2009 பதுஅ உலககிண்ண தகுநிலைப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2009 பதுஅ உலககிண்ண தகுநிலைப் போட்டிகள்
ICCT Scd FC.jpg
அலுவல்முறை சின்னம்
நிர்வாகி(கள்) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வகை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
(ஆறு முதல்சுற்று ஆட்டங்கள், 3வது/5வது
இடத்திற்கான போட்டி மற்றும் இறுதிப்போட்டி)
பட்டியல் அ துடுப்பாட்டம்
(அனைத்துப் பிற ஆட்டங்கள்)
போட்டித்தொடர் வகை தொடர் சுழல்முறை மற்றும் வெளியேற்றம்
நடத்துனர்(கள்) தென்னாப்பிரிக்கா கொடி தென்னாபிரிக்கா
வெற்றியாளர் அயர்லாந்து
பங்குபெற்றோர் 12
போட்டிகள் 54
தொடர் நாயகன் எட்கர் சைஃபியர்லி
கூடிய ஓட்டங்கள் டேவுட் ஹெம்ப் 557
கூடிய இலக்குகள் எட்கர் சைஃபியர்லி 24

2009 பதுஅ உலகக்கிண்ண தகுநிலைப் போட்டிகள் ஏப்ரல் 2009ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற ஓர் துடுப்பாட்டப் போட்டியாகும். இது 2011 உலகக்கிண்ணத்திற்கான இறுதி தகுநிலைப் போட்டியாகும்.

முன்பு பதுஅ கோப்பை என அறியப்பட்ட போட்டிகளின் மறுபதிப்பான இப்போட்டிகள் 2007-09 உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகளின் இறுதிப் போட்டிகளாகும்.

அணிகள்[தொகு]

முந்தைய உலகக்கிண்ண ஆட்டத்தின் மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் பங்குகொள்ள தகுதிபெற்றவையும் மற்றும் உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகளின் முதல் கோட்டத்தில் இருப்பவையுமான கீழ்வரும் நாடுகள் நேரடியாகத் தகுதி பெற்றன.

 • பெர்முடா
 • கனடா
 • அயர்லாந்து
 • கென்யா
 • நெதர்லாந்து
 • இசுகாட்லாந்து
 • 2007 பதுஅ உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகள் கோட்டம் இரண்டு வழியே உயர்வு பெற்றவை:
 • ஐக்கிய அரபு அமீரகம்
 • ஓமன்
 • நமீபியா
 • டென்மார்க்
 • 2009 பதுஅ உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகள் கோட்டம் மூன்று வழியே உயர்வு பெற்றவை:
 • ஆஃப்கானிஸ்தான்
 • உகாண்டா

இந்தப் போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகள் 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றவர்கள் ஆகின்றனர். முதல் ஆறு இடங்களில் உள்ள அணிகள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆடும் தகுதியை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குப் பெறுகின்றனர் அல்லது அந்நிலையைத் தக்கவைத்துக் கொள்கின்றனர்; மேலும் இந்த ஆறு அணிகள் பதுஅ பெருநிலப்பகுதி கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கும் தகுதி பெறுகின்றனர். கடைசி இரண்டு அணிகள் 2011 பதுஅ உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகள் கோட்டம் மூன்றிற்கு கீழிறக்கப்படுகின்றன. இப்போட்டிகளின் இறுதி ஆட்டமும் மூன்றாவது, ஐந்தாவது இடத்திற்கான ஆட்டங்களும் அலுவல்முறை ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்டங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

முடிவுகள்[தொகு]

அயர்லாந்து 2011 உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்கெடுக்க தகுநிலை பெற்றது. இறுதிப்போட்டியில் கனடாவை. வென்றது.[1] அவர்களுடன் கனடா, நெதர்லாந்து மற்றும் கென்யா அணிகள் தகுதி பெற்றன.

ஆப்கானிஸ்தான் மற்றும் இசுகாட்லாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றன; அத்துடன் ஐந்தாவது இடத்திற்கு அவர்களிடையே நடந்த ஆட்டத்தில் [2] ஆப்கானிஸ்தான் வென்றது. இதன் மூலம் ஒரே ஆண்டில் உலக கோட்டம் ஐந்திலிருந்து ஒருநாள் பன்னாட்டத் துடுப்பாட்டம் ஆடும் தகுநிலை வரை முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்தது.

இறுதி நிலவரம்[தொகு]

இடம் அணி உயர்வு/கீழிறக்கம்
1st Cricket Ireland flag.svg அயர்லாந்து 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஆட தகுதி மற்றும் ஒ.ப.து நிலை (4 ஆண்டுகள்) மற்றும் 2009–10 பதுஅ பெருநிலப்பகுதி கிண்ணம்தகுதி
2வது Flag of Canada.svg கனடா
3வது Flag of the Netherlands.svg நெதர்லாந்து
4வது Flag of Kenya.svg கென்யா
5வது Flag of Afghanistan.svg ஆப்கானித்தான் ஒ.ப.து நிலை (4 ஆண்டுகள்) மற்றும் 2009–10 பதுஅ பெருநிலப்பகுதி கிண்ணம் தகுதி
6வது Flag of Scotland.svg இசுக்காட்லாந்து
7வது Flag of the United Arab Emirates.svg ஐக்கிய அரபு அமீரகம் கீழிறக்கம்: 2011 பதுஅ உலக துடுப்பாட்ட சங்கப்போட்டி கோட்டம் இரண்டு மற்றும் 2009–10 பதுஅ பெருநிலப்பகுதி கேடயம் தகுதி
8வது Flag of Namibia.svg நமீபியா
9வது Flag of Bermuda.svg பெர்முடா
10வது Flag of Uganda.svg உகாண்டா
11வது Flag of Oman.svg ஓமான் 2011 பதுஅ உலக துடுப்பாட்ட சங்கப்போட்டி கோட்டம் மூன்றிற்கு கீழிறக்கம்
12வது Flag of Denmark.svg டென்மார்க்

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. BBC Sport
 2. http://content.cricinfo.com/iccwcq2009/content/current/story/400117.html