உமர் குல்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | உமர் குல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.86 m (6 அடி 1 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு, மிதவிரைவு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 175) | ஆகத்து 20 2003 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சூலை 29 2010 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 145) | ஏப்ரல் 3 2003 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | செப்டம்பர் 22 2010 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் | செப்டம்பர் 4 2007 எ. கென்யா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2003– | பெசாவர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2006– | கபீப் வங்கி அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2009 | மேற்கு ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008 | வடக்கு கிழக்கு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2001–2006 | பாக்கிஸ்தான் எயார்லைன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 20 2010 |
உமர் குல் (Umar Gul, عمر ګل பஷ்தூ: عمرګلபிறப்பு: ஏப்ரல் 14 1984), ஒரு பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரர். பெசாவர் பிரதேசத்தில் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் பந்துவீச்சாளராவார்.[1][2] பாக்கிஸ்தான் தேசிய அணி, கபீப் வங்கி அணி, குளுசெஸ்டெயர்ஸ்செயார் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, பசாவார் அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். வலதுகை விரைவு வீச்சாளரான இவர் வலதுகை மட்டையாளராகவும் உள்ளார். பன்னாட்டு இருபது20 போட்டிகளின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவாராக அறியப்படுகிறார். 2007 ஐசிசி உலக இருபது20 மற்றும் 2009 ஐசிசி உலக இருபது20 தொடர்களில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.[3][4]
பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் தரவரிசையில் இவர் இரண்டாவது இடம் பிடித்தார். முதல் இடத்தில் சயீத் அஜ்மல் இருந்தார்.[5][6] பின் 101 இலக்குகள் வீழ்த்திய சாகித் அஃபிரிடி முதலிடம் பிடித்தார்.2013 ஆம் ஆண்டில் சிறந்த பன்னாட்டு இருபது20 வீரராகத் தேர்வானார்.[7]
அக்டோபர் , 2010 ஆம் ஆண்டில் துபாயில் உள்ள பெண் மருத்துவரை மணந்தார்.[8][9][10]
இந்தியன் பிரீமியர் லீக்
[தொகு]2008 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் இவரை 150,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.[11] இந்தத் தொடரில் மொத்தமாக 6 போட்டிகளில் விளையாடி 12 இலக்குகள் வீழ்த்தினார். இவரின் சராசரி 15,23 ஆகும். இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில்11 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்தார்[12]. மேலும் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 23 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 இலக்குகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.[13]
சர்வதேச போட்டிகள்
[தொகு]தேர்வுத் துடுப்பாட்டம்
[தொகு]2003 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . ஆகஸ்டு 24 இல் கராச்சியில் நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்ட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 20 ஓவர்கள் வீசி 91 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.இதில் 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.இதில் 5 ஓவர்களை மெய்டனாக வீசினார். இவரின் சராசரி 3.45 ஆகும். 7 பந்துகளை சந்தித்த இவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 19 ஓவர்கள் வீசி 57 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். 3 ஓவர்களை மெய்டனாக வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[14] பின் பாக்கித்தான் அணி தென்னாப்பிரிகாவில் சுற்றுப் பயணம் செய்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. இதன் இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியி பெப்ரவரி 14, கேப் டவுனில் நடைபெற்றது .இந்தப் போட்டியில் 9 பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் பிலாண்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில்20 ஓவர்கள் வீசி 54 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 5 ஓவர்களை மெய்டனாக வீசினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 10 ஓவர்கள் வீசி 35 ஓட்டங்கள் எடுத்து 1 ஓவரை மெய்டனாக வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 4 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[15]
சான்றுகள்
[தொகு]- ↑ "Umar Gul", இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ, 5 April 2012, பார்க்கப்பட்ட நாள் 5 April 2012
- ↑ "Profile: Umar Gul", CricketArchive, 5 April 2012, பார்க்கப்பட்ட நாள் 5 April 2012
- ↑ "ICC World Twenty20, 2007/08 / Records / Most wickets", இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ, 5 April 2012, பார்க்கப்பட்ட நாள் 5 April 2012
- ↑ "ICC World Twenty20, 2009 / Records / Most wickets", இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ, 5 April 2012, பார்க்கப்பட்ட நாள் 5 April 2012
- ↑ "T20I-Most wickets in career", ESPNcricinfo, 2 October 2012, பார்க்கப்பட்ட நாள் 2 October 2012
- ↑ NDTVSports.com. "Umar Gul needs at least a month to recover after knee surgery – NDTV Sports". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-05-26.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ MidDay (13 December 2013). "ICC Annual Awards: Pujara wins 'Emerging Cricketer of the Year, Clarke wins 'Cricketer of the Year'". http://www.mid-day.com/sports/2013/dec/131213-icc-annual-awards-pujara-cricketer-year-clarke-dhoni.htm. பார்த்த நாள்: 13 December 2013.
- ↑ Pakistani pace bowler Umar Gul marries Dubai doctor, Gulf News, 10 October 2010, பார்க்கப்பட்ட நாள் 5 April 2012
- ↑ Pace bowler Umar Gul marries Dubai doctor, PakTribune, 10 October 2010, பார்க்கப்பட்ட நாள் 5 April 2012
- ↑ Pace bowler Umar Gul marries Dubai doctor, Daily Times, 10 October 2010, பார்க்கப்பட்ட நாள் 5 April 2012
- ↑ Kumar, Shiv; Dhoni bought for Rs 6 crore; Tribune India; 20 February 2008
- ↑ Varghese, Mathew; Ganguly and Gul end Kolkata's campaign on a high; 25 May 2008
- ↑ "The Home of CricketArchive". www.cricketarchive.com.
- ↑ "1st Test, Bangladesh tour of Pakistan at Karachi, Aug 20-24 2003 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-26
- ↑ "2nd Test, Pakistan tour of South Africa at Cape Town, Feb 14-17 2013 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-26