சன்ரைசர்ஸ் ஐதராபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
SunRisers Hyderabad.png
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்கேன் வில்லியம்சன்[1]
பயிற்றுநர்டிரெவர் பெய்லிஸ்
உரிமையாளர்கலாநிதி மாறன், (இயக்குனர் மற்றும் உரிமையாளர் – சன்நெட் வொர்க்)
அணித் தகவல்
நகரம்ஹைதராபாத் ஆந்திரப் பிரதேசம்
உருவாக்கம்2012
உள்ளக அரங்கம்ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானம்
(கொள்ளளவு: 55,000)
அதிகாரபூர்வ இணையதளம்:sunrisershyderabad.in

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்கிய இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் ஹைதராபாத் ஒப்போலை உரிமையின் பெயராகும். அணியின் தலைவராக நியூஸிலாந்து நாட்டின் கேன் வில்லியம்சன் நியமிக்க பட்டுள்ளார். அணியின் பயிற்றுவிப்பாளராக ஆஸ்திரேலியாவின் டிரெவர் பெய்லிஸ் நியமிக்க பட்டுள்ளார்.

ஒப்போலை உரிமையின் வரலாறு[தொகு]

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு மாற்றாக 25 அக்டோபர் 2012 முதல் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நியமிக்கப்பட்டது. பழைய டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் வீரர்கள், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகின்றனர். 2016 ஆம் ஆண்டு இவ்வணி இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றது. கலாநிதி மாறன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர்[2].

2018[தொகு]

சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SunRisers Hyderabad (SRH) தெலுங்கானா, ஐதராபாத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு துடுப்பாட்ட அணியாகும். இது ஐந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுகிறது. 2018 ஆம் ஆண்டின் இந்திய பிரீமியர் லீக்கில் விளையாடிய எட்டு அணிகளுள் ஒன்றாகும். இது அந்த அணிக்கு ஐ பி எல்லில் எட்டாவது தொடராகும். நியூசிலாந்து அணியின் தற்போதைய ஒருநாள் தொடரின் தலைவரான கேன் வில்லியம்சன் இந்த அணிக்குத் தலைமை தாங்கினார். டாம் மூடி தலைமைப் பயிற்சியாளராகவும், சைமன் ஹெல்மட் துணைப் பயிற்சியாளராகவும் முத்தையா முரளிதரன் பந்துப் பயிற்சியாளராகவும் வி. வி. எஸ். லட்சுமணன் வழிகாட்டியாகவும் இருந்தனர்.

ஏப்ரல், 9 அன்று நடபெற்ற முதல் போட்டியில் இந்த அணி வெற்றி பெற்றது. மேலும் பிளே- ஆப் சுற்றுக்கு முதல் அணியாகத் தேர்வானது. மேலும் தகுதிச் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதியானது. ஆனால் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 இலக்குகளால் தோல்வியடைந்து இரண்டாம் இடம் பிடித்தது.இந்தத் தொடரில் வில்லியம்சன் 735 ஓட்டங்கள் எடுத்து அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு நிற தொப்பியினைப் பெற்றார்.

பிண்ணனி[தொகு]

சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் இரு ஆண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் இந்தத் தொடரில் விளையாட அனுமதிக்கப்பட்டன.[3]

ஐ பி எல் நிர்வாகம் ஐந்து விளையாட்டு வீரர்களை ஒவ்வொரு அணிகளும் தங்களது அணிகளே வைத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. மேலும் அதிகமாக மூன்று இந்திய வீரர்களை வைத்துக்கொள்ளவும், இரண்டு வெளி நாட்டு வீரர்களையும் ,இரண்டு உள்ளூர் வீரர்களை தக்க வைத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கியது.ஒவ்வொரு அணிகளும் வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கான தொகையினை ₹660 மில்லியன்  (US$9.5 அமெரிக்க டாலர்கள் ) முதல்  ₹800 மில்லியன் (US$12 அமெரிக்க டாலர்) வரை அதிகரித்துக்கொள்ள அனுமதி வழங்கியது.[4]

வீரர்கள் ஏலம்[தொகு]

இந்த அனியில் முன்னாள் வீரரான ஷிகர் தவானை விட்டுக்கொடுத்து சகிப் அல் ஹசன் மற்றும் கேன் வில்லியம்சனை மீண்டும் இந்த அணி ஏலத்தில் எடுத்தது. அதிகபட்சமாக மணீஷ் பாண்டேவை ₹110 ம்ில்லியன்  (US$1.6 அமெரிக்க டாலர்) மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. அனறைய நாளில் அதிக விலைக்கு ஏலம் போன இந்திய வீரர் இவர் ஆவார். மேலும் மேற்கிந்தியத் தீவுகள் வீரரான கார்லோசு பிராத்வெயிட் மற்றும் இந்தியத் துடுப்பாட்ட வீரரான யூசுப் பதானையும் ஏலத்தில் எடுத்தனர். பின் குச்ச்க காப்பாளராக விருத்திமன் சகாவினை ஏலத்தில் எடுத்தனர். பந்துவீச்சளர்களில் சித்தார்த் கௌல், தங்கராசு நடராஜன், பசில் தம்பி மற்றும் கலீல் அகமது ஆகியோரத் தேர்வு செய்தனர். 510 மில்லியனில் 14 வீரரகளை முதல் நாள் ஏலத்தில் எடுத்தது. [5]

இரண்டாம் நாளில் முகமது நபி மற்றும் சந்தீப் சர்மா ஆகியோரை புவனேசுவர் குமாருடன் துவக்க ஓவர்களை வீசுவதற்கு தேர்வு செய்தார்.மேலும் சச்சின் பேபி மற்றும் பில்லி ஸ்டான் லேக் ஆகியோரைத் தேர்வு செய்தனர். இரண்டாம் நாள் முடிவில் 73 மில்லியன் தொகையில் ஒன்பது வீரர்களைத் தேர்வு செய்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்ரைசர்ஸ்_ஐதராபாத்&oldid=2867441" இருந்து மீள்விக்கப்பட்டது