துடுப்பாட்ட உலகக்கிண்ண தகுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஓர் நாட்டின் துடுப்பாட்ட அணி துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் பங்கேற்க தேவையான நடைமுறைகள் துடுப்பாட்ட உலகக்கிண்ண தகுதிகள் எனப்படும். உலகளவில் நடத்தப்படும் துடுப்பாட்ட உலகக்கிண்ணப்போட்டிகளில் போட்டியிடும் அணிகளை நூறு நாடுகளிலிருந்து 16ஆகக் குறைக்க இந்த முன்போட்டிகள் உதவுகின்றன. தற்போதுள்ள நடைமுறை உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகள் ஆகும். தகுதிச் செயற்பாடுகள் உலகக்கிண்ணப்போட்டிகளுக்கு ஆறு ஆண்டுகள் முன்பிருந்தே செயல்படத் துவங்கும்.

ஒவ்வொரு உலகக்கிண்ணத்தின் போதும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை தனது இணை மற்றும் கிளை அங்கத்தினர்களில் எத்தனை அணிகள் உலகக்கிண்ணத்தில் போட்டியிட இயலும் எனத் தீர்மானிக்கின்றனர். தேர்வு ஆடுகின்ற நாடுகள் (கடந்த ஆண்டுகளில் சிலநேரங்களில் ஒருநாள் ஆட்டம் ஆடிய நாடுகளும் கூட) உலகக்கிண்ணப் போட்டிகளில் ஆட நேரடியாகத் தகுதி பெறுகின்றன. மற்ற நாட்டு அணிகள் தகுநிலை தொடர்போட்டிகளில் பங்கேற்று தகுநிலை பெறவேண்டும்.[1]

தகுநிலை துடுப்பாட்டப் போட்டிகள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் ஐந்து (ஆபிரிக்கா, ஆசியா, அமெரிக்காக்கள், கிழக்காசிய பசிபிக், ஐரோப்பா) பிராந்திய அவைகளால் தங்களுக்குள் நடத்தப்படுகின்றன. ஐசிசி கோப்பை என்ற முதல் தகுநிலைப்போட்டி 1979ஆம் ஆண்டு இரண்டாம் உலகக்கிண்ணத்திற்கு முன்பு நடத்தப்பட்டது.

குறிப்புகள்[தொகு]