அடம் கில்கிறிஸ்ற்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடம் கில்கிறிஸ்ற

அடம் கில்கிறிஸ்ற் (ஆடம் கில்கிறிஸ்ட் (த.வ.) Adam Gilchrist, பிறப்பு நவம்பர் 14, 1971) ஆஸ்திரேலியாவின் விக்கெட் காப்பாளர். இடதுகைத் துடுப்பாளரான இவர் ஒருநாட் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாளராவார். அதிரடியாக ஆடுபவர்.Gilly,Churchy என்ற செல்லப் பெயர்களால் ரசிகர்களால் அழைக்கப்படும் கில்கிறிஸ்ட் உலகின் தலைசிறந்த விக்கெட் காப்பாளர்களில் ஒருவராவார்.தொண்ணூற்று ஆறு டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 379 பிடி எடுப்புகள்,37 ஸ்டம்பிங் என மொத்தம் 416 ஆட்டமிழப்புகளை செய்த இவர் தென் ஆபிரிக்காவின் மார்க் பவுச்சர்க்கு அடுத்ததாக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆட்டமிழப்புகளை மேற்கொண்ட வீரராக காணப்படுகின்றார்.287ஒருநாள் போட்டிகளில் 417 பிடியெடுப்புகள் 55 ஸ்டம்பிங்ஸ் என மொத்தம் ஆட்டமிழப்புகளை மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் காப்பாளராக திகழ்கின்றார்.96 டெஸ்ட் போட்டிகளில் 17சதங்கள் 26அரைச்சதங்கள் அடங்கலாக மொத்தம் 5570 ஓட்டங்களையும் 287 ஒருநாள் போட்டிகளில் 16 சதங்கள் 55 அரைச்சதங்கள் அடங்கலாக மொத்தம் 9922 ஓட்டங்களையும் 13 T20 போட்டிகளில் மொத்தம் 272 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.இவர் சதமடித்த பதினாறு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.ஆஸ்திரேலிய அணியின் உபதலைவராகவும் ரிக்கி பாண்டிங் இல்லாத சமயங்களில் காப்டனாகவும் பணியாற்றிய கில்கிறிஸ்ட் இங்கிலாந்து பிராந்திய அணியான மிடில்செக்ஸ் அணிக்கும் ஐ.பி.எல் போட்டித் தொடரில் டெக்கான்,கிங்ஸ் லெவின் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கும் காப்டனாக திகழ்ந்துள்ளார்.இல் தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற ஐ.பி.எல்லின் இரண்டாவது சீசனில் தொடரின் சாம்பியனான டெக்கான் அணியை அணித்தலைவராக இருந்து வழிநடாத்திச் சென்றவர் கில்கிறிஸ்ட் ஆவார்.இத் தொடரின் அரையிறுதியில் டெல்லி அணிக்கெதிராக பதினேழு பந்துகளில் அரைச்சதம் கடந்து அணியை வெற்றி பெறச்செய்தார்.இன்றைய நாள் வரை ஐ.பி.எல் தொடரின் அதிவேக அரைச்சதமாக இதுவே உள்ளது.17/05/2011அன்று பஞ்சாபின் தர்மசாலாவில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் கில்கிறிஸ்டும் ஷோன் மார்சும் இரண்டாவது விக்கெட்டுக்காக இருநூற்று ஆறு ஓட்டங்களை பகிர்ந்ததே இன்று வரை எந்த ஐ.பி.எல் போட்டி ஒன்றில் எந்த ஒரு விக்கெட்டுக்காகவும் பகிரப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்.கில்கிறிஸ்ட்டின் மனைவியின் பெயர் மெலிண்டா.கில்கிறிஸ்ட் –மெலிண்டா தம்பதியினருக்கு ஹரிசன்,ரெட்,அர்ச்சி ஆகிய மூன்று மகன்களும் அன்னி ஜீன் எனப்படும் ஒரு மகளும் உண்டு.கிரிக்கெட்டில் மிக நேர்மையான வீரர்களில் ஒருவராக திகழ்ந்த கில்கிறிஸ்ட் பல தடவை நடுவர் ஆட்டமிழப்பு என்று அறிவிக்காதபோதும் கூட தன் சுய முடிவின் அடிப்படையில் மைதானத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்.இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு நடந்த உலககிண்ண இலங்கைக்கு எதிரான அரையிறுதியில் இவரது சுய முடிவிலான ஆட்டமிழப்பு பலரின் கவனத்தை ஈர்த்தது.கில்கிறிஸ்ட்டின் சுயசரிதை நூலான TRUE COLOURS 2008 ஆம் ஆண்டில் வெளியானது

அறிமுகம்[தொகு]

  • முதல் ஒரு நாள் போட்டி - 25.10.1996, தென்னாபிரிக்காவுக்கு எதிராக
  • முதல் டெஸ்ட் (ரெஸ்ற்) போட்டி - 1999 இல் பாகிஸ்தானுக்கு எதிராக

ஓய்வு[தொகு]

  • இறுதி டெஸ்ட்-ஜனவரி 2008 இல் இந்தியாவுக்கு எதிராக அடிலெய்ட் டெஸ்ட்
  • இறுதி ஒருநாள் போட்டி –மார்ச் 2008 இல் இந்திய அணிக்கெதிராக
  • இறுதி இருபதுக்கு இருபது –பெப்ருவரி 2008 இல் இந்திய அணிக்கெதிராக

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிபீடியாவின் ஆங்கிலப்பக்கம்-அடம் கில்கிறிஸ்ட்

டைம்ஸ் ஒப் இந்தியாவில் வெளிவந்த கட்டுரைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடம்_கில்கிறிஸ்ற்&oldid=2267621" இருந்து மீள்விக்கப்பட்டது