பேச்சு:அன்னை தெரேசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png அன்னை தெரேசா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia


எனக்கு பிடித்த நபர்களில் ஒருவர் இக்கட்டுரையை தொடக்கி வைத்த விஜயசன்முகத்துக்கு நன்றி--டெரன்ஸ் \பேச்சு 12:29, 10 டிசம்பர் 2006 (UTC)

இக்கட்டுரை, Mother Teresa எனும் விக்கிபீடியா கட்டுரையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. குறிப்பாக, இந்தப் பதிப்பிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.

கட்டுரை பக்கத்தில் இருந்த வார்ப்புருவை இங்கே ஒட்டியிருக்கிறேன். --மாஹிர் 17:39, 10 ஆகஸ்ட் 2010 (UTC)

உரைத் திருத்தம் முடிந்தது[தொகு]

கூகுள் மொழிபெயர்ப்பு உரைத் திருத்தம் முடிந்தது.--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:00, 6 மார்ச் 2013 (UTC)

முதற்பக்கத்தில் இடம்பெற்றிருப்பதால், இதன் உரை மேலும் திறம்படத் திருத்தப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 12:19, 26 மே 2013 (UTC)

தலைப்பு மாற்றல்[தொகு]

தமிழ் விக்கியின் நடைமுறைகளின் படி இக்கட்டுரையின் தலைப்பை தெரேசா என மாற்றலாம்.--இரா.பாலா (பேச்சு) 06:35, 19 மார்ச் 2015 (UTC)

தெரேசா என்பது பொதுப் பெயர். மேலும் இதுபற்றி தெளிவான கொள்கை இல்லை. --AntonTalk 04:37, 23 மார்ச் 2015 (UTC)
பட்டப் பெயர்களை தவிர்க்கவும் என விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.--இரா.பாலா (பேச்சு) 10:25, 4 ஏப்ரல் 2015 (UTC)
en:Wikipedia:Article titles#Use commonly recognizable names --AntonTalk 11:56, 4 ஏப்ரல் 2015 (UTC)
அன்டன், நாம் எல்லா விசயங்களிலும் ஆங்கில விக்கியின் முறைமைகளைப் பின்பற்றுவதில்லை என நினைக்கிறேன். தமிழ் விக்கிக்கென சில கொள்கைகளைக் கொண்டுள்ளோம். அதை அனைத்துக் கட்டுரைகளிலும் செயல்படுத்துவோம். இதுதொடர்பாய் இரவி மற்றும் கனக்சு உள்ளிட்ட பிறரின் வழிகாட்டலையும் எதிர்நோக்குகிறேன். நன்றி.--இரா.பாலா (பேச்சு) 14:32, 4 ஏப்ரல் 2015 (UTC)
இங்கு கொள்கைகள் தெளிவாக அல்லது முழுமையாக இல்லாததால் ஆ.வி.யைச் சார்ந்திருக்கிறோம். இதற்கான பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. "பெயரிடல் மரபும்" அவ்வாறே. விக்கியில் கொள்கை, வழிகாட்டல், நடைமுறை என பலவியடங்கள் உள்ளன. நீங்கள் சுட்டியதுகூட வழிகாட்டலே அற்றி கொள்கையல்ல. அதனாற்றான் முன்னமே "இதுபற்றி தெளிவான கொள்கை இல்லை" எனக்குறிப்பிட்டேன். காந்தி, மகாத்மா காந்தி ஏன் குறித்த கட்டுரைக்கு வழிகாட்டலாய் உள்ளது என்பதையும் காண்க. --AntonTalk 15:13, 4 ஏப்ரல் 2015 (UTC)
லேடி காகா என்பதை ஸ்டெஃப்னி ஜோன் ஏஞ்சலினா ஜெர்மனோட்டா என்றும், பில் கிளின்டன் என்பதை வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன் என்றும், ஐக்கிய இராச்சியம் என்பதை பெரிய பிரித்தானியா மற்றும் ஐயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் என்றும் பெயரிடல் மரபின்படி (தெளிவாக இருக்க வேண்டும்) அல்லவா அமைய வேண்டும். மேலும் பெயரிடல் மரபு "கூடுமான வரை பட்டப் பெயர்களை தவிர்க்கவும்" என்று குறிப்பதையும் கவனிக்க. --AntonTalk 15:25, 4 ஏப்ரல் 2015 (UTC)

இரா.பாலா, இக்கட்டுரையின் பெயர் ஏன் அன்னை தெரேசா என்றே இருக்கக்கூடாது? கட்டுரையளவில் சிக்கல் இருந்தால் புரிந்து கொள்ளலாமே என்றே கேட்கிறேன். இல்லை, தமிழ் விக்கிப்பீடியா முழுதும் சீரான ஒரு கொள்கை அல்லது நடைமுறை வேண்டும் என்ற நோக்கில் கோருகிறீர்களா? எடுத்துக்காட்டுக்கு, விவேகானந்தருக்கு சுவாமி என்ற முன்னொட்டு தலைப்பில் இல்லை. ஆனால், அதே போன்று ஒப்பு நோக்கத்தக்க அன்னை என்ற முன்னொட்டு இங்கு இருக்கிறதே என்பது தான் சிக்கலா? . நன்றி.--இரவி (பேச்சு) 19:12, 4 ஏப்ரல் 2015 (UTC)

நமக்கு பெயரிடல் குறித்து தெளிவான கொள்கை\வழிகாட்டுதல் இல்லாததாலே இது மாதிரியான சிக்கல்கள் எழுகின்றன. வழிமாற்றுகள் சரி. அந்தப்பெயரில் தேடுபவர்களின் வசதிக்காக உள்ளது. மோகன்தாசு கரம்சந்த் காந்தி முழுபெயரால் அறியப்படுவதில்லை, விவேகானந்தர் சுவாமி என்றே அறியப்படுகிறார், ஈ. வெ. இராமசாமி பெரியார் என்றாலே நமக்கு புரியும், ராமகிருஷ்ணர் என்று உள்ளது அனைவருக்கும் ராமகிருஷ்ண பரமஹம்சர் என்றால் தான் புரியும். இது போல் நிறைய உள்ளது. நாம் ஏன் சுவாமி என்பதை எடுக்கிறோம் அவர் பெயருடன் சுவாமியும் பின்னொட்டாக உள்ள போது\அவ்வாறே அறியப்படும்போது?--குறும்பன் (பேச்சு) 20:11, 4 ஏப்ரல் 2015 (UTC)
இரவி, இதையே முன்னுதாரணமாகக் கொண்டு நாளையே புரட்சித் தலைவி, கேப்டன், தளபதி என வரிசையாக படங்களைச் சேர்க்கத் தொடங்கினால் என்னாவது? மேலும், நீங்கள் சொல்லியதுபோல ஈ. வெ. இராமசாமி, மோகன்தாசு கரம்சந்த் காந்தி இன்னபிற கட்டுரைகளில் பட்டங்களைத் தவிர்த்திருக்கிறோம். எனவே இதிலும் பட்டத்தைத் தவிர்த்து எழுதுவது நல்லது. அல்லது அந்தக் கட்டுரைகளிலும் பட்டத்தை இணைப்பது நல்லது. நன்றி.--இரா.பாலா (பேச்சு) 23:48, 4 ஏப்ரல் 2015 (UTC)
தெரேசா என்ற பொதுவான ஆங்கிலப் பெயரில் தலைப்பிடும் போது, அதில் ஒரு முன்னொட்டு அல்லது பின்னொட்டு சேர்க்கப்பட வேண்டும். வெறுமனே தெரேசா என்றிருக்க முடியாது. தெரேசா (அன்னை) எனத் தலைப்பிடலாம். அல்லது பொதுவாக அவரை அழைக்கும் முறையில் அன்னை தெரேசா எனத் தலைப்பிடலாம். அல்லது அதிகாரபூர்வமான கல்கத்தாவின் தெரேசா எனத் தலைப்பிடலாம். விவேகானந்தர் என்பது ஒரு பொதுவான பெயரல்ல. விவேகானந்தன் என்பதே பொதுவான பெயர். எனவே விவேகானந்தர் என்று தலைப்பிடுவதில் தவறில்லை. சுவாமி விவேகானந்தர் எனத் தலைப்பிடுவதிலும் எனக்கு உடன்பாடே. எதற்கும் ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராய்வதே சிறந்தது. பொதுவான கடுமையான விதியை அனைத்துக்கும் பின்பற்றுவது என்பது சர்ச்சைக்குள்ளாகும். பொதுவாகத் தலைப்புகளில் முனைவர், சர் பட்டங்கள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். சர் சி. வி. ராமன் என்றே பொதுவாக அழைக்கப்படுபவர். அதற்காக நாம் இங்கு அவ்வாறு தலைப்பிட முடியாது.--Kanags \உரையாடுக 00:41, 5 ஏப்ரல் 2015 (UTC)
தெரசா எப்படி அன்னைத் தெரசா என அறியப்படுகிறாரோ அதுபோலவே மோகன்தாசு கரம்சந்த் காந்தி மகாத்மா காந்தி என்றே அறியப்படுகிறார். ஆனால் ஒன்றில் பட்டத்துடனும் மற்றொன்றில் பட்டமில்லாமலும் இருக்கிறது. எதன் அடிப்படையில் பட்டங்களைச் சேர்க்கலாம் அல்லது சேர்க்கக்கூடாது எனத் தெளிவுபடுத்தினால் நல்லது. நன்றி.--இரா.பாலா (பேச்சு) 02:39, 5 ஏப்ரல் 2015 (UTC)
மகாத்மா காந்தி என்று இருப்பதில் தவறில்லை. எனவேதான் ஆ.வி.யின் கொள்கையைச் சுட்டினேன். சுவாமி விவேகானந்தர் ஆ.வி.யின் கொள்கையின்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதே. ஆ.வி.யில் "மகாத்மா காந்தி" என்றே உள்ளது. மகாத்மா காந்தி என்று இருக்க வேண்டும் என்றால் அதை அக்கட்டுரைப்பக்கத்தில் உரையாடியிருக்கலாம். அதைவிடுத்து எனக்கு இல்லை, அதனால் உனக்கும் வேண்டாம் என்ற தொணியில் உரையாடுவது உறுத்ததாக உள்ளது. {{ராமகிருஷ்ண பரமஹம்சர்}} - இங்கு சுவாமி என்றே கட்டுரைகள் உள்ளதைக் கவனித்தீர்களோ தெரியாது. இவற்றுக்கெல்லாம் ஏன் பெயர் மாற்றவில்லை என்றால் அது அக்கட்டுரைகளின் பெயர்களின் தனித்துவமாகும். //ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராய்வதே சிறந்தது. பொதுவான கடுமையான விதியை அனைத்துக்கும் பின்பற்றுவது என்பது சர்ச்சைக்குள்ளாகும்.// ஆம், கணித சூத்திரம் போன்று இங்கு செயற்பட முடியாது. --AntonTalk 04:22, 5 ஏப்ரல் 2015 (UTC)
//அதைவிடுத்து எனக்கு இல்லை, அதனால் உனக்கும் வேண்டாம் என்ற தொணியில் உரையாடுவது உறுத்ததாக உள்ளது// இந்தத் தொனியில் எங்கே உரையாடினேன் எனக் காட்ட முடியுமா? பட்டங்களை இரண்டிலும் இணைக்கலாம் அல்லது இரண்டிலும் வேண்டாம் என்றுதான் சொல்லியுள்ளேன். மேலும் ராமகிருஷ்ணர் என பட்டமெதுவும் இல்லாமல் கட்டுரை இருப்பதையும் கவனித்தேன்.--இரா.பாலா (பேச்சு) 05:06, 5 ஏப்ரல் 2015 (UTC)
//இன்னபிற கட்டுரைகளில் பட்டங்களைத் தவிர்த்திருக்கிறோம். எனவே இதிலும் பட்டத்தைத் தவிர்த்து எழுதுவது நல்லது. // --AntonTalk 05:18, 5 ஏப்ரல் 2015 (UTC)
//இன்னபிற கட்டுரைகளில் பட்டங்களைத் தவிர்த்திருக்கிறோம். எனவே இதிலும் பட்டத்தைத் தவிர்த்து எழுதுவது நல்லது. அல்லது அந்தக் கட்டுரைகளிலும் பட்டத்தை இணைப்பது நல்லது//--இரா.பாலா (பேச்சு) 06:04, 5 ஏப்ரல் 2015 (UTC)
அப்படியென்றால் மாற்றம் தேவையான கட்டுரைகளில் அது பற்றி உரையாடலாம். --AntonTalk 07:29, 5 ஏப்ரல் 2015 (UTC)
இது தொடர்பானது பேச்சு:திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் --AntonTalk 07:33, 5 ஏப்ரல் 2015 (UTC)
விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு பக்கத்தில் கூடுமான வரை பட்டப் பெயர்களை தவிர்க்கவும் என்றிருப்பதால் ஒருவேளை பட்டங்கள் எதுவும் வேண்டாம் என முடிவெடுத்து இக்கட்டுரையில் பட்டத்தை நீக்க வாய்ப்பிருந்ததாலேயே இங்கு உரையாடலைத் தொடங்கினேன்.--இரா.பாலா (பேச்சு) 10:29, 5 ஏப்ரல் 2015 (UTC)

தற்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். --AntonTalk 12:10, 5 ஏப்ரல் 2015 (UTC)

தற்போது அல்ல. முதலிலேயே புரிந்ததனால்தான் இங்கு உரையாடினேன்.--இரா.பாலா (பேச்சு) 15:02, 5 ஏப்ரல் 2015 (UTC)
எது எப்படியோ நீங்கள் பரிந்துரைத்த பெயர் மாற்றம் அவசியம் அல்ல. --AntonTalk 15:50, 5 ஏப்ரல் 2015 (UTC)
எனவே உரையாடியது தவறானது என்றாகிவிடுமா என்ன? சந்தேகங்கள் முரண்பாடுகள் தொடர்பாக உரையாடத்தான் கட்டுரையின் பேச்சுப் பக்கம் என்பது ஒரு நிருவாகிக்குக் கூடத் தெரியாமலிருப்பது வியப்பாயிருக்கிறது.--இரா.பாலா (பேச்சு) 16:17, 5 ஏப்ரல் 2015 (UTC)
இது பொருத்தமற்ற உரையாடல். //எனவே உரையாடியது தவறானது என்றாகிவிடுமா என்ன// இவ்வாறு நான் கூறினேனா? //சந்தேகங்கள் முரண்பாடுகள் தொடர்பாக உரையாடத்தான் கட்டுரையின் பேச்சுப் பக்கம் என்பது ஒரு நிருவாகிக்குக் கூடத் தெரியாமலிருப்பது வியப்பாயிருக்கிறது// எனக்குத் தெரியாது என்று எப்படித் தெரியும்? --AntonTalk 16:59, 5 ஏப்ரல் 2015 (UTC)
ஒருமுறை இவ்வுரையாடல் முழுவதையும் படித்துப் பாருங்கள். இவ்வுரையாடலை நீட்டிக்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை, //எது எப்படியோ நீங்கள் பரிந்துரைத்த பெயர் மாற்றம் அவசியம் அல்ல// மற்றும் //தற்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.// ஆகிய வரிகள் மூலம் தெரிந்து கொண்டேன். பொருத்தமற்ற உரையாடலை நீங்கள் தொடங்கி வெகு நேரமாகிறது. பிற நிருவாகிகளின் கருத்தையும் உங்களின் கருத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். //மகாத்மா காந்தி என்று இருக்க வேண்டும் என்றால் அதை அக்கட்டுரைப்பக்கத்தில் உரையாடியிருக்கலாம். // //அதைவிடுத்து எனக்கு இல்லை, அதனால் உனக்கும் வேண்டாம் என்ற தொணியில் உரையாடுவது உறுத்ததாக உள்ளது// //அப்படியென்றால் மாற்றம் தேவையான கட்டுரைகளில் அது பற்றி உரையாடலாம்.// ஆகியவை நான் இங்கு உரையாடியதே தவறு எனும் பொருளில் சொல்லியுள்ளீர்கள். எனவேதான் உரையாடல் பக்கத்தில் உரையாடியது தவறானது என்றாகிவிடுமா என்ன? சந்தேகங்கள் முரண்பாடுகள் தொடர்பாக உரையாடத்தான் கட்டுரையின் பேச்சுப் பக்கம் என்பது ஒரு நிருவாகிக்குக் கூடத் தெரியாமலிருப்பது வியப்பாயிருக்கிறது என்றேன். இனிமேலும் இவ்விவாதத்தை பொருளற்ற முறையில் நீட்டிக்கப் போகிறீற்களா என்ன?. நீட்டித்தாலும் இது தொடர்பாய் பேச என்னிடம் எதுவும் இல்லை. :) --இரா.பாலா (பேச்சு) 23:06, 5 ஏப்ரல் 2015 (UTC)
உங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். மற்றவர்களும் கொள்கை/வழிகாட்டல்/நடைமுறை என்பவற்றுக்கேற்ப பதில் அளித்துள்ளனர். ஏற்றுக் கொள்ளாவிட்டால் கொள்கை/வழிகாட்டல் பக்கத்தில் அது பற்றி உரையாடியிருக்கலாம். அதைவிடுத்து அங்கு பட்டப் பெயர் உள்ளது இங்கும் வேண்டாம் என்றும், அவ்வாறு செயற்படாதீர்கள் என்றால் நான் எங்கு சொன்னேன் என்றும் வாதிடுவதும், அது எங்கு என்று சுட்டினால் அதற்கு வேறு காரணம் கற்பிப்பது முறையாகாது. இங்கு பெயர் மாற்றம் தேவை என்றீர்கள். அது தேவையற்றது எனக் குறிப்பிட்டுள்ளோம். அத்துடன் பேச்சை முடித்திருக்கலாம். ஆகவே, இது தொடர்பில் இதற்கு மேலும் பேச வேண்டாம் என இவ்வுரையாடலை நிறைவு செய்கிறேன். மேலும், பொதுவிட உரையாடலாக நீடித்தால் சம்பந்தப்பட்ட பயனர்களுக்களின் பேச்சுப்பக்கத்தில் பயனர் எச்சரிக்கைக் குறிப்பு இடப்படலாம். மற்ற நிருவாகிகளும் கவனிக்கவும். --AntonTalk 04:21, 6 ஏப்ரல் 2015 (UTC)
பயனர் பாலா இவ்வுரையாடலை சுமுகமாக முடித்து வைக்கவே விரும்பினார் என்பதை அவரது இந்தக் குறிப்பிலிருந்தே எனக்கு விளங்கியிருந்தது. அதற்குப் பின்னரும் இவ்வுரையாடல் தொடர்ந்தது வருத்தத்தை அளிக்கிறது.--Kanags \உரையாடுக 04:31, 6 ஏப்ரல் 2015 (UTC)
  • அன்டன், நான் நினைத்ததை சரியாக வார்த்தையில் கொண்டுவந்து உங்களுக்கு விளங்க வைக்க முடியாமைக்கு வருந்துகிறேன். நான் புரிந்தவற்றை தொகுத்து கீழே தருகிறேன்,

இரண்டு முடிவுகளை நான் எதிர்பாத்திருந்தேன். ஒன்று பட்டங்களைத் தவிர்ப்பது இரண்டு பட்டங்களைச் சேர்ப்பது. தவிர்ப்பது என்ற முடிவை எடுத்திருந்தால் நான் உரையாடிய இந்த இடம் சரியான ஒன்று. சேர்ப்பது என்று எடுத்திருந்தால் நான் உரையாட வேண்டிய இடம் இதுவாக இருக்கக்கூடாது என்பது உங்களின் கருத்து. இந்த உரையாடலின் தொடக்கத்தில் நான் உங்கள் கருத்தோடு பிற பயனர் மற்றும் நிருவாகிகளின் வழிகாட்டலைக் கோரியிருந்தேன். கனக்சு தனது வழிகாட்டலை வழங்கியிருந்தார். எனவே உங்களின் பதிலை மட்டும் நான் கணக்கில் கொள்ள முடியாது. காரணம், இரவியும் என்னிடம் சில விளக்கங்கள் கேட்டிருந்தார். அதற்கான விளக்கத்தையும் பதிந்திருந்தேன். அவரது மறுமொழிக்காகவும் காத்திருந்தேன். எனவே நான் இங்கு தொடர்ந்து உரையாடியது தவறில்லை என்றே இப்போதும் எண்ணுகிறேன்.

  • //பட்டத்தைத் தவிர்த்து எழுதுவது நல்லது. அல்லது அந்தக் கட்டுரைகளிலும் பட்டத்தை இணைப்பது நல்லது// என்று நான் சொல்லிவந்த போதும் உங்களுக்கு நான் பட்டத்தை நீக்க வேண்டும் என குறிப்பிட்டதாக மட்டுமே தெரிகிறது பட்டத்தை இணைப்பது நல்லது என்ற சொற்கள் தங்களது கவனத்திற்கு வரவில்லை. இதை எனது வாக்கியப் பிழையென்றே கருதுகிறேன். இனிவரும் காலங்களில் அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுத முயற்சிப்பேன்.
  • பயனர் எச்சரிக்கைக் குறிப்பு இடும்படி நான் என்ன செய்தேன் என்பதை விளக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் (இங்கு அல்லது எனது பேச்சுப் பகத்தில் அல்லது விக்கியில் வேறு எங்காகிலும்). இக்கேள்வி விக்கியின் முறைமைகளையும் ஒரு பயனராய் எனக்கு உள்ள உரிமையை அறிய உதவும்.

பெயர் மாற்ற வார்ப்புரு[தொகு]

ஆளுமைகளின் பட்டங்கள் / பெயர்கள் தொடர்பான மாற்றுக் கருத்துகள் எந்தெந்த கட்டுரைகளில் உள்ளது என்பைதப் பின்தொடர்வதற்காக பெயர் மாற்ற வார்ப்புரு சேர்த்துள்ளேன். இதனை என் தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் சேர்க்கவில்லை.--இரவி (பேச்சு) 20:00, 6 ஏப்ரல் 2015 (UTC)

தலைப்பு மாற்ற கோரிக்கை[தொகு]

அன்பிற்கினியீர், வாழ்த்துகள். அன்னை தெரசா அவர்களின் பெயரை 'அன்னை தெரேசா' என்று குறிப்பிடுவது சரியில்லை. அவர்களை 'அன்னை தெரசா' என்றே குறிப்பிட வேண்டும். அவர்களின் சபையயைச் சேர்ந்தவர்களும், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களும் மற்றும் பலரும் 'அன்னை தெரசா' என்றே குறிப்பிட்டு வருகின்றனர்.நன்றி. -Dr.Ezhilvendan (பேச்சு) 10:15, 29 ஆகத்து 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அன்னை_தெரேசா&oldid=2262858" இருந்து மீள்விக்கப்பட்டது