உள்ளடக்கத்துக்குச் செல்

சாகித் அஃபிரிடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகித் கான் அஃபிரிடி
Shahid Khan Afridi
தனிப்பட்ட தகவல்கள்
பட்டப்பெயர்பூம் பூம் அஃபிரிடி[1]
உயரம்1.8 m (5 அடி 11 அங்)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை கால்-சுழற்சி
பங்குஅனைத்து வகை
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011–இன்றுஹாம்ப்சயர்
2009–இன்றுசதர்ன் ரெட்பாக்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா
2008டெக்கான் சார்ஜசு
2007–இன்றுசிந்து அணி
2006அயர்லாந்து
2004கென்ட்
2003–04கிரிக்காலாந்து மேற்கு
2003டார்பிசயர்
2001லைச்செஸ்ட்டர்சயர்
2001மாரிலின்போன்
1997–2008அபீப் வங்கி
1995–இன்றுகராச்சி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒரு இ20 முதல்
ஆட்டங்கள் 27 394 77 112
ஓட்டங்கள் 1,716 7,998 1142 5,689
மட்டையாட்ட சராசரி 36.51 23.52 19.03 31.60
100கள்/50கள் 5/8 6/39 0/4 12/31
அதியுயர் ஓட்டம் 156 124 54* 164
வீசிய பந்துகள் 3,194 17,496 1,520 13,549
வீழ்த்தல்கள் 48 393 73 263
பந்துவீச்சு சராசரி 35.60 34.35 22.50 26.80
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 9 0 8
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 5/52 7/12 4/11 6/101
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 125/ – 20/– 77/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, மார்ச் 1 2015

சாகிப்சாதா முகமது சாஹித் கான் அப்ரிடி ( உருது: شاہد افریدی‎‎ </link> , பஷ்தூ: شاهد افریدی; பிறப்பு 1 மார்ச் 1977) என்பவர், பாக்கித்தான் மேனாள் துடுப்பாட்டக்காரரும் தலைவரும் ஆவார். வலக்கை நேர்ச்சுழல் பந்துவீச்சாளாரும் வலக்கை மட்டையாளருமான பன்முக வீரர் ஆவார். [2] [3]

1996 ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக அப்ரிடி ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இலங்கைக்கு எதிரான தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடி விரைவாக நூறு ஒட்டங்கள் எடுத்தவர் (37 பந்துகளில்) எனும் சாதனை படைத்தார். 1998இல் ஆத்திரேலியாவுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். 2006ல் இங்கிலாந்துக்கு எதிரான ப இ20 போட்டியில் அறிமுகமானார். 2007 ப இ20 உலகக் கோப்பை போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டார். 2009 ப இ20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களும் 4 நிறைவுகளில் 1/20 ஓட்டங்களும் எடுத்து அணி இறுதிப் போட்டியில் வெல்வதற்கு உதவினார். வெற்றி பெற்ற சிறிது நேரத்திலேயே, பாக்கித்தானின் தலைவர் யூனிஸ் கான், இ20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், பின்னர் அப்ரிடி தலைவராக நியமிக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டில், முகமது யூசுப் நீக்கப்பட்டதை அடுத்து ஒருநாள் போட்டிகளின் தலைவராக அப்ரிடி நியமிக்கப்பட்டார். 2011 உலகக் கிண்ணத் தொடரில் பாக்கித்தான் அணியை வழிநடத்தினார். அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது. 2011ஆம் ஆண்டு ஒருநாள் போட்டித் தலைவர் பதவியிலிருந்து அப்ரிடி நீக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டில், அப்ரிடி ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 2016 ப இ20 உலகக் கிண்ணத்தில் பாக்கித்தான் குழுநிலைப் போட்டிகளில் இருந்து தோற்று வெளியேறியதுடன் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 19 பிப்ரவரி 2017இல், அஃப்ரிடி சர்வதேசத் துடுப்பட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நியூசிலாந்துக்கு எதிரான பாக்கித்தான் தொடருக்கான பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இடைக்காலத் தலைமைத் தேர்வாளராகப் பணியாற்றினார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

அஃப்ரிடி 1977 இல், பாக்கித்தானின் கைபர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் பஷ்தூன் பழங்குடியினர் ஆவார்.[4] [5]

இவர் சூஃபி பீர்களின் (ஆசிரியர்கள் அல்லது ஆன்மீக குருக்கள்) குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா மௌலானா முஹம்மது இலியாஸ் தீரா பள்ளத்தாக்கில் உள்ள பூட்டான் ஷெரீப்பில் பரவலாக அறியப்பட்ட ஆன்மீக நபராக இருந்தார். [6] 1947-1948 இன் இந்திய-பாக்கித்தான் போரின் போது இவரது மற்றொரு தாத்தா சாஹிப்சாதா அப்துல் பாக்கியின் பங்களிப்பினைப் பாராட்டும் விதமாக,காஜி -இ-காஷ்மீர் (காஷ்மீரை வென்றவர்) என்ற பட்டம் வழங்கப்பட்டது. [7] [8]

உள்ளூர்ப் போட்டிகள்

[தொகு]

1994-95 பருவத்தில் தொடங்கி 19 வயதுக்குட்பட்ட வாகையாளர்ச் சுற்றுகளில் சிறந்த செயல்பாட்டிற்குப் பிறகு அப்ரிடி பாக்கித்தான் தேசிய அணியில் சேர்க்கப்பட்டார். கராச்சி ஒயிட்ஸ் அணிக்காக விளையாடிய இவர், அடுத்த பருவத்தின் ஐந்து போட்டிகளில் 9.59 சராசரியில் 42 இலக்குகளைக் கைப்பற்றி வாகையாளர் பட்டத்தினை வெல்ல தனது அணிக்கு உதவினார். அந்த பருவத்தின் பிற்பகுதியில், இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராக சில முதல்-தரப் போட்டிகளில் விளையாடினார். [9] 2001 இல், அஃப்ரிடி லெய்செஸ்டர்ஷைரைப் பிரதிநிதித்துவப்படுத்த ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஐந்து முதல்தரப் போட்டிகளில் 42.14 சராசரியில் 295 ஓட்டங்கள் எடுத்தார். அதிகபட்சமாக 164 ஓட்டங்கள் எடுத்தார்.[10]

ஐபிஎல்

[தொகு]

2008 இந்தியன் பிரீமியர் லீக்கில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார்.[11]10 போட்டிகளில் 81 ஓட்டங்களையும் 9 இலக்குகளையும் கைப்பற்றினார். [12] 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக ஐபிஎல் 2வது பருவத்தில் விளையாடவில்லை . [13] [14]

சர்வதேசப் போட்டிகள்

[தொகு]

ஆரம்ப காலங்களில்

[தொகு]
சூன் 2009 இல் 2009 உலக இருபது20 போட்டியின் போது அஃப்ரிடி தனது சக வீரர்களுடன்

அக்டோபர் 1996 இல், காயமடைந்த முஷ்டாக் அகமதுவுக்குப் பதிலாக 1996-97 ஆம் ஆண்டு சமீர் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்காக அணியில் சேர்க்கப்பட்டார். [15][16] அவர் கென்யாவுக்கு எதிராக அக்டோபர் 2இல் அறிமுகமானார். அந்தப் போட்டியில் மட்டையாடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை, இலக்குகளையும் கைப்பற்றவில்லை [17] இலங்கைக்கு எதிரான அடுத்த போட்டியில், 3 வது வீரராகக் களமிறங்கினார். தனது முதல் சர்வதேசப் போட்டியிலேயே, அப்ரிடி ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் அடித்த சாதனையை முறியடித்தார். 37 அந்துகளில் நூறு ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார். 11 ஆறு ஓட்டங்களை எடுத்ததன் மூலம் ஓர் ஒருநாள் ஆட்டப் பகுதியில் அதிக ஆறு ஓட்டங்கள் அடித்த வீரர் எனும் சாதனையினை சமன் செய்தார்.[18] அந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 371 ஓட்டங்கள் எடுத்து ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ஓட்டங்களை எடுத்த அணிப் பட்டியலில் இரண்டாமிடம் பெற்றது.அந்தப் போட்டியில் ஆட்ட நாயகனாக அப்ரிடி தேர்வு செய்யப்பட்டார். [18] 2014 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் தேதி 36 பந்துகளில் நூறு எடுத்து நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் இந்தச் சாதனையை முறியடித்தார். [19] [20]

ஓய்வு

[தொகு]

செப்டம்பர் 2016 இல், அப்ரிடி ஓய்வு பெற விரும்புவதாக பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் அறிவித்தது. அஃப்ரிடி, அவர்களது திட்டங்களை ஊடகங்களில் அறிவிப்பது நியாயமற்றது என்றும் ஒரு பிரியாவிடைப் போட்டியை விரும்புவதாகவும் கூறினார். ஆனால், வாரியத்துடனான சந்திப்பை இரத்து செய்ததன் விளைவாக அந்தப் போட்டி நடக்கவில்லை. [21] பிப்ரவரி 2017 இல், ப இ20 போட்டிகள் உட்பட சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[22][23] ஏப்ரல் 2018 இல், சூறாவளி நிவாரண இ20 சவாலுக்கான உலக XI அணியில் இடம்பிடித்த அப்ரிடி சர்வதேசப் போட்டிகளுக்குத் திரும்பினார். [24] காயம் காரணமாக இயோன் மோர்கன் விலக நேர்ந்ததையடுத்து, இவர் தலைவராகத் தொடர்ந்தார். [25] போட்டிக்குப் பிறகு, பாக்கித்தானுக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று கூறினார். [26]

மேற்கோள்கள்

[தொகு]
 1. "ICC World Twenty20 teams guide". BBC Sport. 28 April 2010. பார்க்கப்பட்ட நாள் 21 February 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
 2. "Shahid Afridi: Aggression is his weapon; to hell with thoughtfulness". Cricket Country (in அமெரிக்க ஆங்கிலம்). 5 February 2015. பார்க்கப்பட்ட நாள் 5 July 2022.
 3. "Shahid Afridi | Pride of Pakistan | Cricketer | PrideOfPakistan.com". prideofpakistan.com. பார்க்கப்பட்ட நாள் 5 July 2022.
 4. Steer, Duncan, Shahid Afridi: the story of my life, Spin: The Cricket Magazine, archived from the original on 30 April 2011, பார்க்கப்பட்ட நாள் 27 February 2011
 5. "PSL: 'Peshawar is close to my heart,' says team owner Javed Afridi". Dawn. Kolkata, India. 21 December 2015. பார்க்கப்பட்ட நாள் 22 December 2015.
 6. Peter Oborne, Wounded Tiger: A History of Cricket in Pakistan, Simon and Schuster, 2015, p. 515
 7. Web Desk (30 August 2019), "My grandfather was ‘Ghazi-e-Kashmir’, therefore Kashmir belongs to me: Shahid Afridi", Dialogue Pakistan. Retrieved 18 May 2020.
 8. Web Desk (30 August 2019), "Modi will be remembered as 'Hitler' after death: Shahid Afridi", Dunya News. Retrieved 18 May 2020.
 9. Bhatti, Gul Hameed (6 October 1996). "Afridi's century surprises many including himself". The Indian Express. Archived from the original on 24 April 1997. பார்க்கப்பட்ட நாள் 17 October 2018.
 10. First-class batting and fielding for each team by Shahid Afridi, CricketArchive, பார்க்கப்பட்ட நாள் 8 March 2011
 11. "Deccan Chargers Squad – Chargers Squad – Indian Premier League, 2008 Squad" (in ஆங்கிலம்). ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 August 2021.
 12. "Yahoo Cricket". cricket.yahoo.net. பார்க்கப்பட்ட நாள் 23 August 2021.
 13. "Pakistan stars denied IPL payday – CNN". CNN. பார்க்கப்பட்ட நாள் 23 August 2021.
 14. "No Pakistan players in IPL 2009". Cricbuzz (in ஆங்கிலம்). 2 February 2009. பார்க்கப்பட்ட நாள் 23 August 2021.
 15. Alfred, Luke, Sameer Four Nations Cup, 1996–97, Wisden Cricketers' Almanac, பார்க்கப்பட்ட நாள் 24 February 2011
 16. "17 years on, Afridi's fastest ODI ton record remains intact". The Times of India. http://timesofindia.indiatimes.com/sports/india-in-australia/top-stories/17-years-on-Afridis-fastest-ODI-ton-record-remains-intact/articleshow/23524561.cms. 
 17. 10061 o1123 Kenya v Pakistan: Kenya Cricket Association Centenary Tournament (Sameer Cup) 1996/97, CricketArchive, பார்க்கப்பட்ட நாள் 24 February 2011
 18. 18.0 18.1 Sameer Four Nations Cup, sixth qualifying match: Pakistan v Sri Lanka, Wisden Cricketers' Almanac, பார்க்கப்பட்ட நாள் 24 February 2011
 19. "Shahid Afridi hails Corey Anderson for breaking his record of scoring fastest ODI century". Cricket Country (in அமெரிக்க ஆங்கிலம்). 1 January 2014. பார்க்கப்பட்ட நாள் 5 July 2022.
 20. "Anderson hits fastest ODI century in mismatch". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 July 2022.
 21. "Dailytimes | All-rounder Afridi insists farewell match is his right". Daily Times. Pakistan. 30 September 2016. பார்க்கப்பட்ட நாள் 30 September 2016.
 22. Ahmed, Zeeshan (20 February 2017). "Bye-bye 'Boom Boom' as Afridi ends international career". Dawn. Agence France-Presse. http://www.dawn.com/news/1315905/bye-bye-boom-boom-as-afridi-ends-international-career. 
 23. "Shahid Afridi: Pakistan all-rounder quits international cricket" (in en-GB). BBC Sport. 19 February 2017. https://www.bbc.co.uk/sport/cricket/39024209. 
 24. "Afridi, Malik & Perera added to ICC World XI squad". lords.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
 25. "Eoin Morgan cracks finger, out of World XI T20 against West Indies". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
 26. "No more coming out of retirement, Shahid Afridi says no to international comeback". timesnownews.com (in ஆங்கிலம்). June 2018. பார்க்கப்பட்ட நாள் 6 July 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகித்_அஃபிரிடி&oldid=3920594" இலிருந்து மீள்விக்கப்பட்டது