டேரன் லீமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டேரன் ஸ்காட் லீமன்

டேரன் ஸ்காட் லீமன் (Darren Scott Lehmann பிறப்பு: பிப்ரவரி 5, 1970) ஒரு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய தேசிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் ஆவார். [1] லெஹ்மன் 1996 இல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் மற்றும் 1998 இல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இருந்தபோதிலும் 2005 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒருநாள் அணியிலும், 2002 இன் பிற்பகுதியில் தேர்வுத் துடுப்பாட்ட அணியிலும் நிரந்தரத் துடுப்பாட்ட வீரராக ஆனார். முதன்மையாக ஒரு ஆக்ரோஷமான இடது கை மட்டையாளரான லீமன் ஒரு பகுதிநேர இடது-கை வழமைச் சுழல் பந்து வீச்சாளராகவும் இருந்தார், மேலும் உடல் தகுதி மற்றும் நவீன உணவு முறைகளை இவர் புறக்கணித்ததற்காக பரவலாக அறியப்பட்டார். நவம்பர் 2007 இல் முதல் தர துடுப்பாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். [2]இவர் 27 தேர்வுத் துடுப்பட்டப் போட்டிகளில் 1798 ஓட்டக்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக 177 ஓட்டங்களை எடுத்தார்.

இவர் 2009 முதல் 2012 வரை ஐபிஎல் அணிகளான டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் 2013 இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பயிற்சியாளராக இருந்தார். இவர் ராஜினாமா செய்த ட்ரெவர் பார்ஸ்பிக்கு பதிலாக, 2010/11 KFC இருபது 20 பிக் பாஷ் லீக்கின் போது குயின்ஸ்லாந்து துடுப்பாட்ட அணியினைப் பயிற்றுவித்தார். 2013 ஆஷஸ் தொடருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜூன் 2013 இல், லெஹ்மன் மிக்கி ஆர்தருக்கு பதிலாக ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.[3] ஆஸ்திரேலியா அந்தத் தொடரை 3-ஒ என இழந்த போதிலும், லீமன் ஐந்து மாதங்களுக்குப் பிறகு 2013-14 தொடரில் 5-0 என வெற்றியைப் பெற்றார்.

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நான்காவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டிக்குப் பிறகு மார்ச் 2018 இல், பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார் பந்தை சேதப்படுத்திய காரணத்திற்காக இவர் விலகினார். [4] [5] இவர் இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்டிருப்பதாக முதலில் கருதப்பட்டது, இருப்பினும் ஆஸ்திரேலியா வாரியம் விசாரணைக்குப் பின்னர் இவரின் மீது எந்தத் தவறும் இல்லை என தெரிவித்தது.[6]

ஆரம்ப ஆண்டுகளில்[தொகு]

தென் ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து லீக் (எஸ்ஏஎன்எஃப்எல்) சங்கத்தில் மத்திய மாவட்டத்தின் இளையோர் பிரதிநிதியாக காலபந்து மற்றும் துடுபாட்டம் விளையாடிய லீமன் , தனது 16 ஆம் வயதில் பள்ளியை விட்டு வெளியேறி , தெற்கு ஆஸ்திரேலியாவின் எலிசபெத்தில் ஹோல்டன் கார் உற்பத்தியாளர்களின் சபையில் பணியாற்றினார். [1]லெஹ்மன் 1987/88 பருவத்தில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக 17 வயதாக இருக்கும் போது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். பின்னர் மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானத்தில் விக்டோரியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடினார்.1988/89 ஆம் ஆண்டில், தெற்கு ஆஸ்திரேலியாவின், பயிற்சியாளர் பாரி ரிச்சர்ட்ஸ் லீமனை அணிக்கு அழைத்தபோது, மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேற்கு ஆத்திரேலிய துடுப்பட்ட அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் இவர் விளையாடினார்.அந்தப் போட்டியில் புரூஸ் ரீட் எழும்பும் பந்தினால் தாக்கப்பட்ட பின்னர், இவர் மயக்கமடைந்து தற்காலிகமாக சுவாசிப்பதை நிறுத்தினார். அடிலெய்ட் ஓவலில் நியூ சவுத் வேல்ஸ் ப்ளூஸுக்கு எதிரான அடுத்த போட்டியில் லீமன்ன்50 ஓட்டங்களை எடுத்தார்.


சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேரன்_லீமன்&oldid=3204541" இருந்து மீள்விக்கப்பட்டது