உள்ளடக்கத்துக்குச் செல்

1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1987 ரிலயன்சு உலகக்கிண்ணம்
ஆத்திரேலிய அணித் தலைவர் அலன் போர்டர் வெற்றிக்கிண்ணத்துடன்
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்தொடர்சுழல் முறை, வெளியேற்றம்
நடத்துனர்(கள்) இந்தியா
 பாக்கித்தான்
வாகையாளர் ஆத்திரேலியா (1-ஆம் தடவை)
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்27
அதிக ஓட்டங்கள்இங்கிலாந்து கிரகாம் கூச் (471)
அதிக வீழ்த்தல்கள்ஆத்திரேலியா கிரைக் மக்டேர்மொட் (18)
1983
1992

1987 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1987 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 1987) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் உலகக் கிண்ணத்துக்கான நான்காவது போட்டியாகும். இக்கிண்ணம் ரிலயன்ஸ் கிண்ணம் (Reliance Cup) என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் இந்தியா, பாக்கித்தான் ஆகிய நாடுகளில் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 8 முதல் நவம்பர் 8 வரை நடைபெற்றது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு வெளியில் உலகக் கிண்ணத்தை நடத்திய முதல் நாடுகளாக இவை பதிவாயின. இதில் அணிக்கு 60 ஓவர்கள் என்ற வழக்கமான விதி மாற்றப்பட்டு அணிக்கு 50 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இங்கிலாந்தைப் போலன்றி துணைக் கண்ட நாடுகளில் பகல் வேளை நீண்ட நேரம் நீடிக்காமை காரணமாகவே இந்த விதி மாற்றப்பட்டது[1]. அத்துடன் 1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்ற 8 அணிகளும் இந்த போட்டித் தொடரிலும் விளையாடின. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, பாகித்தான் ஆகியன அரையிறுதி வரை முன்னேறினாலும் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற முடியாமல் போயின. இங்கிலாந்து, அவுத்திரேலிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவுத்திரேலியா 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி முதல் முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

பங்கேற்ற நாடுகள்

[தொகு]

இப்போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, பாக்கிஸ்தான், மேற்கிந்தியா, இலங்கை அணிகளும். சிம்பாபே அணியும் பங்கேற்றன. இதுவரை 60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த இப்போட்டித் தொடர் 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

குழு ஆட்டம்

[தொகு]

பிரிவு ஏ

[தொகு]
அணி புள்ளிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி ஓட்ட விகிதம்
 இந்தியா 20 6 5 1 5.41
 ஆத்திரேலியா 20 6 5 1 5.19
 நியூசிலாந்து 8 6 2 4 4.89
 சிம்பாப்வே 0 6 0 6 3.76
அக்டோபர் 9, 1987
Scorecard
 ஆத்திரேலியா
270/6 (50 ஓவர்கள்)
 இந்தியா
269 (49.5 ஓவர்கள்)
ஜெஃப் மார்ஷ் 110 (141)
மனோஜ் பிரபாகர் 2/47 (10 ஓவர்கள்)
நவ்ஜோத் சித்து 73 (79)
கிரெய்க் மெக்டேர்மொட் 4/56 (10 ஓவர்கள்)
 ஆத்திரேலியா ஒரு ஓட்டத்தால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை, இந்தியா
நடுவர்கள்: டேவிட் ஆர்ச்சர், டிக்கி பேர்ட்
ஆட்ட நாயகன்: ஜெஃப் மார்ஷ்

அக்டோபர் 10, 1987
Scorecard
 நியூசிலாந்து
242/7 (50 ஓவர்கள்)
 சிம்பாப்வே
239 (49.4 ஓவர்கள்)
மார்ட்டின் குரோவ் 72 (88)
அலி ஷா 2/42 (9 ஓவர்கள்)
டேவிட் ஹஃப்ட்டன் 142 (137)
வில்லி வாட்சன் 2/36 (10 ஓவர்கள்)
 நியூசிலாந்து 3 ஓட்டங்களால் வெற்றி
லால் பகதூர் சாஸ்திரி அரங்கம், ஐதராபாத், இந்தியா
நடுவர்கள்: மகபூப் ஷா, விதானகமகே
ஆட்ட நாயகன்: டேவிட் ஹஃப்ட்டன்

அக்டோபர் 13, 1987
Scorecard
 ஆத்திரேலியா
235/9 (50 ஓவர்கள்)
 சிம்பாப்வே
139 (49.4 ஓவர்கள்)
அலன் போர்டர் 67 (88)
கெவின் குரன் 2/29 (8 ஓவர்கள்)
கெவின் குரன் 30 (38)
சைமன் ஒ’டோனெல் 4/39 (9.4 ஓவர்கள்)
 ஆத்திரேலியா 96 ஓட்டங்களால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை, இந்தியா
நடுவர்கள்: கைசர் ஹயாட், டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: ஸ்டீவ் வா

அக்டோபர் 14, 1987
Scorecard
 இந்தியா
252/7 (50 ஓவர்கள்)
 நியூசிலாந்து
236/8 (50 ஓவர்கள்)
நவ்ஜோத் சித்து 75 (71)
தீபக் பட்டேல் 3/36 (10 ஓவர்கள்)
கென் ரதர்ஃபோர்ட் 75 (95)
மனிந்தர் சிங் 2/40 (10 ஓவர்கள்)
 இந்தியா 16 ஓட்டங்களால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பங்களூர், இந்தியா
நடுவர்கள்: டேவிட் ஆர்ச்சர், டிக்கி பேர்ட்
ஆட்ட நாயகன்: கபில் தேவ்

அக்டோபர் 17, 1987
Scorecard
 சிம்பாப்வே
135 (44.2 ஓவர்கள்)
 இந்தியா
136/2 (27.5 ஓவர்கள்)
ஆண்ட்ரூ பைகுரொப்ட் 61 (102)
மனோஜ் பிரபாகர் 4/19 (8 ஓவர்கள்)
திலிப் வெங்சர்க்கர் 46* (37)
ஜோன் டிரைக்கோஸ் 2/27 (8 ஓவர்கள்)
 இந்தியா 8 விக்கெட்டுகளால் வெற்றி
வான்கீட் அரங்கம், பம்பாய், இந்தியா
நடுவர்கள்: மகபூப் ஷா, டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: மனோஜ் பிரபாகர்

அக்டோபர் 18, 1987
Scorecard
 ஆத்திரேலியா
199/4 (30 ஓவர்கள்)
 நியூசிலாந்து
196/9 (30 ஓவர்கள்)
டேவிட் பூன் 87 (96)
மார்ட்டின் சினெடன் 2/36 (6 ஓவர்கள்)
மார்ட்டின் குரோவ் 58 (48)
ஸ்டீவ் வா 2/36 (6 ஓவர்கள்)
 ஆத்திரேலியா 3 ஓட்டங்களால் வெற்றி
நேரு அரங்கம், இண்டூர், இந்தியா
நடுவர்கள்: டேவிட் ஆர்ச்சர், கைசர் ஹயாட்
ஆட்ட நாயகன்: டேவிட் பூன்
  • மழை காரணமாக அக்டோபர் 18 ஆட்டம் கைவிடப்பட்டு, அக்டோபர் 19 இல் விளையாடப்பட்டு, 30 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

அக்டோபர் 22, 1987
Scorecard
 இந்தியா
289/6 (50 ஓவர்கள்)
 ஆத்திரேலியா
233 (49 ஓவர்கள்)
திலிப் வெங்சர்க்கர் 63 (60)
கிரைக் மெக்டெர்மொட் 3/61 (10 ஓவர்கள்)
டேவிட் பூன் 62 (59)
முகமது அசாருதீன் 3/19 (3.5 ஓவர்கள்)
 இந்தியா 56 ஓட்டங்களால் வெற்றி
பெரோஸ் ஷா கொட்லா, தில்லி, இந்தியா
நடுவர்கள்: காலிட் அசீஸ், டேவிட் ஷெப்பர்ட்ட்
ஆட்ட நாயகன்: முகமது அசாருதீன்

அக்டோபர் 23, 1987
Scorecard
 சிம்பாப்வே
227/5 (50 ஓவர்கள்)
 நியூசிலாந்து
228/6 (47.4 ஓவர்கள்)
ஆண்ட்ரூ பைக்குரொப்ட் 52 (46)
ஸ்டீவன் பூக் 2/43 (10 ஓவர்கள்)
ஜெஃப் குரோவ் 88 (105)
அலி ஷா 2/34 (10 ஓவர்கள்)
 நியூசிலாந்து 4 விக்கெட்டுகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கல்கத்தா, இந்தியா
நடுவர்கள்: கைசர் ஹயாட், விதானகமகே
ஆட்ட நாயகன்: ஜெஃப் குரோவ்

அக்டோபர் 26, 1987
Scorecard
 சிம்பாப்வே
191/7 (50 ஓவர்கள்)
 இந்தியா
194/3 (42 ஓவர்கள்)
கெவின் ஆர்னொட் 60 (126)
சேட்டன் சர்மா 2/41 (10 ஓவர்கள்)
நவ்ஜோத் சித்து 55 (61)
பீட்டர் ரோசன் 2/46 (8 ஓவர்கள்)
 இந்தியா 7 விக்கெட்டுகளால் வெற்றி
சர்தார் பட்டேல் அரங்கம், அகமதாபாத், இந்தியா
நடுவர்கள்: டேவிட் ஆர்ச்சர், டிக்கி பேர்ட்
ஆட்ட நாயகன்: கபில் தேவ்

அக்டோபர் 27, 1987
Scorecard
 ஆத்திரேலியா
251/8 (50 ஓவர்கள்)
 நியூசிலாந்து
234 (48.4 ஓவர்கள்)
ஜெஃப் மார்ஷ் 126 (149)
வில்லி வாட்சன் 2/46 (8 ஓவர்கள்)
ஜோன் ரைட் 61 (82)
அலன் போர்டர் 2/27 (7 ஓவர்கள்)
 ஆத்திரேலியா 17 ஓட்டங்களால் வெற்றி
செக்டர் 16 அரங்கம், சண்டிகர், இந்தியா
நடுவர்கள்: கைசர் ஹயாட், டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: ஜெஃப் மார்ஷ்

அக்டோபர் 30, 1987
Scorecard
 ஆத்திரேலியா
266/5 (50 ஓவர்கள்)
 சிம்பாப்வே
196/6 (50 ஓவர்கள்)
டேவிட் பூன் 93 (101)
ஜோன் டிரைக்கொஸ் 2/45 (10 ஓவர்கள்)
ஆண்ட்ரூ பைகுரொஃப்ட் 38 (46)
டிம் மேய் 2/30 (10 ஓவர்கள்)
 ஆத்திரேலியா 70 ஓட்டங்களால் வெற்றி
பரபாத்தி அரங்கம், கட்டாக், இந்தியா
நடுவர்கள்: மகபூப் ஷா, விதானகமகே
ஆட்ட நாயகன்: டேவிட் பூன்

அக்டோபர் 31, 1987
Scorecard
 நியூசிலாந்து
221/9 (50 ஓவர்கள்)
 இந்தியா
224/1 (32.1 ஓவர்கள்)
தீபக் பட்டேல் 40 (51)
சேட்டன் சர்மா 3/51 (10 ஓவர்கள்)
சுனில் கவஸ்கர் 103* (88)
வில்லி வாட்சன் 1/50 (10 ஓவர்கள்)
 இந்தியா 9 விக்கெட்டுகளால் வெற்றி
விதர்ப துடுப்பாட்ட அரங்கம், நாக்பூர், இந்தியா
நடுவர்கள்: டிக்கி பெர்ட், டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: சுனில் கவஸ்கர், சேட்டன் சர்மா

பிரிவு பி

[தொகு]
அணி புள்ளிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி ஓட்ட விகிதம்
 பாக்கித்தான் 20 6 5 1 5.01
 இங்கிலாந்து 16 6 4 2 5.14
 மேற்கிந்தியத் தீவுகள் 12 6 3 3 5.16
 இலங்கை 0 6 0 6 4.04
அக்டோபர் 8, 1987
Scorecard
 பாக்கித்தான்
267/6 (50 ஓவர்கள்)
 இலங்கை
252 (49.2 ஓவர்கள்)
ஜாவெட் மியாண்டட் 103 (100)
ரவி டத்நாயக்க 2/47 (9 ஓவர்கள்)
ரொஷான் மகாநாம 89 (117)
அப்துல் காதிர் 2/30 (10 ஓவர்கள்)
 பாக்கித்தான் 15 ஓட்டங்களால் வெற்றி
நியாஸ் அரங்கம், ஐதராபாத், பாக்கித்தான்
நடுவர்கள்: வி.கே.ராமசாமி, ஸ்டீவ் வுட்வார்ட்
ஆட்ட நாயகன்: ஜாவெட் மியாண்டட்

அக்டோபர் 9, 1987
Scorecard
 இங்கிலாந்து
246/8 (49.3 ஓவர்கள்)
இரிச்சி ரிச்சார்ட்சன் 53 (80)
நீல் ஃபொஸ்டர் 3/53 (10 ஓவர்கள்)
அலன் லாம் 67* (68)
கார்ல் ஊப்பர் 3/42 (10 ஓவர்கள்)
 மேற்கிந்தியத் தீவுகள் 2 இலக்குகளால் வெற்றி
ஜின்னா அரங்கம், குச்ரன்வாலா, பாக்கித்தான்
நடுவர்கள்: டொனி கிராஃப்டர், ராம் குப்தா
ஆட்ட நாயகன்: அலன் லாம்

அக்டோபர் 12, 1987
Scorecard
 பாக்கித்தான்
239/7 (50 ஓவர்கள்)
 இங்கிலாந்து
221 (48.4 ஓவர்கள்)
சலீம் மலீக் 65 (80)
பிலிப் டெஃப்ரெய்ட்டர்ஸ் 3/42 (10 ஓவர்கள்)
மைக் கற்றிங் 43 (47)
அப்துல் காதிர் 4/31 (10 ஓவர்கள்)
 பாக்கித்தான் 18 ஓட்டங்களால் வெற்றி
பிண்டி கிளப், ராவல்பிண்டி, பாக்கித்தான்
நடுவர்கள்: டொனி கிராஃப்டர், ராம் குப்தா
ஆட்ட நாயகன்: அப்துல் காதிர்
  • அக். 12 இல் மழையால் ஆட்டம் அக். 13 இல் நடைபெற்றது.

அக்டோபர் 13, 1987
Scorecard
 இலங்கை
169/4 (50 ஓவர்கள்)
விவ் ரிச்சர்ட்ஸ் 181 (125)
ரவி ரத்நாயக்க 2/68 (8 ஓவர்கள்)
அர்ஜுன ரணதுங்க 52 (93)
கார்ல் ஊப்பர் 2/39 (10 ஓவர்கள்)
 மேற்கிந்தியத் தீவுகள் 191 ஓட்டங்களால் வெற்றி
கராச்சி தேசிய அரங்கம், கராச்சி, பாக்கித்தான்
நடுவர்கள்: வி.கே.ராமசாமி, ஸ்டீவ் வூட்வர்ட்
ஆட்ட நாயகன்: விவ் ரிச்சர்ட்ஸ்

அக்டோபர் 16, 1987
Scorecard
 பாக்கித்தான்
217/9 (50 ஓவர்கள்)
ஃபில் சிமன்ஸ் 50 (57)
இம்ரான் கான் 4/37 (8.3 ஓவர்கள்)
சலீம் யூசுப் 56 (49)
கேர்ட்னி வால்ஷ் 4/40 (10 ஓவர்கள்)
 பாக்கித்தான் 1 இலக்கால் வெற்றி
கடாபி அரங்கம், லாகூர், பாக்கித்தான்
நடுவர்கள்: வி.கே.ராமசாமி, ஸ்டீவ் வூட்வர்ட்
ஆட்ட நாயகன்: சலீம் யூசுப்

அக்டோபர் 17, 1987
Scorecard
 இங்கிலாந்து
296/4 (50 ஓவர்கள்)
 இலங்கை
158/8 (45 ஓவர்கள்)
கிரகாம் கூச் 84 (100)
ரவி ரத்நாயக்க 2/62 (9 ஓவர்கள்)
அர்ஜுன ரணதுங்க 40 (67)
ஜோன் எம்புரே 2/26 (10 ஓவர்கள்)
 இங்கிலாந்து 108 ஓட்டங்களால் வெற்றி
அர்பாப் நியாஸ் அரங்கம், பெஷாவர், பாக்கித்தான்
நடுவர்கள்: வி.கே.ராமசாமி, ஸ்டீவ் வூட்வர்ட்
ஆட்ட நாயகன்: அலன் லாம்
  • மழை காரணமாக இலங்கையின் ஆட்டம் 45 ஓவர்களுக்கு 267 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

அக்டோபர் 20, 1987
Scorecard
 இங்கிலாந்து
244/9 (50 ஓவர்கள்)
 பாக்கித்தான்
247/3 (49 ஓவர்கள்)
பில் அத்தி 86 (104)
இம்ரான் கான் 4/37 (9 ஓவர்கள்)
ரமீஸ் ராஜா 113 (148)
ஜோன் எம்புரே 1/34 (10 ஓவர்கள்)
 பாக்கித்தான் 7 இலக்குகளால் வெற்றி
தேசிய அரங்கம், கராச்சி, பாக்கித்தான்
நடுவர்கள்: டொனி கிராஃப்ட்டர், வி.கே.ராமசாமி
ஆட்ட நாயகன்: இம்ரான் கான்

அக்டோபர் 21, 1987
Scorecard
 இலங்கை
211/8 (50 ஓவர்கள்)
ஃபில் சிமன்ஸ் 89 (126)
ரவி ரத்நாயக்க 3/41 (10 ஓவர்கள்)
அர்ஜுன ரணதுங்க 86* (100)
பட்ரிக் பட்டர்சன் 3/31 (10 ஓவர்கள்)
 மேற்கிந்தியத் தீவுகள் 25 ஓட்டங்களால் வெற்றி
கிரீன் பூங்கா, கான்பூர், இந்தியா
நடுவர்கள்: அமனுல்லா கான், மகபூப் ஷா
ஆட்ட நாயகன்: ஃபில் சிமன்ஸ்

அக்டோபர் 25, 1987
Scorecard
 பாக்கித்தான்
297/7 (50 ஓவர்கள்)
 இலங்கை
184/8 (50 ஓவர்கள்)
சலீம் மாலிக் 100 (95)
அரவிந்த டி சில்வா 1/37 (6 ஓவர்கள்)
துலீப் மென்டிஸ் 58 (65)
அப்துல் காதிர் 3/40 (10 ஓவர்கள்)
 பாக்கித்தான் 113 ஓட்டங்களால் வெற்றி
இக்பால் அரங்கம், ஃபக்சலாபாத், பாக்கித்தான்
நடுவர்கள்: ராம் குப்தா, ஸ்டீவ் வுட்வர்ட்
ஆட்ட நாயகன்: சலீம் மாலிக்

அக்டோபர் 26, 1987
Scorecard
 இங்கிலாந்து
269/5 (50 ஓவர்கள்)
கிரகாம் கூச் 92 (137)
பட்ரிக் பட்டர்சன் 3/56 (9 ஓவர்கள்)
இரிச்சி ரிச்சார்ட்சன் 93 (130)
பிலிப் டெஃப்ரெய்ட்டர்ஸ் 3/28 (9.1 ஓவர்கள்)
 இங்கிலாந்து 34 ஓட்டங்களால் வெற்றி
சவாய் மான்சிங் அரங்கம், ஜெய்ப்பூர், இந்தியா
நடுவர்கள்: மகபூப் ஷா, விதானகமகே
ஆட்ட நாயகன்: கிரகாம் கூச்

அக்டோபர் 30, 1987
Scorecard
 இலங்கை
218/7 (50 ஓவர்கள்)
 இங்கிலாந்து
219/2 (41.2 ஓவர்கள்)
ரோய் டயஸ் 80 (105)
எடி ஹெமிங்க்ஸ் 3/57 (10 ஓவர்கள்)
கிரகாம் கூச் 61 (79)
சிறீதரன் ஜெகநாதன் 2/45 (10 ஓவர்கள்)
 இங்கிலாந்து 8 இலக்குகளால் வெற்றி
நேரு அரங்கம், புனே, இந்தியா
நடுவர்கள்: டேவிட் ஆச்சர், கைசர் ஹையட்
ஆட்ட நாயகன்: கிரகாம் கூச்

அக்டோபர் 30, 1987
Scorecard
 பாக்கித்தான்
230/9 (50 ஓவர்கள்)
இரிச்சி ரிச்சார்ட்சன் 110 (135)
வசீம் அக்ரம் 3/45 (10 ஓவர்கள்)
ரமீஸ் ராஜா 70 (111)
பட்ரிக் பட்டர்சன் 3/34 (10 ஓவர்கள்)
 மேற்கிந்தியத் தீவுகள் 28 ஓட்டங்களால் வெற்றி
தேசிய அரங்கம், கராச்சி, பாக்கித்தான்
நடுவர்கள்: ராம் குப்தா, வி.கே.ராமசாமி
ஆட்ட நாயகன்: இரிச்சி ரிச்சார்ட்சன்

இறுதிப் போட்டிகள்

[தொகு]
  அரை இறுதி இறுதி
             
நவம்பர் 4 - கடாபி அரங்கம், லாகூர், பாக்கித்தான்
 ஏ2  ஆத்திரேலியா 267/6  
 பி1  பாக்கித்தான் 252  
 
நவம்பர் 8 - ஈடன் கார்டன்ஸ், கல்கத்தா, இந்தியா
      ஆத்திரேலியா 253/5
    இங்கிலாந்து 246/8
நவம்பர் 5 - வாங்கீது அரங்கம், பம்பாய், இந்தியா
 பி2  இங்கிலாந்து 254/6
 ஏ1  இந்தியா 219  

அரை-இறுதிப் போட்டிகள்

[தொகு]
நவம்பர் 4, 1987
Scorecard
 ஆத்திரேலியா
267/6 (50 ஓவர்கள்)
 பாக்கித்தான்
249 (49.2 ஓவர்கள்)
டீவிட் பூன் 65 (91)
இம்ரான் கான் 3/36 (10 ஓவர்கள்)
ஜாவெட் மியாண்டட் 70 (103)
கிரைக் மாக்டெர்மொட் 5/44 (10 ஓவர்கள்)
 ஆத்திரேலியா 18 ஓட்டங்களால் வெற்றி
கடாபி அரங்கம், லாகூர், பாக்கித்தான்
நடுவர்கள்: டிக்கி பேர்ட், டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: கிரைக் மாக்டெர்மொட்

நவம்பர் 5, 1987
Scorecard
 இங்கிலாந்து
254/6 (50 ஓவர்கள்)
 இந்தியா
219 (45.3 ஓவர்கள்)
கிரையம் கூச் 115 (136)
மகிந்தர் சிங் 3/54 (10 ஓவர்கள்)
முகமது அசாருதீன் 64 (74)
எடி ஹெமிங்ஸ் 4/52 (9.3 ஓவர்கள்)
 இங்கிலாந்து 35 ஓட்டங்களால் வெற்றி
வான்கீது அரங்கம், பம்பாய், இந்தியா
நடுவர்கள்: டொனி கிராஃடர், ஸ்டீவ் வூட்வர்ட்
ஆட்ட நாயகன்: கிரயெம் கூச்

இறுதிப் போட்டி

[தொகு]
நவம்பர் 8, 1987
Scorecard
 ஆத்திரேலியா
253/5 (50 ஓவர்கள்)
 இங்கிலாந்து
246/8 (50 ஓவர்கள்)
டேவிட் பூன் 75 (125)
எடி ஹெமிங்ஸ் 2/48 (10 ஓவர்கள்)
பில் அத்தி 58 (103)
ஸ்டீவ் வா 2/37 (9 ஓவர்கள்)
 ஆத்திரேலியா 7 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கல்கத்தா, இந்தியா
நடுவர்கள்: ராம் குப்தா, மகபூப் ஷா
ஆட்ட நாயகன்: டேவிட் பூன்

நான்காவது துடுப்பாட்ட உலகக் கிண்ணத்துக்கான ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச துடுப்பாட்ட போட்டியின் இறுதியாட்டம் இந்தியாவின் கல்கத்தா நகரின் ‘ஈகல்கார்ட்டன்’ மைதானத்தில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. (முதற்கதடவையாக மேற்கிந்தியா அணியால் இறுதிப்போட்டிக்குப் பங்கேற்க முடியவில்லை. அதேபோல 1983ல் உலகக்கோப்பையை வென்ற இந்தியா அணியாலும் தமது சொந்த நாட்டில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை.)

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 253 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. (டேவிட்பூன்-75, டீன்ஜோன்ஸ் -33, அலன்போடர் 31 வெலோட்டா 45)

பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியால் 8 விக்கட் இழப்பிற்கு 246 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. 31வது ஓவரில் 3 விக்கட் இழப்புக்கு 135 ஓட்டங்களைப் பெற்றிருந்த அணியின் தலைவர் மைக்கெட்டிங் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்தின் வீழ்ச்சி ஆரம்பமாயிற்று. (மைக்கெட்டிங் 41, கிரகம்குச் 35, ஸி.டப்ளியு கே.எதே. 58, அலமன்லேம் 45) இறுதியில் 7 ஓட்டங்களினால் அவுஸ்திரேலியா அணி ரிலயன்ஸ் உலகக்கோப்பையை தனதாக்கிக் கொண்டது.

இலங்கை அணியின் நிலை

[தொகு]

இலங்கை, சிம்பாபே அணிகளால் ஒரு போட்டியிலேனும் வெற்றி கொள்ளமுடியவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]