்பற்றாமை, மற்றவர் வழிகாட்டலை அலட்சியம் செய்தல் போன்றவற்றை முன்பும் இப்பபயனர் ஈடுபட்டுள்ளார். அதனை தற்போதும் மேற்கொண்டுள்ளார். எனவே, நிருவாகிகள் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்கிறேன்.
குறிப்பு: தற்போது தொடர்ந்தும் பொருப்பற்ற நடவடிக்கையினைத் தொடர்ந்ததால் 3 நாட்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளார்.

--AntanO 07:27, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

இணைப்பு 2

[தொகு]

பேச்சு:பல்லியகொடல்லை படுகொலை இங்கு மீண்டும் தேவையற்ற பேச்சு. முடிந்தால் தடை செய்யுங்கள். உங்களது வேலையே அதுதானே. உங்களது கருத்துடன் முரண்பட்டால் எப்படியாவது தடை செய்ய வழி தேடுவது. என்ற பேச்சு தேவையற்ற குற்றச்சாட்டும், திசைதிரும்பம் பேச்சும், முதிர்ச்சியான பேச்சாகவும் இல்லை. இப்படியான பேச்சினை த.வி.யில் வளர்ப்பது அல்லது பேச அனுமதிப்பது ஆரோக்கியமற்றது. --AntanO 07:40, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

தடை செய்யும் அளவு விதி மீறல் இல்லை. குறித்த கட்டுரைகளில் இணக்க முடிவு காண முயல்வோம். பயனர் பேச்சு:Fahimrazick, பயனர்களைப் பற்றிய தனிப்பட்ட கருத்துகளைத் தவிர்க்கவும். இதனால், கட்டுரைப் பொருள் குறித்த உரையாடல் மேலும் சிக்கல் மிக்கதாக மாறுகிறது.--இரவி (பேச்சு) 09:04, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

தடைசெய்யப்பட்டதற்கான காரணம் வேறு. பாகிம் எதுவும் பேசலாம் நாங்கள் கை கட்டிக் கொண்டு இருக்க வேண்டுமா? கண்ணியமற்ற பேச்சுக்கு இடம் இங்கு உருவாக்கப்படுகிறது. கருத்துச் சொல்வது எளிது. --AntanO 09:30, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

அன்டன், பொதுவாக ஒரு உரையாடல், பிணக்கில் ஒரு நிருவாகி தான் பாதிக்கப்படுவதாக உணரும் போது தானே நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, நிருவாகிகளுக்கான அறிவிப்புப் பலகையில் இட்டு மற்ற நிருவாகிகளின் செயற்பாட்டுக்கு போதிய தருவது நேரம் தருவது நன்று. மூன்று முறை விதி மீறல் என்ற அடிப்படையில் உனடியாக நீங்களே தடுத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். தனிப்பட்ட முறையில் தாக்கப்படுவதாக உணரும் போது இவ்வாறு பொறுத்திருப்பது சிரமமே. எனினும், இத்தகைய செயற்பாடுகளின் மூலம் மற்ற பயனர்கள் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாக உணர்வதைக் குறைக்கலாம்.

பல்வேறு தமிழ் விக்கிப்பீடியர்களும் கடுமையான விக்கி விதிகளால் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாக உணர்வதாக தொடர்ந்து தெரிவித்து வருவது கவலைக்குரியது. இதே கவலை பல்வேறு விக்கிச்சமூகங்களிலும் பகிரப்படுகிறது. இவ்வாறான அச்ச உணர்வு தமிழ் விக்கிச் சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவாது.

பாகிம் பல காலமாக பல்வேறு வகைகளில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு சிறந்த பங்களிப்புகள் வழங்கி வருபவர். விக்கி நெறிமுறை புரிந்தவர். ஆனால், தற்போது பேசப்படும் தலைப்பு அரசியல் சர்ச்சை மிக்கதாக உள்ளதால் எவரும், குறிப்பாக, வரலாற்றுப் பூர்வமாக அந்நிகழ்வால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சமூகத்தவர்கள் எளிதில் உணர்வு வயப்பட்டு விக்கி நெறிமுறைகளை மீற முடியும். இக்கட்டுரையைக் குறித்துப் பொறுமையாக உரையாடி இணக்க முடிவுக்கு இரு தரப்பும் வர முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் பாகிமின் கடந்த செயற்பாடுகளின் அடிப்படையிலான நல்லெண்ண நம்பிக்கை அடிப்படையிலும் அவருக்கு உடனடி தடை தேவை இல்லை என்று கருதுகிறேன்.

பாகிம், அன்டனின் செயற்பாடுகளில் மாற்றுக் கருத்து இருந்தால் அதனைக் கண்ணியத்துடன் முன்வைக்க வேண்டும். தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவது உங்கள் வாதத்தின் வலுவைக் குறைக்கும். அன்டன் முன்வைத்துள்ள முறையீடுகள் தெளிவான தனிமனிதத் தாக்குதல்கள். இதற்கு வருத்தம் தெரிவித்து கட்டுரைப் பொருள் மட்டும் குறித்துப் பேசினால் உரையாடல் சூடு குறையும். தேவைப்பட்டால் சற்று இடைவெளி விட்டு இந்தக் கட்டுரை பற்றி உரையாடுவது உதவும்.

இரவி (பேச்சு) 10:41, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

பாகிம் பல காலமாக பல்வேறு வகைகளில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு சிறந்த பங்களிப்புகள் வழங்கி வருபவர் என்பதால் தடைசெய்யப்படக்கூடாது என்ற வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. Blocks should be used to: prevent imminent or continuing damage and disruption to Wikipedia; deter the continuation of present, disruptive behavior; and encourage a more productive, congenial editing style within community norms. என்பதன் அடிப்படையிலேயே தடுக்கப்பட்டார். இன்று மட்டுமல்ல முன்னரும் தனிமனிதத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளார் (சான்று உள்ளது). ஆனால் இங்கிருந்த மெத்தனப் போக்கை அறிந்து அவர் தொடர்ந்தும் தாக்குதலில் ஈடுபடுகிறார். ஆனாலும் அவர் தடுக்கப்பட்டதன் காரணம் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் பொருத்தமற்று ஆலமரத்தடியில் தொகுத்தல் மேற் கொண்டதே. விக்கி நெறிமுறை புரிந்தவர் என்றால் எதை எங்கு செய்ய வேண்டும் என்று தெரியாதா அல்லது எடுத்துக் கூறினால் புரிந்து கொள்ள முடியாதா? இதற்காக இங்கு வந்து முறையிட வேண்டுமா? அப்போ எதற்கு நிருவாக அணுக்கம்? நிற்க, இங்கு முறையிடப்பட்டது தனிநபர் தாக்குதலுக்கும், அத்தோடு தொடரும் பொருப்பற்ற நடவடிக்கைகளுக்குமேயாகும். ஆனாலும் அதற்கு வருத்தம் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆகவே, தனிமனித தாக்குதல் நடந்தால் இங்கு வந்து தெரிவித்து, வருத்தம் தெரிவித்துவிட்டுச் சென்றுவிடலாம் என்ற தொணி நிருவாகிகளுக்கான அறிவிப்புப் பலகை மீது அவநம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது (முன்னரும் எனக்கு இதே நடந்துள்ளது). நிருவாகிகளுக்கான அறிவிப்புப் பலகை என்பதே ஒரு கண்துடைப்பு. ஆகவே, இனி என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு அறிந்து கொண்டேன்.
பல்வேறு தமிழ் விக்கிப்பீடியர்களும் கடுமையான விக்கி விதிகளால் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாக உணர்வதாக தொடர்ந்து தெரிவித்து வருவது கவலைக்குரியது. இதே கவலை பல்வேறு விக்கிச்சமூகங்களிலும் பகிரப்படுகிறது. இவ்வாறான அச்ச உணர்வு தமிழ் விக்கிச் சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவாது. ஆகவே, விதிகளை நீக்கிவிட்டு, விரும்பம்போல கட்டுரைகளை உருவாக்கியும் தொகுத்தும் மகிழுங்கள். விதிகளை இலகுவாக்குங்கள். யார் வேண்டாம் என்றது. முறைப்படி அமுலாக்குங்கள். நானும் என் வீட்டு நாய்கும் கட்டுரை உருவாக்குகிறேன். சான்றாக வலைப்பூவும், இணைய இணைப்பும் தருகிறேன். "ஆடத் தெரியாதவன் மேடை கோணல்" என்பதுபோல் உள்ளது அவர்களின் அச்சுறுத்தல் உணர்வு. பல்கலைக்கழக விதிகளை மீறி ஒரு மாணவனால் வெற்றி பெற முடியாது. ஏன் ஒரு கட்டுரையில்கூட நல்ல புள்ளி வாங்க முடியாது. நிற்க, அந்த அச்ச உணர்வர்கள் தங்கள் கருத்துக்களை த.வி.யில் குறித்த அல்லது பொருத்தமான இடத்தில் முன் வைக்கலாம். அதைவிடுத்து எங்கு இவை பகிரப்படுகின்றன? என்னிடம்கூடத்தான் பலர் விக்கிக் கட்டுரைகள் பல சிறுபிள்ளைத்தனமாக எழுதப்பட்டுள்ளது என்கின்றனர். ஆகவே, நான் விக்கி விதிகளை இன்னும் கடினமாக்க வேண்டும் என்பதா? --AntanO 02:21, 7 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
அன்டன் நண்பரே, தொடர்ந்து விக்கியில் அதுவும் சீராக்க வேலைகளில் ஈடுபடுவோருக்கு நிகழக்கூடிய தாக்குதல்களுக்கும், மனவுளைச்சல்களுக்கும் தாங்களே உதாரணமாகத் தெரிகின்றீர்கள். உங்களுடைய அயர்வுகளை உணர்கிறேன். ஆனால் உங்களுடைய பெரும்பாலான நேரங்களை இவ்வாறு உரையாடல்கள் ஆட்கொண்டு விடுகின்றன என்பது என் தனிப்பட்ட எண்ணம். பாகிமின் சொற்கள் தங்களுக்கு மனச்சோர்வினைத் தந்திருந்தால், உடன் பயணிக்கும் சக விக்கிப்பீடியன் என்கிற முறையில் எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சோர்வினை பொருட்டாக எண்ணாமல் தொடர்ந்து தங்களின் பங்களிப்புகளைத் தாருங்கள். ரவி கூறியது போல பாகிம் வருத்தம் தெரிவித்தால் நிச்சயமாக வரவேற்போம். முரண்பாடுகள் வருகையில் சற்று நெகிழ்ந்து செல்ல இருவருக்கும் கோரிக்கை வைக்கிறேன். நடைமுறையில் மிகக் குறைந்தளவு பயனர்களைக் கொண்டு நம்மால் இயன்றைதைச் செய்துகொண்டிருக்கும் வேலையில், இவ்வாறான மூத்த விக்கிப்பீடியர்களே மனவேறுபாட்டுடன் நடந்துகொள்வது வருத்தம் தருகிறது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:18, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
நன்றி நண்பரே, இணைத்தில் எழுதியிருந்தால் நாலு காசாவது கிடைத்திருக்கும். அல்லது விருந்தினர் போன்ற வந்து போயிருந்தாலாவது மதிப்புக் கிடைத்திருக்கும். 10 வருடத்தில் "10 வருட பங்களிப்புப் பதக்கம்" கிடைத்திருக்கும். வீடு போல் நடந்து முயன்றது என் தவறு. அதனாற்றான் உங்களுக்கு நினைத்தவாறெல்லாம் நடப்பதற்கு விக்கிப்பீடியா ஒன்றும் உங்களது சொந்தப் பொருளன்று. என்ற கருத்து "எதுவும் உனக்கு உரியதல்ல" படிப்பினையைத் தந்துள்ளது. --AntanO 02:21, 7 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

இணைப்பு 3

[தொகு]

மீண்டும் தனிநபர் தாக்குதல் தொடர்கிறது. பொய்க்குற்றச்சாட்டும் உள்ளது. எகா:

  • // முதலில் என்னை முடிவிலாக் காலத்துக்குத் தடை செய்தார்.// - தடைப்பதிகை பார்க்கவும்
  • // ஆலமரத்தடியில் கருத்திடுவது பொருத்தமற்றதென்று அவர் கூறவேயில்லை. ஆனால் அவர் எனக்குக் கூறியதாகப் பொய்யுரைக்கிறார்.// - பார்க்க: தொகுப்பு சுருக்கத்தில் முறையீடு செய்ய நிருவாகிகளின் அறிவிப்பு பலகையை பயன்படுத்துக.
  • // அப்பகுப்பைச் சேர்த்தால் தடை செய்து விடுவேன் என்று கூறியதை மிரட்டல் என்று கூறாமல் வேறெவ்வாறு கூற வேண்டும்? // - மற்ற நிருவாகிகள் தடை செய்வதாகத் தெரிவித்தால் எச்சரிக்கையா? மிரட்டலா?
  • //போகிறீரா என்று அவரை ஒருமையில் அழைத்ததாகவும் குற்றஞ் சாட்டியிருக்கிறார். போகிறீரா என்ற சொல் ஒருமைச் சொல்லன்று. தமிழில் ஒருமை பன்மை கூடத் தெரியாத ஒருவர் இங்கு நிருவாகியாக இருப்பதுதான் வேதனைக்குரியது. // - மட்டக்களப்பு பேச்சு வழக்கில் இது ஒருமை. இலக்கணம் தெரிந்தால்தான் நிருவாக அணுக்கமா?
  • // இவ்வாறு தன்னிச்சையாகச் செயற்படும் ஒருவர் நிருவாகியாக இருக்கவே கூடாது// - நிருவாக நீக்கத்திற்கு இவ்வாதம் எப்படி சரியாகும்? நிருவாகிகள் தன்னிச்சையாக செயற்படுகிறார் என்று எவரும் தங்கள் பாட்டுக்கு முன் வரலாம் அல்லவா? ஏற்கெனவே நிருவாக நீக்கக் கோரிக்கை நிலுவையில் உள்ளது. விரும்பினால் இதனையும் சேர்க்கவும்.

குறிப்பு: நீதி கிடைக்காத இடத்தில் பயனில்லை என்பதால், இதனை ஒரு பதிவாகவே இங்க இடுகிறேன். --AntanO 03:26, 7 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

Antan, பயணத்தில் இருப்பதால் உடனடியாக பதில் அளிக்க முடியவில்லை. விரைவில் பதில் அளிக்க முயல்கிறேன். --இரவி (பேச்சு) 06:04, 8 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

கருத்து

[தொகு]

மாற்றுக் கருத்துகள் இருந்தால் அதனைக் கண்ணியத்துடன் முன்வைக்க வேண்டும். துப்புரவு பணிகளில் பெருமளவு ஆர்வம் கொண்டுள்ள ஆன்டன் மீது அத்தகு பணிகளில் ஈடுபட்டபோது, தனிநபர் தாக்குதல்களைத் தொடுத்தது மிகவும் தவறானதாகும். பல காலம் பங்களித்துவரும் பயனர் பாகிம் தனிமனிதத் தாக்குதல்களுக்கு வருத்தம் தெரிவிக்காமல், மீண்டும் அவர் தம் பேச்சுப் பக்கத்தில் அன்ரனின் தீய நடவடிக்கை என தலைப்பிட்டு எழுதியுள்ளது மிகவும் தவறாக உள்ளது.

மிகவும் சிறப்பான முறையில் நிருவாகியாக பணியாற்றிவரும் ஆன்டனை நிருவாகியாக இருக்கக் கூடாது எனக் கூறுவதெல்லாம் மிகவும் அதிகம். நிருவாகப் பணிகளில் ஈடுபடும்போது பலவகையானத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகு தாக்குதல்களை பல காலம் பங்களித்துவரும் பயனர் செய்திருப்பது மிகுந்த வருத்தத்தினை அளிக்கிறது. பாகிம் முதலில் தனிமனிதத் தாக்குதல்களுக்கு நேரடியாக வருத்தம் தெரிவித்துவிட்டு, இனி இவ்விதம் நடக்காமல் இருப்பதாக உறுதியளித்துவிட்டு பின்பு கருத்துகளை சொல்வதோ, எழுதுவதோ சரியானது என எண்ணுகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 11:18, 8 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 12:25, 8 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 14:12, 8 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:09, 8 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

பாகிம் அண்டனை குறிவைத்து தாக்குவது போல் எனக்கு தெரியவில்லை. நிர்வாகி இல்லாத புதுப்பயனர்களை கூட இது போல பேசுவார். உதாரணத்துக்கு நான் ஆரம்பகாலத்தில் எழுதிய கட்டுரைகளின் போதே நான் பொய்யும் புரட்டும் கலந்து எழுதுவதாக எடுத்தவுடன் கூறிவிட்டார். விக்கியில் வரும் புதியப்பயனர்கள் எப்படி எழுதவேண்டும் என்று தெரியும் முன்னரே இதே போன்ற சொற்பிரயோகங்கள் அவரிடம் வந்துவிடும். அதனால் இப்படி இன்னொரு முறை நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என்ற உறுதியாவது அளித்தால் நற்சூழல் கணிந்துவிடும். அதே நேரம் பாகிம் சிலருக்கு வழிகாட்டியதையும் இங்கு நினைவுக்கூறுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:14, 8 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் யார் பாதிக்கப்பட்டுள்ளார்களோ, அவர்பின்னே நிற்பதே நடுநிலைமென இரவி, நந்தகுமார், Kanags, மணியன், தென்காசியார் ஆகியோர் எடுத்திருக்கும் முடிவினை வரவேற்கிறேன். அனைவருமே பாகிமிடம் கோரிக்கை வைத்துவிட்டோம். ஆனால் நண்பர் பாகிம் தனது வருத்தத்தினை தெரிவிக்காமல் இருப்பது, நெருடலாக இருக்கிறது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:25, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் தனிப்பட்ட கட்டுரைகளின் உள்ளடக்கம் குறித்த உரையாடல்கள் மேற்கோள்கள், நடுநிலைமை, பல பக்கங்களின் நியாமான உள்ளடக்கம் ஆகியவை அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டும். தனிப்பட்ட தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும். தமிழ் விக்கி எந்த வகையில் தணிக்கை செய்யப்பட அனுமதிக்கப்படலாகாது. --Natkeeran (பேச்சு) 14:09, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
வருத்தம் தருவதான இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வது கவலையளிக்கின்றது. தனிமனிதத் தாக்குதல்களை தொடர்வதிலிருந்து தவிர்ப்பதும் ஆள் சார்ந்து நோக்காமல் விடய உள்ளடக்கம் சார்ந்து நிற்பதும் அவசியம். துப்பரவு மற்றும் ஒருங்கமைப்புப் பணிகளில் அன்ரன் முதலான ஒரு சிலரே அதிக சிரத்தை எடுக்கின்றனர். அவர்கள் மனந்தளராமல் பணிகளைத்தொடரவேண்டும். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:15, 10 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

தனிநபர் தாக்குதல் அல்லது அச்சுறுத்தல், தணிக்கை அச்சுறுத்தல் கொள்கையின் அடிப்படையில் பின்வரும் பயனர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையை விக்கிமீடியா அறக்கட்டளையின் கவனத்துக்கு உட்பட்டு பன்னாட்டு விக்கிமீடியா மேலாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

  • User:Fasly (ஓராண்டு காலத் தடை)
  • User:Fahimrazick (ஓராண்டு காலத் தடை)
  • User:Mohamed ijazz (நிரந்தரத் தடை)

--இரவி (பேச்சு) 12:22, 9 செப்டம்பர் 2016 (UTC)

தனிமனிதத்தாக்குதல் - Prabakaryadav

[தொகு]

Prabakaryadav (பேச்சு · பங்களிப்புக்கள்) 1 2 3 4 --AntanO 10:33, 23 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

தனிமனித தாக்குதலில் ஈடுபட்ட இப்பயனர் (Prabakaryadav) தற்பொழுது மூன்று நாட்கள் தடை செய்யப்பட்டுள்ளார். இப்பயனர் புதியவராக உள்ளதாலும், விக்கி நெறிமுறைகளை உள்வாங்காதவராக இருப்பதாலும் குறைந்த அளவில் தடை செய்திருக்கிறேன். இன்னும் ஒரு முறை இவ்விதம் நிகழுமாயின் நீண்ட காலத்திற்கோ அல்லது முடிவிலியாகவோ தடை செய்யலாம் எனப் பரிந்துரைக்கிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 07:47, 24 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

தனிநபர் விமர்சனம் - Uksharma3

[தொகு]

Uksharma3 (பேச்சு · பங்களிப்புக்கள்) இப்பயனர் இங்கு தெரிவித்த It seems you are averse to things exquisite. நீங்கள் அழகியலை விரும்பாதவர் போலத் தெரிகிறது. என் மீதான தனிநபர் விமர்சனம். மாற்றுக் கருத்து இருப்பின் கட்டுரையில் உரையாடியிருக்கலாம். அதைவிடுத்து தனிநபர் விமர்சனம் செய்வது விக்கிப்பண்பும் அல்ல ஒரு முதிர்ச்சியான செயலும் அல்ல. இங்குள்ளபடி ஏன் அத்தொகுப்பைச் செய்தேன் என்ற காரணத்தை முன்வைக்கலாம். ஆனால் இப்பயனர் முன்னரும் பல இடங்களில் என்னுடன் பிழையாக முரண்பட்டிருக்கிறார். மேலும் இது போன்ற மிரட்டலை (நான் தனிப்பட ஒரு தகவலையும் தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு வயது 72. இந்தப் பயனர் இவ்வாறு இக்கட்டுரைக்குக் குறிப்பிடுவது எனக்கு இரத்த அழுத்தத்தைக் கொடுக்கிறது.) முன் வைக்கலாம் என்பதாலும் பிற நிருவாகிகளின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். நிருவாகிகள் யாரும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன். நன்றி. காண்க: விக்கிப்பீடியா:தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்--AntanO 02:59, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

தயவு செய்து என்னை நிரந்தரத் தடை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.---UKSharma3 05:27, 11 திசம்பர் 2016 (UTC)
"நீங்கள் அழகியலை விரும்பாதவர் போலத் தெரிகிறது." - இது நான் எழுதியது. இதையே தன் மீது தனிப்பட்ட விமர்சனம் எனக் கூறியுள்ளார்.
"ஆனால் நக்கீரனுக்கு கலைக்களஞ்சியம் என்றால் என்வென்று விளங்கவில்லை போல் உள்ளது." - இதே பயனர் இங்கே எழுதியுள்ள வசனம் இது.

நிர்வாகிகளே! ஒப்பு நோக்கித் தீர்ப்புச் சொல்லுங்கள்.--UKSharma3 09:41, 11 திசம்பர் 2016 (UTC)

அது கட்டுரை அன்ரனுக்கு விளங்கவில்லை என்ற நக்கீரனின் கருத்துக்கு என்னுடைய பதில், தவிர விமர்சனம் அல்ல. மேலும், முடிந்த ஒருவிடயத்தை இப்பயனர் ஏன் இங்கு கொண்டு வருகிறார்? --AntanO 09:55, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
பொருத்தமில்லை என இடப்பட்ட குறிப்புக்குப் பதிலாகவே நானும் எழுதினேன். விடயம் முடிந்திருக்கலாம். ஆனால் எழுதிய எழுத்து அப்படியே தான் இருக்கிறது. ஆண்டனி, வீணாக வளர்த்த வேண்டாம். நீங்களே ஒரு நிருவாகிதானே. என்னை நிரந்தரமாகத் தடை செய்து விடுங்கள். நன்றி. --UKSharma3 10:37, 11 திசம்பர் 2016 (UTC)
என் மீதான விமர்சனமும் அப்படியே இருக்கிறது. தடை செய்வதாயினும் விக்கி விதிக்கு உட்பட்டே தடை செய்ய முடியும். என்னைத் தடை செய் என்பதற்காக தடை செய்ய முடியாது. --AntanO 10:43, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
தொடர்பட்டது: பேச்சு:இந்திய மக்கள் --AntanO 02:09, 12 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
விக்கிக் கொள்கைக்கு புறப்பான, பிரதேசவாதக் கருத்து. ஆ.வியில் இல்லாத ஒன்றைக் குறிப்பிடுதல். --AntanO 07:23, 4 மார்ச் 2017 (UTC)

vikatan.com விளம்பர இணைப்புக்கள்

[தொகு]

vikatan.com விளம்பர நோக்கத்தில் இணைப்புக்கள் இணைக்கப்படுகின்றன. காண்க: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)#vikatan.com. இப்பக்கம் இயக்கத்தில் உள்ளதுதானே? --AntanO 03:19, 17 பெப்ரவரி 2017 (UTC)

பயனர்:Info-farmer

[தொகு]

Info-farmer (பேச்சு · பங்களிப்புக்கள்) பிழையான ஆதரவு கோரல், பிரதேசவாதம், தவறு செய்வதாக குற்றம் சுமத்துதல் ஆகிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

--AntanO 08:09, 4 மார்ச் 2017 (UTC)

  • நிருவாகி ஒருவர் விக்கிக்கு வெளியிலும் ஆதரவு கோரலில் ஈடுபட்டுள்ளார். கவனிக்க: கருத்துக் கேட்டதால் என் கருத்தை எழுதியுள்ளேன்' 12:47, 1 மார்ச் 2017 என்ற தொகுப்பு 12:55, 1 மார்ச் 2017 இல் [8 நிமிட இடைவெளி] நீக்கப்பட்டது. கருத்துக் கேட்டது வேறு எங்கும் பதிவாகவில்லை.
என் பக்கத்தில், தங்களது எண்ணத்தை அறிந்தேன் 14:19, 1 மார்ச் 2017 இல் எண்ணத்தை அறிந்ததாக கருத்துள்ளது. அப்போ, எப்போது கேட்கப்பட்டது?

இங்கும் Booradleyp1 தவிர்த்த, இவ்வாறான விடயங்களில் கலந்து கொள்ளாத பயனர்களில் பொதுவான ஆதரவும் சிந்திக்க வைக்கிறது. பிழையெனின் பொறுத்தருள்க.--AntanO 08:35, 4 மார்ச் 2017 (UTC)

இங்கு கூறப்பட்டுள்ள சிக்கல்களைக் கவனித்து வருகிறேன். பொதுவாக, விக்கிச் செயற்பாடுகள் பற்றி விக்கிக்கு வெளியே உரையாடும் போக்கு தென்படுகிறது. இவ்வாறு உரையாடுவதால் தேவையற்ற புரிதல் பிழைகள், அரசியல், மனக்குறைகள் நேரவே வாய்ப்பு அதிகம். தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கக் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளைக் கவனமாகத் தவிர்த்து வந்திருக்கிறோம். தொடர்ந்து இச்சூழலைப் பேண வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 13:53, 5 மார்ச் 2017 (UTC)
விக்கிக்கு வெளியே இதுவரை ஒருமுறை கூட அவரிடம் பேசியதில்லை. அவரே என் பக்கம் வந்து எழுதினார். சிறிது நேரத்தில் அவரே நீக்கியும் விட்டார். அதற்கு பிறகு, அவர் பக்கத்தில் நான் நிகழ்த்திய உரையாடல்களை கவனிக்கவும். அவர் தனிமையால் சில உடல் மனம் துன்பம் படுவதாகத் தெரிகிறது. அதற்கு ஆறுதல் கூறியுள்ளேன். இதுபோல பக்கங்களை உருவாக்க வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். ஆன்டனின் துப்புரவு பணிகளில் அவர் உடன் இணைந்து செயற்பட்டே வருகிறேன். கவனிக்க {.{தலைப்பை மாற்றுக }} {.{reflist}}, தனித்துவமான தொடுப்பிணைப்பி ஒரு பயனருக்கு அமைத்துக்கொடுத்தல், புள்ளியுள்ள தலைப்புகளில் சீர்மை ,..எனவே, ஆன்டனிடம் ஒரு வேண்டுகோள். உங்கள் அளவு சீர்மையுடன் விதிகளை பின்பற்ற முயற்சிக்கிறேன். ஆனால், உங்களின் வேகம் அனவைருக்கும் வராது என்ற இயற்கை விதியை நினைவில் கொள்க. உங்கள் மனம் வருந்தும் படி எனது பதிவுகள் இருப்பின் வருந்துகிறேன். மன்னிக்கவும். வணக்கம்.--உழவன் (உரை) 18:01, 8 மார்ச் 2017 (UTC)

போட்டி தொடர்பாக

[தொகு]

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி எனும் இப்போட்டியில் நடுவர்களாகவும், பங்குபற்றுபவர்களாகவும் நீங்கள் அனைவரும் கடைமையாற்றலாம் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றேன். போட்டியில் நீங்களும் பங்குபற்றலாம்! தமிழ் விக்கியின் வளர்ச்சியில் கைகோருங்கள்! மேலும் பயனர்:Ravidreams அவர்களை தள அறிவிப்பில் போட்டி பற்றி இற்றை செய்ய வேண்டுகின்றேன். வேறு யாராலும் இற்றை செய்யமுடியுமெனிலும் இற்றை செய்யலாம். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:13, 6 மார்ச் 2017 (UTC)

சந்தேகம்

[தொகு]

குறிப்பிட்ட ஒரு நேரத்தில் பல பயனர்கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. [8]--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:47, 20 மார்ச் 2017 (UTC)

@Kanags:, @AntanO:, @Aswn:, @Ravidreams:, மேலே குறிப்பிட்ட இடத்தில் பார்க்கவும். சந்தேகமாக உள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 11:39, 20 மார்ச் 2017 (UTC)
ஏதேனும் பயிற்சிப் பட்டறையில் ஒட்டு மொத்தமாகக் கணக்குகளை உருவாக்கி இருக்கலாம். தமிழ்ப் பெயர்களும் தென்படுகின்றன. கணக்குகள் விசமத் தொகுப்பில் ஈடுடாதவரை கவலைப்பட ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன். --இரவி (பேச்சு) 13:38, 20 மார்ச் 2017 (UTC)
"புதிய பயனர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது" என்ற குறிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள கணக்குகள் இரவி சுட்டிக்காட்டியதுபோல் பயிற்சிப் பட்டறையில் உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. ---மயூரநாதன் (பேச்சு) 14:24, 20 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 23:56, 20 மார்ச் 2017 (UTC)
பயிற்சிப்பட்டறை எங்கு இடம்பெற்றது என அறிய ஆவல்! இலங்கையிலா? இந்தியாவிலா? தற்போதா? அல்லது முன்னமேயா என்பது தொடர்பில் அறிய ஆவல்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:27, 20 மார்ச் 2017 (UTC)
இரண்டு நாட்களுக்கு முன்னரும் பயனர் பரிதி அவர்களினால் நடத்தப்பட்டு பலரை பயனர்களாகச் சேர்த்தார். ஆனால் எவரும் பங்களித்ததாகத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 20:44, 20 மார்ச் 2017 (UTC)
மிக்க மகிழ்ச்சி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:09, 21 மார்ச் 2017 (UTC)