துடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2007 உலகக்கிண்ண அணித்தலைவர்கள்.

துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் பல்வேறு அணிகளின் ஆட்டத்திறன் இங்கு சுருக்கமாக அளிக்கப்படுகிறது.

அறிமுக அணிகள்[தொகு]

1975:ஆத்திரேலியா, கிழக்கு ஆபிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாக்கித்தான், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள்

1979:கனடா

1983:சிம்பாப்வே

1987:ஒருவரும் இல்லை

1992:தென்னாபிரிக்கா

1996:கென்யா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம்

1999:வங்காளதேசம், இசுக்காட்லாந்து

2003:நமீபியா

2007:பெர்முடா, அயர்லாந்து

அணிகளின் ஆட்டத்திறன்[தொகு]

2007 உலகக்கிண்ணத்தின் பின்னர் அணிகளின் நிலைகுறித்த வரைபடம்

இதுவரை 19 அணிகள் ஒருமுறையேனும் உலகக்கிண்ணப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன.இவற்றில் ஏழு அணிகள் அனைத்து உலகக்கிண்ணங்களிலும் பங்கெடுத்துள்ளன. ஐந்து அணிகள் மட்டுமே வென்றுள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இரு உலகக்கிண்ணங்களையும் ஆத்திரேலியா நான்கு (1987, 1999, 2003 மற்றும் 2007) முறையும் தெற்காசிய அணிகள் மூன்று (இந்தியா:1983, பாக்கித்தான்:1992, இலங்கை:1996) முறையும் வென்றுள்ளன. மேற்கிந்தியத் தீவுகளும் ஆத்திரேலியா அணிகள் மட்டுமே தொடர்ந்து இருமுறையாக (மே.தீ:1975,1979;ஆசி:1999,2003,2007) கிண்ணத்தை வென்றுள்ளன. நடந்துள்ள ஒன்பது உலகக்கிண்ணங்களில் ஆறில் இறுதி ஆட்டத்தில் ஆடிய பெருமை ஆத்திரேலியாவிற்கு மட்டுமே உண்டு. இங்கிலாந்து அணி மட்டுமே மூன்று முறை இறுதி ஆட்டத்தில் ஆடியும் கிண்ணத்தை வெல்லவில்லை. தேர்வுத் துடுப்பாட்டம் ஆடாத நாடுகளில் கென்யா மட்டுமே 2003 கிண்ணத்தில் அரையிறுதி ஆட்டம் வரை முன்னேறியது.

உலகக்கிண்ணப் போட்டிகளை தனியாகவோ பிறநாடுகளுடன் இணைந்தோ ஏற்று நடத்திய நாடுகளில் இலங்கையைத் தவிர (1996ஆம் ஆண்டு இணைந்து நடத்தி கிண்ணத்தையும் வென்றது) வேறெந்த நாடும் கிண்ணத்தை வெல்ல இயலவில்லை. இங்கிலாந்து 1979ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் இறுதி ஆட்டம் வரை சென்றது. இவை இரண்டையும் தவிர உலககிண்ணத்தில் சிறந்த முடிவுகளை எட்டிய "நடாத்திய நாடுகள்":நியூசிலாந்து அரையிறுதி (1992), சிம்பாப்வே சூப்பர் ஆறு (2003), கென்யா அரையிறுதி (2003). 1987ஆம் ஆண்டில் இணைந்து ஏற்று நடாத்திய நாடுகளான இந்தியாவும் பாக்கித்தானும் அரையிறுதி வரை வந்தபின்னும் முறையே ஆத்திரேலியா, இங்கிலாந்திடம் தோற்று இறுதி ஆட்டத்தில் இடம் பெறவில்லை.

ஏமாற்றங்கள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்ட நாடுகளுக்கும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆடாத நாடுகளுக்கும் இடையே பண முதலீடு, ஆட்டத்திறன் காரணமாக மிகுந்த இடைவெளி உள்ளதால், தேர்வு ஆடாத நாடுகள் தேர்வு ஆடும் நாடுகளை வெல்வது கடினம். பெரும்பாலும் இத்தகைய ஆட்டத்திறன் துணை அங்கத்தினர் நாடுகளை தேர்வுநிலை நாடாக உயர்த்திக்கொள்ள பயன்படும் (இலங்கை,சிம்பாப்வே மற்றும் வங்காளதேசம்). முழு அங்கத்தினர் நாடுகள் நேரடியாக உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெறுவர். துணை அங்கத்தினர் நாடுகள் தகதிநிலைப் போட்டிகளில் வெற்றி பெற்றே விளையாட முடியும் (2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் கென்யா ஓர் விதிவிலக்கு). இவ்வாறான துணை அங்கத்தினர் நாடுகள் முழு அங்கத்துவ நாடுகளை 11 முறை வென்றுள்ளனர்.

Flag of Sri Lanka.svg இலங்கை எதிர் Flag of India.svg இந்தியா, 1979 - இலங்கை 47 ஓட்டங்களில் வென்றது. ஓர் தேர்வுநிலை நாட்டை துணை அங்கத்துவ நாடொன்று வென்றது முதல்முறையாகும். இலங்கை பல ஆண்டுகள் கழித்தே தேர்வுநிலை நாடாக முன்னேறியது.

Flag of Zimbabwe.svg சிம்பாப்வே எதிர் Flag of Australia (converted).svg ஆத்திரேலியா, 1983 - சிம்பாப்வே 13 ஓட்டங்களில் வென்றது. வரலாற்றின் மிகப்பெரும் ஏமாற்றமான இதற்கு பின்னாளில் இங்கிலாந்து பயிற்சியாளராகப் பணியாற்றிய டங்கன் பிளெட்சர் (69* and 4-42) காரணமாக அமைந்தார்.

Flag of Zimbabwe.svg சிம்பாப்வே எதிர் Flag of England.svg இங்கிலாந்து, 1992 - சிம்பாப்வே 9 ஓட்டங்களில் வென்றது. சிம்பாப்வே தங்கள் 1983ஆம் ஆண்டு அறிமுக பன்னாட்டு போட்டியிலேயே ஆத்திரேலியாவை வென்றபிறகு 18 தோல்விகளை கண்டு பெற்ற முதல் வெற்றி. சிம்பாப்வேயிற்கு 1992ஆம் ஆண்டு தேர்வுநிலை கிடைத்தது.

Flag of Kenya.svg கென்யா எதிர் WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள், 1996 - கென்யா 73 ஓட்டங்களில் வென்றது. முழுவதும் தொழில்சாரா துடுப்பாட்டக்காரர்களைக் கொண்ட துடுப்பாட்ட பயிற்சி இல்லாத அணி உலகக்கிண்ணத்தை இருமுறை வென்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியை வென்றது.

Flag of Bangladesh.svg வங்காளதேசம் எதிர் Flag of Pakistan.svg பாக்கித்தான், 1999 - வங்காளதேசம் 62 ஓட்டங்களில் வென்றது. மிகவும் ஏமாற்றத்தை அளித்த முடிவு.போட்டி சூதாடிகளால் முடிவு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.வங்காளதேசத்திற்கு அவ்வாண்டில் தேர்வுநிலை வழங்கப்பட்டது.

Flag of Kenya.svg கென்யா எதிர் Flag of Sri Lanka.svg இலங்கை, 2003 - கென்யா 53 ஓட்டங்களில் வென்றது. கென்யாவின் ஒரே தாய்நாட்டு உலகக்கிண்ண ஆட்டத்தில் காலின்சு ஓபுயாவின் சிறப்பான பந்துவீச்சில் (5/24) வெற்றி கிடைத்தது..

Flag of Canada.svg கனடா எதிர் Flag of Bangladesh.svg வங்காளதேசம் , 2003 - கனடா 60 ஓட்டங்களில் வென்றது. இதுவே உலகக்கிண்ணத்தில் கனடாவின் முதல் வெற்றியாகும். ஆட்ட நாயகன் கனடாவின் ஆசுடீன் கொட்ரிங்டன் வீசிய 9 ஓவர்களில் மூன்றில் ஓட்டங்கள் ஏதும் கொடுக்காது 5/27 என்ற புள்ளிகளில் விக்கெட்களை வீழ்த்தினார்[1].

Flag of Kenya.svg கென்யா எதிர் Flag of Bangladesh.svg வங்காளதேசம், 2003 - கென்யா 32 ஓட்டங்களில் வென்றது. கென்யா சுரத்தில்லாத வங்காளதேச அணியை வென்று சூப்பர் ஆறு சுற்றுக்கு முன்னேறினர்.

Flag of Kenya.svg கென்யா எதிர் Flag of Zimbabwe.svg சிம்பாப்வே, 2003 - கென்யா 7 விக்கெட்களில் வென்றனர். கென்யா சர்ச்சைகளால் வலுவிழந்த சிம்பாப்வே அணியை வென்று அரையிறுதிக்கு முன்னேறினர். தேவதை அருள்பெற்ற கதைபோல கென்யாவிற்கு எந்தவொரு புரவலர் ஆதரவும் இன்றி இந்தியாவுடனான அரையிறுதிப் போட்டிக்கு குடும்பத்தினரை வரவழைக்க பயணச்சீட்டுகள் வாங்கக்கூட துன்பப்பட்டனர்.

Four Provinces Flag.svg அயர்லாந்து எதிர் Flag of Pakistan.svg பாக்கித்தான், 2007 - அயர்லாந்து மூன்று விக்கெட்களில் வென்றது. இந்த முடிவு போட்டிகள் துவங்கிய நான்காம் நாளிலேயே பாக்கித்தானை போட்டியிலிருந்தே வெளியேற்றியது. உலகக்கிண்ண வரலாற்றிலேயே ஓர் மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்த ஆட்டத்தில் அயர்லாந்தின் நியல் ஓ'பிரியன் (72) இலக்கைத் துரத்தியது மிகுந்த பரபரப்பாக இருந்தது. பாக்கித்தானின் துயரத்தை கூட்டும்விதமாக அடுத்த நாளே அவ்வணியின் பயிற்றுனர் பாப் ஊல்மர் அவரது தங்குவிடுதியில் கொலை செய்யப்பட்டார்.

Four Provinces Flag.svg அயர்லாந்து எதிர் Flag of Bangladesh.svg வங்காளதேசம், 2007 - அயர்லாந்து 74 ஓட்டங்களில் வென்றது.

கண்ணோட்டம்[தொகு]

கீழ்வரும் அட்டவணையில் பல உலகக்கிண்ணங்களில் பங்குபெற்ற அணிகளின் ஆட்டத்திறன் பட்டியலிடப்பட்டுள்ளது. முதலில் சிறப்பாக ஆடிய அணிகள், பின்னர் மொத்த வெற்றிகள், பின்னர் மொத்த ஆட்டங்கள், பின்னர் அகரவரிசையில் அமைக்கப்பட்டுள்ளன.

அணி தோற்றங்கள் சிறந்த முடிவு புள்ளிவிவரம்
மொத்தம் முதல் மிக அண்மைய விளையாடியது வென்றது தோற்றது சமம் முடிவில்லை
Flag of Australia (converted).svg ஆத்திரேலியா 9 1975 2007 வாகையாளர் (1987, 1999, 2003, 2007) 69 51 17 1 0
WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் 9 1975 2007 வாகையாளர் (1975, 1979) 57 35 21 0 1
Flag of India.svg இந்தியா 9 1975 2007 வாகையாளர் (1983) 58 32 25 0 1
Flag of Pakistan.svg பாக்கித்தான் 9 1975 2007 வாகையாளர் (1992) 56 30 24 0 2
Flag of Sri Lanka.svg இலங்கை 9 1975 2007 வாகையாளர் (1996) 57 25 30 1 1
Flag of England.svg இங்கிலாந்து 9 1975 2007 இரண்டாமிடம் (1979, 1987, 1992) 59 36 22 0 1
Flag of New Zealand.svg நியூசிலாந்து 9 1975 2007 அரையிறுதி (1975, 1979, 1992, 1999,2007) 62 35 26 0 1
Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா 5 1992 2007 அரையிறுதி (1992, 1999, 2007) 40 26 12 2 0
Flag of Kenya.svg கென்யா 4 1996 2007 அரையிறுதி (2003) 23 6 16 0 1
Flag of Zimbabwe.svg சிம்பாப்வே 7 1983 2007 சூப்பர் ஆறு (1999, 2003) 45 8 33 1 3
Flag of Bangladesh.svg வங்காளதேசம் 3 1999 2007 சூப்பர் 8 (2007) 20 5 14 0 1
Four Provinces Flag.svg அயர்லாந்து 1 2007 2007 சூப்பர் 8 (2007) 9 2 6 1 0
Flag of Canada.svg கனடா 3 1979 2007 சுற்று 1 12 1 11 0 0
Flag of the Netherlands.svg நெதர்லாந்து 3 1996 2007 சுற்று 1 14 2 12 0 0
Flag of Scotland.svg இசுக்காட்லாந்து 2 1999 2007 சுற்று 1 8 0 8 0 0
Flag of Bermuda.svg பெர்முடா 1 2007 2007 சுற்று 1 3 0 3 0 0
Flag of Namibia.svg நமீபியா 1 2003 2003 சுற்று 1 6 0 6 0 0
Flag of the United Arab Emirates.svg ஐக்கிய அரபு அமீரகம் 1 1996 1996 சுற்று 1 5 1 4 0 0
கிழக்கு ஆபிரிக்கா 1 1975 1975 சுற்று 1 3 0 3 0 0

அணிகளின் முடிவுகள்[தொகு]

உலகக்கிண்ணத்தில் அணிகளின் அனைத்து முடிவுகளும். கீழேயுள்ள குறிப்புகளைக் காண்க.

அணி 1975 1979 1983 1987 1992 1996 1999 2003 2007 2011
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்தின் கொடி இந்தியாவின் கொடி
பாக்கித்தானின் கொடி
ஆத்திரேலியாவின் கொடி
நியூசிலாந்து கொடி
இந்தியாவின் கொடி/பாக்கித்தானின் கொடி
இலங்கையின் கொடி
இங்கிலாந்தின் கொடி தென்னாப்பிரிக்கா கொடி பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளின் கொடி இந்தியாவின் கொடி/இலங்கையின் கொடி
வங்காளதேசத்தின் கொடி
Flag of Australia (converted).svg ஆத்திரேலியா 2வது R1 R1 1வது R1 2வது 1வது 1வது 1வது Q
Flag of Bangladesh.svg வங்காளதேசம்             R1 R1 S8 Q
Flag of Bermuda.svg பெர்முடா                 R1
Flag of Canada.svg கனடா   R1           R1 R1 Q
கிழக்கு ஆபிரிக்கா R1                  
Flag of England.svg இங்கிலாந்து SF 2வது SF 2வது 2வது QF R1 R1 S8 Q
Flag of India.svg இந்தியா R1 R1 1வது SF R1 SF S6 2வது R1 Q
Four Provinces Flag.svg அயர்லாந்து                 S8 Q
Flag of Kenya.svg கென்யா           R1 R1 SF R1 Q
Flag of Namibia.svg நமீபியா               R1  
Flag of the Netherlands.svg நெதர்லாந்து           R1   R1 R1 Q
Flag of New Zealand.svg நியூசிலாந்து SF SF R1 R1 SF QF SF S6 SF Q
Flag of Pakistan.svg பாக்கித்தான் R1 SF SF SF 1வது QF 2வது R1 R1 Q
Flag of Scotland.svg இசுக்காட்லாந்து             R1    
Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா         SF QF SF R1 SF Q
Flag of Sri Lanka.svg இலங்கை R1 R1 R1 R1 R1 1வது R1 SF 2வது Q
Flag of the United Arab Emirates.svg ஐக்கிய அரபு அமீரகம்           R1      
WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் 1வது 1வது 2வது R1 R1 SF R1 R1 S8 Q
Flag of Zimbabwe.svg சிம்பாப்வே     R1 R1 R1 R1 S6 S6 R1 Q

குறிப்புகள்[தொகு]

  • 1வது - வாகையாளர்
  • 2வது - இரண்டாமிடம்
  • SF - அரையிறுதி
  • S8 - சூப்பர் 8 சுற்று
  • S6 - சூப்பர் 6 சுற்று (1999–2003)
  • QF - காலிறுதி (1996 மட்டும்)
  • R1 - முதல் சுற்று
  • Q - எதிர்வரும் போட்டிக்கு தகுதி பெற்றவர்

மேற்கோள்கள்[தொகு]