உள்ளடக்கத்துக்குச் செல்

முதல் தரத் துடுப்பாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதல் தரத் துடுப்பாட்டம் (First-class cricket) என்பது மூன்று அல்லது கூடுதல் நாட்களுக்கு பதினொருவர் கொண்ட இரு அணிகளிடையே நடைபெறும் துடுப்பாட்டப் போட்டிகள், போட்டியிடும் அணிகளின் தரத்தைக் கொண்டு குறிப்பிடப்படுகிறது. இப்போட்டிகளில் நடைமுறையில் ஓர் அணி ஒருமுறை மட்டுமே அல்லது விளையாடாது போனாலும், இரு அணிகளும் இருமுறை ஆட இயலுமாறு இருக்க வேண்டும்.[1][2][3]

மட்டுப்படுத்தப்பட்ட துடுப்பாட்டங்கள், ஒரு விக்கெட் போட்டிகள் போன்ற பெரும் போட்டிகள் உயர்தரத்தில் நடத்தப்பட்டாலும், முதல் தர துடுப்பாட்டத்தில் சேர்க்கப்படாது.

தேர்வுத் துடுப்பாட்டம், மிக உயர்ந்த தர பெரும் துடுப்பாட்டமாக இருப்பினும், முதல்தர துடுப்பாட்ட தகுதியில் இருப்பினும், உள்நாட்டு போட்டிகளே "முதல்தரம்" என்று பொதுவாக குறிக்கப்படுகின்றன. ஓர் துடுப்பாட்டாளரின் முதல்தரத் துடுப்பாட்ட புள்ளிவிவரங்களில் தேர்வுத் துடுப்பாட்ட புள்ளிகளும் சேர்க்கப்படுகின்றன.

பொதுவாக, முதல்-தர விளையாட்டுகளில் பதினோரு வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இருப்பர். ஆயினும் சில விலக்குகளையும் காணலாம். அதேபோல முதல்தர போட்டிகள் குறைந்தது மூன்று நாட்கள் காலநீட்சி உடையனவாக இருக்கவேண்டுமென்றாலும் வரலாற்றில் சில விலக்குகள் இருந்திருக்கின்றன.

ஓர் புவியியல் வலயத்தைச் சார்ந்து, ஓர் ஆங்கில கௌன்டி, ஆத்திரேலிய மாநிலம்/ இந்திய மாநிலம், அல்லது மேற்கிந்திய நாடு போன்று முதல்தரத் துடுப்பாட்ட அணிகள் அமைகின்றன.

மேலும் படிக்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "English & Australian Cricket" பரணிடப்பட்டது 21 செப்டெம்பர் 2022 at the வந்தவழி இயந்திரம் Cricket, issue 1, 10 May 1882, p. 2.
  2. "The Cricket Scandal" பரணிடப்பட்டது 21 செப்டெம்பர் 2022 at the வந்தவழி இயந்திரம் Cricket, issue 4, 1 June 1882, p. 46.
  3. Bowen, Rowland (1965). "Cricket in the 17th and 18th centuries". Wisden Cricketers' Almanack. London: John Wisden & Co. Ltd. Archived from the original on 22 November 2020. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.