மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் துடுப்பாட்ட அணி
விளையாட்டுப் பெயர்(கள்) | விண்டீசு | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||
தலைவர் | ஸ்டெஃபனி டெய்லர் | ||||||||||||
பயிற்றுநர் | கொட்னி வோல்சு[1] | ||||||||||||
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை | |||||||||||||
ஐசிசி நிலை | Full member (1926) | ||||||||||||
ஐசிசி மண்டலம் | அமெரிக்க துடுப்பாட்ட சங்கம் | ||||||||||||
| |||||||||||||
பெண்கள் தேர்வு | |||||||||||||
முதலாவது பெ.தேர்வு | v ஆத்திரேலியா மே 7–9 ,1976 | ||||||||||||
கடைசி பெதேர்வு | v பாக்கித்தான், கராச்சி; மார்ச் 15–18, 2004 | ||||||||||||
| |||||||||||||
பெண்கள் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டம் | |||||||||||||
முதலாவது பெஒநா | v இங்கிலாந்து இலண்டன்; ஜூன் 6,1979 | ||||||||||||
கடைசி பெஒநா | v இந்தியா சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம், அண்டிக்குவா; நவம்பர் 6, 2019 | ||||||||||||
| |||||||||||||
பெண்கள் உலகக்கிண்ணம் | 6 | ||||||||||||
இரண்டாம் இடம்(2013 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்) | |||||||||||||
பெண்கள் உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள் | 2 (first in 2003) | ||||||||||||
சிறந்த பெறுபேறு | Champions (2011) | ||||||||||||
பெண்கள் பன்னாட்டு இருபது20 | |||||||||||||
முதலாவது பெப20இ | v அயர்லாந்து at Kenure, டப்லின்; 27 June 2008 | ||||||||||||
kadaisi பெப20இ | v இங்கிலாந்து at County Ground, Derby; 30 September 2020 | ||||||||||||
| |||||||||||||
பெண்கள் இ20 உலகக்கிண்ணப் போட்டிகள் | 6 (முதலாவது 2009 ஐசிசி பெண்கள் இருபது20 இல்) | ||||||||||||
சிறந்த பெறுபேறு | வாகையாளர் 2016ஐசிசி பெண்கள் வாகையாளர் | ||||||||||||
இற்றை: ஜனவரி 7,2021 |
மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் துடுப்பாட்ட அணி (West Indies women's cricket team) விண்டீசு எனும் புனைபெயர் கொண்டு அழைக்கப்படும் இந்த அணி பன்னாட்டு அளவில் நடைபெறும் பெண்கள் துடுப்பாட்டப் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த அணி விண்டீசு துடுப்பாட்ட வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
1973 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையின் தொடக்க பதிப்பில், மேற்கிந்தியத் தீவுகளின் சார்பாக ஜமைக்கா மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டன. ஒருங்கிணைந்த மேற்கிந்திய அணி 1976 ஆம் ஆண்டில் தேர்வு போட்டியில் அறிமுகமானது. ஆண்கள் தேசிய அணி போட்டியில் விளையாடி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு) பெண்கள் அணி அறிமுகமானது. 1979 இல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானது.
மேற்கிந்தியத் தீவுகள் தற்போது விளையாட்டின் மிக உயர்ந்த மட்டமான ஐ.சி.சி பெண்கள் வாகையாளர் தொடரில் போட்டியிடுகிறது, மேலும் இன்றுவரை நடைபெற்ற பெண்கள் உலகக் கிண்ணத்தின் பத்துப் பதிப்புகளில் ஐந்தில் பங்கேற்றுள்ளது. மிக சமீபத்திய 2013 உலகக் கோப்பையில், அந்த அணி முதல் முறையாக போட்டியின் இறுதிப் போட்டி வரை சென்றது, ஆனால் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
ஐ.சி.சி உலக இருபது -20 போட்டியில், அனைத்துப் போட்டிகளிலும் அரையிறுதியில், 2016 போட்டிகளில் அந்த அணி தனது முதல் வாகையாளர் பட்டத்தை வென்றது.
வரலாறு
[தொகு]தேர்வு துடுப்பாட்ட வரலாறு
[தொகு]மேற்கிந்தியத் தீவுகள் 1975-76ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடியது.[9] அந்தப் போட்டி சமனில் முடிந்தது. 1976-77 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு எதிராக ஆறு தேர்வு துடுப்பாட்டத் தொடர்களை விளையாடியது. இதில் நான்காவது போட்டியில் தோல்வி அடைந்தனர். ஆற்றவது போட்டியில் ஆட்டப்பகுதி வெற்றி பெற்றனர். மற்ற போட்டிகள் சமன் ஆனதால் இந்தத் தொடர் சமன் ஆனது
போட்டி வரலாறு
[தொகு]பெண்கள் துடுப்பாட்ட உலகக் கிண்ணம்
[தொகு]- 1973 முதல் 1988 வரை: பங்கேற்கவில்லை
- 1993: 6 வது இடம்
- 1997: 9 வது இடம்
- 2000: பங்கேற்கவில்லை
- 2005: 5 வது இடம்
- 2009: 5 வது இடம்
- 2013: 2 வது இடம்
ஐ.சி.சி பெண்கள் உலக இருபது
[தொகு]- 2009 : 5 வது இடம்
- 2010 : அரை இறுதி
- 2012 : அரை இறுதி
- 2014 : அரை இறுதி
- 2016 : சாம்பியன்ஸ்
- 2018 : அரை இறுதி
ஐ.சி.சி பெண்கள் துடுப்பாட்ட வாகையாளர்
[தொகு]- 2010 : முதல் இடம்
கௌரவங்கள்
[தொகு]ஐ.சி.சி பெண்கள் லக இருபதுக்கு 20 (1): 2016
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Courtney Walsh named West Indies women's coach". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
- ↑ "ICC Rankings". International Cricket Council.
- ↑ "Women's Test matches - Team records". ESPNcricinfo.
- ↑ "Women's Test matches - 2019 Team records". ESPNcricinfo.
- ↑ "WODI matches - Team records". ESPNcricinfo.
- ↑ "WODI matches - 2019 Team records". ESPNcricinfo.
- ↑ "WT20I matches - Team records". ESPNcricinfo.
- ↑ "WT20I matches - 2019 Team records". ESPNcricinfo.
- ↑ "Historic day as WI women played first match". Cricket West Indies. பார்க்கப்பட்ட நாள் 11 May 2020.