பிறெட் லீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிறெட் லீ
Brett lee crop.jpg
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் பிறெட் லீ
பட்டப்பெயர் பிங்கா
பிறப்பு 8 நவம்பர் 1976 (1976-11-08) (அகவை 41)
Wollongong, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா
உயரம் 1.87 m (6)
வகை Bowler
துடுப்பாட்ட நடை Right-handed
பந்துவீச்சு நடை Right-arm
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 383) 26 டிசம்பர், 1999: எ இந்தியா
கடைசித் தேர்வு 24 ஜனவரி, 2008: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 140) 9 ஜனவரி, 2000: எ பாக்கித்தான்
கடைசி ஒருநாள் போட்டி 20 டிசம்பர், 2007:  எ இந்தியா
சட்டை இல. 58
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1994/95 - New South Wales
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
Testsஒ.பமு.துப.அ
ஆட்டங்கள் 65 165 101 195
ஓட்டங்கள் 1,184 775 1,741 895
துடுப்பாட்ட சராசரி 20.77 17.74 18.52 16.98
100கள்/50கள் 0/4 0/2 0/6 0/2
அதிக ஓட்டங்கள் 64 57 79 57
பந்து வீச்சுகள் 13,968 8,159 20,851 9,731
இலக்குகள் 271 293 432 331
பந்துவீச்சு சராசரி 29.97 22.54 27.35 23.68
சுற்றில் 5 இலக்குகள் 8 8 17 8
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 5/30 5/22 7/114 5/22
பிடிகள்/ஸ்டம்புகள் 19/– 39/– 30/– 43/–

29 ஜனவரி, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

பிறெட் லீ (Brett Lee (பிறப்பு:நவம்பர் 8, 1976) என்பவர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி வீரர் .

இவர் வலதுகை விரைவு வீச்சாளர் ஆவார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய முன்று வடிவ துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடினார். இவரின் சமகாலத்தவரான சுஐப் அக்தருடன் இணைந்து அறியப்படுகிறார். பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் உள்ள சிறந்த விரைவு வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

விரைவாக அதே சமயம் நிலையான வேகத்தில் பந்து வீசுவதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசினார். மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவரின் பந்துவீச்சின் வேகம் மணிக்கு 161.8 கிலோ மீட்டர் என பதிவானது. பின் அது மணிக்கு 142 கிலோ மீட்டர் என உறுதிசெய்யப்பட்டது. [1]. 2005 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில்

மணிக்கு 161.1 கிலோ மீட்டர் எனும் வேகத்தில் பந்து வீசினார். இது இரண்டாவது அதிவேக பந்துவீச்சு ஆகும். சுஐப் அக்தர் மணிக்கு 161.4 கிலோ மீட்டர் என வீசியதே தற்போது வரை முதலிடத்தில் உள்ளது.

பிறெட் லீ தேர்வுத் துடுப்பாட்டங்களில் 310 இலக்குகளும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 380 இலக்குகளும் எடுத்துள்ளார்.

2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஆகிய இரு உலகக் கோப்பை வென்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். 1999 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். சூலை 12, 2012 இல் அனைத்து வடிவ துடுப்பாட்டங்களில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார். ஆனால் இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் பிக்பாஷ் போட்டிகளில் விளையாடினார்.[2]

2014-2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிக்பாஷ் போட்டிகளோடு ஓய்வு பெற்றார். தற்போது நடிகராகவும், சேனல் 9 தொலைக்காட்சியின் விளக்கவுரையாளராக பணிபுரிகிறார்.[3]

சர்வதேச போட்டிகள்[தொகு]

லார்ட்சில் நடைபெற்ற போட்டியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக பிறெட் லீ பந்து வீசிய போது 2004-09-04


சனவரி 9, 2000 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். இவர் 140 வது வீரராக அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் ஐம்பது ஓட்டங்களை எடுத்தார். இதில் 51* ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

2006 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பெற்றார்.[4] 2003 ஆம் ஆண்டு துடுப்பாட்ட உலகக் கிண்ணப் போட்டியில் கென்ய துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் ஹேட்ரிக் இலக்குகள் எடுத்தார். இதன் மூலம்

உலகக் கிண்ணப் போட்டியில் ஹேட்ரிக் வீழ்த்திய முதல் ஆத்திரேலியப் பந்துவீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார்.

2003 உலகக் கிண்ணம்[தொகு]

2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகள் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஷேன் வோர்ன் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பிறெட் லீ, ஆண்டி பிககெல், கிளென் மெக்ரா ஆகியோர் இந்தத் தொடரின் 55 இலக்குகளை வீழ்த்தினார். பிறெட் லீ மட்டும் 83.1

ஓவர்கள் வீசி 22 இலக்குகள் வீழ்த்தினார். இவரின் பந்து வீச்சு சராசரி 17.90 ஆகும்.


சான்றுகள்[தொகு]

  1. "The myth of Lee's 100 mph delivery" (4 May 2002). பார்த்த நாள் 5 May 2018.
  2. "Brett Lee: Australia fast bowler retires from international cricket". BBC Sport. 13 July 2012. https://www.bbc.co.uk/sport/0/cricket/18824638. 
  3. "Brett Lee announces retirement from all forms of cricket". AAP. 15 January 2015. https://www.theguardian.com/sport/2015/jan/15/cricket-brett-lee-announces-retirement. 
  4. Lee, Gilchrist Top ICC ODI Rankings. Rediff. Retrieved 25 June 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறெட்_லீ&oldid=2520196" இருந்து மீள்விக்கப்பட்டது