நடுவர் (துடுப்பாட்டம்)
Appearance
நடுவர் (umpire) எனத் துடுப்பாட்டத்தில் குறிப்பிடப்படுபவர் இரு அணிகளையும் சார்ந்திராது நடுநிலையுடன் ஆடுகளத்தில் துடுப்பாட்ட விதிகளுக்குற்பட்டு முடிவுகள் எடுக்கக்கூடிய அதிகாரம் கொண்டவர். பந்து வீச்சு சரியான முறையில் வீசப்பட்டுள்ளதா, விக்கெட்களுக்கான முறையீடுகள் மற்றும் ஆட்டம் பொதுவான விதிகளுக்குட்பட்டு நடக்கிறதா என்பன குறித்த முடிவுகளை எடுப்பதுடன் எத்தனை பந்துகள் வீசப்பட்டுள்ளன என்பதை நினைவிறுத்தி பந்து வீச்சு நிறைவடைந்ததை அறிவிப்பார்.
துடுப்பாட்ட நடுவரும் துடுப்பாட்ட முறையீடு நடுவரும் (referee) வெவ்வேறு பணிகளைச் செய்பவர்கள். முறையீடு நடுவர் ஆட்டத்தின் போக்கை மாற்றும்விதமான முடிவுகளை எடுப்பதில்லை. பன்னாட்டு துடுப்பாட்ட போட்டிகளில் ஆட்டத்தினைக் கண்காணித்து மேலாளும் மட்டுறுத்தனராக உள்ளார்.
வெளியிணைப்புகள்
[தொகு]- ICC Match Officials பரணிடப்பட்டது 2009-02-01 at the வந்தவழி இயந்திரம்