பேச்சு:அடம் கில்கிறிஸ்ற்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோபி, இக்கட்டுரையை ஆடம் கில்கிறிஸ்ட் என்று தலைப்பை மாற்றி உள்ளே இரு வகையான எழுத்துப்பெயர்ப்புகளையும் தரலாம். அதே போல test என்பதை டெஸ்ட் என்றும் ரெஸ்ட் என்றும் இரண்டு விதமாகவும் தர வேண்டுகிறேன். நீங்கள் ரெஸ்ட் என்று எழுதினால் தமிழ் நாட்டில் உள்ள 60 மில்லியன் மக்களும் rest என்றுதான் படிப்பார்கள். அருள்கூர்ந்து பொது நன்மை குறித்து இப்படி வேற்று மொழி சொற்களை பொது முறைப்படி எழுதலாகாதா?! இது பல முறை முன்னுக்கு வந்த சிக்கல் தான் எனினும், ஒரு பொதுத் தரம் இருப்பது நல்லதல்லவா? Adam என்பதில் உள்ள முதல் உயிரொலியை நீட்டித்தான் ஒலிப்பார்கள். அந்த உயிரொலி ஏகாரத்திற்கும் ஆகாரத்திற்கும் இடைப்பட்ட ஒலி. எனவே ஆடம் அல்லது ஏடம் என்று கூறுவதே சாலப் பொருந்தும். அடம் என்று அடம் பிடிக்காதீர்கள் :) ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு அருள் கூர்ந்து பொது நன்மை கருதி இடையின ரகரத்தை ஆங்கில எழுத்து r க்குப் பயன் படுத்துமாறும், வல்லின மெய் ற் ஐ நெற்றி, வெற்றி ( நெட்டி வெட்டி அல்ல) என்பதை போல tr என்னும் ஒலிப்புக்குப் பயன் படுத்துமாறு மீண்டும் வேண்டிக்கொள்ளுகிறேன். குறிப்பாக சொல் இறுதியில் t என்னும் ஒலிக்கு இணையாக ற் ஐப் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளுகிறேன். நாம் வளர வேண்டிய அளவு இன்னும் நிறைய உள்ளது. இத்தகு சிக்கல்களை விலக்கிக்கொள்வது நல்லது. என்னால் உடனே பதில் அளிக்க இயலாது போகலாம், ஆகவே உடனே ஏதும் மறு மொழி இல்லை என்றால் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.--செல்வா 18:30, 22 ஜனவரி 2007 (UTC)

செல்வா, அடம் கில்கிறிஸ்ட் என்ற தலைப்பில் இருந்த கட்டுரையையும் நானே உருவாக்கியமையாலேயே அதனை நீக்கினேன். தமிழகப் பயனர்கள் தமது உச்சரிப்பின்படி உருவாக்கும் கட்டுரைகளில் அடைப்புக்குறிக்குள் ஈழ வழக்கையும் அவ்வாறே மறுதலையாகவும் செய்யலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயமாகும். மேலும் உரிய வழிமாற்றிகளை உருவாக்குவதே முக்கியமானது என்று கருதுகிறேன். ஏனெனில் விக்கிபீடியாக் கட்டுரைகள் எதிர்காலத்தில் பெரும்பாலும் தேடலின் மூலமே அடையப்படும். --கோபி 21:17, 22 ஜனவரி 2007 (UTC)


கோபி, தமிழகப் பயனர்கள், இலங்கைப் பயனர்கள் என்று நாம் பேசுவதை விடத் தமிழ்ப் பயனர்கள் என்று எண்ணுவது பொருந்தும். தலைப்புகளில் ஒரு பொதுத்தரம் இருப்பது நல்லது. இரு வேறு வழக்குகளைக் கட்டாயம் காட்ட வேண்டுமெனிலும், பெரும்பான்மை வழக்கு முதலிலும் , சிறுபான்மை வழக்கு இரண்டாவதாகவும் தருவது முறையாகும். இதனை பெரும் அடையாளப் பிரச்சனையாக எண்ணுவதால் பல சிக்கல்கள் வருகின்றன. இதனைக் கற்றறிந்தோர் பொது நலம் கருது பொது முறை பேணுவது நல்லது. இதனை நான் வலியுறுத்த வில்லை, ஆனால் பொது நலம் கருதி பொதுத்தரம் பேணுவது நல்லது என்பது என் பரிந்துரை. கில்கிறிஸ்ட் என்பதை யாழ் நண்பர்கள் அத்தனை வித்தியாசமாகவா பலுக்குகிறார்கள்? தமிழகத்தில் உள்ளவர்கள் கில்கிறிஸ்ற் என்பதை GilchrisTR என்று பலுக்குவது மட்டுமல்லாமல், சொல்லின் கடைசியாக றகரக ஒற்று (ற்றன்னா) வருவது அதிர்ச்சி ஊட்டுவதாகும். டெஸ்ட் என்று எழுதினால் யாழ் நண்பர்கள் எத்தனை வித்தியாசமாகப் படிப்பர்? ரெஸ்ட் என்று எழுதினால் தமிழக்த் தமிழர் Rest என்று படிப்பரே.

இதை எல்லாம் எண்ணி பார்க்க வேண்டாமா? டெஸ்ட்டு என்று எழுதுவது தமிழ் இயல்புக்கு இன்னும் சற்று பொருந்தி வரும். குறைந்தது டெஸ்ட் என்றாவது எழுதலாம் (போட்டி என்பது இன்னும் சிறந்தது- ஆனால் குழப்பம் தரும் கருப்பொருள் முக்கியமானதே). இங்கு மட்டும் நீங்கள் ஏன் ரெஸ்ற் என்று றகரக ஒற்று (ற்றன்னா) இடவில்லை என்பதும் வியப்பாக உள்ளது.--செல்வா 22:49, 22 ஜனவரி 2007 (UTC)

செல்வாவின் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. --Sivakumar \பேச்சு 08:29, 23 ஜனவரி 2007 (UTC)