பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
சுருக்கம்ICC
குறிக்கோளுரைதுடுப்பாட்டம் நல்லது.
Predecessorஇம்பீரியல் துடுப்பாட்ட அவை (1909–1965)
பன்னாட்டுத் துடுப்பாட்ட மாநாடு (1965–1989)
துவங்கியது15 சூன் 1909; 114 ஆண்டுகள் முன்னர் (1909-06-15)
வகைஒவ்வொரு நாடுகளின் துடுப்பாட்ட சங்கங்களின் கூட்டமைப்பு
தலைமையகம்ஐக்கிய அரபு அமீரகம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம் (2005-தற்போதுவரை)
ஐக்கிய இராச்சியம் லண்டன், ஐக்கிய இராச்சியம் (1909-2005)[1]
உறுப்புரிமை105 உறுப்பினர்கள்
தலைவர்நியூசிலாந்து கிரெக் பார்க்லே[2][3]
துணைத் தலைவர்சிங்கப்பூர் இம்ரான் குவாஜா[4]
CEOஇந்தியா மனு சாவ்னி[5]
வலைத்தளம்www.icc-cricket.com

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை(International Cricket Council) சுருக்கமாக ஐசிசி(ICC) துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற ஓர் பன்னாட்டு விளையாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும்.1909ஆம் ஆண்டு இம்பீரியல் துடுப்பாட்ட அவை (Imperial Cricket Conference) என இங்கிலாந்து, ஆத்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவின் பிரதிநிதிகளால் நிறுவப்பட்ட இவ்வமைப்பிற்கு 1965ஆம் ஆண்டு பன்னாட்டுத் துடுப்பாட்ட கூட்டம்(International Cricket Conference) என்று பெயர் மாற்றப்பட்டது;1989ஆம் ஆண்டு தற்போதையப் பெயருக்கு மாற்றமடைந்தது.

ஐசிசி துடுப்பாட்டத்தின் பல்வகை பன்னாட்டு போட்டிகள் நடத்துவதையும் அமைப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. அது கண்காணிக்கும் போட்டிகளில் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் குறிப்பிடத்தக்கது. மேலும் நடுவர்கள் மற்றும் துடுப்பாட்ட கண்காணிப்பாளர்களை நியமிப்பது, பன்னாட்டு துடுப்பாட்ட ஒழுங்கினை நிலைநிறுத்துமாறு ஐசிசி நடத்தை விதிகளை இயற்றி நிர்வகிப்பது[6], மற்றும் விளையாட்டுகளில் நிலவும் ஊழல், சூதாடல் போன்றவற்றைக் கண்காணித்தல் ஆகிய பணிகளை ஆற்றிவருகிறது. இரு நாடுகளிடையே நடக்கும் துடுப்பாட்டப் போட்டிகளையும் அங்கத்தினர் நாட்டிற்குள் நடக்கும் உள்போட்டிகளையும் கட்டுப்படுத்துவதில்லை.துடுப்பாட்ட விதிகளையும் எம்சிசி என வழங்கப்படும் மேரில்போன் துடுப்பாட்டக் கழகமே கட்டுப்படுத்தி மாற்றங்களைக் கொண்டு வருகிறது.

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தலைவராக நாராயணசாமி சீனிவாசன் (2014ஆம் ஆண்டு சூன் முதல்) தலைமை செயல் அதிகாரியாக டேவ் ரிச்சர்ட்சன் (2012ஆம் ஆண்டு முதல்) பணியாற்றி வருகின்றனர்.

அங்கத்தினர்கள்

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அங்கத்தினர் நாடுகள்

ஐசிசியில் 105 அங்கத்தினர்கள் உள்ளனர்:10 தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் அங்கத்தினர்கள்(அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னா பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சிம்பாவே, வங்காள தேசம்), 35 இணை அங்கத்தினர்கள் மற்றும் 60 தொடர்பு அங்கத்தினர்கள்.

காண்க: ஐசிசி அங்கத்தினர் பட்டியல்

ஐ.சி.சி உலக தரவரிசை

ஆண்கள் அணி தரவரிசை (முதல் 10)
தரவரிசை தேர்வு ஒநாப இ20ப
1  இந்தியா  இங்கிலாந்து  பாக்கித்தான்
2  நியூசிலாந்து  இந்தியா  ஆத்திரேலியா
3  தென்னாப்பிரிக்கா  நியூசிலாந்து  இங்கிலாந்து
4  இங்கிலாந்து  ஆத்திரேலியா  தென்னாப்பிரிக்கா
5  ஆத்திரேலியா  தென்னாப்பிரிக்கா  இந்தியா
6  இலங்கை  பாக்கித்தான்  நியூசிலாந்து
7  பாக்கித்தான்  வங்காளதேசம்  இலங்கை
8  மேற்கிந்தியத் தீவுகள்  இலங்கை  ஆப்கானித்தான்
9  வங்காளதேசம்  மேற்கிந்தியத் தீவுகள்  வங்காளதேசம்
10  ஆப்கானித்தான்  ஆப்கானித்தான்  மேற்கிந்தியத் தீவுகள்

பெண்கள் அணி தரவரிசை (முதல் 10)

தரவரிசை ஒநாப இ20ப
1  ஆத்திரேலியா  ஆத்திரேலியா
2  இந்தியா  இங்கிலாந்து
3  இங்கிலாந்து  நியூசிலாந்து
4  நியூசிலாந்து  இந்தியா
5  தென்னாப்பிரிக்கா  மேற்கிந்தியத் தீவுகள்
6  மேற்கிந்தியத் தீவுகள்  தென்னாப்பிரிக்கா
7  பாக்கித்தான்  பாக்கித்தான்
8  இலங்கை  இலங்கை
9  வங்காளதேசம்  வங்காளதேசம்
10  அயர்லாந்து  அயர்லாந்து

மேற்கோள்கள்

  1. [1]
  2. "Greg Barclay elected as Independent ICC Chair". International Cricket Council. https://www.icc-cricket.com/media-releases/1907747. 
  3. https://www.telegraphindia.com/sports/barclay-confirmed-as-the-new-chairman-of-icc/cid/1798637
  4. https://www.cricbuzz.com/cricket-news/116041/imran-khwaja-beats-ricky-skerritt-to-remain-iccs-deputy-chairman-cricbuzzcom
  5. "Sawhney takes over as Chief Executive position of ICC". International Cricket Council. https://www.icc-cricket.com/media-releases/1153104. 
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.icc-cricket.com/icc/rules/code-of-conduct-for-players-and-officials.pdf. 

வெளியிணைப்புகள்