இலங்கைத் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இலங்கை துடுப்பாட்ட அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கை
Slc-logo.png
தேர்வுத் தகுதி கிடைத்தது 1982
முதல் தேர்வுப் போட்டி எதிர் இங்கிலாந்து பிப்ரவரி 1982
தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் (டெஸ்ட்,ODI),தினேஷ் சந்திமால் (T20)
பயிற்றுனர் கிரஹாம் ஃபோர்ட்
ஐ.சி.சி. தேர்வு,
ஒருநாள் தரம்
6வது (டெஸ்ட்), 5வது (ODI), 1வது (T20) [1],[2]
தேர்வுப் போட்டிகள்
- இவ்வாண்டில்
222
03
கடைசி தேர்வுப் போட்டி எதிர் பங்களாதேஷ், 16-20 மார்ச் 2013
வெற்றி்/தோல்வி
- இவ்வாண்டில்
66/76
1/1
மார்ச் 24 2013 அன்று தகவல்படி

இலங்கை துடுப்பாட்ட அணி இலங்கையை துடுப்பாட்ட போட்டிகளில் பிரந்தித்துவப்படுத்தும் அணியாகும். இது இலங்கை துடுப்பாட்டக் கட்டுப்பாட்டவையால் நிர்வகிக்கப்படுகிறது. 1975 இல் முதலாவதாக ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணிக்கு 1981 இல் தேர்வுத் தகமை வழங்கப்பட்டது. தேர்வுத் தகமை வழங்கப்பட்ட 8வது நாடு இலங்கையாகும். 1996 இல் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் அர்ஜூன ரணதுங்க தலைமையில் சிறந்த முறையில் ஆடி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. அது முதல் இலங்கை துடுப்பாட்ட அணி பற்றிய பார்வை மாற்றம் பெற்றுள்ளது. சனத் ஜெயசூரிய, அரவிந்த டி சில்வா போன்றோரது சிறந்த துடுப்பாட்டமும் சமிந்த வாஸ், முரளிதரன் போன்றோரது சிறந்த பந்துவீச்சும் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

பொருளடக்கம்

இலங்கை பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் வரலாறு[தொகு]

 • 1981 ஆம் ஆண்டு தேர்வுத்தகமை கிடைத்தது, 1982 இல் முதல் தேர்வுப்போட்டி விளையாடப்படது.
 • 1996இல் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

தொடர்கள்[தொகு]

துடுப்பாட்ட உலகக்கிண்ணம்[தொகு]

ஐ. சி. சி. வெற்றியாளர் கிண்ணம்[தொகு]

ஐ. சி. சி. வெளியேறுநிலைப் போட்டிகள்[தொகு]

 • 1998: அரை இறுதி
 • 2000: கால் இறுதி

பொதுநலவாய விளையாட்டுகள்[தொகு]

 • 1998: 4வது இடம்

ஐ. சி. சி. கிண்ணம்[தொகு]

 • 1979: வெற்றியாளர்
 • 1982 தேர்வு நாடாகியதால் தகுதியில்லை

ஆசிய தேர்வுக் கிண்ணத்தொடர்[தொகு]

 • 1999: இரண்டாமிடம்
 • 2001/2: வெற்றியாளர்

ஆசியக் கிண்ணம்[தொகு]

 • 1984: இரண்டாமிடம்
 • 1984: வெற்றியாளர்
 • 1988: இரண்டாமிடம்
 • 1990/91: இரண்டாமிடம்
 • 1995: இரண்டாமிடம்
 • 1997: வெற்றியாளர்
 • 2000: இரண்டாமிடம்
 • 2004: வெற்றியாளர்
 • 2008: வெற்றியாளர்

அவுஸ்திரலேசியா கிண்ணம்[தொகு]

 • 1986: அரை இறுதி
 • 1990: அரை இறுதி
 • 1994: முதல் சுற்று

சாதனைகள்[தொகு]

துடுப்பாட்ட சாதனைகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள்[தொகு]
 • இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய ஓட்டங்கள்: 952-6, எதிர் இந்தியா, 1997
 • அதிகூடிய இணைப்பாட்டம் : 624, மூன்றாம் விக்கட், குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன, எதிர் தென்னாபிரிக்கா, 2006
 • இரண்டாம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 576, சனத் ஜெயசூரிய மற்றும் ரொஷான் மகாநாம, எதிர் இந்தியா, 1997
 • நான்காம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 437, மகேல ஜெயவர்த்தன மற்றும் திலான் சமரவீர, எதிர் பாகிஸ்தான், 2009
 • ஆறாம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 351, மகேல ஜெயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜெயவர்த்தன, எதிர் இந்தியா, 2009
ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகள்[தொகு]
 • அதிகூடிய ஓட்டங்கள்: 443-9, எதிர் நெதர்லாந்து, ஜூலை 4 2006
 • முதல் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 286, உபுல் தரங்க மற்றும் சனத் ஜெயசூரிய, எதிர் இங்கிலாந்து, 2006
 • விரைவான அரைச்சதம் : 17பந்துகள், சனத் ஜெயசூரிய, எதிர் பாகிஸ்தான், 1996
 • ஒன்பதாவது விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம்  : 132, அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் லசித் மலிங்க, எதிர் அவுஸ்திரேலியா, 2010
இருபது-20 துடுப்பாட்டப் போட்டிகள்[தொகு]
 • அதிகூடிய ஓட்டங்கள்: 260-6, எதிர் கென்யா, 2007
 • அதிகூடிய வெற்றி எல்லை : 172ஓட்டங்கள், எதிர் கென்யா, 2007
 • இரண்டாம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 166, குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன, எதிர் மேற்கிந்தியா, 2010
 • ஒன்பதாவது விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம்  : 44, தில்கார பெர்ணான்டோ மற்றும் லசித் மலிங்க, எதிர் நியூசிலாந்து, 2006

பந்துவீச்சு[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]
 • அதிகூடிய விக்கட்டுக்கள் : 800, முத்தையா முரளிதரன், 133 போட்டிகள், 1992-2010
 • போட்டி ஒன்றில் அதிகூடிய 10விக்கட்டுக்கள் : 22, முத்தையா முரளிதரன், 133 போட்டிகள், 1992-2010
 • இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய 5விக்கட்டுக்கள் : 67, முத்தையா முரளிதரன், 133 போட்டிகள், 1992-2010
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]
 • அதிகூடிய விக்கட்டுக்கள் : 534, முத்தையா முரளிதரன், 350 போட்டிகள், 1993-2011
 • போட்டியொன்றில் சிறந்த பந்துவீச்சு : 19/8, சமிந்த வாஸ், எதிர் சிம்பாப்வே, 2001
இருபது-20 துடுப்பாட்டப் போட்டிகள்[தொகு]
 • போட்டியொன்றில் சிறந்த பந்துவீச்சு : 16/6, அஜந்த மென்டிஸ், எதிர் அவுஸ்திரேலியா, 2011

சர்வதேச அரங்குகள்[தொகு]

இலங்கைத் துடுப்பாட்ட அணி is located in இலங்கை
சரவணமுத்து
சரவணமுத்து
SSC
SSC
CCC
CCC
R. பிரேமதாசா
R. பிரேமதாசா
Tyronne Fernando
Tyronne Fernando
காலி
காலி
Asgiriya
Asgiriya
ரான்கிரி தம்புள்ளை
ரான்கிரி தம்புள்ளை
Pallekele
Pallekele
மகிந்த ராஜபக்ச
மகிந்த ராஜபக்ச
Welagedara
Welagedara
இலங்கையில் உள்ள சர்வதேச அரங்குகள்

டெஸ்ட்[தொகு]

Listed in order of date first used for Test match

எண் அரங்கின் பெயர் இடம் கொள்ளளவு முதல் பயன்பாடு போட்டிகள்
1 பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் கொழும்பு 15,000 17 பெப்ரவரி 1982 15
2 Asgiriya Stadium கண்டி 10,300 22 ஏப்ரல் 1982 21
3 சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம் கொழும்பு 10,000 16 மார்ச் 1984 34
4 கொழும்பு துடுப்பாட்ட திடல்(தற்போது பயன்படுத்தப்படவில்லை) கொழும்பு 6,000 24 மார்ச் 1984 3
5 ஆர். பிரேமதாச அரங்கம் கொழும்பு 35,000 28 ஆகத்து 1992 7
6 Tyronne Fernando Stadium (now not used) மொறட்டுவை 15,000 8 செப்டம்பர் 1992 4
7 காலி பன்னாட்டு அரங்கம் காலி 35,000 3 சூன் 1998 17
8 முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் Pallekele, கண்டி 35,000 1 திசம்பர் 2010 1

ஒரு நாள் சர்வதேச போட்டி அரங்குகள்[தொகு]

எண் அரங்கின் பெயர் அமைவிடம் கொள்ளளவு முதல் பயன்பாடு போட்டிகள்
1 சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம் கொழும்பு 10,000 13 பெப்ரவரி 1982 59
2 பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் கொழும்பு 15,000 13 ஏப்ரல் 1983 12
3 Tyronne Fernando Stadium (now not used) மொறட்டுவை 15,000 31 மார்ச் 1984 6
4 Asgiriya Stadium கண்டி 10,300 2 மார்ச் 1986 6
5 ஆர். பிரேமதாச அரங்கம் கொழும்பு 35,000 5 ஏப்ரல் 1986 101
6 காலி பன்னாட்டு அரங்கம் காலி 35,000 25 சூன் 1998 4
7 இரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் தம்புள்ளை 16,800 23 மார்ச் 2001 43
8 மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் அம்பாந்தோட்டை 35,000 20 பெப்ரவரி 2011 2
9 முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் Pallekele, கண்டி 35,000 8 மார்ச் 2011 3
10 Welagedara Stadium (இதுவரை ஒரு போட்டிகூட இங்கு நடைபெறவில்லை) குருணாகல் 10,000 - -

வெளி இணைப்புகள்[தொகு]