ஆசியத் துடுப்பாட்ட அவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசியத் துடுப்பாட்ட அவை
Asian Cricket Council
சுருக்கம்ACC
உருவாக்கம்19 செப்டம்பர் 1983 (1983-09-19)
நோக்கம்துடுப்பாட்ட நிருவாகம்
தலைமையகம்கொழும்பு, இலங்கை
உறுப்பினர்கள்
25 அவைகள்
ஆட்சி மொழிகள்
ஆங்கிலம்
தலைவர்
இந்தியா ஜெய் சா
துணைத் தலைவர்
ஓமான் பங்கச் கிம்சி
தாய் அமைப்பு
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
வலைத்தளம்www.asiancricket.org

ஆசியத் துடுப்பாட்டு வாரியம் (Asian Cricket Council; ACC) என்பது ஆசியாவில் துடுபாட்டத்தை மேம்படுத்த 1983 இல் தொடங்கப்பட்ட ஒரு துடுப்பாட்ட அமைப்பாகும். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு ஆசியக் கண்டத்தின் பிராந்திய நிர்வாக அமைப்பாகும். இதில் தற்போது 24 உறுப்பு நாடுகளின் துடுப்பாட்ட வாரியங்கள் அங்கத்துவம் பெற்றுள்ளன. ஜெய் சா இதன் தற்போதைய தலைவராக உள்ளார்.[1][2]

வரலாறு[தொகு]

1983 செப்டம்பர் 19 இல் புதுதில்லியில் இந்த அமைப்பு ஆசிய துடுப்பாட்ட மாநாடு என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இதன் ஆரம்பகால உறுப்பினர்கள் வங்காளதேசம், இந்தியா, மலேசியா, பாக்கித்தான், சிங்கப்பூர், இலங்கை ஆகியயாகும். 1995 இல் இதன் பெயர் ஆசியத் துடுப்பாட்ட அவை என மாற்றப்பட்டது. 2003 வரை, இதன் தலைமையகம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவையின் தலைவர்கள், செயலாளர்களின் சொந்த நாடுகளில் சுழற்சி முறையில் இருந்து வந்தது. இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் ஜெய் சா, இவர் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் செயலாளராகவும் உள்ளார்.

ஆசியக் கிண்ணம், ஆசியத் தேர்வு வாகை, ஏசிசி கிண்ணம், மற்றும் பல்வேறு போட்டிகள் உட்பட அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட போட்டிகளின் போது சேகரிக்கப்படும் தொலைக்காட்சி வருவாயில் இருந்து கிடைக்கப்பெறும் நிதியுதவி, அவையின் உறுப்பினர் நாடுகளில் பயிற்சி, நடுவர் தெரிவு மற்றும் விளையாட்டு மருத்துவ திட்டங்களை ஆதரிக்கும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு செலவழிக்கப்படுகிறது.

ஆசியத் துடுப்பாட அவையின் தற்போதைய தலைமையகம் இலங்கையின் கொழும்பில் 2017 ஆகத்து 20 இல் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.[3]

உறுப்பினர்கள்[தொகு]

ஆசியத் துடுப்பாட்ட அவையின் உறுப்பினர் சங்கங்கள் முழுமையான மற்றும் இணை உறுப்பினர்கள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் முழுமையான உறுப்ப்புரிமை உள்ளோருக்கு "முழு உறுப்பினர் தகுநிலை" வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பன்னாட்டு அவையில் இணை உறுப்பினர்களாக உள்ளோருக்கும், பன்னாட்டு அவையில் உறுப்பினர்களல்லாதோருக்கும் (கம்போடியா, தைவான், 2021 இல்) "இணை உறுப்பினர் தகுநிலை" வழங்கப்பட்டுள்ளது.[4] பிஜி, சப்பான், பப்புவா நியூ கினி ஆகியவை முன்பு ஆசிய அவையில் உறுப்பினர்களாக இருந்தன, ஆனால் 1996 இல் நிறுவப்பட்டபோது கிழக்காசிய-பசிபிக் பிராந்தியப் பேரவை தொடங்கியபோது, இந்த அவையில் இணைந்தன.[5]

முழு உறுப்புரிமை நாடுகள்[தொகு]

ஆசியத் துடுப்பாட்ட அவையின் தற்போதைய உறுப்பினர்கள்
இல. நாடு அவை ஐசிசி உறுப்புரிமை
(ஒப்புதல் நாள்)
ஐசிசி
உறுப்புரிமை
ஏசிசி
உறுப்புரிமை
1  இந்தியா இந்திய வாரியம் முழு (31 மே 1926) 1926 1983
2  பாக்கித்தான் பாக்கித்தான் வாரியம் முழு (28 சூலை 1952) 1952 1983
3  இலங்கை இலங்கை வாரியம் முழு (21 சூலை 1981) 1965 1983
4  வங்காளதேசம் வங்காளதேச வாரியம் முழு (26 சூன் 2000) 1977 1983
5  ஆப்கானித்தான் ஆப்கானித்தான் வாரியம் முழு (22 சூன் 2017) 2001 2003

துணைநிலை உறுப்பினர்கள் (ஒநாப, இ20ப தகுநிலையுடன்)[தொகு]

ஆசியத் துடுப்பாட்ட அவையின் தற்போதைய துணைநிலை உறுப்பினர்கள்
இல. நாடு ஐசிசி உறுப்புரிமை ஐசிசி
உறுப்புரிமை
ஏசிசி
உறுப்புரிமை
1  ஆங்காங் துணைநிலை 1969 1983
2  நேபாளம் துணைநிலை 1996 1990
3  ஓமான் துணைநிலை 2000 2000
4  ஐக்கிய அரபு அமீரகம் துணைநிலை 1990 1984

துணைநிலை உறுப்பினர்கள் (இ20ப தகுநிலையுடன்)[தொகு]

ஆசியத் துடுப்பாட்ட அவையின் தற்போதைய உறுப்பினர்கள்
இல. நாடு ஐசிசி உறுப்புரிமை ஐசிசி
உறுப்புரிமை
ஏசிசி
உறுப்புரிமை
1  பகுரைன் துணைநிலை 2001 2003
2  பூட்டான் துணைநிலை 2001 2001
3  சீனா துணைநிலை 2004 2004
4  ஈரான் துணைநிலை 2003 2003
5  குவைத் துணைநிலை 2003 2005
6  மலேசியா துணைநிலை 1967 1983
7  மாலைத்தீவுகள் துணைநிலை 1998 1996
8  மங்கோலியா துணைநிலை 2021 N/A
9  மியான்மர் துணைநிலை 2006 2005
10  கத்தார் துணைநிலை 1999 2000
11  சவூதி அரேபியா துணைநிலை 2003 2003
12  சிங்கப்பூர் துணைநிலை 1974 1983
13  தஜிகிஸ்தான் துணைநிலை 2021 2012
14  தாய்லாந்து துணைநிலை 2005 1996
15  கம்போடியா துணைநிலை 2022 2012

மங்கோலியா 2021 சூலை 18 அன்று ஐசிசி உறுப்பினராக அனுமதிக்கப்பட்டது, ஆனால் இன்னும் எந்த பிராந்திய அமைப்பின் உறுப்புரிமையையும் அது பெறவில்லை. இருப்பினும், ஆசிய நாடாக இருப்பதால், ஏசிசியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி உறுப்பினரல்லாதோர்[தொகு]

ஆசியத் துடுப்பாட்ட அவையின் தற்போதைய உறுப்பினர்கள்
இல. நாடு ஐசிசி உறுப்புரிமை ஐசிசி
உறுப்புரிமை
ஏசிசி
உறுப்புரிமை
1  சீனக் குடியரசு பொருத்தமில்லை 2012

கிழக்காசிய-பசிக்கில் இணைந்த முன்னாள் உறுப்பினர்கள்[தொகு]

கிழக்காசிய-பசிக்கில் இணைந்த முன்னாள் ஆசிய உறுப்பினர்கள்
இல. நாடு ஐசிசி உறுப்புரிமை ஐசிசி
உறுப்புரிமை
ஏசிசி
உறுப்புரிமை
1  பிஜி துணைநிலை 1965 1996
2  சப்பான் துணைநிலை 1989 1996
3  பப்புவா நியூ கினி துணைநிலை (ஒநாப தகுநிலை) 1973 1996

முன்னாள் உறுப்பினர்கள்[தொகு]

ஆசியத் துடுப்பாட்ட அவையின் முன்னாள் உறுப்பினர்கள்
இல. நாடு ஐசிசி உறுப்புரிமை ஐசிசி
உறுப்புரிமை
ஏசிசி
உறுப்புரிமை
1  புரூணை பொருத்தமில்லை 2002–2015 1996

வரைபடம்[தொகு]

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் ஆசிய உறுப்பினர்கள்.
     முழு ஐசிசி உறுப்பினர்கள் (5)
     துணைநிலை ஐசிசி உறுப்பினர்கள் (ஒநாப தகுநிலையுடன் (3))
     துணைநிலை ஐசிசி உறுப்பினர்கள் (15)
     ஐசிசி உறுப்பினரல்லாத ஏசிசி உறுப்பினர்கள் (2)
     முன்னாள் ஐசிசி உறுப்பினர்கள் (1)
     முன்னாள் ஏசிசி உறுப்பினர்கள் (தற்போதைய கிழக்காசிய-பசிபிக் உறுப்பினர்கள் (3) – பப்புவா நியூ கினி, பிஜி காட்டப்படவில்லை
     ஐசிசி உறுப்ப்னர்கள் (ஏனைய சங்கங்களின் உறுப்பினர்கள்)
     உறுப்பினரல்லாதோர்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]