துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி)
வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
முதல் பதிப்பு1975 (இங்கிலாந்து)
கடைசிப் பதிப்பு2019 (இங்கிலாந்து, வேல்சு)
அடுத்த பதிப்பு2023 (இந்தியா)
மொத்த அணிகள்10
தற்போதைய வாகையாளர் இங்கிலாந்து (முதல் பட்டம்)
அதிகமுறை வெற்றிகள் ஆத்திரேலியா (5 பட்டங்கள்)
அதிகபட்ச ஓட்டங்கள்இந்தியா சச்சின் டெண்டுல்கர் (2,278)
அதிகபட்ச வீழ்த்தல்கள்ஆத்திரேலியா கிளென் மெக்ரா (71)

துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (Cricket World Cup) என்பது 1975 முதல் தற்போது வரை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வரும் துடுப்பாட்டப் போட்டியாகும். உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே ஒரு நாள் போட்டிகள் பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983 உலகக்கிண்ணப் போட்டிக்கு பின்னர் இது 50 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற தொடர்களில் ஆஸ்திரேலிய அணி 5 முறையும் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் தலா 2 முறையும் பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா 1 முறையும் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சு ஆகிய நாடுகளில் நடைபெற்றது. அதில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டி சமனில் முடிந்தது. எனவே ஒருநாள் துடுப்பாட்ட வரலாற்றிலேயே முதன்முறையாக சிறப்பு நிறைவு (Super over) முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் சிறப்பு நிறைவும் சமனில் முடிந்ததால் விதிகளின் படி கூடுதலாக அதிக நான்குகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதன்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

வரலாறு[தொகு]

முதல் துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கு முன்[தொகு]

முதல் சர்வதேச துடுப்பாட்ட போட்டி கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே, செப்டம்பர் 24 மற்றும் 25 இல், 1844 ஆம் ஆண்டில்நடைபெற்றது.[1] இருப்பினும், முதல் போட்டியாக 1877 இல் ஆஸ்திரேலியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போடியே அங்கீகரிக்கப்படட்து. மேலும் இரு அணிகளும் அதற்கு அடுத்த ஆண்டுகளில் தி ஆஷஷ் தொடரில் இரு அணிகளும் ஒவ்வொரு ஆண்டும் போட்டியிட்டன. தென்னாப்பிரிக்கா 1889 ஆமாண்டில் தேர்வுப்போட்டிகளில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றது.[2] ஒவ்வொரு நாடுகளும் மற்ற நாட்டில் சுற்றுப்பயணம்செய்து துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட ஒப்புதல் தெரிவித்தது. இதன் விளைவாக இருதரப்புகள் பங்கேற்கும் போட்டிகள் நடைபெற்றன. 1900 ஆம் ஆண்டு பாரிஸ் விளையாட்டுப் போட்டியில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் துடுப்பாட்டமும் சேர்க்கப்பட்டது. கிரேட் பிரிட்டன் அணி பிரான்ஸை அணியினைத் தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது .[3] கோடைகால ஒலிம்பிக்கில் நடைபெற்ற ஒரே துடுப்பட்டப்போட்டி இதுதான்.

1912 ஆம் ஆண்டில் முதல் சர்வதேச முத்தரப்பு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது.அப்போது தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றிருந்த மூன்ரு அணிகளான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இதில்கல்ந்து கொண்டன. பார்வையாளர்கள் குறைவு மற்றும் பருவநிலை துடுப்பாட்டப் போட்டிகள் நடத்தும், அளவிற்கு ஒத்து வராரதது போன்ற காரணங்களினால் இந்த முயற்சி தோல்வியடைந்தது.[4] அப்போதிருந்து, சர்வதேச தேர்வுத் துடுப்பாட்ட போட்டி பொதுவாக இருதரப்பு தொடர்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது: 1999 இல் முத்தரப்பு ஆசிய தேர்வுத் துடுப்பட்ட வாகையாளர் போட்டி நடத்தப்பட்டது.[5]

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை காலப்போக்கில் படிப்படியாக அதிகரித்தது, 1928 இல் மேற்கிந்திய தீவுகள், 1930 இல் நியூசிலாந்து, 1932 இல் இந்தியா மற்றும் 1952 இல் பாகிஸ்தான் ஆகியவை தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதி பெற்றன..இருப்பினும், சர்வதேச துடுப்பாட்ட போட்டியானது மூன்று, நான்கு அல்லது ஐந்து நாட்களில் இரு நாடுகள் பங்கேற்கும் தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டன.

1960 களின் முற்பகுதியில், ஆங்கில கவுண்டி மாகாண துடுப்பாட்ட அணிகள் துடுப்பாட்டப் போட்டியின் சுருக்கப்பட்ட பதிப்பை விளையாடத் தொடங்கின, அது ஒரு நாள் மட்டுமே நீடித்தது. 1962 ஆம் ஆண்டில் மிட்லாண்ட்ஸ் நாக்-அவுட் கோப்பை என அழைக்கப்படும் நான்கு அணிகள் கல்ந்துகொண்ட நாக் அவுட் போட்டியுடன் இந்த வகையான ஒருநாள் போட்டிகள் தொடங்கியது.[6] மற்றும் 1963 ஆம் ஆண்டில் வறையிட்ட துடுப்பாட்டப் போடிகள் ஜில்லெட் கோப்பை எனும் பெயரில் இங்கிலாந்தில் பிரபலமடைந்தது. முதல் ஒருநாள் சர்வதேச போட்டி 1971 ஆம் ஆண்டில் மெல்போர்னில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றது. அப்போது போட்டியின் ஐந்தாவது நாளில் மழை பெய்தது.அதனால் அதற்கு இழப்பீடாக ஓவருக்கு எட்டு பந்துகள் வீதம் 40 ஓவர்கள் வீசப்பட்டன.[7]

மேற்கிந்தியத் தீவுகளின் இருமை (1975-1983)[தொகு]

முதல் உலக கோப்பை (1975) இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா,ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்து, நியுசிலாந்து ,தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்குபெற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

அதைப்போல் இரண்டாவது உலக கோப்பை (1979) போட்டியில் இலங்கை,கனடாவை சேர்த்து எட்டு அணிகள் பங்குபெற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் மேற்குஇந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது உலக கோப்பையை வென்றது.

முதல் வெற்றியாளர்கள் (1983-1996)[தொகு]

மூன்றாவது உலகக் கோப்பை (1983) தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்றது. இத்தொடரில் இலங்கை ஐசிசி யின் நிரந்திர உறுப்பினர் ஆனது. சிம்பாப்வே அணி எட்டாவது அணியாக தேர்வு ஆனது. இப்போட்டியில் இந்தியா அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

1987ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி முதல் முறையாக இங்கிலாந்தை தவிர்த்து இந்தியத் துணைக் கண்டத்தில் நடைபெற்றது. இதில் முதல் முறையாக ஆட்டம் 60 ஓவர்களில் இருந்து 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது, இங்கிலாந்தின் கோடைகாலத்துடன் ஒப்பிடுகையில் இந்தியத் துணைக்கண்டத்தில் பகலொளி நேரம் குறைவாக இருப்பதே இதற்கான காரணமாகும். இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுவே உலக கோப்பை போட்டியில் குறைந்தபட்ச வெற்றி இடைவெளி ஆகும்.

1992 உலகக் கோப்பைப் போட்டிகள் ஆஸ்திரேலியாவிலும் நியுசிலாந்திலும் நடைபெற்றன, இதில் வண்ண ஆடை, வெள்ளைப்பந்து, பகலிரவு ஆட்டங்கள், களத்தடுப்பு கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் போன்ற பல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தென்னாபிரிக்க அணியானது நிறவெறி ஆட்சியின் வீழ்ச்சி, சர்வதேச விளையாட்டு புறக்கணிப்பு முடிவுக்கு வந்தமையைத் தொடர்ந்து முதன்முறையாக பங்குபற்றியது. பாக்கித்தான் இங்கிலாந்தை 22 ஓட்டங்களால் வெற்றிகொண்டு முதலாவது வெள்ளைப்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது.

1996 உலகக்கிண்ணப்போட்டிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்றது, இம்முறை இந்தியா, பாக்கித்தானுடன் இலங்கையும் இணைந்து போட்டியை நடாத்தின. லாகூரில் நடைபெற்ற இறுதிப்போட்டில் ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதின, இதில் ஆஸ்திரேலிய அணியை 7 விக்கெட்டுக்களால் வென்று இலங்கை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கியது.

ஆஸ்திரேலியாவின் மும்மை (1999-2007)[தொகு]

1999 ஆம் ஆண்டு போட்டிகள் இங்கிலாந்தில் நடத்தப்பட்டது, ஒருசில போட்டிகள் இசுக்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, வேல்சு ஆகிய நாடுகளில் நடைபெற்றன.[8][9] ஆஸ்திரேலியா சூப்பர் 6 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த ஓட்ட இலக்கை இறுதி ஓவரில் எட்டியதன் மூலம் அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.[10] மீண்டும் ஓர் இறுக்கமான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வெற்றிகொண்டதன் மூலம் இறுதிப்போட்டிக்கு நுழைந்தனர். இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தானை 132 ஓட்டங்களிற்கு சுருட்டினர், பின்னர் அந்த இலக்கை 20 இற்கும் குறைந்த ஓவர்களில் 8 இலக்குகள் மீதமிருக்கையில் அடைந்தனர்.[11]

தொடரின் நடத்துனர்கள் வெற்றி (2011-2019)[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 5வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்சு ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து-இங்கிலாந்து இடையேயான இறுதிப்போட்டியும் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால் எல்லைகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வென்று முதன்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. இவ்வாறு தொடர்ந்து 3 முறையும் தொடரை நடத்திய அணிகளே வெற்றி பெற்றன.

உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிவுகள்[தொகு]

ஆண்டு நடாத்திய நாடு(கள்) இறுதிப்போட்டியிடம் இறுதிப்போட்டி
வெற்றியாளர் முடிவு இரண்டாமிடம்
1975
1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
இங்கிலாந்து
இங்கிலாந்து
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்  மேற்கிந்தியத் தீவுகள்
291/8 (60 ஓவர்கள்)
மேற்கிந்தியா 17 ஓட்டங்களால் வெற்றி புள்ளியட்டை  ஆத்திரேலியா
274 (58.4 ஓவர்கள்)
1979
1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
இங்கிலாந்து
இங்கிலாந்து
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்  மேற்கிந்தியத் தீவுகள்
286/9 (60 ஓவர்கள்)
மேற்கிந்தியா 92 ஓட்டங்களால் வெற்றி புள்ளியட்டை  இங்கிலாந்து
194 (51 ஓவர்கள்)
1983
1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
இங்கிலாந்து
இங்கிலாந்து
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்  இந்தியா
183 (54.4 ஓவர்கள்)
இந்தியா 43 ஓட்டங்களால் வெற்றி புள்ளியட்டை  மேற்கிந்தியத் தீவுகள்
140 (52 ஓவர்கள்)
1987
1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
இந்தியா பாக்கித்தான்
இந்தியா, பாக்கித்தான்
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா  ஆத்திரேலியா
253/5 (50 ஓவர்கள்)
ஆத்திரேலியா 7 ஓட்டங்களால் வெற்றி புள்ளியட்டை  இங்கிலாந்து
246/8 (50 ஓவர்கள்)
1992
1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
ஆத்திரேலியா நியூசிலாந்து
ஆஸ்திரேலியா, நியுசிலாந்து
மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்  பாக்கித்தான்
249/6 (50 ஓவர்கள்)
பாக்கித்தான் 22 ஓட்டங்களால் வெற்றி புள்ளியட்டை  இங்கிலாந்து
227 (49.2 ஓவர்கள்)
1996
1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
இந்தியா பாக்கித்தான் இலங்கை
இந்தியா, பாக்கித்தான், இலங்கை
கடாஃபி அரங்கு, லாகூர்  இலங்கை
245/3 (46.2 ஓவர்கள்)
இலங்கை 7 விக்கெட்டுக்களால் வெற்றி புள்ளியட்டை  ஆத்திரேலியா
241/7 (50 ஓவர்கள்)
1999
1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
இங்கிலாந்து
இங்கிலாந்து
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்  ஆத்திரேலியா
133/2 (20.1 ஓவர்கள்)
ஆத்திரேலியா 8 விக்கெட்டுக்களால் வெற்றி புள்ளியட்டை  பாக்கித்தான்
132 (39 ஓவர்கள்)
2003
2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
தென்னாப்பிரிக்கா
தென்னாபிரிக்கா, சிம்பாப்வே, கென்யா
வண்டேரர்சு அரங்கு, ஜோகானஸ்பேர்க்  ஆத்திரேலியா
359/2 (50 ஓவர்கள்)
ஆத்திரேலியா 125 ஓட்டங்களால் வெற்றி புள்ளியட்டை  இந்தியா
234 அனைத்தும் இழப்பு (39.2 ஓவர்கள்)
2007
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
மேற்கிந்தியத் தீவுகள்
கரிபியன்
கென்சிங்டன் ஓவல் அரங்கம், பிரிஜ்டவுண்  ஆத்திரேலியா
281/4 (38 ஓவர்கள்)
ஆத்திரேலியா 53 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ முறை) புள்ளியட்டை  இலங்கை
215/8 (36 ஓவர்கள்)
2011
2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
இந்தியா வங்காளதேசம் இலங்கை
இந்தியா, வங்காளதேசம், இலங்கை
வான்கேடே அரங்கம், மும்பை  இந்தியா
277/4 (48.2 ஓவர்கள்)
இந்தியா 6 விக்கெட்டுக்களால் வெற்றி புள்ளியட்டை  இலங்கை
274/6 (50 ஓவர்கள்)
2015
2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
ஆத்திரேலியா நியூசிலாந்து
ஆத்திரேலியா, நியூசிலாந்து
மெல்பேர்ண் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்  ஆத்திரேலியா
186/3 (33.1 ஓவர்கள்)
ஆத்திரேலியா 7 விக்கெட்டுகளால் வெற்றி புள்ளியட்டை  நியூசிலாந்து
183 (45.0 ஓவர்கள்)
2019
2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
நியூசிலாந்து இங்கிலாந்து
ஆத்திரேலியா, நியூசிலாந்து
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்  இங்கிலாந்து
241 (50ஓவர்கள்)
15/0 (சூப்பர் ஓவர்)
23 எல்லைகள், 3 ஆறுகள்


241 (50 ஓவர்கள்)

இங்கிலாந்து எல்லைகள் அடிப்படையில் வெற்றி புள்ளியட்டை  நியூசிலாந்து
241/8 (50 ஓவர்கள்)
15/1 (சூப்பர் ஓவ்)
14 எல்லைகள், 3 ஆறுகள்

ஊடகத்தில் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்[தொகு]

2003 உலகக்கிண்ணத்தின்போது நகர்மையம், தென்னாபிரிக்கா.

துடுப்பாட்ட உலகக்கிண்ணம் உலகின் மிகவும் கூடுதலான தொலைக்காட்சிப் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் ஓர் விளையாட்டாகும். 200 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டு 2.2 பில்லியன் பார்வையாளர்கள் காண்பதாக மதிப்பிடப்படுகிறது.[12][13][14][15][16] 2011 மற்றும் 2015 உலகக்கிண்ணங்களுக்கான தொலைக்காட்சி உரிமைகள் அமெரிக்க $ 1.1 பில்லியனுக்கு விற்கப்பட்டதாகவும் [17] புரவலர் உரிமைகள் அமெரிக்க $ 500 மில்லியனுக்கு விற்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.[18] 2003 உலக கிண்ணத்திற்கு 626,845 பேரும்,[19] 2007 உலக கிண்ணத்திற்கு 570,000 பேரும் அரங்கத்தில் கண்டுகளித்தனர்.[20]ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் துவக்க நிலையில் இருந்த முன்பைவிட அண்மையக்கால உலக கிண்ணங்கள் மாபெரும் ஊடக நிகழ்வுகளாக மாறியுள்ளன.

சான்றுகள்[தொகு]

 1. "The oldest international contest of them all". ESPN. http://www.espncricinfo.com/magazine/content/story/141170.html. 
 2. "1st Test Scorecard". ESPNcricinfo. 15 March 1877. பார்க்கப்பட்ட நாள் 28 January 2007.
 3. "Olympic Games, 1900, Final". ESPNcricinfo. 19 August 1900. பார்க்கப்பட்ட நாள் 9 September 2006.
 4. "The original damp squib". ESPNcricinfo. 23 April 2005. Archived from the original on 16 October 2007. பார்க்கப்பட்ட நாள் 29 August 2006.
 5. "The run-out that sparked a riot". ESPNcricinfo. 30 October 2010. Archived from the original on 22 October 2014. பார்க்கப்பட்ட நாள் 18 February 2015.
 6. "The low-key birth of one-day cricket". ESPNcricinfo. 9 April 2011. Archived from the original on 19 September 2013. பார்க்கப்பட்ட நாள் 15 July 2014.
 7. "What is One-Day International cricket?". newicc.cricket.org. Archived from the original on 19 November 2006. பார்க்கப்பட்ட நாள் 10 September 2006.
 8. Browning (1999), p. 274
 9. "1999 Cricket World Cup". nrich.maths. Archived from the original on 10 மார்ச் 2007. பார்க்கப்பட்ட நாள் 28 January 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 10. Browning (1999), pp. 229–231
 11. Browning (1999), pp. 232–238
 12. cbc staff (2007-03-14). "2007 Cricket World Cup". cbc. Archived from the original on 2007-03-28. பார்க்கப்பட்ட நாள் 2007-04-04.
 13. Peter Switzer. "Scoring Big". www.charteredaccountants.com.au. Archived from the original on 2007-03-09. பார்க்கப்பட்ட நாள் 2007-02-24.
 14. "World Cup Overview". cricketworldcup.com. Archived from the original on 2007-01-24. பார்க்கப்பட்ட நாள் 2007-01-29.
 15. "The Wisden History of the Cricket World Cup". www.barbadosbooks.com. Archived from the original on 2012-03-18. பார்க்கப்பட்ட நாள் 2007-04-04.
 16. "Papa John's CEO Introduces Cricket to Jerry Jones and Daniel Snyder". ir.papajohns.com. Archived from the original on 2007-07-11. பார்க்கப்பட்ட நாள் 2007-04-04.
 17. Cricinfo staff (2006-12-09). "ICC rights for to ESPN-star". கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 2007-01-30.
 18. Cricinfo staff (2006-01-18). "ICC set to cash in on sponsorship rights". கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 2007-01-30.
 19. "Cricket World Cup 2003" (PDF). ICC. p. 12. Archived from the original (PDF) on 2006-03-21. பார்க்கப்பட்ட நாள் 2007-01-29.
 20. "ICC CWC 2007 Match Attendance Soars Past 400,000". cricketworld.com. Archived from the original on 2009-07-21. பார்க்கப்பட்ட நாள் 2007-04-25.