பன்னாட்டு இருபது20
பன்னாட்டு இருபது20 (Twenty20 International அல்லது T20I)என இரு நாடுகளின் தேசியத் துடுப்பாட்ட அணிகளிடையே ஓரணிக்கு 20 ஓவர்கள் என்ற வடிவத்தில் ஆடப்படும் துடுப்பாட்ட வகை ஆகும். இது இருபது20 துடுப்பாட்ட விதிகளின்படி ஆடப்படுவதாகும். முதல் பன்னாட்டு இருபது20 17 பிப்ரவரி 2005 அன்று ஆத்திரேலியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையே ஆக்லாந்தில் உள்ள ஈடன் பூங்காவில் நடைபெற்றது. ஆத்திரேலியா 44 ஓட்டங்களில் வென்றது.
பன்னாட்டு இருபது20 அணிகள்
[தொகு]ஒவ்வொரு நாடும் பன்னாட்டுப் போட்டியொன்றில் முதலில் பங்கெடுத்த நாள் அடைப்புக் குறிக்குள் காட்டப்பட்டுள்ளது.
- ஆத்திரேலியா (17 பிப்ரவரி, 2005)
- நியூசிலாந்து (17 பிப்ரவரி, 2005)
- இங்கிலாந்து (13 சூன், 2005)
- தென்னாப்பிரிக்கா (21 அக்டோபர், 2005)
- மேற்கிந்தியத் தீவுகள் (16 பிப்ரவரி, 2006)
- இலங்கை (15 சூன், 2006)
- பாக்கித்தான் (28 ஆகத்து, 2006)
- வங்காளதேசம் (28 நவம்பர், 2006)
- சிம்பாப்வே (28 நவம்பர், 2006)
- இந்தியா (1 திசம்பர், 2006)
- கென்யா (1 செப்டம்பர், 2007)
- இசுக்காட்லாந்து (12 செப்டம்பர், 2007)
- நெதர்லாந்து (2 ஆகத்து, 2008)
- அயர்லாந்து (2 ஆகத்து, 2008)
- கனடா (2 ஆகத்து, 2008)
- பெர்முடா (3 ஆகத்து, 2008)
- ஆப்கானித்தான் (2 பிப்ரவரி, 2010)
ப.து.அ உலக இருபது20
[தொகு]பதுஅ உலக இருபது20 போட்டிகள் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
- தென்னாபிரிக்கா 2007: இந்தியா - வாகையாளர், பாக்கித்தான் - இரண்டாமிடம்.[1]
- இங்கிலாந்து 2009: பாக்கித்தான் - வாகையாளர், இலங்கை - இரண்டாமிடம்.[2]
- மேற்கிந்தியத் தீவுகள் 2010: இங்கிலாந்து துடுப்பாட்ட அணி - வாகையாளர், ஆத்திரேலியா - இரண்டாமிடம்.
புள்ளிவிவரங்கள்
[தொகு]முடிவுகளின் மேலோட்டம்
[தொகு]தரவரிசை | அணி | ஆட்டங்கள் | வெற்றிகள் | தோல்விகள் | சமன்கள் | முடிவிலிகள் | வெற்றி % | புள்ளிகள் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | தென்னாப்பிரிக்கா | 37 | 25 | 12 | 0 | 0 | 67.57 | 126 |
2 | இலங்கை | 34 | 20 | 14 | 0 | 0 | 58.82 | 120 |
3 | பாக்கித்தான் | 45 | 27 | 17 | 1 | 0 | 61.11 | 118 |
4 | ஆத்திரேலியா | 39 | 21 | 16 | 1 | 1 | 56.58 | 113 |
5 | இந்தியா | 27 | 14 | 11 | 1 | 1 | 55.76 | 113 |
6 | இங்கிலாந்து | 34 | 17 | 15 | 0 | 2 | 53.12 | 107 |
7 | நியூசிலாந்து | 43 | 19 | 21 | 3 | 0 | 47.67 | 86 |
8 | மேற்கிந்தியத் தீவுகள் | 28 | 11 | 15 | 2 | 0 | 42.85 | 85 |
9 | சிம்பாப்வே | 14 | 3 | 10 | 1 | 0 | 25.00 | 45 |
10 | வங்காளதேசம் | 16 | 3 | 13 | 0 | 0 | 18.75 | 31 |
11 | நெதர்லாந்து | 10 | 6 | 3 | 0 | 1 | 66.66 | 23 |
12 | அயர்லாந்து | 17 | 7 | 8 | 0 | 2 | 46.66 | 14 |
13 | கனடா | 11 | 3 | 7 | 1 | 0 | 31.81 | 14 |
14 | ஆப்கானித்தான் | 8 | 4 | 4 | 0 | 0 | 50.00 | 10 |
15 | கென்யா | 12 | 4 | 8 | 0 | 0 | 33.33 | 8 |
16 | இசுக்காட்லாந்து | 12 | 2 | 9 | 0 | 1 | 18.18 | 5 |
17 | பெர்முடா | 3 | 0 | 3 | 0 | 0 | 00.00 | 0 |
Source: Cricinfo.com, last updated 09 January 2011, includes T20I #195 |
முடிவுகளின் விழுக்காடு 'முடிவிலிகளை' நீக்கியும் 'சமன்களுக்கு' வெற்றியில் பாதி புள்ளிகள் கொடுத்தும் கணக்கிடப்பட்டுள்ளது.
பௌல்அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்ட சமனில் முடிந்த ஆட்டங்களும் சமன் என்றே பட்டியலிடப்பட்டுள்ளன.
சாதனைகள்
[தொகு]- மிகக் கூடுதலான அணிப்புள்ளிகள்: 260/6, இலங்கையால் கென்யாவிற்கு எதிராக, 14 செப்டம்பர் 2007
- மிகக்கூடுதலான வெற்றி (ஓட்டங்கள் வேறுபாட்டால்): 172 ஓட்டங்கள், இலங்கையால் கென்யாவிற்கு எதிராக, 14 செப்டம்பர் 2007
- மிகக்கூடுதலான வெற்றி (விக்கெட்கள் வேறுபாட்டால்): 10 விக்கெட்கள் (58 பந்துகள் மீதமிருக்க), ஆத்திரேலியாவால் இலங்கைக்கு எதிராக, 20 செப்டம்பர் 2007
- மிகச்சிறந்த பந்துவீச்சு: 6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் , பாக்கித்தானின் உமர் குல், நியூசிலாந்திற்கு எதிராக, 13 சூன் 2009 [3]
- ஓர் ஆட்டத்தில் மிகக்கூடுதலான தனி மட்டையாளர் ஓட்டங்கள்: 117, மேற்கிந்தியத் தீவுகளின் கிரிஸ் கெய்ல், தென்னாபிரிக்காவிற்கு எதிராக, 11 செப்டம்பர் 2007
- மிகக் கூடுதலான கூட்டாட்டம்: 170, தென்னாபிரிக்காவின் கிரீம் ஸ்மித் மற்றும் லூட்ஸ் போஸ்மன் முதல் விக்கெட்டிற்காக, இங்கிலாந்திற்கு எதிராக, 15 நவம்பர் 2009 [4]
- தனி மட்டையாளரால் மிக விரைவான அரைசதம்: 12 பந்துகள், இந்தியாவின் யுவராஜ் சிங்கால் இங்கிலாந்திற்கு எதிராக , 19 செப்டம்பர் 2007
- தனி மட்டையாளரால் மிக விரைவான சதம்: 50 பந்துகள், மேற்கிந்தியத் தீவுகளின் கிரிஸ் கெய்ல் தென்னாபிரிக்காவிற்கு எதிராக, 11 செப்டம்பர் 2007, மற்றும் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் ஆத்திரேலியாவிற்கு எதிராக, 28 பிப்ரவரி 2010
- ஓர் ஓவரில் மிகக் கூடுதலான ஓட்டங்கள்: 36, இந்தியாவின் யுவராஜ் சிங், இங்கிலாந்திற்கு எதிராக, 19 செப்டம்பர் 2007
- ஓர் அணியின் ஆட்டத்தில் அடிக்கப்பட்ட மிகக் கூடுதலான ஆறுகள்: 17, தென்னாபிரிக்காவால் இங்கிலாந்திற்கு எதிராக, 15 நவம்பர் 2009[5]
- ஓர் தனி மட்டையாளரின் ஆட்டத்தில் கூடுதலான ஆறுகள்: 10, மேற்கிந்தியத் தீவுகளின் கிரிஸ் கெய்ல்,தென்னாபிரிக்காவிற்கு எதிராக, 11 செப்டம்பர் 2007
- முதல் ஒருசேர மூன்று விக்கெட்கள்: ஆத்திரேலியாவின் பிறெட் லீ, வங்காளதேசத்திற்கு எதிராக, 16 செப்டம்பர் 2007
- மிகப்பெரும் ஆறு: 123 மீட்டர்கள், இலங்கையின் திசாரா பெரேரா, ஆத்திரேலியாவிற்கு எதிராக, 31 அக்டோபர் 2010.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://news.bbc.co.uk/sport1/hi/cricket/7009035.stm
- ↑ http://news.bbc.co.uk/sport1/hi/cricket/8110649.stm
- ↑ http://news.bbc.co.uk/sport1/hi/cricket/8098274.stm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2011-01-17.
- ↑ BBC SPORT | Cricket | England | England handed Twenty20 thrashing
வெளியிணைப்புகள்
[தொகு]- NatWest International Twenty20 பரணிடப்பட்டது 2006-02-05 at the வந்தவழி இயந்திரம்