பயனர் பேச்சு:Uksharma3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொகுப்பு

தொகுப்புகள்


1

பொருளடக்கம்

என்னுடன் உரையாடுங்கள்[தொகு]

100px மறுமொழிக் கொள்கை
வணக்கம். நான் தொடங்கிய கட்டுரைகளில் திருத்தம் வேண்டுமென்றால் கட்டுரையிலேயே குறிப்பிடுங்கள். கட்டுரை பற்றி கருத்துக் கூற விரும்பினால் தொடர்பான கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் அதனை பதிவு செய்யுங்கள். உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்). தனிப்பட்ட சேதி சொல்ல விரும்பினால் தயவு செய்து மின்னஞ்சல் மூலம் அதனைச் சொல்லவும்.

-

டி. கே. மூர்த்தி, திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர்[தொகு]

நன்றி. - Uksharma3 (பேச்சு) 16:14, 28 பெப்ரவரி 2014 (UTC)

இணையான கட்டுரை[தொகு]

மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை கட்டுரையைப் பார்த்தேன். மிகச்சிறப்பாக எழுதியுள்ளீ்ர்கள். இவரைப் பற்றி ஆங்கில விககியில் எழுதப்பட்டுள்ளதா?. கட்டுரை இருப்பின் அதைக் குறிப்பிடுங்கள் நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:59, 6 மார்ச் 2014 (UTC)

👍 விருப்பம், ஆங்கிலத்தில் தேடிப் பார்த்தேன்; அங்கு இன்னமும் யாரும் எழுதவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:04, 6 மார்ச் 2014 (UTC)

சகோதரன் ஜெகதீஸ்வரன், தங்கள் குறிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி. இன்னும் இரண்டொரு நாட்களில் இதனை ஆங்கிலத்திலும் எழுதிவிட்டு இணைப்பு கொடுக்கிறேன். நன்றி. வணக்கம். - Uksharma3 (பேச்சு) 01:20, 7 மார்ச் 2014 (UTC)

ஆங்கிலக்கட்டுரை எழுதி இணைப்பு கொடுத்துள்ளேன். சகோதரன் ஜெகதீஸ்வரன் கொடுத்த ஊக்கத்துக்கு நன்றி. - Uksharma3 (பேச்சு) 06:43, 7 மார்ச் 2014 (UTC)

கட்டுரை உருவாக்கம் குறித்த வினா[தொகு]

கனகுவிடம் நீங்கள் கேட்ட கேள்வியை கண்டேன். அதனால், பின்வருவனவற்றை கூற விரும்புகிறேன். en:Complan பார்க்கவும். எழுதுபவர்களுக்கு எல்லைகளை இடமுடியாது. ஒவ்வொரும் தமக்குள்ளே எல்லைகளை வகுத்துக் கொண்டு, சமூக நோக்கமுள்ள,ஆழமானக் கட்டுரைகளை உருவாக்க வேண்டும். தன்மனம் என்பதை விட்டு, சமூகமனத்தை பேண முயற்சிப்போமே?--≈ உழவன் ( கூறுக ) 02:42, 8 மார்ச் 2014 (UTC)

👍 விருப்பம் நீங்கள் எது பற்றியும் எழுதலாம். கலைக்களஞ்சியம் என்றால் அனைத்து தரப்பு தலைப்புகளும் எழுதலாம்.சோடாபாட்டிலின் சில கருத்துரைகள். தங்களுக்கு உதவக்கூடும் :), மதனாகரன் அண்ணாவின் பேச்சுப் பக்கத்தில் இருந்து..... // “மிக முக்கியத்துவம் வாய்ந்த” கட்டுரைகள் என்றல்ல கலைக்களஞ்சிய நடையில் பயனுள்ள அனைத்து விசயங்களைப் பற்றியும் எழுதலாம். இக்கட்டுரை கலைக்களஞ்சியத் தன்மையுடன் தான் எழுதப்பட்டுள்ளது. ஆங்கில விக்கி போன்று தமிழ் விக்கியில் கடினமான notability criteria கிடையாது. அப்படிப் பார்த்தாலும் இது ஆங்கில விக்கி notability விதிகளை எளிதாகக் கடந்து விடும். // நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 02:52, 8 மார்ச் 2014 (UTC)

விளக்கத்துக்கு நன்றி, நண்பர்களே. kanags எனக்கு சில விடயங்களில் உதவுபவர், அதனால் அவர் பக்கத்தில் கேட்டேன். நன்றி. வணக்கம். - Uksharma3 (பேச்சு) 05:36, 8 மார்ச் 2014 (UTC)

அதில் என்ன இருக்கின்றது. மூத்தவரிடம் உதவி கேட்டல் முறையே!, அறிந்தவர்கள் உதவுதலும் முறையே! , நான் ஒரு விக்கிச் சிறுத்தை :) :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:43, 8 மார்ச் 2014 (UTC)

டி. எம். தியாகராஜன்[தொகு]

வணக்கம்! இந்தக் கட்டுரைக்கு ஆங்கிலக் கட்டுரையுடன் இணைப்பு தருவதற்காக ஆங்கில விக்கியில் தேடியபோது, நீங்கள் ஆங்கிலத்தில் இன்று எழுதியிருப்பதனை அறிந்தேன். கருநாடக இசைக் கலைஞர்கள் குறித்து இரு மொழிகளிலும் எழுதி வருவதற்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:13, 13 மார்ச் 2014 (UTC)

👍 விருப்பம் இவ்வாறு இரு மொழிகளிலும் கட்டுரைகள் எழுதுபவர்கள் நமது விக்கியில் மிகக் குறைவு. உங்களுக்கு எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 20:01, 13 மார்ச் 2014 (UTC)

மா. செல்வசிவகுருநாதன்,Kanags நன்றி. இப்போ சில நாட்களாக எழுதக்கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளதுடன் மனநிலையும் சாதகமாக இருந்தது. என்னால் முடிந்தளவு செய்ய என்னை இயக்குபவன் அருளை வேண்டுகிறேன். எழுதுவதை விட மற்றவர்களை ஊக்குவிக்கும் உங்களைப் போன்றவர்கள் அதில் இருப்பது தான் விக்கிக்கு பெருமளவு நன்மை செய்யும். வாழ்க, வளர்க உங்கள் தொண்டு. - Uksharma3 (பேச்சு) 00:55, 14 மார்ச் 2014 (UTC)

👍 விருப்பம்டி. எம். தியாகராஜன் அவர்களின் படத்தை இணைத்தமைக்கு நன்றி. தங்கள் பணிகளில் என்றும் இறை துணைநிற்க வேண்டி, விடைபெறுகிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 01:26, 14 மார்ச் 2014 (UTC)

படிமப் பொதுவகம்[தொகு]

உங்களது சொந்தப் படங்களைப் பொதுவகத்துக்குத் தரவேற்றலாம். Own work, Derivative works உதவிப் பக்கங்களைப் பாருங்கள். மற்றும் முறையாகக் காப்புரிமை விலக்கப்பட்ட படிமங்களையும் தரவேற்றலாம். எங்கிருந்து பெற்றீர்கள் என்ற விபரங்கள் தரப்பட வேண்டும். PD-India என்ற பக்கத்தைப் பாருங்கள். மிகவும் பயனுள்ளது. இந்த வார்ப்புருவைப் பயன்படுத்தி பல படிமங்களை நான் தரவேற்றியிருக்கிறேன். வேறும் பல உதவிப் பக்கங்கள் பொதுவகத்தில் உள்ளன.--Kanags \உரையாடுக 11:28, 14 மார்ச் 2014 (UTC)

தகவலுக்கு நன்றி. ஆயினும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆங்கில கட்டுரையில் சேர்ப்பதற்காகவே கேட்டேன். நீங்கள் குறிப்பிட்ட பக்கத்தில் உள்ளவற்றை விளங்கி அதன்படி செய்யும் அளவு எனக்கு தொழினுட்ப அறிவு இல்லை. கட்டுரை இருந்தால் போதும்தானே. சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி. வணக்கம். - Uksharma3 (பேச்சு) 12:35, 14 மார்ச் 2014 (UTC)
ஆங்கிலக் கட்டுரையின் குறித்த கட்டுரையில் மட்டும் பயன்படுத்த அனுமதித்து (நியாயமான பயன்பாட்டு அடிப்படையில்) ஆங்கில விக்கியில் அதனைத் தரவேற்ற வேண்டும். படிமத்தை எங்கிருந்து பெற்றீர்கள் என்பதைக் கட்டாயம் தர வேண்டும். இது தமிழ் விக்கிக்கும் பொருந்தும். உதாரணத்துக்கு, en:File:T.Sathasiva Iyer Ceylon.jpg என்ற படிமத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 13:34, 14 மார்ச் 2014 (UTC)

தகவல்சட்டம்[தொகு]

நபர்கள் குறித்த தகவல் சட்டங்களுக்குப் பொதுவாக வார்ப்புரு:தகவற்சட்டம் நபர் என்பதைப் பயன்படுத்தலாம். இசைக்கலைஞர்களுக்கு வார்ப்புரு:இசைக்குழு உள்ளது. அதனையும் பயன்படுத்தலாம். ஆனால் அது இந்திய இசைக்கலைஞர்களுக்கு அவ்வளவு பொருத்தமானதா எனத் தெரியவில்லை. தகவற்சட்டம் நபரில் இசைக்கலைஞருக்கு ஏற்றவாறு மேலதிக தகவல்களை சேர்க்கலாம். என்ன மேலதிகமாக சேர்க்கவிருக்கிறீர்கள் எனக் கூறினால் உதவ முடியும்.--Kanags \உரையாடுக 08:22, 19 மார்ச் 2014 (UTC)

வார்ப்புரு:தகவற்சட்டம் நபர் என்பதனைக் ஏதோ ஒரு பக்கத்தில் கண்டு அதனைப் பயன்படுத்தினேன். பின்னர் Infobox musical artist என ஒரு தகவல் சட்டம் இராமநாதபுரம் சி. எஸ். முருகபூபதி பக்கத்தில் கண்டு பிரதி செய்து வைத்துள்ளேன். இவை இரண்டும் என் தேவைக்கு இப்போதைக்கு போதும். நன்றி. வணக்கம். - Uksharma3 (பேச்சு) 10:22, 19 மார்ச் 2014 (UTC)

உங்கள் பார்வைக்கு[தொகு]

[1] இதன்படி திருவாவடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் வட்டத்தில் உள்ளதாகத் தரப்பட்டுள்ளது. நீங்கள் திருவாவடுதுறை கட்டுரையில் மயிலாடுதுறை வட்டம் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். சரிபார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:11, 20 மார்ச் 2014 (UTC)

நீங்கள் குறிப்பிட்டது தமிழ் நாடு அரசு வலைத்தளம். நான் தகவல் பெற்றது மத்திய அரசின் உள்துறை அமைச்சுக்கு உட்பட்ட Census of India தளத்திலிருந்து. அதிலே Sub District Mayiladuthurai எனப் போட்டிருக்கிறார்கள். எதை சரியென எடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் ஒரு மேற்கோள் காட்டியிருப்பதால் அதன்படி கட்டுரையில் மாற்றம் செய்துள்ளேன். ஆங்கிலத்திலே சில இடங்களில் Thiruvavaduthurai எனவும் வேறு சில இடங்களில் Thiruvaduthurai எனவும் எழுதியுள்ளார்கள். அதையும் கட்டுரையில் காட்டியுள்ளேன். நன்றி. வணக்கம். - அன்புடன் Uksharma3 (பேச்சு) 16:59, 20 மார்ச் 2014 (UTC)

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:25, 21 மார்ச் 2014 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று[தொகு]

சாட்ஸ்வொர்த் ஹவுஸ் என்ற கட்டுரையில் நீங்கள் உங்கள் ஒளிப்படங்களை இணைத்திருந்தீர்கள். இது ஏற்புடையது அல்ல. பொதுவில் ஏராளமான படங்கள் உள்ளன. மேலும், ஒரு சில படங்களைத் தவிர்ந்த பயனர் படங்கள் நீக்கப்படும். பார்க்க: Please upload only files that are used (or will be used) in encyclopedia articles or project pages; anything else will be deleted. If you have extra relevant images, consider uploading them to the Wikimedia Commons, where they can be linked from Wikipedia.


--AntonTalk 03:24, 25 மார்ச் 2014 (UTC)

உங்கள் கருத்துக்கும், படங்களை நீக்கியமைக்கும் மிக்க நன்றி. இதைப் போல இன்னும் சில வரலாற்றுச் சிறப்புள்ள, நான் நேரில் பார்த்த, இடங்களைப் பற்றி தொடர்ந்து எழுத இருந்தேன். என் நேரத்தை வீணடிக்காமல் காப்பாற்றியதற்கு மீண்டுமொரு நன்றி. கட்டுரை விக்கிப்படுத்தப்படவேண்டுமென குறிப்பிட்டுள்ளீர்கள். தமிழ் விக்கியிலுள்ள பெரும்பாலான கட்டுரைகளைப் போல யாராவது ஒருவர் ஏதாவது ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி ஆங்கிலக் கட்டுரையை சொல்லு சொல்லாக மொழிபெயர்த்து, ஆங்கில மொழி நடையில் தமிழில் எழுதுவார் என நம்புகிறேன். உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் விக்கிபீடியா வளரும். நன்றி. வணக்கம். - Uksharma3 (பேச்சு) 06:31, 25 மார்ச் 2014 (UTC)

தற்போதும் அக்கட்டுரை விக்கியாக்கத்தில் ஓர் பகுதியான சான்று அற்று உள்ளது. உப தலைப்புக்கள் இன்றி துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. ஆகவே வேண்டிய மாற்றங்களைச் செய்யுங்கள். தமிழ் விக்கியில் யார் மென்பொருளைப் பயன்படுத்தி மொழிபெயர்க்கிறார்கள்? என்ன மென் பொருள் பயன்படுத்தப்படுகின்றது? ஆதாரத்துடன் குறிப்பிடுங்கள் அவ்வாறான கட்டுரைகளை நீக்கப்படும். வெறுமனே ஊகத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவை குறை கூற வேண்டாம். உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் விக்கிபீடியா வளரும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் இதற்கான பொருள் விளங்கவில்லை. எனவே இதனை விளக்குமாறு கேட்கிறேன். --AntonTalk 01:50, 26 மார்ச் 2014 (UTC)

கட்டுரை துப்புரவு செய்யப்படவேண்டி இருந்தால் அங்கேயே குறிப்பிடுங்கள். நீங்கள் முதலில் போட்ட குறிப்பை நான் நீக்கவில்லை.

தமிழ் விக்கிப்பீடியாவை நான் குறை கூறவில்லை. இந்தத் தளத்தில் மட்டும் செயற்படும் சிலர் வேறு தளங்களில் செயற்பட்டவர்கள் இங்கு வரும்போது அவர்களை காயப்படுத்துகிறார்கள்; மனம் நோக வைக்கிறார்கள். அப்படி வந்த சிலர் மனம் நொந்து வெளியேறியிருக்கிறார்கள்.

//உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் விக்கிபீடியா வளரும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் இதற்கான பொருள் விளங்கவில்லை. எனவே இதனை விளக்குமாறு கேட்கிறேன். // நீங்கள் ஒரு Superman ஆக செயல்படுகிறீர்கள். அதனால் தமிழ் விக்கிப்பீடியா வளரும் என்பதே பொருள். (எ.கா) உங்கள் "அவ்ரோ வல்கன்" அற்புதமான தமிழ் கட்டுரை.

இக்காலத்து இளையவர்களுடன் என்னால் நியாயம் பேச முடியாது. இரத்த அழுத்தம் தான் அதிகரிக்கும். இப்போது கூட நான் கணினியைத் திறந்தவுடன் தழிழ் விக்கியைத் திறவாது ஒரு கட்டுரை எழுதுவதிலேயே என் கவனத்தைச் செலுத்தினேன். தமிழ் விக்கியைத் திறந்து பார்க்கும்போது யாராவது ஏதாவது செய்தி விட்டிருந்தால் என் இரத்த அழுத்தம் ஏறக்கூடும், கட்டுரையை எழுத முடியாது போய்விடும் என்பதாலேயே கட்டுரை எழுதும் வேளைகளில் முதலில் தமிழ் விக்கியை பார்ப்பதில்லை. (பல தடவை இந்த அனுபவம் ஏற்பட்டதை வைத்தே இதை எழுதுகிறேன்). கட்டுரையையும் நான் நோட்பேடில் தான் முதலில் எழுதிவிட்டு பின்னர் தமிழ் விக்கியைத் திறந்து அதனை ஒட்டுவேன். இப்போது பாருங்கள், எழுதிய கட்டுரை நோட்பேடில் அப்படியே இருக்க, இங்கே நான் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் எழுதும் கட்டுரைகளில் திருத்தம் வேண்டியிருந்தால் கட்டுரையிலேயே குறிப்பு போடுங்கள். எனது பேச்சு பக்கத்தில் எதுவும் எழுதவேண்டாம். We are in different frequencies. நன்றி. வணக்கம். - Uksharma3 (பேச்சு) 03:55, 26 மார்ச் 2014 (UTC)

சில கருத்துக்கள்[தொகு]

 • சாட்ஸ்வொர்த் ஹவுஸ் கட்டுரையில் நீங்கள் இணைத்த படங்களின் நிமித்தம் விக்கி நடைமுறைக்கேற்ப உங்களுக்கு அறிவிப்பினைத் தெரிவித்தேன். நீங்களோ தமிழ் விக்கியிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் மென்பொருளைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பதாக குறிப்பிட்டு, உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் விக்கிபீடியா வளரும் தேவையற்ற உரையாடலை ஏற்படுத்தினீர்கள்.
 • தமிழ் விக்கியில் யார் மென்பொருளைப் பயன்படுத்தி மொழிபெயர்க்கிறார்கள்? என்ற கேள்விக்கு பொருத்தமற்று காயப்படுத்துகிறார்கள்; மனம் நோக வைக்கிறார்கள் என்று பொருத்தமற்ற பதிலை முன்வைத்துள்ளீர்கள்
 • நான் ஒரு Superman ஆக செயல்படுவதாக குறிப்பிட்டு, நான் உருவாக்கிய குறுங்கட்டுரையை அற்புதமான தமிழ் கட்டுரை என்கிறீர்கள். இதை ஒரு வஞ்சப் புகழ்ச்சியாகவே கருதுகிறேன். நான் எப்படி Superman ஆக செயல்படுகின்றேன் என்றும் "அவ்ரோ வல்கன்" எப்படி அற்புதமான தமிழ் கட்டுரை என்றும் குறிப்பிட முடியுமா?
 • இக்காலத்து இளையவர்களுடன் என்னால் நியாயம் பேச முடியாது. இரத்த அழுத்தம் தான் அதிகரிக்கும். என்று பொருத்தமற்ற உரையாடலை மேலும் தொடர்கிறீர்கள்.

நான் விக்கி நடைமுறைக்குப் புறம்பே செயற்பட்டிருந்தால் எவை எனக் குறிப்பிடுங்கள். பிழையென்றால் என்னைக் குறித்து புகார் செய்யுங்கள் அவ்வாறு இல்லாதவிடத்து வஞ்சப் புகழ்ச்சியில் ஈடுபடுவதைத் தவிருங்கள். முன்னைய உங்கள் கருத்துக்களைப் பார்க்கும்போது நீங்கள் பிறர் தலையீட்டை விரும்பாததுபோல் உள்ளது. இது ஏற்புடையதல்ல. இது தன்னார்வலர்களைக் கொண்ட சமூகம். பலவித மனிதர்களும் இருப்பார்கள். அதற்கேற்ப நாமும் விட்டுக் கொடுத்து, விக்கி விதிகளுக்கேற்ப செயற்பட வேண்டாம். பலரும் பலவித அழுத்தங்கள் கொண்டிருக்கலாம். மற்றவர் காயப்படுத்துகிறார்கள்; மனம் நோக வைக்கிறார்கள் என்று குறிப்பிடும் நீங்கள் மற்றவர்களுக்கும் மனம் உள்ளதென்பதை நினைவிற் கொள்ளுங்கள். வஞ்சப் புகழ்ச்சியில் ஈடுபடாதீர்கள்.

மேலும், தேவைப்படும் இடத்து, முறையாக பேச்சு பக்கத்தில் உரையாடலாம். I’m always keen on Wikipedia’s frequency instead of personal frequencies. --AntonTalk 06:27, 26 மார்ச் 2014 (UTC)

 • "மென்பொருளைப் பயன்படுத்தி" என நான் குறிப்பிட்டது ஆன்லைனில் கிடைக்கும் மொழிபெயர்ப்புத் தளங்களையே. ஆங்கிலத்தில் ஒரு வசனத்தை அல்லது சொல்லைக் கொடுத்து தமிழ் மொழிபெயர்ப்பு கேட்டால் கொடுக்கும். யார் செய்கிறார்கள் என்று என்னால் எப்படிக் கூறமுடியும்? வசன நடையை வைத்தே 'இது எவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம்' என ஓரளவு அனுமானிக்க முடியும். தமிழில் சிந்தித்து தமிழ் நடையில் எழுதுவதற்கும் யாரோ வேறொரு மொழியில் எழுதியதை அப்படியே மொழிபெயர்த்து எழுதுவதற்கும் நெறைய வேறுபாடு உண்டு. இதைப் பற்றி எனது பயனர் பக்கத்திலேயே எடுத்துக்காட்டுகளோடு எழுதியுள்ளேன்.
ஹாரிஸ், 2010ல் டைம் இதழின் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பேர் ஒருவராக பெயரிடப்பட்டது. (நீல் பாட்ரிக் ஹாரிஸ்)

இந்த வசனத்தை ஆங்கிலமாக்கி (Time magazine named Harris one of the 100 most influential people) சிந்தித்தால் தான் அதன் கருத்து புரியும். இதனை ஆங்கிலத்தில் படித்துவிட்டு தமிழில் சிந்தித்து எழுதினால்,

2010 ஆம் ஆண்டு டைம் இதழ் ஹாரிஸை மிகவும் செல்வாக்குப் பெற்ற 100 பேரில் ஒருவராக குறிப்பிட்டது.

என எழுதுவதே தமிழ் வசன நடை. (named என்பது நேரடியாக "பெயரிடப்பட்டது" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.) இப்படி நூற்றுக்கணக்கான வசனங்களை நான் எடுத்துக் காட்ட முடியும்.

 • இந்தக் கட்டுரைக்கு "தமிழாக்கம் செய்யப்படவேண்டியது" என குறிப்பு எழுதப்பட்டுள்ளது. இதனோடு ஒப்பிடும்போது "அவ்ரோ வல்கன்" ஆங்கிலக்கட்டுரையில் இடையே தமிழிலும் எழுதப்பட்டது போல இல்லையா? நீங்கள் ஒரு நிர்வாகி. குறிப்புகள் எழுதுபவர். அப்படியிருக்க உங்கள் கட்டுரைக்கு "தமிழாக்கம் செய்யப்படவேண்டியது" என யார் குறிப்பெழுதுவார்? ஆகவே அது வித்தியாசமான/அற்புதமான (extra-ordinary) தமிழ் கட்டுரை இல்லையா? அந்தக் கட்டுரையை நான் எழுதியிருந்தால் நிச்சயமாக நீங்கள் "தமிழாக்கம் செய்யப்படவேண்டியது" என குறிப்பிட்டிருப்பீர்களா இல்லையா? ஆகவே 75%க்கு மேல் ஆங்கிலச் சொற்களைக் கொண்ட ஒரு கட்டுரையை எழுதிவிட்டு அதற்கு ஒருவரும் குறிப்பு எழுதவில்லை என்றால் நீங்கள் Superman அதாவது மற்றவர்களை விட மேலானவர் என்றுதானே கொள்ள வேண்டும்.
 • வஞ்சப்புகழ்ச்சி என நீங்கள் கருதினால் நான் ஒன்றும் செய்யமுடியாது. But the comment about your article and the mentioning of you as a Superman is a Banter (ridiculing someone humourously). There is no insult in that.

- Uksharma3 (பேச்சு) 08:00, 26 மார்ச் 2014 (UTC)


 • மீண்டும் நீங்கள் பொருத்தமற்றவிடங்களைத்தான் குறிப்பிடுகிறீர்கள். இணையத்தில் கிடைக்கும் மொழிபெயர்ப்புத் தளங்கள் பற்றிய உதாரணம் எனக்குத் தேவையில்லை. விடயத்துடன் பேசுங்கள்
 • மொழிபெயர்ப்புப் பற்றிய உங்கள் உதாரணம் எனக்குத் தேவையற்றது. ஏன் சுற்றி வளைக்கிறீர்கள்? விடயத்துடன் பேசுங்கள். அல்லது தேவையான இடத்தில் தெரிவியுங்கள்.
 • அவ்ரோ வல்கன் கட்டுரைக்குத் தேவையான குறிப்பை தேவைப்பட்டோர் இடலாம். இதில் தடையேதும் இல்லை. சிக்கலான மொழிபெயர்ப்பு பற்றி முன்னர் தெரிவித்தும் உள்ளேன். என்பதையும் கவனிக்க.
 • இது தமிழ் விக்கிப்பீடியா. இங்கு தமிழ்தான் முதன்மை ஊடகம். இதே பெயரில் ஆ.வி.யிலும் உள்ளேன். அங்கு வேண்டுமானால் ஆங்கிலத்தில் உரையாடுங்கள். நான் ஆங்கிலப் புலமையுடன் பதில் அளிக்கிறேன்.
 • வஞ்சப் புகழ்ச்சிக்கு ஏரணம் கற்பிக்காதீர்கள். தொடர்ந்தும் வஞ்சப் புகழ்ச்சி செய்ய வேண்டாம். நீங்கள் தொடர்ந்தும் வஞ்சப் புகழ்ச்சியில் ஈடுபட்டால் தனி நபர் தாக்குதலாக உங்கள் மீது முறையிடு செய்யவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ நான் நிர்ப்பந்திக்கப்படலாம்.

--AntonTalk 08:58, 3 ஏப்ரல் 2014 (UTC)

நீங்கள் சாட்ஸ்வொர்த் ஹவுஸ் கட்டுரையில் விக்கி நடைமுறையில் இல்லாமல் பதிவேற்றியதில் ஒன்றை நீக்கியது பயனர் nan என்பவர். மூன்று படங்களுமே விக்கி நடைமுறையில் இல்லாதலாலே நீக்கப்பட்டுள்ளது. அதுக்கு எதுக்கு தொடர்பே இல்லாமல் அண்டன் மீது வஞ்சப் புகழ்ச்சி?

விதிப்படி படமில்லை என்றால் நீங்கள் பின்வருவனவற்றைக் கேட்டிருக்கலாம்.

 1. எதனால் விதிகள் மீறியதாகச் சொல்கிறீர்கள்?
 2. விதிகள் எவை?

அதை விட்டுவிட்டு தொடர்பில்லாமல் பேசுவது பொருந்தாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:04, 3 ஏப்ரல் 2014 (UTC)

வேண்டுகோள்...[தொகு]

ஐயா, வணக்கம்!

 • தொடர்ந்து எழுதுமாறு உங்களைப் பலமுறை கேட்டுள்ளேன். ஆனால், இனிமேலும் கேட்கும் தகுதி எனக்கில்லை; உங்களுக்கும் அது சிறப்பில்லை!
 • அண்மைய உரையாடல்களை கவனித்து வருகிறேன். எனினும் பொதுவாக நான் எவ்வித பிணக்குத் தீர்விலும் என்னை ஈடுபடுத்துவதில்லை. எனக்கு அந்த அளவுக்கு திறமை கிடையாது!
 • அதேபோல யார்பக்கமும் சார்பாக இருப்பதில்லை. எவரையும் பகைத்துக்கொள்ள விருப்பமில்லாததும் ஒரு காரணம்; என் இறுதிநாள் வரை இங்கு எழுத ஆசை என்பதனால்!
 • பொதுவாக நாம் எவருடைய பயனர் பக்கத்தையோ, பயனர் பேச்சுப் பக்கத்தையோ முழுவதுமாக நீக்குவதில்லை. எனவே 'நீக்கல் வேண்டுகோள்' எதனையும் மேற்கொண்டு வைக்கவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இப்பக்கங்கள் அப்படியே இருக்கட்டும்!
 • இது தன்னார்வப் பணி என்பதால், உங்கள் விருப்பத்தின்பேரில் விலகிக்கொள்ள உங்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. ஒருவேளை மீண்டும் வந்து எழுதினால், எனக்கு இன்பமே!
 • கருநாடக இசை குறித்த உங்களின் கட்டுரைகளை நான் என்றும் மறவேன்! - என்றென்றும் அன்புடன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:27, 3 ஏப்ரல் 2014 (UTC)

மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்[தொகு]

மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறக்குறைய 4000 கூகுளால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதில் இது பிழையான மொழி பெயர்ப்பு கொண்டு இருப்பதால் இதை திருத்தி உதவுங்கள் என இருக்கும். அதைத் திருத்த விரும்புவர்கள் திருத்தலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:56, 3 ஏப்ரல் 2014 (UTC)


எனது கருத்து[தொகு]

தென்காசி சுப்பிரமணியன்:

 1. சாட்ஸ்வொர்த் கட்டுரையில் ஒரு படத்தை நீக்கியது nan எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் திருத்த வரலாற்றைப் பார்த்தால் அப்படியொருவர் மாற்றம் செய்த பதிவு இல்லை.
 2. நான் காமன்சு விதிகளுக்கேற்பவே படிமங்களை ஏற்றினேன். விதிகளில் "அடையாளம் காணக்கூடிய நபர்கள்" (Identifiable persons) பற்றியே கூறப்பட்டுள்ளது. பல லட்சம் மக்கள் வந்து போகும் இடங்களின் படங்களில் ஆட்கள் இருப்பதில் என்ன தவறு. எனது படம் குளிர் காலத்தில் மழை மூட்டம் இருந்தபோது எடுக்கப்பட்டது. அதுபோன்ற வேறு படங்கள் பொதுவகத்தில் இல்லை. சாட்ஸ்வொர்த் மாளிகையின் எத்தனையோ படங்கள் காமன்சுவில் உள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றாக இருக்கட்டும் என்றே நினைத்தேன்.
 3. இந்தப் படம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் (2002 டிசம்பர்) ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் எடுக்கப்பட்டது. படத்தில் இருக்கும் நபர் யாரென அடையாளப்படுத்த ஓர் இடத்திலும் ஒரு தகவலும் இல்லை. கட்டுரையில் நபர் பற்றி எதுவும் எழுதப்படவில்லை.
 4. அத்துடன் இதனை நான் ஏற்றியதற்கு ஒரு தனிப்பட்ட காரணமும் இருந்தது. இந்தப்படத்தை எடுத்த எனது ஆங்கில நண்பர் (84 வயது) தொண்டைப்புற்றுநோயின் தாக்கத்திற்கு ஆளாகி வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆகவே கட்டுரையில் படத்தைச் சேர்த்துவிட்டு அவருக்குக் காட்டினால், அவரால் தமிழ் படிக்க முடியாதென்றாலும், அவருக்கு மகிழ்ச்சி ஏற்படும் என எண்ணினேன். ஆனால் இக்காலத்தில், பொதுவாக 40, 50 வயதுக்குட்பட்டவர்கள், புத்திசாலித்தனத்துக்கும், அறிவுபூர்வமானவற்றுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் உணர்வுபூர்வமானவற்றுக்குக் கொடுப்பதில்லை என்பதை உணர்கிறேன். எங்கள் காலத்தில் உணர்வுகளுக்கே மதிப்புக் கொடுத்தோம். ஆகவே என் எண்ணஓட்டம் தமிழ் விக்கியில் இருக்கும் பெரும்பாலானவர்களின் எண்ண ஓட்டத்துடன் ஒத்துப் போகாது என்பதை தெரிந்து கொண்டேன்.

செல்வசிவகுருநாதன்:

 1. மேலே குறிப்பிட்டது போல எனது சந்ததியின் பழக்கமான உணர்வுபூர்வமாக விடயங்களை அணுகும் பண்பு கொண்டவன் என்பதால் உங்கள் அன்புக்குக் கட்டுப்பட்டு இசை மேதைகளைப் பற்றிய கட்டுரைகளை எழுதி வந்தேன். நான் அதனோடு நின்றிருக்க வேண்டும்.

சுமார் 10 நாட்களுக்கு முன் தமிழ் விக்கியில் சாட்ஸ்வொர்த், டர்பன் என ஒரு கட்டுரை யாரோ எழுதியதைப் பார்த்தேன். அதற்கு முதல் நாள் தான் எனது ஆங்கில நண்பரின் கவலையளிக்கும் மின்னஞ்சல் வந்தது. கட்டுரையைப் பார்த்ததும் நண்பர் என்னை அழைத்துச் சென்று காட்டிய சாட்ஸ்வொர்த் மாளிகை நினைவுக்கு வந்தது. ஆகவே அதைப் பற்றிய கட்டுரையை எழுதி நண்பர் எடுத்த படத்தையும் சேர்த்தேன். கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் அவரது நிலை பற்றிக் கூறியிருந்தேன். அதைப் படிக்கும் சக விக்கியாளர்கள் அவருக்காகப் பிரார்த்திப்பார்கள் என நினைத்தேன். என் நண்பருக்குக் கட்டுரைப் பக்க உரலியை அனுப்பினேன். ஆனால் அவர் அதனைப் பார்த்தபோது அங்கே படம் இருக்கவில்லை. அவருக்கு தமிழ் தெரியாது. படத்தைக் காணவில்லை என பதில் அனுப்பினார். அதற்குள் AntonO வின் செய்தி வந்திருந்தது. கட்டுரையின் பேச்சுப் பக்கத்தையும் நீக்கிவிட்டார். எனக்கு இரத்தக் கொதிப்பு உண்டு. ஆகவே சூடாகி விட்டேன்.

 1. சங்கீத வித்துவான்கள் பற்றிய கட்டுரைகளை எழுதுவதிலும் எனக்குப் பிரச்சனை இருந்தது. நான் 25, 30 ஆண்டுகள் அச்சு, வானொலி ஊடகங்களில் ஆக்கங்கள் படைத்தவன். நானே ஒரு காலாண்டு இதழை 5 ஆண்டுகள் அச்சில் பதிப்பித்து வெளியிட்டவன். எனக்குப் பழக்கமான தமிழ் நடையில் இங்கு எழுத முடியவில்லை. நான் ஆங்கில விக்கியில் உள்ள கட்டுரைகளை மொழிபெயர்த்து எழுதுவதில்லை. கூகுள், பிங், தேடுதல்களில் தகவல் சேகரித்து மேற்கோள்களைச் சேர்த்து தமிழ் நடையில் எழுதுவேன். ஆங்கில விக்கியில் கட்டுரை இருந்தால் அதிலே மேற்கோளாகக் கொடுக்கப்பட்டிருக்கும் பக்கங்களுக்குச் சென்று நேரடியாகத் தகவல் பெற்று எனது கட்டுரையில் சேர்ப்பேன். (சில சமயங்களில் ஆங்கிலத்தில் கட்டுரை இருக்காது. அத்தகைய சந்தர்ப்பத்தில் நானே ஆங்கிலத்திலும் கட்டுரையை எழுதுவதுண்டு.) இவ்வாறு தகவல்கள் சேகரித்து ஒரு கட்டுரை எழுத 3, 4, 5 மணி நேரம் கூட ஆகும். எனக்கு அரைகுறையாக எழுத பிடிக்காது.

ஒருவரைப் பற்றி எழுதிய கட்டுரையில் அவரது பிறந்த தேதியை சேர்ப்பதற்காக 2 மணி நேரம் சல்லடை போட்டுத் தேடிக் கடைசியில் கண்டுபிடித்தேன். நான் தனியாக வாழுபவன். வீட்டு வேலைகள், சமையல் வேலை, கடைக்குப் போதல் எல்லாம் நானே பார்க்க வேண்டும். இத்தனையும் தாண்டி எழுதலாம் என்று உட்கார்ந்தால், மின்தடை, டாங்கிள் இணைய இணைப்பு சிக்கல் என்று பிரச்சனைகளையும் சமாளித்து எழுதவேண்டும்.
அப்படி எழுதினால் சில சமயங்களில் யாராவது வந்து எவ்வித ஆய்வும் இல்லாது சிலவற்றை மாற்றிவிட்டுப் போவார்கள். அதைப் பார்க்க எனக்கு மனசு வேதனைப்படும். அனந்த கிருஷ்ண சர்மா கட்டுரைத்தலைப்பில் முதலில் அனந்தகிருஷ்ண என ஒரு சொல்லாக எழுதி கட்டுரையை சேமித்தேன். பின்னர் அவரது மகனால் உருவாக்கப்பட்டுள்ள அவரைப்பற்றிய அதிகாரபூர்வ தளத்தில் அனந்த கிருஷ்ண என இரு சொற்களாக இருந்தது. தெலுங்கு கட்டுரையிலும், ஆங்கில கட்டுரையிலும் அவ்வாறே இரு சொற்களாகப் பிரித்து எழுதப்பட்டிருந்தது. ஆகவே தலைப்பை மாற்றி கட்டுரையை நகர்த்தினேன். ஆனால் ஒருவர் மீண்டும் தலைப்பை ஒரு சொல்லாக்கி நகர்த்திவிட்டார். அவர் திருத்த வரலாற்றைப் பாராமல் தன் மனதில் தோன்றியபடி மாற்றம் செய்தார். இப்படியான அரைவேக்காடு வேலைகளும் எனக்கு மனவருத்தத்தைக் கொடுக்கும்.
ஒரு தடவை நீங்கள் மருகர் என்ற சொல்லைப்பற்றி விளக்கம் கேட்டிருந்தீர்கள். அது உங்கள் பண்பைக் காட்டுகிறது. அவ்வாறு கட்டுரையை எழுதியவரோடு கலந்தாலோசிக்காமல் தாங்கள் நினைத்தபடி மாற்றங்களை தமிழ் விக்கியில் செய்கிறார்கள். ஆங்கில விக்கியில் பெரும்பாலும் எழுத்துப்பிழை போன்றவற்றையே தாங்களாகச் செய்கிறார்கள். விடயத்தில் மாற்றம் தேவையென யாராவது நினைத்தால் பேச்சுப் பக்கத்தில் அது பற்றி கலந்துரையாடிவிட்டே செய்கிறார்கள். தமிழ் விக்கியில் அந்த வழக்கத்தை உங்களைத்தவிர வேறெவரிடமும் நான் இதுவரை காணவில்லை.

 1. ஒரு மொழி வளர வேண்டுமானால் அந்த மொழி நடையில் அதிகம் படைப்பிலக்கியம் வெளிவரவேண்டும். ஆனால் விக்கியில் மொழி நடை ஆக்கத்தை விட விக்கியாக்கம் என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த விக்கியாக்கத்தின் மூலம் (origin) ஆங்கில விக்கியிலிருந்து பெறப்பட்டதே. அதில் கீழைத்தேய விழுமியங்களுக்கு இடமில்லை. கீழைத்தேய பண்பாட்டின்படி மதிப்பிற்குரிய ஒரு பெரியவரை அவருக்குரிய கௌரவம் கொடுத்து அழைப்பதே மரபு. அதையொட்டியே இந்திய அரசு Shri என்றும் தமிழ்நாடு அரசு திரு என்றும் சிங்கள அரசு மாத்தையா என்றும் அதிகாரபூர்வமாக அழைக்கின்றன. ஏனைய மாநிலங்களில் உள்ளவர்கள் கருணாநிதிஜி, ஜெயலலிதாஜி என்றே சொல்வார்கள். தமிழர்கள் ஐயா, அம்மா என குறிப்பிடுவார்கள். ஆனால் தமிழ் விக்கியில் இது முடியாது. ஆகவே எமது பண்பாட்டுக்கும் விக்கி முறைக்கும் முரண்பாடு உள்ளதாக நான் உணர்கிறேன். விக்கியாக்கத்தை விமரிசிப்பது எனது நோக்கமல்ல. முரண்பாட்டைச் சுட்டிக்காட்டுவதே என் நோக்கம்.
 2. எமது பண்பாட்டுக்கு அமையவும், விழுமியங்களை பேணவும் கூடியதான வகையில் அதற்கேற்ற ஒரு தளத்தில் என் ஆக்கங்களை வெளியிட முடிவு செய்துள்ளேன். எமது மொழியும் பண்பாடும் தொடர்ந்து வரும் சந்ததிகளுக்குச் சேர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது தான் என் விருப்பம். மேற்கத்தைய கலாசார விழுமியங்களை பேணுவதிலும் வளர்ப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை.
 3. மற்றவர்களை ஊக்குவிக்கும் உங்கள் பான்மைக்கு நான் தலை வணங்குகிறேன். இக்காலத்தில் இப்படியான மனப்பான்மை உடையோர் மிக அரிது. "தகுதியில்லை" என எழுதியுள்ளீர்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில் "தெரியாமல் செய்துவிட்டேன்" என எழுதினீர்கள். அந்த வார்த்தைகளே நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர் என்பதைக் காட்டிவிட்டன. ஒருவேளை நான் வயதில் சிறியவனாக இருந்து, இப்போது தான் எழுத ஆரம்பிக்கும் காலமாக இருந்தால் அல்லது வேறு ஊடகங்களில் எழுதாமல் முதன்முதலாக தமிழ் விக்கியில் தான் எழுதுகிறேன் என்றால் விக்கிநடையில் எழுத முடிந்திருக்கும். ஆனால் எனது நிலையில் என்னை மாற்றிக் கொள்ள முடியாது. உங்கள் பணி தொடர எனது வாழ்த்துகள்.

AntonO: மேலே தென்காசி சுப்பிரமணியன், செல்வசிவகுருநாதன் ஆகியோருக்கு எழுதியிருப்பதையும் படியுங்கள். நீங்கள் விக்கிமுறையைக் கடைப்பிடிப்பதற்காக செய்தவை எனது மனசுக்கு வேதனை கொடுத்ததால் இரத்தக் கொதிப்பில் சூடாக எழுதிவிட்டேன். யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்குக் கிடையாது. மனிதாபிமானத்தைப் பெரிதும் மதிப்பவன் நான். எனது எழுத்துக்கள் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பொதுவாக எல்லோருக்கும்: தமிழ் விக்கியில் என்னென்ன விதிகள் உள்ளன என அங்கொன்று இங்கொன்றாக ஒவ்வொருவர் காட்டும்போது தான் சிலவற்றைப் பார்க்க முடிகிறது. விதிகள் ஒரே இடமாக (ஒரே பக்கத்தில்) இருந்தால் எல்லோரும் பார்க்க வசதியாக இருக்கும்.

எனக்குள்ள பிரச்சனைகள் காரணமாக தமிழ் விக்கியில் தொடர்ந்து பங்களிக்க முடியாத நிலையில் உள்ளேன். யாராவது ஒரு நிருவாகி என் பயனர் பக்கத்தை நீக்கிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எல்லோருக்கும் என் அன்பு, நன்றி வணக்கம்.

உங்கள் கவனத்திற்கு[தொகு]

வணக்கம்! பயனர் பக்கம், பயனர் பேச்சுப் பக்கங்களை நீக்குவதில்லை என்பதால், நீக்குக என உங்கள் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை நீக்கியிருக்கிறேன். --நந்தகுமார் (பேச்சு) 19:07, 5 ஏப்ரல் 2014 (UTC)

எண்ணங்கள்[தொகு]

மதிப்பிற்குரிய ஐயா! இந்த பக்கத்தை அவ்வப்போது படிப்பதுண்டு. பல்வேறு இடர்களையும் தாண்டி, நீங்கள் பங்களிப்பது வணக்கத்திற்குரியது. உங்கள் முயற்சியைப் போலவே நானும் சில இடர்களை தாண்டியே இங்கு வருகிறேன். விக்கியாக்கம் குறித்தும், இணையத்தமிழ் படைப்பு குறித்தும் தங்களின் கருத்துக்களில், பெரும்பாலானவை, அனவைரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே. //விரைந்து நீக்கல் கொள்கை மாற்றப்பட வேண்டும்// என்பதை நானும் அவ்வப்போது உணர்கிறேன். எழுதத் தொடங்கும் நமது தமிழ் சமூகத்திற்கு விதிகளால், அதிக பலன்களால் ஏற்படப் போவதில்லை என்பதை நானும் உங்களைப் போன்றே உணருகிறேன். இருப்பினும், அனைத்து விக்கியிலும் பின்பற்றப்படும் சில அணுகுமுறைகளை நாமும் பேண வேண்டும். பலவற்றை இங்கு பேசலாம். படங்கள் நீக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறீர்கள். அவைகளைக் காண விரும்புகிறேன். நீங்கள் கூறுவதைப் பார்க்கும்போது, அதற்குரிய இடம் பொதுவகத்தில் இருக்கிறது என்றே தோன்றுகிறது. படங்கள் குறித்து எத்தகைய ஐயம் இருப்பினும், எனது பக்கத்தில் தெரிவிக்கவும். விக்கிப்பீடியா மட்டும் விக்கித்தமிழ் அல்ல. பிற விக்கிமீடியாத் திட்டங்களையும் காண்க. நம்மைப் போன்று பல்வேறு இணைய இணைப்பு இடர்களை அனுபவிப்பருக்கு, கட்டுரைப் பகுதியான இந்த விக்கிப்பீடியாவை விட, பிற பகுதிகள் அதிக வாய்ப்புகளைத் தரும்.

இந்த பகுதி விக்சனரியில் பல ஆண்டுகளாக வளர்க்கப்படாமல் உள்ளது. தங்களைப் போன்றோரின் மொழி ஆற்றலால், அங்கிருக்கும் சிவப்புச் சொற்களை உருவாக்கலாம். எனவே, அதனை மேம்படுத்த அழைக்கிறேன். இதுபோன்ற பிற பக்கங்களையும் ஒரு முறை காணவும். எனவே, தயவுசெய்து விலகல் வேண்டாம். தங்கள் அணுகலில் மாற்றம் வேண்டி, விடைபெறுகிறேன். ஏற்கனவே, கூறியபடி எனது பக்கத்தில் தங்களது வேண்டுகோள்களை வெளிப்படுத்த விரும்புகிறேன்.உங்களுக்கான உதவிகள் செய்யக் காத்திருக்கிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 05:25, 6 ஏப்ரல் 2014 (UTC)

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை...[தொகு]

ஐயா, வணக்கம்! தங்களின் ஆலோசனையின்படி, மங்கல இசை மன்னர்கள் எனும் நூலினை சற்றுக் கூடுதல் முயற்சி செய்து வாங்கிவிட்டேன். மிகவும் பயனுள்ள நூல்; இந்த நூலினை ஆதாரமாகக் கொண்டு 100 கட்டுரைகளை எழுத / விரிவாக்க / மேம்படுத்த இயலும். எனது வேட்கைக்கு, அமுத நீர் நிரம்பிய கிணற்றினைக் காட்டிய தங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை... - அன்புடன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:22, 6 செப்டம்பர் 2014 (UTC)

👍 விருப்பம். -செல்வசிவகுருநாதன், யாழ்ப்பாணம் வி. தெட்சணாமூர்த்தி பற்றி ஏதும் மேலதிக தகவல்கள் இருந்தால் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நறி.--Kanags \உரையாடுக 12:34, 6 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம் இப்புத்தகம் பற்றி பரிவாதினி மூலம் அறிந்தேன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சிதம்பரத்தில் உள்ள நண்பரும் அங்கே கிடைக்கவில்லை என கூறிவிட்டார். "ஏதாவது ஒன்று கிடைக்கவேண்டுமானால் அல்லது ஏதாவது ஒன்றை அடைய வேண்டுமானால் ஒவ்வொரு நாளும் அதைப் பற்றி நினைத்துக் கொண்டிரு" என ICRCயில் என்னுடன் வேலைசெய்த Gruber என்ற ஜெர்மானியர் ஒரு தடவை எனக்குச் சொன்னார். நான் அதனைக் கடைபிடித்து பல விடயங்களில் வெற்றி கண்டிருக்கிறேன். இந்த புத்தகத்தையும் எப்படியும் பெறவேண்டுமென சதா சிந்தித்ததன் விளைவாக இறைவன் எனக்கு வழியைக் காட்டினான். அமெரிக்காவிலுள்ள ஒருவரை வேறொரு விடயமாக தொடர்பு கொண்டபோது இப்புத்தகம் பற்றிய பேச்சை எடுத்தேன். அவர் தன்னிடம் அதன் பதிப்பாளர் முகவரியும் தொலைபேசி எண்ணும் இருப்பதாகக் கூறி மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார்.
இந்தப் புத்தகத்தை எழுதிய சுந்தரம், "நாதமும் நாதனும்" என ஒரு DVD வெளியிட்டுள்ளார். 500 ரூபா. நாதஸ்வர ஈடுபாடு கொண்டவர்கள் அவசியம் அதனை வாங்கி வைத்திருக்க வேண்டும். முகநூலில் Parivadini என்ற பக்கத்தில் ஒரு message கொடுத்தால் அவர்கள் முகவரி தருவார்கள். உங்களுக்கு வாங்க விருப்பமென்றால் எனக்கு மின்ஞ்சல் அனுப்புங்கள். முகவரி தருகிறேன்.
வேறும் பலருக்கு இந்தத் தகவல்கள் பயனளிக்கக் கூடும் என்பதால் இங்கே விரிவாகப் பதிவு செய்கிறேன். - Uksharma3 15:18, 5 அக்டோபர் 2014 (UTC)

@Kanags, அவசியம் செய்கிறேன்; தவில் - நாதசுவரக் கலைஞர்கள் குறித்த அனைத்துக் கட்டுரைகளையும் விரிவுபடுத்த முயற்சி செய்வேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:13, 8 செப்டம்பர் 2014 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக

வணக்கம் Uksharma3!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:15, 30 திசம்பர் 2014 (UTC)

நான் பெரும்பாலும் கருநாடக இசைக் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளே எழுதி வந்துள்ளேன். கருநாடக இசை குறித்து எழுதும்போது ஸ்ரீ, ஸ், ஷ் போன்ற எழுத்துக்கள் இல்லாமல் எழுதுவது கருத்துச் சிதைவு ஏற்பட வழி வகுக்கும். இந்த எழுத்துக்கள் பல கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சிலர் எனது கட்டுரைகளில் இந்த எழுத்துக்களை மாற்றி எழுதினர். இதனால் நான் கட்டுரைகள் எழுதுவதை தவிர்த்து விட்டேன். என்னைப் பொறுத்தவரை இவற்றை வட எழுத்துக்கள் என குறிப்பிடுவது தவறு என்பதே என் நிலைப்பாடு. வடக்கே யாருக்கும் இந்த எழுத்துக்கள் தெரியாது. இவை வடமொழியை எழுத பயன்படுத்தப்பட்ட தென்னிந்திய கிரந்த எழுத்து வடிவங்களே. கிரந்தமும் தமிழின் தாய் எழுத்தான பிராகிருதத்திலிருந்தே பிறந்தது. இவை தமிழுக்கு அணி சேர்க்கின்றன. இவற்றைத் தவிர்ப்பதற்காக சொற்சிதைவு ஏற்படுத்துவதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாதுள்ளது. குறிப்பாக ஸ்ரீ என்பதை சிறீ என எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ் நாட்டில் முடிந்த இடங்களில் ஸ்ரீ என்பதற்கு திரு என தமிழாக்கம் செய்கின்றனர். இலங்கையில் மட்டுமே சிறீ என எழுதப்படுகிறது. இது சிங்களத் தமிழாக இருக்கிறது. ஏனென்றால் சிங்களத்தில் தான் சிறீவர்த்தனே சிறீமா என பெயர்கள் உள்ளன. தமிழ் பெயர்களில் அவ்வாறு இல்லை. ஆகவே இதனை நான் ஏற்றுக் கொள்ளமுடியாது. இந்த நிலை மாறும்வரை நான் கட்டுரைகள் எழுதப் போவதில்லை. மன்னிக்கவும். Uksharma3 06:35, 3 சனவரி 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:30, 8 சூலை 2015 (UTC)

நன்றி...[தொகு]

வணக்கம் ஐயா; வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, உடனடியாக களத்தில் இறங்கியமைக்கு உளங்கனிந்த நன்றி!

ஒரு ஐயம்: ராஜா தேசிங்கு திரைப்படத்திற்கு உசாத்துணை (மேற்கோள்) உள்ளதே?! ஆனால் மேற்கோள் சேர்க்க வேண்டியவை பட்டியலில் அதனையும் சேர்த்துள்ளீர்கள். கவனிக்க வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:19, 4 அக்டோபர் 2016 (UTC)

அந்தந்த ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களை பட்டியலிடும் பணியில் இருக்கிறீர்களா? விளக்கவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:26, 4 அக்டோபர் 2016 (UTC)

திட்டத்தின் பேச்சுப் பக்கத்தில் தொடர்ந்து உரையாடலாம்; அதுவே பொருத்தமாக இருக்கும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:33, 4 அக்டோபர் 2016 (UTC)

அந்த அந்த ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களைப் பட்டியலிட வேண்டுமென நினைத்துவிட்டேன். அது தேவையற்றது என இப்போது அறிந்ததால் அவற்றை நீக்கிவிட்டேன்.
என்ன செய்யவேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. நான் என்ன செய்யவேண்டும் என்பதை சற்று விளக்கமாகச் சொன்னால் நல்லது.-Uksharma3 06:40, 4 அக்டோபர் 2016 (UTC)

மன்னிக்க வேண்டும்; இப்போது இங்கு விளக்கியுள்ளேன். தொடர்ந்து திட்டத்தின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)

திரைப்படத் துறை அல்லது கருநாடக இசை குறித்த உதவிகள் தேவையெனில் கனக்ஸ் அவர்களை நான் நாடுவேன். ஏனெனில் குண்டூசி, பேசும்படம் ஆகிய இதழ்களின் அக்காலத்துப் பிரதிகள் அவரிடம் உள்ளன; பராமரித்து வருகிறார். ஒரு தகவலுக்காக இதனைத் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:33, 4 அக்டோபர் 2016 (UTC)

தனிப்பட்ட படிமங்கள்[தொகு]

பொதுவாக, விக்கிப்பீடியா தனிப்பட்ட பயனர் படிமங்களை அதிகம் அனுமதிப்பதில்லை. காண்க: Please upload only files that are used (or will be used) in encyclopedia articles or project pages; anything else will be deleted. If you have extra relevant images, consider uploading them to the Wikimedia Commons, where they can be linked from Wikipedia. தனிப்பட்ட பயனர் படிமங்கள் எண்ணிக்கை இங்கு அதிகமானால், இங்கு அழிக்கப்படலாம் என்பதை நினைவூட்டுகிறேன். --AntanO 13:20, 9 அக்டோபர் 2016 (UTC)

I have my personal profile photo on my user page in English Wikipedia since 2012-10-25 . No one objected to that. These images will not be used in articles. - Uksharma3 13:41, 9 அக்டோபர் 2016 (UTC)
I prefer to communicate in Tamil since we are in ta.wiki unless any considerable circumstance. அங்கும் இங்கும் தனிப்பட்ட பயனர் படிமங்கள் உள்ளன. தனிப்பட்ட பயனர் படிமங்கள் எண்ணிக்கை இங்கு அதிகமானால், இங்கு அழிக்கப்படலாம் என்பதை நினைவூட்டவே இக்குறிப்பு. --AntanO 14:07, 9 அக்டோபர் 2016 (UTC)
இவ்வாறான தனிப்பட்ட படிமங்களை பொதுவகத்தில் தரவேற்றுவது நல்லது.--Kanags \உரையாடுக 19:28, 9 அக்டோபர் 2016 (UTC)
@AntanO:சாதாரண உரையாடலின் போது தமிழில் உரையாடுவேன். ஆனால் சில தொழினுட்ப விடயங்களைப் பற்றி எழுத வேண்டியிருந்தால் ஆங்கிலத்தில் எழுதுவது சுலபமாக இருக்கிறது, ஏனெனில் நான் கற்ற தமிழுக்கும் இப்பொழுது தமிழ் விக்கியில் கையாளப்படும் தமிழுக்கும் மிகுந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேலும் கணினி, இணையம் தொடர்பான தற்போதைய தமிழ் எனக்குப் பரிச்சயமில்லை. தமிழ் இலக்கணம், இலக்கியம் மட்டுமே நான் கற்றேன். தொழினுட்ப விடயங்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே கற்றேன். மேலும், ஆங்கிலம் தெரியாதவர் தமிழ் விக்கியில் பணியாற்ற முடியும் என நான் நம்பவில்லை. ஏனென்றால் பல வேலைகளுக்கும், அறிவுறுத்தல்களைப் படிப்பதற்கும் ஆங்கில அறிவு வேண்டியுள்ளது.
@Kanags: படிமங்களை Commons இல் பதிவேற்றிவிட்டேன். இவை சென்னைப் பல்கலைக் கழக பொது நிகழ்ச்சியைக் காட்டும் படங்கள். இவற்றைத் தனிப்பட்ட படங்கள் எனச் சொல்வது எவ்வளவு தூரம் சரி என்பது தெரியவில்லை. நன்றி. வணக்கம். -Uksharma3 02:08, 10 அக்டோபர் 2016 (UTC)
இங்கு தனிப்பட்ட என்று கூறப்பட்டது ஏனென்றால், அப்படிமங்கள் உங்கள் பயனர் பக்கத்தில் மட்டுமே இணைப்பட்டிருந்தது. சென்னைப் பல்கலைக்கழகக் கட்டுரையிலோ அல்லது வேறு விக்கிப்பீடியா கட்டுரைகளிலோ இணைக்கப்பட்டிருக்கவில்லை. இப்படங்கள் அவ்வாறான பொதுக் கட்டுரைகளில் இணைக்கத் தகுதியானதாக இருந்தால் அவற்றைத் தனிப்பட்ட எனக் கூற முடியாது தான்.--Kanags \உரையாடுக 07:18, 10 அக்டோபர் 2016 (UTC)
வணக்கம். என்ன குழப்பம்? என்ன உதவி?? முடிந்தால் உதவுகிறேன். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 06:24, 15 அக்டோபர் 2016 (UTC)
@கி.மூர்த்தி மற்றும் கி.மூர்த்தி: ஒத்தாசைப் பக்கத்தில் என் குழப்பத்தைப் பற்றிக் குறிப்பிட்டு உதவி கேட்டிருந்தேன். அதை எவ்வித காரணமும் காட்டாமல் நீக்கி விட்டீர்கள். அப்புறம் எதற்காக 'என்ன குழுப்பம்? என்ன உதவி?' என்று இங்கே வந்து கேட்கிறீர்கள். உதவி செய்வதாக இருந்தால் அங்கேயே செய்திருக்கலாமே. என் பதிவை எதற்காக நீக்கினீர்கள்? -Uksharma3 06:39, 15 அக்டோபர் 2016 (UTC)

உதவிக் குறிப்பு...[தொகு]

வணக்கம்! ராண்டார் கை தி இந்து நாளிதழில் எழுதிய கட்டுரைகள் எனும் இணைப்பு தங்களுக்கு உதவக்கூடும்; தேடுதல் வேலை சற்று எளிதாகும் என நம்புகிறேன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:47, 18 அக்டோபர் 2016 (UTC)

மிக்க நன்றி செல்வா, நான் இன்னொரு URL வைத்திருந்தேன். அதை விட இது இன்னும் இலகுவாக இருக்கிறது. திரைப்படங்கள், கலைஞர்கள் பற்றி வேறு சிலரும் கூட தி இந்துவில் எழுதுகிறார்கள். தேவிகா பற்றிய கட்டுரையை வேறு யாரோ எழுதியிருக்கிறார். எனினும் அவசியம் ஏற்படும்போது வேறு விதமாகத் தேடிப்பார்க்கலாம். இப்போது நீங்கள் தந்துள்ள உரலி பல கட்டுரைகள் எழுத உதவும். நன்றி. வணக்கம் --Uksharma3 01:32, 19 அக்டோபர் 2016 (UTC)

ஆம்; மோகன் வி. ராமன் என்பவர் பல குறிப்பிடத்தக்க கட்டுரைகளை வெகுநாட்களாக எழுதி வருகிறார். உதாரணம்: King of comedy--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:42, 19 அக்டோபர் 2016 (UTC)

ஆட வந்த தெய்வம் ஏற்கனவே உள்ளது! மன்னிக்க வேண்டும், இது என்னுடைய இன்னொரு தவறு. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:30, 19 அக்டோபர் 2016 (UTC)

ஆனால் தலைப்பு ஆடவந்த தெய்வம் என்றுதான் இருக்க வேண்டும். படத்தில் அப்படித்தான் உள்ளது. சுவரொட்டியையும் கவனிக்கவும் --Uksharma3 05:37, 19 அக்டோபர் 2016 (UTC)

ஆமாம்; நீங்கள் கூறுவது சரியே. ஆட என்பதற்கும் வந்த என்பதற்கும் இடையே இடைவெளி இருந்ததால்தான் பிரச்சனை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:40, 19 அக்டோபர் 2016 (UTC)

இரண்டையும் முறையாக இணைத்து விடலாம். நிறைய Clean-up வேலைகள் இருக்கின்றன. அப்போதுதான் இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:43, 19 அக்டோபர் 2016 (UTC)

இணைக்கும்படி ஆட வந்த தெய்வம் பேச்சு பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளேன். -Uksharma3 05:48, 19 அக்டோபர் 2016 (UTC)

இதனை பரிசோதித்துப் பாருங்கள்! ஏறத்தாழ 100 பக்கங்களை இங்கேயே படிக்கும் வகையில் இருக்கிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:54, 19 அக்டோபர் 2016 (UTC)

நன்றி செல்வா. எவ்வளவோ தகவல்கள் இருக்கின்றன. எல்லாம் எழுதவேண்டும் போல மனதில் ஆர்வம் இருக்கிறது. இருக்கும் தகவல்களை வைத்து எழுதுவதற்கே நேரமும், வலுவும் இல்லை. அதிலும், யாராவது கேள்வி எழுப்பினால் பதிலளிப்பதிலேயே ஆற்றல் செலவழிந்து விடுகிறது. ஏதோ முடிந்த வரை முயற்சி செய்கிறேன்.

ஒரு உதவி வேண்டும். இந்தப் பக்கத்தில் கீழே வெகு தூரம் வந்துவிட்டால் உடனடியாக மேலே செல்வதற்கு என்ன செய்ய வேண்டும். Go to top என்பதற்கு HTML code எழுதிப் பார்த்தேன். அது வேலை செய்யவில்லை. --Uksharma3 02:02, 20 அக்டோபர் 2016 (UTC)

@Kanags... உங்களால் உதவ முடியுமா எனப் பாருங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:56, 20 அக்டோபர் 2016 (UTC)

வழிமுறைகள் ஏதேனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 11:36, 20 அக்டோபர் 2016 (UTC)
@மா. செல்வசிவகுருநாதன், @Kanags சிவாஜி கணேசன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் பட்டியலில் மேலும் திரைப்படங்கள் சேர்க்கலாம். ஆனால் ஆண்டு ரீதியாக வரிசை எண் கொடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. இடையில் சொருகுவதானால் வரிசை எண்களை ஒவ்வொன்றாகக் கடைசி வரை மாற்ற வேண்டியுள்ளது. இதற்கு ஏதாவது சுருக்க வழி உண்டா? --Uksharma3 07:13, 20 அக்டோபர் 2016 (UTC)

Column'ஐ தற்போதைக்கு hide செய்வதுபோல இருந்தால், எளிதாக இருக்கும். ஆண்டு எனும் Column இருப்பதும் தொகுப்பின்போது கடினத்தைத் தரலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:39, 20 அக்டோபர் 2016 (UTC)

முழுப் பட்டியலும் ஓரளவு நிறைவடைந்தவுடன் எண்களை மாற்றுவது வசதியாக இருக்கும்.--Kanags \உரையாடுக 11:36, 20 அக்டோபர் 2016 (UTC)
ஆங்கில விக்கியில் https://en.wikipedia.org/wiki/Sivaji_Ganesan_filmography முழுப்பட்டியலும் நல்ல விதமாகக் கொடுத்திருக்கிறார்கள். நடிகர் திலகத்தின் இணைய தளத்தில் http://nadigarthilagam.com/Sivajimainc.htm முழுப்பட்டியல் உள்ளது. அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். சரியாக இருக்கிறது. ஆங்கில பக்கத்தில் உள்ளதை அப்படியே தமிழுக்கு மாற்றலாம் என நினைக்கிறேன். உங்கள் இருவரினதும் கருத்தை அறிய விரும்புகிறேன். --Uksharma3 13:44, 20 அக்டோபர் 2016 (UTC)

நீங்கள் செய்தால், கூடுதல் தகவல்கள்தான் சேரும்; குறையாது! எனவே உங்களுக்கு எது வசதியோ அதன்படி செய்யுங்கள். ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு அட்டவணை என இருந்தால்... இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்துத் தொகுத்தலுக்கும் எளிதாக இருக்கும்! உதாரணம்: இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் கட்டுரையில் இவ்விதமே நான் பட்டியலிட்டேன் (ஆனால் அட்டவணையில் இடவில்லை). --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:50, 20 அக்டோபர் 2016 (UTC)

ஐயம்...[தொகு]

கொட்டப்புளி ஜெயராமன் அல்லது கொட்டாப்புளி ஜெயராமன். எது சரியானது? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:44, 24 அக்டோபர் 2016 (UTC)

கொட்டாப்புளி என்றே அவர் எல்லா இடங்களிலும் குறிப்பிடப்படுகிறார். https://antrukandamugam.wordpress.com/2015/01/21/kottappuli-jayaraman/ --Uksharma3 05:47, 24 அக்டோபர் 2016 (UTC)
@Selvasivagurunathan: நீங்கள் முன்பு என்னத்த கன்னையா பெயர் சந்தேகம் பற்றி kanags இடம் கேட்டிருந்தீர்கள். அவர் ஒரு பதிலைத் தந்தார். ஆனால் அவர் பெயர் என்னத்தே கன்னைய்யா. kanags இலங்கை வழக்குப்படி என்னத்தெ என எழுதினார். ஆனால் தமிழ் நாட்டில் என்னத்தே என்று தான் வரும். தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் அவர் பெயரைக் கண்ணையா என எழுதின. கண்ணையா எனப் பெயர் இல்லை. கன்னையா (தெலுங்கு மூலம்) தான் சரியான பெயர். https://antrukandamugam.wordpress.com/2013/07/23/ennaththe-kannaiah/comment-page-1/ --Uksharma3 06:03, 24 அக்டோபர் 2016 (UTC)

இங்கு கொட்ப்புளியா அல்லது கொட்டாப்புளியா என ஐயம் வந்ததற்குக் காரணம்: சமையலுக்கு நாம் பயன்படுத்தும் புளிகளில் இரண்டு வகையுண்டு: 1. கொட்டை உள்ள புளி 2. கொட்டை நீக்கப்பட்ட புளி. கொட்டையைக் கொண்டுள்ள புளி என்பது கொட்டப்புளி என மருவி குறிப்பிடப்பட்டிருக்கலாம். தேவகன்யா திரைப்படத்தைப் பார்த்தால் அறிந்துகொள்ளலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:35, 24 அக்டோபர் 2016 (UTC)

உதவிக் குறிப்பு...[தொகு]

வணக்கம்! இந்த இணைப்பு தங்களுக்கு உதவக்கூடும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:47, 30 அக்டோபர் 2016 (UTC)

நன்றி. அந்த இணைப்பை வைத்துத் தான் நான் பக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த இணைப்பு மேற்கோளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. --UKSharma3 01:13, 31 அக்டோபர் 2016 (UTC)

தகவல்...[தொகு]

வணக்கம்! எம். ஜி. ஆர். நடித்த திரைப்படங்களின் பட்டியல் பக்கத்தை எம். ஜி. ஆர். திரை வரலாறு என்ற தலைப்பிற்கு நகர்த்தியிருக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:38, 2 நவம்பர் 2016 (UTC)

காலை வணக்கம். தகவலுக்கு நன்றி. மணல்தொட்டியில் கட்டுரை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.--UKSharma3 01:41, 2 நவம்பர் 2016 (UTC)

பெயர் குழப்பங்கள்[தொகு]

தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட பல கலைஞர்கள் தமிழ்த் திரைப்படங்களில் பங்களித்ததால், ஏகப்பட்ட பெயர் குழப்பங்களை சரிசெய்வதில் பெருமளவு நேரம் செலவிட வேண்டியதுள்ளது! மேலும் பெரும்பாலான ஆதாரங்கள், இணையத்தில் ஆங்கில மொழியில்தான் கிடைக்கின்றன. திரைப்படத் தலைப்புகளை பொருத்தளவில்... ஒற்று, இடைவெளி இவற்றில் ஏகப்பட்ட குழப்பங்களை தீர்க்க வேண்டியதாகவுள்ளன! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:21, 2 நவம்பர் 2016 (UTC)

உண்மைதான். இன்று காலை தாய் மகளுக்குக் கட்டிய தாலி என எழுதி இணைப்புக் கொடுத்துவிட்டு சோதித்துப் பார்த்தால் அங்கே தாய் மகளுக்கு கட்டிய தாலி என தலைப்பு இருந்தது. அதனை அப்படியே விட்டு விட்டு என் இணைப்பில் சரி செய்தேன். பின்னர் சக்கரவர்த்தித் திருமகள் என்பது சக்கரவர்த்தி திருமகள் என எழுதப்பட்டிருந்ததைக் கண்டு தலைப்பை மாற்றி நகர்த்தினேன். அதை வழிமாற்று இன்றி நகர்த்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்ய என்னால் முடியாது. (முடிந்தால் நீங்கள் அதைச் சரி செய்து விடுங்கள்).
இவைகளால் நேரமும் உழைப்பும் கெடுகின்றன. ஆங்கிலத்தில் இந்தமாதிரியான தொல்லைகள் இல்லை.
எம். ஜி. ஆர். பட்டியலில் ஜெனோவா என்றொரு படம் உண்டு. ஜெனோவா என ஒரு நகரமும் இருப்பதால் நான் ஜெனோவா (திரைப்படம்) என இணைப்பை எழுதிவிட்டு இணைப்பை சோதித்துப் பார்த்தால் அது ஜெனோவா என்றே கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கட்டுரையில் 'ஜெனோவா நகரத்துக்கு செனோவா வைப் பார்க்கவும் எனக் குறிப்பு எழுதப்பட்டுள்ளது.
முறைப்படி எழுதுவதானால் ஜெனோவா (திரைப்படம்), ஜெனோவா (நகரம்) என கட்டுரைகள் எழுதப் பட்டிருக்க வேண்டும். இதையெல்லாம் standardize பண்ணி ஒரு code of ethics எழுதப்பட்டிருக்க வேண்டும். இதற்கு ஆங்கில விக்கி உதவ மாட்டாது. ஏனெனில் ஆங்கிலத்தில் இப்படியான பிரச்சினைகள் வராது. விக்கியில் யாரும் எப்பவும் திருத்தங்கள் செய்யலாம் என்பதால் வெவ்வேறு கொள்கைகள் கொண்டவர்கள் தங்கள் விருப்பம் போல மாற்றங்கள் செய்து விடுகின்றனர்.
இதனால் இணைப்புகள் கொடுக்கும்போது சிரமமாக உள்ளது. மேலும் ஒரு இணைப்பைச் சோதிக்க ஒரு கட்டுரைப் பக்கம் சென்றால் அங்கு வேறு தவறுகள் தென்படுகின்றன. இப்படியே சங்கிலித் தொடர் போல திருத்தங்கள் செய்து கொண்டே போகும்போது, முதலில் எடுத்த வேலையை தொடர்ந்து செய்ய முடியவில்லை. ஏதோ என்னால் முடிந்தவரை செய்கிறேன். நன்றி. வணக்கம். UKSharma3 05:56, 2 நவம்பர் 2016 (UTC)

பேச்சு:மருத நாட்டு வீரன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:22, 2 நவம்பர் 2016 (UTC)

எவ்வளவோ கவனமாக இருந்தாலும், பெயர்களில் தவறு ஏற்பட்டுவிடுகிறது. எனவே நான் இற்றைப்படுத்தும் திட்டப் பக்கத்தை முழுவதுமாக நம்பாது, தாங்களும் ஒருமுறை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:15, 2 நவம்பர் 2016 (UTC)

கலை அரசி[தொகு]

கலை அரசி தலைப்பினை கீழ்க்கண்டவாறு கையாண்டுள்ளேன்:

 1. கலை அரசி என்பது சரியான கட்டுரைத் தலைப்பு
 2. கலையரசி (திரைப்படம்) எனும் பக்கத்தை உருவாக்கி, கலை அரசி எனும் பக்கத்திற்கு வழிமாற்று செய்துள்ளேன். கலையரசி (சீன அறிவிப்பாளர்) எனும் கட்டுரை இருப்பதால் இவ்வாறு செய்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:07, 5 நவம்பர் 2016 (UTC)
நல்லது. நான் முன்பு சொன்னது போல, பெயர்ச் சொற்களுக்கு இலக்கணம் கிடையாது. ஆகவே நீங்கள் செய்தது சரியான வழி.--UKSharma3 11:45, 5 நவம்பர் 2016 (UTC)

தகவலுக்காக...[தொகு]

வணக்கம்! காண்க வார்ப்புரு:ஜன்னிய இராகங்கள் & வார்ப்புரு:மேளகர்த்தா இராகங்கள்

கருநாடக இசை குறித்து நன்கு அறிந்தவரும், ஆர்வமும்கொண்ட எவரேனும் பங்களித்தால்... இக்கட்டுரைகள் முழுமையடையும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:25, 6 நவம்பர் 2016 (UTC)

தகவலுக்கு நன்றி. எனக்கு இராகங்கள் பற்றி அவ்வளவு அறிவு இல்லை. இசை கற்றவர்கள் தான் இந்தப் பணியைச் செவ்வனே செய்ய முடியும். இணையத்திலே எங்கேயாவது பார்த்துவிட்டு யாராவது அதை ஆதாரமாகக் கொண்டு எழுதினால் தவறு ஏற்பட வாய்ப்புண்டு. --UKSharma3 07:33, 6 நவம்பர் 2016 (UTC)

நடிகை மாலினி குறித்த கட்டுரைக்கு நன்றி! மாலினி எனும் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கத்தை உருவாக்கியுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:28, 6 நவம்பர் 2016 (UTC)

👍 விருப்பம் --UKSharma3 07:34, 6 நவம்பர் 2016 (UTC)

கருநாடக இசையின்மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தின் காரணமாக இக்கட்டுரைகளை ஓரளவு முன்னேற்றம் செய்ய என்னால் இயலும்... குறிப்பாக ஏற்கனவே இருக்கும் தகவல்களுக்கு ஆதாரம் சேர்த்தல். மேற்கோள் காட்ட என்னிடம் நல்ல நூல்கள் இருக்கின்றன. எனினும் ஓராண்டு உழைக்க வேண்டும் என்பது எனது கணக்கீடு; ஒரு திட்டமாக எடுத்துச் செய்ய வேண்டும்; இப்போதைக்கு செய்ய இயலாது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:42, 6 நவம்பர் 2016 (UTC)

படிமங்கள்[தொகு]

File:Devaki 1951 tamil film songbook cover.jpg போன்ற படங்கள் உங்களிடம் உள்ள பாட்டுப் புத்தக மேலட்டையா? நீங்களே இதனை வருடினீர்களா? அவ்வாறெனில் இவற்றை நீங்கள் பொதுவகத்திலேயே தரவேற்றலாம். உதாரணத்திற்கு இந்தப் படிமத்தைப் பாருங்கள். as of 2016, works published prior to 1 January 1956 are considered public domain. நன்றி.--Kanags \உரையாடுக 10:02, 7 நவம்பர் 2016 (UTC)

தகவலுக்கு நன்றி. செய்தாயிற்று. --UKSharma3 13:32, 7 நவம்பர் 2016 (UTC)
முறையான அனுமதி தாருங்கள். இல்லையேல் இது நீக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இப்படிமம் உங்கள் சொந்தப் படிமம் அல்ல. சொந்தப் படிமம் என்றால் அது நீங்களாகவே வடிவமைத்ததாக இருக்க வேண்டும். சரியான முறைக்கு இந்தப் படிமத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 19:28, 7 நவம்பர் 2016 (UTC)
எனக்கு இதற்குமேல் எப்படி, என்ன செய்வதென்று தெரியவில்லை. நீக்கினால் போகட்டும் --UKSharma3 01:49, 8 நவம்பர் 2016 (UTC)
நான் குறிப்பிட்டுள்ள படிமத்தில் உள்ளதைப் போன்று எழுதுவதற்கு உங்களால் முடியவில்லையா? பரவாயில்லை. நீக்குபவர்கள் நீக்கட்டும். நீக்காமல் விட்டால் நல்லது தான்.--Kanags \உரையாடுக 07:00, 8 நவம்பர் 2016 (UTC)
காலையில் கொஞ்சம் குழப்பமாக இருந்தது. அதனால் சரியாகப் புரியவில்லை. இப்போது உங்கள் பக்கத்தைப் பார்த்துத் திருத்தியிருக்கிறேன். சரிதானா என்று பாருங்கள். நன்றி. --UKSharma3 09:03, 8 நவம்பர் 2016 (UTC)
சரியாக உள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 09:28, 8 நவம்பர் 2016 (UTC)

படிம மாற்றம்[தொகு]

அவன்தான் மனிதன் ஈஸ்ட்மென் வண்ணத் திரைப்படம் என்பதால் கட்டுரையில் அதன் வண்ணப் படிமம் இணைக்கலாமென நினைக்கிறேன். உங்கள் கருத்தறிய விருப்பம்.--Booradleyp1 (பேச்சு) 15:32, 11 நவம்பர் 2016 (UTC)

இருந்தால் இணையுங்கள். நல்லது தானே! நன்றி --UKSharma3 01:04, 12 நவம்பர் 2016 (UTC)
Yes check.svgY ஆயிற்று--Booradleyp1 (பேச்சு) 05:21, 12 நவம்பர் 2016 (UTC)
👍 விருப்பம் --UKSharma3 05:42, 12 நவம்பர் 2016 (UTC)

பதக்கம்[தொகு]

Working Man's Barnstar Hires.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தாங்கள் பதிவேற்றும் ஒவ்வொரு கட்டுரையிலும் கடின உழைப்பின் சாற்றினை உணர முடிகிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:41, 13 நவம்பர் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 09:46, 13 நவம்பர் 2016 (UTC)
நன்றி. வணக்கம் --UKSharma3 13:26, 13 நவம்பர் 2016 (UTC)
தெளிந்த நீரோடை போல எளிய நடையில் அமைந்துள்ள உங்களது தமிழ்த் திரைப்படக் கட்டுரைகளை (பழைய) ஒன்றுவிடாது வாசித்து வருகிறேன். அவை அனைத்தும் அருமையான தகவல் கருவூலங்களாக உள்ளன.--Booradleyp1 (பேச்சு) 13:54, 13 நவம்பர் 2016 (UTC)
மிக்க நன்றி Booradleyp1 அவர்களே. நீங்கள் அவ்வப்போது அளித்துவரும் உதவி மேலும் உற்சாகமூட்டுகிறது.--UKSharma3 01:26, 14 நவம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 15:44, 13 நவம்பர் 2016 (UTC)
நன்றி. வணக்கம். --UKSharma3 01:26, 14 நவம்பர் 2016 (UTC)

வேண்டுகோள்[தொகு]

Uksharma3 தாங்கள் பழைய தமிழ்த் திரைப்படங்கள் குறித்து விரிவாக கட்டுலைகள் எழுதிவருவது குறித்து மிக்க மகிழ்ச்சி இக்கட்டுரைகளை எழுதி முடித்தவுடன் அத்திரைப்படம் குறித்து ஆங்கிலத்தில் ஏற்கவே கட்டுரை இருந்தால் அல்லது தாங்களே எழுதினால் இந்த கட்டுரைகளுக்கு இடையில் தரவை உடனுக்குடன் இணைத்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் எதிர்காலத்தில் எழுதப்பட்ட கட்டுரையே மீண்டும் எழுதப்பட்டு பயனரின் உழைப்பு வீணாகும் நிலை ஏற்படுவதை தடுக்கலாம் நன்றி Arulghsr--Arulghsr (பேச்சு) 15:13, 18 நவம்பர் 2016 (UTC)

@Arulghsr:
 1. பேச்சுப் பக்கத்தில் எழுதுவதற்குப் பதிலாக பயனர் பக்கத்தில் எழுதிவிட்டீர்கள். எனவே அங்கிருந்து நீக்கி, இங்கு சேர்த்துள்ளேன்.
 2. சர்மா அவர்கள் கட்டுரைகளை விரிவாக எழுதி பதிவேற்றுவதால், சில நேரங்களில் விக்கித்தரவுகளை இற்றை செய்வது குறித்து மறந்திருக்கலாம். அம்மாதிரி சமயங்களில் தாங்கள் இணைத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:12, 18 நவம்பர் 2016 (UTC)

சென்னை வானொலி நிலையம்[தொகு]

வணக்கம். இயன்றால் சென்னை வானொலி நிலையம் கட்டுரையை விரிவாக்கம் செய்து உதவுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:06, 4 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை[தொகு]

2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!...


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:33, 8 திசம்பர் 2016 (UTC)

@Shriheeran: பழைய தமிழ்த் திரைப்படங்கள் பற்றி ஏராளமான கட்டுரைகள் போதிய தகவலின்றியும், சில கட்டுரைகள் மேற்கோள் இன்றியும் இருக்கின்றன. இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக சான்றுகள் சேர்த்தும் விரிவு படுத்தியும் வருகிறேன். புதிய கட்டுரைகளை உருவாக்க நீங்கள் அறிவித்துள்ள இத்திட்டம் மேலும் மேலும் குறுங்கட்டுரைகள் அதிகரிக்க வழி செய்யக்கூடும். கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குப் போட்டி வைப்பதைவிட தரமான கட்டுரைகளுக்குக் கோப்பை வழங்கும் போட்டி வைத்தால் ஆங்கில விக்கி போல தமிழ் விக்கியிலும் முழுமையான கட்டுரைகள் எழுதப்பட வாய்ப்புள்ளது. நான் விரிவாக்கப் பணிகள் செய்து வருவதால் புதிய கட்டுரைகள் உருவாக்கும் திட்டத்தில் பங்கு கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். --UKSharma3 08:42, 10 திசம்பர் 2016 (UTC)

கவனிக்க[தொகு]

விக்கிக் கட்டுரைகளில் இரண்டு பந்திகளை வேறுபடுத்துவதற்கு பொதுவாக <br /> பயன்படுத்தப்படுவதில்லை. இம்மாற்றத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 23:55, 9 திசம்பர் 2016 (UTC)


வேண்டுகோள்[தொகு]

காட்டான் என்றாலும் இயற்கையோடியைந்து வாழ்பவன் என்றாலும் ஒரே பொருளைத் தரும். எனினும் ஒருவரை அழைக்கும் விதத்தில் இரண்டும் வேறுபடும். irrelevant என்பதை எவ்வாறு பொருள் கொள்கின்றீர்கள் என்று தெரியவில்லை. உங்களைக் காயப்படுத்தும் நோக்கில் இடப்பட்டது என்றும் எண்ணலாம். மாறாக பொதுவாக தன் பங்களிப்பை பிறர் அறிய உதவும் தொகுத்தல் சுருக்கத்தில் இது ஏன் இடப்பட்டது என்றும் எண்ணலாம். முன்னது உங்கள் இரத்தக்கொதிப்பை அதிகமாக்கலாம், பின்னது அண்ரனை வேடிக்கை செய்து உங்களுக்கும் அவருக்குமான நட்புறவை உருவாக்கி/வலுவாக்கி இரத்தக்கொதிப்பை குறைக்கலாம். தேர்வு உங்களுடையது!! எதுவாயினும் விக்கிப்பீடியாவில் வழக்கம்போலப் பங்களிப்பைத் தொடருவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்!!

நீங்கள் "செய்பவனுக்குப் பலநாள் வேலை, அடித்து நொறுக்குபவனுக்கு ஒரு நிமிட வேலை" என்றதால் திரைப்படத்துறையில் ஆர்வமுள்ள உங்களை en:Wreck-It Ralph திரைப்படம் பார்க்க வேண்டுகின்றேன். :-P - ʋɐɾɯɳபேச்சு 14:55, 11 திசம்பர் 2016 (UTC)

நீங்கள் பேச்சு:இந்திய மக்கள் பேச்சுப் பக்கத்தில் எழுதியுள்ளதற்கும் சேர்த்து இங்கு பதில் இடுகிறேன். இதுவரை என் தமிழ் விக்கி அனுபவத்தில் நான் ஒரு விடயத்தைத் தெளிந்து கொண்டேன். அதாவது இங்கு பங்களிக்கும் 98% க்கும் அதிகமானோர் நடுத்தர அல்லது குறைந்த வயதினர். மூத்த குடிமக்கள் என்னும் 65 வயதுக்கு மேற்பட்டோர் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கிறார்கள். வயது பற்றி ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் 1970 களின் பின்னர் உலகளாவிய ரீதியில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. படிப்பு தொடர்பாகவும், தொழில்கள் தொடர்பாகவும் மக்களின் மனப்போக்கு கணிசமான அளவு மாறிவிட்டது. அதனால் என் போன்றவர்களுக்கும் எமது தாத்தா காலத்துக்கும் இருந்த வேறு பாடுகளை விட எமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் காலத்துக்கு முரண்பாடுகள் அதிகரித்து விட்டன. ஒரு விடயத்தை நாம் அணுகும் விதம் வேறு, 70 களுக்குப் பின் செயல்படத் தொடங்கியவர்கள் அணுகும் விதம் வேறு. நாங்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால் தமிழ் விக்கியில் என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய சந்ததி இடைவெளி இருக்கிறது. 2. கட்டுரைகளில் திருத்தம் செய்வதில் இரண்டு வகை இருக்கிறது. எழுத்துப்பிழை, இலக்கணப் பிழை திருத்துவது ஒரு வகை. கருத்து மாற்றம் செய்வது இன்னொரு வகை. முன்னையதைச் செய்ய கட்டுரையாளரிடம் கலந்து பேச வேண்டியதில்லை. ஆனால் கருத்து மாற்றம் செய்வதானால் பேச்சுப் பக்கத்தில் அது பற்றி உரையாடிவிட்டுச் செய்வதே முறை. விக்கியில் யாரும் தொகுப்பு செய்யலாம் என்ற நிலை இருக்கிறது. விதிகள் பக்கம் கூட தொகுக்கப்படக் கூடியனவாகவே இருக்கின்றன. ஒரு நிருவாகி இன்னொருவரின் கட்டுரையில் ஒரு மாற்றத்தைச் செய்துவிட்டு அதற்குத்துணையாக விதிகள் பக்கத்திலும் ஒரு பதிவைச் செய்து விடலாம். (படத்தை நீக்கியதற்காக கூறப்படும் காரணத்திற்கான விதி (?)யும் அவ்வாறு செய்யப்பட்டிருக்குமோ என ஐயம் கொள்ள இடமிருக்கிறது. 3. நான் தமிழ் விக்கிக்கு வந்த பின்னர் கட்டுரைகள் எழுதத் தொடங்கியவனாக இருந்தால் ஒருவேளை என் பார்வை மற்றவர்களுடன் ஒத்துப் போகக் கூடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் 1980 களிலிருந்தே பத்திரிகைகள், வானொலி என்பவற்றுக்கு ஆக்கங்கள் படைத்து வந்துள்ளேன். அத்துடன் ஒரு அனைத்துலக நிறுவனத்தில் பரப்புரையாளர்/ஊடக தொடர்பாளர் என்ற நிலையில் அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு பணியாற்றி வந்துள்ளேன். என்னுடைய பக்கத்தில் நான் என்னை நன்றாக அறிமுகம் செய்துள்ளேன். (சான்று). ஆகவே எனக்கென்று ஒரு வழிமுறையைப் பின்பற்றி வந்துள்ளேன். அதற்காக விக்கியின் விதிகளை எனக்கேற்ப வளைக்க வேண்டும் என நான் கருதவில்லை. விக்கியில் நல்ல கட்டுரைகள் இடம் பெறவேண்டும் என்பதால் என் அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி என்னால் முடிந்தவரை விக்கிக்கு ஏற்றபடி எழுதி வந்தேன். ஆகவே நான் எழுதும் கட்டுரைகளில் விக்கி விதிகளுக்கேற்ப யாராவது மாற்றம் செய்யலாம். பெரிய மாற்றங்கள் செய்வதாயின் கலந்தாலோசித்துச் செய்யலாம். இது ஒரு Team Work. ஆங்கில விக்கியில் அதன்படி செய்கிறார்கள். தமிழ் விக்கியிலும் பல பங்களிப்பாளர்கள் என் கட்டுரைகளை மேம்படுத்த உதவியிருக்கிறார்கள். ஆனால் ஆண்டன் அவ்வாறு செய்வதில்லை. ஒரு சமயம் ஒரு திரைப்பட தகவற் சட்டத்தில் படத்தின் நீள அளவைக் குறிப்பிடும்போது ஆங்கிலத்தில் ft. என எழுதிவிட்டேன். அதை அவரே அடி என மாற்றிவிட்டிருக்கலாம். அது தான் Team Work. ஆனால் அவர் அதற்கு ஒரு வார்ப்புரு போட்டு விட்டார். இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இப்படிப் பல இடங்களில் பலவற்றைச் சொல்லலாம். எல்லாவற்றுக்கும் ஏதாவது ஒரு விதியை எடுத்துக் காட்டுவார். இது என்ன ஊதியத்துக்கு வேலை செய்யும் இடமா? தன்னார்வத்தால் தங்கள் நேரத்தையும் சில சமயம் பணத்தையும் செலவழித்து எழுதுகிறார்கள். ஆகவே விதியைக் காட்டுவதை விட நல்லெண்ண அடிப்படையில் கட்டுரையை மேம் படுத்த உதவினால் ஊக்கம் பிறக்கும். விதிகளைக் காட்டினால் விட்டுவிட்டு ஓடச் சொல்லும். கட்டுரைகள் பல எழுதிவந்தவர்கள் விட்டு விலகியதை நான் பார்த்திருக்கிறேன். 4. தமிழ் விக்கியைப் பொறுத்தவரை கட்டுரைகளின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கு மட்டுமே ஊக்கம் கொடுக்கப் படுகிறது. கட்டுரைகளைப் படிப்பதற்கு பெருமளவு வாசகர்களை ஈர்க்கும் நடவடிக்கைகள் எதையும் நான் காணவில்லை. ஒரு தளத்தின் வெற்றி அதனை எத்தனை பேர் விரும்பி வந்து பார்க்கிறார்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. நான் முகநூலில் பழைய திரைப்பாடல்கள் பதிவிடும் குழுமங்களில் பாடல்கள் பதிவிடும் பொழுது போக்கு கொண்டவன். அவ்வாறு பதிவிடும்போது பாடல் பற்றிய மேலதிக விபரம் கிடைக்குமா என இணையத்தில் தேடுவேன். ஆங்கில விக்கியில் பெரும்பாலான தகவலைப் பெற முடிந்தது. ஆனால் தமிழ் விக்கியில் பழைய தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளில் போதிய விபரங்கள் காணப்படவில்லை. பெரும்பாலான கட்டுரைகளில் சான்றுகளே இல்லை. சந்திரலேகா (1950 திரைப்படம்) என ஒரு கட்டுரை 9 வருடங்களாக தமிழ் விக்கியில் இருந்தது. பலர் அதில் தொகுப்புகளும் செய்திருந்தார்கள். ஆனால் அப்படி ஒரு படம் அந்த ஆண்டில் வரவேயில்லை. அதில் காணப்பட்ட விபரங்கள் சந்திரிகா என்ற படத்தின் விபரத்தோடு ஒத்திருந்தன. இதனைச் சுட்டிக் காட்டி நான் பேச்சுப் பக்கத்தில் எழுதினேன். அதன் பின் 09:07, திசம்பர் 10, 2016 ஆண்டன் அந்தப் பக்கத்தை நீக்கியுள்ளார். ஆனால் கட்டுரையை நீக்கியவர் சந்திரலேகா பக்கவழி நெறிப்படுத்தல் பக்கத்தில் உள்ள இணைப்பை நீக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு பணியைச் செய்யும்போது அதனை முழுமையாகச் செய்ய வேண்டும் என்பது அனைத்துலக நிறுவனத்தில் நான் பெற்ற பயிற்சி. முகநூலில் ஒரு பதிவிடும்போது கூட ஒரு தகவலை எழுதுவதானால் அதற்கு எங்கேயாவது ஆதாரம் உள்ளதா எனச் சரிபார்த்தே எழுதுவேன். ஆதாரம் தேவைப்படாத முகநூல் பதிவுக்கே ஆதாரம் தேடுவதில் சில சமயம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக செலவழித்ததுண்டு. ஒரு கட்டுரையை நீக்கும் முன்னர், அந்தக் கட்டுரைக்கு எங்கெங்கே இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன எனத் தேடி அவற்றையும் நீக்குதலே முறை. 5. தமிழ் விக்கியில் என்னைப் புரிந்துகொண்டு பலர் நடக்கிறார்கள். ஆண்டன் ஒருவர் மட்டுமே என்னோடு முரண்படுகிறார். அவர் துப்புரவுப் பணி செய்வதை நான் பாராட்டுகிறேன். ஆனால் மற்றவர் மனம் நோகாமல் நடக்க அவருக்குத் தெரியவில்லை என்பதே என் கணிப்பாகும். தமிழ் விக்கியில் முன்பு பங்களிப்பு செய்து வந்த ஊடகத்துறையைச் சேர்ந்த ஒரு நண்பர் "த்மிழ் விக்கி உங்களுக்கு ஏற்ற இடமல்ல" என ஒரு தடவை சொன்னார். எனக்கே அது மனதில் பட்டாலும் ஏதோ முடிந்தவரை என்னால் செய்வோம் என நினைத்துத் தான் ஒதுங்கியிருந்த நான் மறுபடியும் வந்து கட்டுரைகள் எழுதினேன். 6. இந்திய மக்கள் கட்டுரையில் இந்திய குடியுரிமை பெற்றவர்கள், இந்திய வம்சாவழி மக்கள் இருவரையும் குறிப்பிட்டுள்ளதற்குக் காரணம் இரு வகையினரும் பொதுவாக இந்திய மக்கள் என அழைக்கப்படுவதே. குடியுரிமை உள்ளவர்கள் உத்தியோகபூர்வ இந்திய மக்கள் (citizens). வம்சாவழியினர் இந்திய மக்கள் (people) மட்டுமே. நான் சேர்த்த படத்தில் இந்திய மக்களைப்பற்றி அறியாதவர்கள் இந்திய மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு ஒரு 'மாதிரி' (sample) கொடுத்திருந்தேன். ஆனால் தமிழ் விக்கிக்கு அது தேவையில்லை என இப்போது உணர்கிறேன். இப்போதுள்ள தமிழ் மக்களுக்கு தமிழ், தமிழ் நாடு, தாயகம் - இதற்கு மேல் அறிவதில் ஆர்வமில்லை. ஆகவே அந்தப் படம் பற்றி விளக்கம் சொல்வதில் அர்த்தமில்லை. பொதுவகத்தில் அந்தப் படம் இடம்பெற்றுள்ள பக்கத்திலே கீழே ஸ்க்றோல் செய்து போனால் ஒவ்வொருவரையும் பற்றிய குறிப்பு இருக்கிறது. இந்தப் படம் ஒரு முழுமையான தொகுப்பு அல்ல. ஆனாலும் இந்திய மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு ஒரு ஐடியாவைக் கொடுக்கிறது. நான் globally யாகச் சிந்திப்பவன். ஆனால் தமிழ் விக்கிக்கு அது தேவையில்லை. Tamil psychic ஐத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப எழுதினால் போதும் என்பது இப்போது தான் புரிகிறது. irrelevant என்பதை irrelevant for Tamil Wiki என விளக்கமாக எழுதியிருந்தால் புரிந்து கொண்டிருப்பேன். 6. இதற்கு மேலும் நான் விளக்கம் எழுத வேண்டியதில்லை. என் பணியைத் தொடருங்கள் எனச் சொல்லியிருக்கிறீர்கள். நிருவாகிகளுக்கான அறிவிப்புப் பலகையில் ஏனைய நிருவாகிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் நடவடிக்கை எடுப்பேன் என ஆண்டன் சொல்லியிருக்கிறார். அவரது நடவடிக்கை என்ன என்பதைப் பார்த்தபின் பணியைத் தொடர முடிந்தால் தொடரலாம். ஒரு வேளை அவர் என்னைத் தடை செய்யவும் கூடும். (தடை செய்யும்படி நான் கேட்டிருக்கிறேன்.) ஆகவே பொறுத்திருந்து பார்க்கலாம். உங்கள் அன்புக்கும், நல்லெண்ணத்திற்கும் என் நன்றி. வணக்கம். அன்புடன் --UKSharma3 02:42, 12 திசம்பர் 2016 (UTC)

வெரித்தாஸ்[தொகு]

வெரித்தாஸ் தமிழ் வானொலி இப்போதும் ஒலிபரப்பாகிறதா? இல்லாவிட்டாலும், விக்கியில் ஒரு கட்டுரை இருப்பது நல்லது.--Kanags \உரையாடுக 23:49, 23 திசம்பர் 2016 (UTC)

ஒலிபரப்பாகிறது. நிகழ்ச்சிகள் சென்னையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு பிலிப்பைன்ஸ் நிலையத்திலிருந்து ஒலிபரப்பாகிறது. பெரும்பாலும் மத நிகழ்ச்சிகளே. முன்னர் இருந்த நிகழ்ச்சி Formatஐ மாற்றிவிட்டார்கள். புயலின் பின் ஒரு வாரம் மின்சாரம் இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளேன். மன உளைச்சல்களும் அதிகம். புதிய கட்டுரைகள் எழுதுவதற்கு உடல்/மன வலு இல்லை. மேலும், இணையத்தில் மேற்கோள்கள் கிடைக்குமா என்பதும் தெரியவில்லை. பார்க்கலாம். தொடர்புக்கு நன்றி. --UKSharma3 02:21, 24 திசம்பர் 2016 (UTC)
நன்றி. நானும் மேற்கோள்கள் தேடிப்பார்க்கிறேன். நூலகத்தில் கட்டாயம் இருக்கும்.--Kanags \உரையாடுக 02:24, 24 திசம்பர் 2016 (UTC)
தமிழ் ஒலி இதழ்களில் வரலாறு, நிகழ்ச்சிகள் பற்றிய கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றைத் தொகுத்து எழுதலாம்.--UKSharma3 02:43, 24 திசம்பர் 2016 (UTC)
வெரித்தாஸ் வானொலி கட்டுரையைத் தொடங்கியிருக்கிறேன். மேலதிக தகவல்கள் இருந்தால் இணையுங்கள்.--Kanags \உரையாடுக 08:43, 24 திசம்பர் 2016 (UTC)

எண்ணம்[தொகு]

என் பக்கத்தில், தங்களது எண்ணத்தை அறிந்தேன். ஒரு வேண்டுகோள். தவறாக எனது வெளிப்பாடு புரிந்து கொள்ளப்பட்டது. நீண்ட நாள் பழகிய நண்பர்களிடம் கருத்து வேறுபாடு தோன்றுவது வேதனை அளிக்கிறது. நோய் நாடி.., குணம் நாடி என்ற குறள்களை படி நடப்போம். நாம் மனஉணர்வுகளை, தமிழ் உணர்வுகளாக மாற்றி செயற்படுவோம். வானொலி குறித்து எனக்கும் ஆர்வம் உண்டு. பல உலக தமிழ் வானொலி நிகழ்ச்சிகளை(பி. பி. சி., சீனா, இரசியா, வெரிதாசு) கேட்கும் வழக்கத்தை 1984-85 முதல் 2010 வருடம் வரை கொண்டிருந்தேன். வாழ்வியல் சூழல்களால், வாரம் 4,5 நாட்கள் பி.பி.சி. தமிழோசையை மட்டும் இப்பொழுது கேட்டு வருகிறேன். விக்கி பழகும் /பழக்கும் திட்டம் ஆகும். அதீத அக்கரையால் நண்பர்கள் ஒரு சிலரின் பதிவுகளை மறந்து செயற்படுவோம். கருத்து வேறுபாடுகளை, க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1 என்பதில் தற்போது நடப்பது போல, வாக்கெடுப்பு மட்டும் நடத்தி, உண்மையை புரிந்து கொள்வோம். வேறு மொழியாடல்களை தவிர்ப்போம் என்பதே எனது வேண்டுகோள். கற்றது கை மண் அளவு ... என்ற முதுமொழியை பின்பற்றுவோம். வணக்கம். --உழவன் (உரை) 08:49, 1 மார்ச் 2017 (UTC)

உங்கள் அரும்பணி தொடர வாழ்த்துகள் --UKSharma3 09:07, 1 மார்ச் 2017 (UTC)
வாழ்த்துக்களுக்கு நன்றி. இங்கு நடக்கும் வாக்கெடுப்புகள் அனைத்திலும் கலந்து கொள்க. சமூக வளர்ச்சிக்கு வாக்கெடுப்பு மிக முக்கியம் என்ற வேண்டு கோளுடன் விடைபெறுகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 09:16, 1 மார்ச் 2017 (UTC)
நாளை மறுநாள் எனக்கு 73 வயது நிறைவுறுகிறது. 2008-இல் மனைவியை இழந்தேன். பின்னர் கொஞ்சம் உதவி இருந்தது. கடந்த 3 வருடங்களாக எந்தவொரு உதவியுமின்றித் தனியாக வாழ்ந்து வருகிறேன். டிசம்பர் புயலின் பின் என் உடல்நிலை சீராக இல்லை. அடிக்கடி உடல்நலம் குன்றுகிறது. மன ஆர்வத்தினால் வலிந்து இணையத்தில் சில பணிகள் செய்து கொண்டிருக்கிறேன். நண்பர்களோடு பழக, கருத்துப் பரிமாற இணையம் தான் எனக்கு ஒரே வழி என்பதும் இன்னொரு காரணம். ஆங்கில விக்கியில் எழுதும்போது Team Work என்பதற்கிணங்க இன்னும் சிலர் கட்டுரையை மேம்படுத்தி உதவுகிறார்கள். மிக அரிதாகவே வார்ப்புரு போடுவார்கள். அது ஆரம்ப காலத்தில் இருந்தது. ஏனென்றால் அப்போது எனக்கு Use Indian English என்ற வார்ப்புரு இருப்பது தெரியாது. அதைச் சேர்க்காமல் கட்டுரைளி எழுதியதால் மேலை நாட்டவர்கள் விபரம் தெரியாமல் வார்ப்புரு போட்டுவிடுவார்கள். இப்போது அந்த வார்ப்புரு சேர்த்து நான் எழுதுவதால் வேறு நாட்டவர் யாரும் வார்ப்புரு போடுவதில்லை. .... தமிழ் விக்கிக்கு பங்களிப்பதில் இப்போதெல்லாம் ஒரு தயக்கம் இருக்கிறது. எழுதினால் என்னென்ன வார்ப்புருக்கள் போடப்படுமோ என்று யமாக இருக்கிறது. முன்பு பரவாயில்லை. இப்போது உடல் நலம் குன்றியதால் கேள்விகளுக்குப் பதில் சொல்லவே வலு போதவில்லை. "அவளைத் தொடுவானேன், கவலைப் படுவானேன்" என ஒரு முதுமொழி உண்டு. "தடியைக் கொடுத்து அடி வாங்குவது போல" என இலங்கையில் சொல்வார்கள். சும்மா இருக்கமாட்டாமல் பணத்தையும் நேரத்தையும் முயற்சியையும் செலவழித்து "வாங்கிக் கட்டிக்கொள்ள" வேண்டுமா? இருந்தாலும் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களுக்கு என் ஆதரவு என்றென்றும் உண்டு. நன்றி. வணக்கம் --UKSharma3 09:41, 1 மார்ச் 2017 (UTC)
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா! முழுமையை நோக்கி பயணிக்கிறேன். மற்றவை இயற்கையின் விளைவு. என் தந்தையை ஒத்த வயதுடைய உங்களின் நிலையை என்னால் உணர முடிகிறது. அடுத்த மாதம், 10ந்தேதிக்கு பிறகு, 15ந்தேதிக்குள் சென்னை வர உள்ளேன் வரும் போது, உங்களை சந்திக்க விரும்புகிறேன். எனது தொடர்பு எண் 90-95-34-33-நான்கு இரண்டு. நேரம் இருக்கும் போது, அழைக்கவும். --உழவன் (உரை) 13:37, 2 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு[தொகு]

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:44, 10 மார்ச் 2017 (UTC)

எனது எண்ணம்...[தொகு]

ஐயா வணக்கம்! தமிழ் விக்கியில் என் செயற்பாடுகளால் தங்களுக்கு ஏதேனும் மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:28, 13 மார்ச் 2017 (UTC)

அன்பு நண்பர் செல்வசிவகுருநாதன், இது ஒரு பொது இடம். வாதங்கள் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது. உங்கள் அன்பையும் நட்பையும் நான் நன்கு அறிவேன். நீங்கள் மன்னிப்புக் கேட்டு என் மனதைச் சங்கடப்படுத்த வேண்டாம். உங்கள் செயற்பாடுகளால் எனக்குச் சிறிதும் மன வருத்தம் இல்லை என்பதை உறுதி கூறுகிறேன். உங்கள் நட்பைப் பெரிதும் வேண்டுகிறேன். நன்றி. வணக்கம் --UKSharma3 05:09, 13 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:48, 3 ஏப்ரல் 2017 (UTC)

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு[தொகு]


Nandri (நன்றி).png நன்றி
Kanags


விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு[தொகு]

வணக்கம்.

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:19, 3 நவம்பர் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Uksharma3&oldid=2594887" இருந்து மீள்விக்கப்பட்டது