ஒற்றை வெளியேற்றப் போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒற்றை வெளியேற்றப் போட்டி நிகழ்ச்சிநிரலுக்கான ஓர் காட்டு

ஓர் ஒற்றை-வெளியேற்றப் போட்டியில், (single-elimination tournament ,knockout, cup அல்லது sudden death tournament), ஒவ்வொரு ஆட்டத்தின் தோற்ற போட்டியாளரும் போட்டியிலிருந்து உடனடியாக விலக்கப்படுகின்ற வகையில் அமைக்கப்படும் போட்டியாகும். இது தோற்ற போட்டியாளர் இனி போட்டியின் எந்தவொரு ஆட்டத்திலும் பங்கு கொள்ள மாட்டார் என்றில்லை: சில போட்டிகளில் ஆறுதல் பரிசுக்காகவும் தோற்றவரிடையே முதலிரு நிலைகளை அடுத்த வரிசைகளைத் தீர்மானிக்கவும் தோற்றப் போட்டியாளர்களிடையே ஆட்டங்கள் நடத்தப்படுவதுண்டு.

இரட்டை வெளியேற்றப் போட்டியில் ஒருவர் இருமுறை தோற்றால் போட்டியிலிருந்து விலக்கப்படுவர்.