துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2003

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2003
2003 cwcc.gif
நிகழ்வு 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
நாள் 23 மார்ச், 2003
அரங்கம் வாண்டரேர்ஸ் அரங்கம், தென்னாப்பிரிக்கா
ஆட்ட நாயகன் ஆத்திரேலியாவின் கொடி ரிக்கி பொண்டிங்
தொடர் ஆட்ட நாயகன் இந்தியாவின் கொடி சச்சின் டெண்டுல்கர்
நடுவர்கள் ஸ்டீவ் பக்நோர், டேவிட் ஷெப்பர்ட்
1999
2007

துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி 2003 (2003 Cricket World Cup Final, கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 2003) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் எட்டாவது உலகக் கிண்ணத்துக்காக இடம்பெற்ற சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டி பற்றியதாகும். இப்போட்டி 2003 மார்ச் 24 ஆம் நாள் ஜோகானஸ்பேர்க் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஆத்திரேலியா அணி இந்திய அணியை வென்று மூன்றாவது தடவையாக உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டது.

நடைபெற்ற திகதி[தொகு]

50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டி மார்ச் 23 2003ல் நடைபெற்றது.

நடைபெற்ற அரங்கம்[தொகு]

தென்னாபிரிக்க ஜொஹானஸ்பேர்க் அரங்கம்

இறுதிப் போட்டி அணிகள்[தொகு]

ஆத்திரேலியா அணி[தொகு]

 • அடம் கில்கிறிஸ்ட்
 • எம். எல். ஹெய்டின்
 • றிக்கி பொன்டிங் ; (அணித்தலைவர்)
 • டி.ஆர். மார்ட்டின்
 • டரன் லேமன்
 • மைக்கல் பெவன்
 • ஏ. சீமொன்
 • ஜீ.பி. ஹோக்
 • ஏ.ஜே. பிஹேல்
 • பிரட்லீ
 • கிளென் மெக்ரா

இந்தியா அணி[தொகு]

 • சச்சின் டெண்டுல்கர்
 • கங்குலி
 • மொகமட் கைப்
 • வீரேந்தர் சேவாக்
 • டார்விட்
 • யுவராஜ் சிங்
 • மொங்கியா
 • ஹர்பஜன் சிங்
 • ஜே. சிரிசாந்
 • சாகீர் கான்
 • ஆஷீஸ் நேரா

நாணயச்சுழற்சி[தொகு]

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்தியா அணி அவுஸ்திரேலியா அணியை முதலில் துடுப்பாடப் பணித்தது.

நடுவர்கள்[தொகு]

இந்த ஆட்டத்துக்கான நடுவர்களாகக் களத்தில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த எஸ். ஏ. பக்னரும், இங்கிலாந்தைச் சேர்ந்த டி. ஆர். ஷெப்பேர்ட்டும், மூன்றாவது நடுவராக ஆர்.இ. கொரிட்சனும் பங்கேற்றனர். போட்டி நடுவராக இலங்கையைச் சேர்ந்த ரன்ஜன்மடுகல்ல பணியாற்றினார்.

இறுதிப் போட்டி[தொகு]

ஆத்திரேலியா அணியின் துடுப்பாட்டம்[தொகு]

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர் நிறைவில் 2 விக்கட் இழப்பிற்கு 359 ஓட்டங்களைப் பெற்றது.

 • அடம் கில்கிறிஸ்ட் (பிடி) வீரேந்தர் சேவாக் (ப) ஹர்பஜன் சிங் - 57
 • எம். எல். ஹெய்டின் (பிடி) டார்விட் (ப) ஹர்பஜன் சிங் - 37
 • றிக்கி பொன்டிங் (ஆட்டமிழக்காமல்) - 140
 • டி.ஆர். மார்ட்டின் (ஆட்டமிழக்காமல்) - 88

உதிரிகள் - 37

மொத்தம் 50 ஓவர் நிறைவில் 2 விக்கட் இழப்பிற்கு 359 ஓட்டங்கள்

ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-105 (கில்கிறிஸ்ட், 13.6), 2-125 (ஹெய்டின், 19.5 )

துடுப்பெடுத்து ஆடாதவர்கள் டரன் லேமன், மைக்கல் பெவன், ஏ. சீமொன், ஜீ.பி. ஹோக், ஏ.ஜே. பிஹேல், பிரட்லீ, கிளென் மெக்ரா

இந்தியா அணியின் பந்து வீச்சு

 • சாகீர் கான் 7 - 0 - 67 - 0
 • ஜே. சிரிசாந் 10 - 0 - 87 - 0
 • ஆஷீஸ் நேரா 10 - 0 - 57 - 0
 • ஹர்பஜன் சிங் 8 - 0 - 49 - 2
 • சச்சின் டெண்டுல்கர் 3 - 0 - 20 - 0
 • மொங்கியா 7 - 0 - 39 - 0
 • யுவராஜ் சிங் 2 - 0 - 12 - 0

இந்தியா அணியின் துடுப்பாட்டம்[தொகு]

இந்தியா அணி 39.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

 • சச்சின் டெண்டுல்கர் (பிடி) (ப) கிளென் மெக்ரா - 4
 • வீரேந்தர் சேவாக் (ஓடுகையில் ஆட்டமிழந்தமை) (டரன் லேமன்) - 82
 • கங்குலி (பிடி) டரன் லேமன் (ப) பிரட்லீ - 24
 • மொகமட் கைப் (பிடி) கில்கிறிஸ்ட் (ப) கிளென் மெக்ரா - 0
 • டார்விட் (ப) பிஹேல் - 47
 • யுவராஜ் சிங் (பிடி) பிரட்லீ (ப) ஜீ.பி. ஹோக் - 24
 • மொங்கியா (பிடி) மார்ட்டின் (ப) ஏ. சீமொன் 12
 • ஹர்பஜன் சிங் (பிடி) கிளென் மெக்ரா (ப) ஏ. சீமொன் - 7
 • சாகீர் கான் (பிடி) டரன் லேமன் (ப) கிளென் மெக்ரா - 4
 • ஜே. சிரிசாந் (ப) பிரட்லீ - 1
 • ஆஷீஸ் நேரா (ஆட்டமிழக்காமல்) - 8

உதிரிகள் - 21

மொத்தம் 39.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்கள்

ஆட்டமிழந்த ஒழுங்கு: (சச்சின் டெண்டுல்கர், 0.5), 2-58 (கங்குலி, 9.5), 3-59 (மொகமட் கைப், 10.3), 4-147 (வீரேந்தர் சேவாக், 23.5), 5-187 (டார்விட், 31.5), 6-208 (யுவராஜ் சிங், 34.5), 7-209 (மொங்கியா, 35.2), 8-223 (ஹர்பஜன் சிங், 37.1), 9-226 (ஜே. சிரிசாந், 38.2), 10-234 (சாகீர் கான், 39.2)

ஆத்திரேலியா அணியின் பந்து வீச்சு

 • கிளென் மெக்ரா 8.2 - 0 - 52 - 3
 • பிரட்லீ 7 - 1 - 31 - 2
 • ஜீ.பி. ஹோக், 10 - 0 - 61 - 1
 • டரன் லேமன் 2 - 0 - 18 - 0
 • ஏ.ஜே. பிஹேல் 10 - 0 - 57 - 1
 • ஏ. சீமொன் 2 - 0 - 7 - 2

முடிவு[தொகு]

23 மார்ச் 2003
Scorecard
ஆத்திரேலியா Flag of Australia (converted).svg
359/2 (50 ஓவர்கள்)
Flag of India.svg இந்தியா
234 (39.2 ஓவர்கள்)
ரிக்கி பொண்டிங் 140* (121)
ஹர்பஜன் சிங் 2/49 (8)
விரேந்தர் சேவாக் 82 (81)
கிளென் மெக்ரா 3/52 (8.2)
Flag of Australia (converted).svg ஆத்திரேலியா 125 ஓட்டங்களால் வெற்றி
வாண்டரர்ஸ் அரங்கம், தென்னாப்பிரிக்கா
நடுவர்கள்: ஸ்டீவ் பக்நோர், டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: ரிக்கி பொண்டிங் (ஆத்திரேலியா)

இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 125 ஓட்டங்களினால் இந்தியா அணியை வெற்றி கொண்டு 2வது தடவையாகவும் உலக துடுப்பாட்டக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது. போட்டியில் ஆட்டநாயகனாக ரிக்கி பாண்டிங் தெரிவானார். தொடர் ஆட்ட நாயனாக சச்சின் டெண்டுல்கர் தெரிவானார்.