ஓமான் துடுப்பாட்ட அணி
ஓமான் | |
ஐ.சி.சி. உறுபினரானது | 2000 |
ஐ.சி.சி. உறுப்பினர் தகுதி | இணைந்தது |
ஐ.சி.சி. அபிவிருத்தி பிரதேசம் | ஆசியத் துடுப்பாட்ட அவை |
தலைவர் | சுல்தான் அகமது |
ஐ.சி.சி. துடுப்பாட்ட லீக் பிரிவு | 2016 டிவிசன் நான்கு |
பிரதேச தொடராட்ட பிரிவு | {{{regional_tournament_division}}} |
முதக் போட்டி | ஓமான் எ. UAE (சிங்கப்பூர்; 10 சூலை 2002) |
தகவல்கள் 14 செப்டம்பர் 2015 நாளின் படியானவை |
ஓமான் தேசியத் துடுப்பாட்ட அணி (Oman national cricket team) பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஓமான் சுல்தானகத்தின் சார்பாக விளையாடும் அணியாகும். ஓமான் துடுப்பாட்ட வாரியம் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் (ICC) இணைநிலை உறுப்பினராக 2000இல் ஏற்கப்பட்டது; 2014இல் துணைநிலைத் தகுதியை எட்டியது. இந்த தேசிய அணி பட்டியல்-அ மற்றும் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றது.
ஓமானின் முதல் போட்டித்தர ஆட்டங்கள் 2002இல் நிகழ்ந்தன.அது முதல் தேர்வுநிலை அல்லாத பெரும்பாலான ஆசியத் துடுப்பாட்ட அவை போட்டிகளில் விளையாடி வருகின்றது. 2004ஆம் ஆண்டில் ஆசிய ஒருநாள் கோப்பையில் இரண்டாவதாக வந்தது. ஆ.து.அ இருபது20 கோப்பையை இருமுறை வென்றுள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகளில் இருமுறை தகுதிநிலைச் சுற்றுக்களில் பங்கேற்றுள்ளது; இருமுறையும் அடுத்தநிலைச் சுற்றுகளுக்கு முன்னேறவில்லை. 2005ஆம் ஆண்டில் ஒன்பதாவது நிலையையும் 2009 உலக்க் கிண்ண தகுநிலைப் போட்டியில் 11ஆவதாகவும் வந்தது. Oman has also participated in the qualification process for the உலக இருபது20 தகுநிலைக்கும் முயன்று தோல்வியுற்றது. 2012இல் 15ஆவது நிலையில் இருந்தது.
ஓமானில் பெரும்பாலும் இந்தியா, பாக்கித்தானிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் துடுப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர். 2010இல் தேசிய லீக் போட்டிகளில் விளையாடிய 780 விளையாட்டு வீரர்களில் 100 பேரே உள்நாட்டு அரபிகளாவர்.[1] இது தேசிய அணியிலும் பிரதிபலிக்கின்றது. அராபியர்களிடையே துடுப்பாட்டத்தை பரவலாக்க அவர்களுக்கு சங்கங்கள் நிலையிலும் தேசிய அணியிலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சூலை 2015இல் நமீபியா துடுப்பாட்ட அணியை 2015 உலக இருபது20 தகுநிலை ஆட்டத்தில் வென்று பன்னாட்டு இருபது20 தகுதியையும் இந்தியாவில் நடைபெறும் 2016 T20 உலகக் கிண்ணதில் பங்கேற்கும் தகுதியையும் பெற்றது.[2]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ (27 July 2011). "More men in Oman" – Asian Cricket Council. Retrieved 1 February 2015.
- ↑ "Oman secure World T20 spot with memorable win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 July 2015.