டெக்கான் சார்ஜர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெக்கான் சார்ஜர்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்இலங்கை குமார் சங்கக்கார
பயிற்றுநர்ஆத்திரேலியா டேரன் லேமன்
உரிமையாளர்டெக்கன் குரோனிக்கள்
அணித் தகவல்
நகரம்ஹைதராபாத்
நிறங்கள்DC
உருவாக்கம்2008
உள்ளக அரங்கம்
  • ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம்
    (கொள்ளளவு: 40,000)
  • ஏசிஏ-விசிடிசிஏ மைதானம்
    (கொள்ளளவு: 25,000)
  • பரபதி மைதானம்
    (கொள்ளளவு: 45,000)
வரலாறு
ஐ.பி.எல் வெற்றிகள்1 (2009)
சாம்பியன்சு இலீகு வெற்றிகள்0,2009 ல் தகுதி
அதிகாரபூர்வ இணையதளம்:http://www.deccanchargers.com/
2012 இந்தியன் பிரீமியர் லீக்

டெக்கான் சார்ஜர்ஸ் (Daccan Chargers) இந்தியன் பிரீமியர் லீகில் ஐதராபாத் நகரத்தின் பிரதிநிதியாக உரிமை பெற்ற அணியாகும்.[1] 2009 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் இரண்டாம் பருவத்தின் வெற்றி கோப்பையை டெக்கான் சார்ஜர்ஸ் அணி வென்றார்கள். 2009 ஆம் ஆண்டிலிருந்து இந்த அணியை ஆடம் கில்கிறிசிட் தலைமையேற்று நடத்த, பயிற்சியாளராக டேரன் லேமான் பொறுப்பேற்றார். இருவரும் ஆத்திரேலியா அணியின் முன்னாள் பலநாள் போட்டியிலும் ஒரு நாள் போட்டியிலும் விளையாடிய புகழீட்டிய விளையாட்டு வீரர்கள் ஆவார்கள். இந்த அணியின் அடையாள வீரராக எவரும் இல்லை. வணிகத்தின் முதல் பருவத்தில் அணியின் அடையாள வீரர் என்ற பெயரை வி.வி.எசு.இலட்சுமண் ஏற்றுக்கொள்ள மறுத்தார். இது வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்க ஒரு சவாலாக அமைந்தது.

ஐ.பி.எல் இன் முதல் பருவத்தில் 8 வது (கடைசி) இடத்தைப் பிடித்தது. ஆனால் இரண்டாம் பருவத்தில் வியக்கத்தக்க வகையில் முன்னேறி கோப்பையை வென்றது.[சான்று தேவை]

உரிமை வரலாறு[தொகு]

டெக்கான் சார்ஜெர்ஸ் அணியின் உரிமையை டெக்கான் குரோனிகல் நிறுவனம் வாங்கியது. இந்த ஊடக குழுமம் அணியின் உரிமையை ஐ.பி.எல் இடமிருந்து சனவரி 24, 2008 ஆம் ஆண்டில், 107 மில்லியன் டாலர் தொகைக்கு கைப்பற்றியது. பின்னாளில் மற்றொரு ஊடக குழுமமான, எம் குழுமம் அணி உரிமத்தில் 20% பங்கினை பெற்றுக்கொண்டது.[2]

அணியின் பெயர் டெக்கான் குரோனிகல் தினசரியின் பெயரை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இப்பெயர் இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியின் பெரும்பான்மையாக விளங்கும் தக்காணப் பீடபூமி என்பதிலிருந்து வந்தது.

டெக்கான் சார்ஜெர்சின் சின்னம் சக்தி வாய்ந்த காளை ஆகும்.[3] 2009 ஆம் பருவம் முதல், அணி தனது வீரர்கள் அணியும் உடையின் நிறத்தையும் சின்னத்தையும் மாற்றியமைத்தது. (வெண்மை கலந்த பழுப்புடன் கூடிய கருப்பிலிருந்து பளிச்சிடும் வெள்ளியுடன் கூடிய நீல நிறம்) (சின்னம் தங்கத்துடன் கூடிய சிவப்பிலிருந்து, வெள்ளையும் நீலமும்.)

பருவ காலங்கள்[தொகு]

2008 பருவம்[தொகு]

வீரர்கள்[தொகு]

இந்த அணியின் உரிமையாளர்கள் தொடக்கத்தில் நட்சத்திர வீரர்களான ஆடம் கில்கிறிசிட், ஆன்ட்ரூ சைமன்சு, சாஃகித் அஃப்ரிடி, இசுக்காட் இசுட்டைரிசு, எர்ழ்சிலே கிப்ஃசு ஆகியோரின் பங்களிப்பை விலைக்கு வாங்கினார்கள். ஆர்.பி.சிங், நுவான் சோய்சா, சமிந்த வாசு போன்ற முக்கியமான பந்து வீச்சாளர்களின் பங்களிப்புகளையும் அணி உரிமையாளர்கள் விலைக்கு வாங்கினார்கள்.

செயல்திறன்[தொகு]

கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியாக இருந்த போதும், ஐ பி எல் இன் துவக்கப் பதிப்பில் அந்த அணி அரை இறுதியை எட்டத் தவறியது. டெக்கான் அணியின் அதிக விலை கொண்ட வீரரான ஆன்ட்ரூ சைமன்சு, ஆஸ்திரேலியாவின் தேசிய அணிக்கு விளையாட செல்வதற்கு முன்பு 3 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். மேலும், அணித் தலைவரான லட்சுமண், அந்தத் தொடரில் 6 போட்டிகள் மீதமிருந்த நிலையில் காயமடைந்தார். ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, சாஃகித் அஃப்ரிடி ஆகிய மூன்று பந்து வீச்சாளர்கள் மட்டும் இந்த போட்டிகளில் 4 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தனர். இந்த 14 போட்டிகள் கொண்ட தொடரில் இந்த அணி 2 வெற்றியை மட்டும் பெற்று திரும்பியது. மும்பை இந்தியன் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஃசு அணிகளுக்கு எதிராக மட்டுமே இந்த அணி வெற்றி பெற்றது. தொடரின் இறுதியில் போட்டி அட்டவணையில் கடைசி இடத்தை பிடித்தது. சரியாக பந்தைப் பிடிக்கவும் தடுக்கவும் தவறியதாலும், மோசமான பந்து வீச்சினாலும் இந்த அணி பெரும் பாதிப்படைந்தது.

2009 பருவம்[தொகு]

மாற்றியமைத்த புதிய நிர்வாககக்குழு.[தொகு]

நன்மை பயிலாத 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு, அணித் தலைமை முன்பிருந்த நிர்வாகத்தை முற்றிலுமாக நீக்கியது. முதன்மை செயல் அதிகாரி ஜெ.கல்யாண்கிருட்டிணன், பயிற்சியாளர் ராபின் சிங்க் முதலில் நீக்கப் பெற்றனர். பின்னர் அணித் தலைவர் வி.வி.எசு.லட்சுமண் நீக்கப் பெற்றார். இவர்களுக்கு பதிலாக டிம் ரைட் (இவர் பின்னர் அந்நிய நாட்டினர் சட்டத்தை மீறியதால் பதவிவிலகினார்), முன்னாள் ஆத்திரேலியா துடுப்பாட்டக்காரர் டேர்ரன் லேமன், ஆத்திரேலியா முன்னாள் விக்கெட்-கீப்பர் ஆடம் கில்கிறிசிட் ஆகியோர் அந்த வரிசையில் நியமனம் ஆனார்கள்.

முதன்மை தலைமை அதிகாரி விலகல்[தொகு]

இந்திய அந்நியநாட்டினர் பதிவு சட்டத்தை மீறிய புகாரில் அணியின் புது முதன்மை தலைமை அதிகாரி, டிம் ரைட் பதவி விலகினார்.[4][6] சிறிது காலம் கழித்து, அணியின் துணைத் தலைவரான வெங்கட் ரெட்டி, 2009 ம் பருவத்திற்கு அணிக்கான முதன்மை தலைமை அதிகாரியாக செயல்பட மறுத்தார்.

வர்த்தகம்[தொகு]

2008 பதிப்பில், தங்கள் திறமைக்கு கீழே செயல்பட்ட சாஃகித் அஃப்ரிடி, எர்சால் கிப்ஃசு ஆகியோரை ஆரவாரமில்லாத விலைக்குப் பரிமாற டெக்கான் சார்ஜெர்ஸ் தலைமை முன் வந்தது. எனினும், இந்த இரு வீரர்களையும் வாங்க மற்ற எந்த அணி உரிமையாளர்களும் முன்வரவில்லை. பின்னர், சசஃகித் அஃப்ரிடி முன்னாள் டெக்கான் சார்ஜெர்ஸ் தலைவர் வி.வி.எசு.லகட்சுமணுடன் கருத்து வேற்றுமை கொண்டிருந்ததால், டெக்கான் சார்ஜெர்ஸ் தலைமை அவருடன் உறவை முற்றிலும் துண்டித்தது. மேலும் முன்னாள் இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான சஞ்சய் பங்கர் கொல்கொத்தா நைட் ரைடர்சு அணிக்கு மாற்றமானார்.

புதிய ஒப்பந்தங்கள்[தொகு]

இரண்டாவது வீரர்கள் ஏலம் துவங்குமுன், அணித் தலைமை, பயிற்சியாளர் டேர்ரன் லேமனின் உறுதியான சிபாரிசினால் குயின்ஸ்லாந்து ஆல்-ரவுண்டர் ரையன் ஹாரிசை எடுத்தது. பின் நடந்த ஏலத்தில் டெக்கான் சார்ஜெர்ஸ் உரிமையாளர்கள் மேற்கு இந்திய வீரர்கள் பிடல் எட்வர்ட்ஸை 150,000 டாலருக்கும், டுவைனே ஸ்மித்தை 100,000 டாலருக்கும் வாங்கியது.
மேலும் ஏழு புதிய உள்ளூர் வீரர்கள் ஒப்பந்தம் ஆனார்கள். உள்ளூர் போட்டிகளில் சீராக விளையாடிய ஹைதராபாத் அணியைச் சேர்ந்த வீரர்களான திருமலசெட்டி சுமன், அபினவ் குமார், பவுலர் ஷோயிப் மக்சுசி ஆகிய வீரர்கள் ஒப்பந்தம் ஆகினர். இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த விக்கெட்-கீப்பர் எம்.எஸ்.பிஸ்லா, பரோடாவைச் சேர்ந்த வீரர் அசார் பிலாகியா, பஞ்சாபைச் சேர்ந்த இரு வேக பந்து வீச்ச்சாளார்கள் ஜாஸ்கரன்தீப் சிங், ஹர்மீத் சிங் ஆகிய வீரர்களும் ஒப்பந்தம் ஆகினர்.

செயல்திறன்[தொகு]

தொடக்க பருவத்தில் தன் திறமைக்கு கீழ் செயலாற்றி கடைசி இடத்திலிருந்த டெக்கான், 2009 ஐபிஎல் இரண்டாவது பருவத்தில் வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டு முதல் இடத்தை வென்றது. தொடக்க லீக் பிரிவில், தோல்வி அடையாமல் இருந்த அணி, பின் சில நெருக்கமான போட்டிகளில் தோல்வி அடைந்து சற்று பின் வாங்கியது. ஆனால் ஆன்ட்ரூ சைமன்ஸ் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் இழந்த செயல்திறனை மீட்டது மற்றும் தலைவர் ஆடம் கில்கிறிஸ்டின் உற்சாகமான செயல்பாடு அணியின் விளையாட்டை நிலை நிறுத்தியது. சிறிது அதிர்ஷ்டமும் டெக்கான் வசம் இருந்தது. கிங்க்ஸ் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சில முக்கியமான போட்டிகளில் தோல்வியுற்றது டெக்கான் அணி அரை இறுதிக்கு செல்ல உதவியது. அரை இறுதியில், அட்டவணையில் முதலிடம் பெற்ற டெல்லி டேர் டெவில்ஸ் அணியை எதிர்த்து டெக்கான் வெற்றி பெறும் வாய்ப்பு மிக குறைவாகவே இருந்தது. ஆனால் ஆடம் கில்கிரிஸ்ட் சிறப்பாக விளையாடி 35 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து டேர் டெவில்சை போட்டியிலிருந்து வெளியேற்றி, பெங்களூர் ராயல் சேலன்ஜெர்சுக்கு எதிராக முதல் ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றார்.

இறுதி போட்டியில் கில்க்ரிஸ்ட் முதல் ஓவரில் ரன் எடுக்காமல் அவுட் ஆனார். இருப்பினும் சார்ஜெர்ஸ் அணி சமாளித்து 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. பலர் 20-30 ரன்கள் கூடுதலாக பெற்றிருந்தால் பாதுகாப்பாக இருந்திருக்கும் என்று கருதினர். முதல் பந்திலிருந்து சார்ஜெர்ஸ் அதிரடி ஆட்டம் ஆடியது. உற்சாகமான முயற்சியால், இலக்கை பாதுகாத்து போட்டியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பெருமை மிக்க ஐபிஎல் கோப்பையைக் கைபற்றியது.

டெக்கான் சார்ஜெர்ஸ் வீரர்கள் வென்ற விருதுகள்[தொகு]

  • போட்டி நாயகன் விருது 2009: ஆடம் கில்க்ரிஸ்ட்: 495 ஓட்டங்கள், 15 விக்கெட்டுகள்
  • 23 வயதுக்கு குறைவான 2009 போட்டி வெற்றி வீரர்: ரோஹித் ஷர்மா : 362 ஓட்டங்கள், 11 விக்கெட்டுகள் (ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும்)
  • பர்புள் காப் 2009: ஆர் பி சிங்: 23 விக்கெட்டுகள்

2010 பருவம்[தொகு]

புதிய தலைமை செயாலாக்க அலுவலர் நியமனம்[தொகு]

2009 ஆகஸ்ட் 11 ஆம் தேதி, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் பிராந்திய மேலாளர் தினேஷ் வாத்வா, அணியின் 2010 ஆம் ஆண்டிற்கான தலைமை செயாலாக்க அலுவலராக நியமனம் ஆனார்.

சாம்பியன்ஸ் லீக் டி20[தொகு]

டுவென்டி20 சாம்பியன்ஸ் லீக் என்பது இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா, நியூசிலாந்து, மேற்கு இந்திய நாடுகளின் கிளப் அணிகளுக்கு இடையேயான ஒரு சர்வதேசடுவென்டி20 கிரிக்கெட் போட்டியாகும். தேசிய டுவென்டி20 உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், முக்கியமாக இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டியின் வெற்றியின் காரணமாக இந்த சர்வதேச போட்டி அறிமுகமானது.

2008 பருவம்[தொகு]

2008 மும்பை தாக்குதல்கள் காரணமாக 2008 பருவம் போட்டிகளில் இருந்து விலகினர். இந்தியாவிலிருந்து தகுதி பெற்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்க்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு நட்ட ஈடு வழங்கப் பெற்றது.

2009 பருவம்[தொகு]

2009 இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டியில் வெற்றி பெற்றதால், இந்த அணி டி20 சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் மற்ற இரு இந்திய அணிகளுடன் சேர்ந்து பங்கேற்றது; 2009 ஐபிஎல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற ராயல் சாலன்ஜெர்ஸ் பெங்களூர், லீக் பிரிவில் முதல் இடம் பெற்ற டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் பங்கேற்றது.

குரூப் ஏ பிரிவின் அணிகளான சொமேர்செட் சாபர்ஸ் மற்றும் டிரினிடாட் & டோபாகோவுக்கு எதிராக தோல்வியுற்றதால் குரூப் பிரிவிலேயே வெளியேறியது.

தற்போதைய அணி மற்றும் நிர்வாகம்[தொகு]

நிர்வாகம்[தொகு]

  • உரிமை - டெக்கான் குரோனிகல், டெக்கான் சார்ஜெர்ஸ் ஸ்போர்டிங் வென்ச்சர்ஸ்
  • தலைமை செயாலாக்க அலுவலர் - தினேஷ் வாத்வா
  • இயக்குனர், நிர்வாகம் - திக்கவரப்பு வேங்கடராமி ரெட்டி

சின்னம் மற்றும் அணி உடை[தொகு]

பந்தய ஏற்பாடுகள் மற்றும் முடிவுகள்[தொகு]

ஒட்டுமொத்த முடிவுகள்[தொகு]

முடிவுகளின் சுருக்கம்
ஆட்டங்கள் வெற்றிகள் தோல்விகள் முடிவு இல்லை வெற்றி %
2008 14 2 12 0 14%
2009 16 9 7 0 56%
மொத்தம் 30 11 19 0 37%

2008 பருவம்[தொகு]

எண்: தேதி எதிரணி இடம் முடிவு
1 20 ஏப்ரல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொல்கத்தா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
2 22 ஏப்ரல் டெல்லி டேர்டெவில்ஸ் ஹைதராபாத் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது
3 24 ஏப்ரல் ராஜஸ்தான் ராயல்ஸ் ஹைதராபாத் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
4 27 ஏப்ரல் மும்பை இந்தியன்ஸ் மும்பை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - ஆடம் கில்க்ரிஸ்ட் - 109 * (47)

5 1 மே கிங்ஸ் XI பஞ்சாப் ஹைதராபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
6 3 மே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெங்களூர் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
7 6 மே சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - ஆடம் கில்க்ரிஸ்ட் - 54 (36)

8 9 மே ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெய்ப்பூர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
9 11 மே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஹைதராபாத் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
10 15 மே டெல்லி டேர்டெவில்ஸ் டெல்லி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
11 18 மே மும்பை இந்தியர்கள் ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
12 23 மே கிங்ஸ் XI பஞ்சாப் மொஹாலி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
13 25 மே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
14 27 மே சென்னை சூப்பர் கிங்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது

2009 பருவம்[தொகு]

எண்: தேதி எதிரணி இடம் முடிவு
1 19 ஏப்ரல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப் டவுன் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - ஆர்.பி. சிங் - 4/22(3.4 ஓவரில்)

2 22 ஏப்ரல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப் டவுன் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - ஆடம் கில்க்ரிஸ்ட் - 71 ரன்கள் (45 பால்களில்)

3 25 ஏப்ரல் மும்பை இந்தியன்ஸ் ஃடர்பன் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - பிரக்யான் ஓஜா - 3/21(4 ஓவர்)

4 27 ஏப்ரல் சென்னை சூப்பர் கிங்ஸ் ஃடர்பன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - ஹ கிப்ஸ் - 69 ரன்கள் (56 பந்துகள்)

5 30 ஏப்ரல் டெல்லி டேர்டெவில்ஸ் செஞ்சுரியன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
6 2 மே ராஜஸ்தான் ராயல்ஸ் போர்ட் எலிசபெத் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
7 4 மே சென்னை சூப்பர் கிங்ஸ் ஈஸ்ட் லண்டன் 78 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
8 6 மே மும்பை இந்தியன்ஸ் செஞ்சுரியன் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - ரோஹித் ஷர்மா - 38, 4/6 (2 ஓவர்கள்) (ஹாட்ரிக்)

9 9 மே கிங்ஸ் XI பஞ்சாப் கிம்பர்லே 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
10 11 மே ராஜஸ்தான் ராயல்ஸ் கிம்பர்லே 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - டுவைனே ஸ்மித் - 47 ரன்கள் (32 பால்கள் - 4 சிக்ஸ்)

11 13 மே டெல்லி டேர்டெவில்ஸ் ஃடர்பன் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
12 16 மே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஜோகன்ஸ்பர்க் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - ரோஹித் ஷர்மா - 32 ரன்கள் (13 பால்களில் - 3 நான்கு - 2 சிக்ஸ்)

13 17 மே கிங்ஸ் XI பஞ்சாப் ஜோகன்ஸ்பர்க் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது
14 21 மே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் செஞ்சுரியன் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
15 22 மே (அரை இறுதி) டெல்லி டேர்டெவில்ஸ் செஞ்சுரியன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - ஆடம் கில்க்ரிஸ்ட் - 85 ரன்கள் (35 பந்துகள் - 10 நான்கு - 5 சிக்ஸ்)

16 24 மே (இறுதி) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஜோகன்ஸ்பர்க் 6 ரன்கள் வித்தியாசத்தில்வென்றதுடெக்கான் சார்ஜெர்ஸ் டிஎல்எப் ஐபிஎல் 2009சாம்பியன்.

2010 பருவம்[தொகு]

எண்: தேதி எதிரணி இடம் முடிவு
1 12 மார்ச் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஹைதராபாத்
2 14 மார்ச் சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை
3 19 மார்ச் கிங்ஸ் XI பஞ்சாப் விசாகப்பட்டினம்
4 21 மார்ச் டெல்லி டேர்டெவில்ஸ் டெல்லி
5 26 மார்ச் ராஜஸ்தான் ராயல்ஸ் அகமதாபாத்
6 28 மார்ச் மும்பை இந்தியன்ஸ் விசாகப்பட்டினம்
7 1 ஏப்ரல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொல்கத்தா
8 3 ஏப்ரல் மும்பை இந்தியன்ஸ் டிபிசி
9 5 ஏப்ரல் ராஜஸ்தான் ராயல்ஸ் ஹைதராபாத்
10 8 ஏப்ரல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெங்களூர்
11 10 ஏப்ரல் சென்னை சூப்பர் கிங்ஸ் ஹைதராபாத்
12 12 ஏப்ரல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஹைதராபாத்
13 15 ஏப்ரல் கிங்ஸ் XI பஞ்சாப் இமாச்சலப் பிரதேசம்
14 18 ஏப்ரல் டெல்லி டேர்டெவில்ஸ் ஹைதராபாத்
15 22 ஏப்ரல் (அரை இறுதி) டிபிசி பெங்களூர்
16 25 ஏப்ரல் (இறுதி) டிபிசி டிபிசி

குறிப்புதவிகள்[தொகு]

  1. "ஐதராபாத் ஐபிஎல் அணி டெக்கான் சார்ஜெர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது : கிரிக்கெட் நெக்ஃசுட்". Archived from the original on 2008-03-23. பார்க்கப்பட்ட நாள் 2010-03-08.
  2. "Group M to pick up 20% in Hyderabad IPL team". 2008-02-27. Archived from the original on 2008-11-02. பார்க்கப்பட்ட நாள் 2008-03-28.
  3. "டிசி போர் அறைகூவல் விடுக்கிறது ! டெக்கான் சார்ஜெர்ஸ்". Archived from the original on 2008-03-24. பார்க்கப்பட்ட நாள் 2010-03-08.
  4. "டெக்கான் சார்ஜெர்சின் தலைமை அதிகாரியாக ரைட் நீடிக்கவில்லை". Archived from the original on 2009-04-15. பார்க்கப்பட்ட நாள் 2010-03-08.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெக்கான்_சார்ஜர்ஸ்&oldid=3556710" இலிருந்து மீள்விக்கப்பட்டது