உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேசன் கிரேசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேசன் கிரேசா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜேசன் ஜோன் கிரேசா
பட்டப்பெயர்கிராசி
உயரம்1.84 m (6 அடி 0 அங்)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குசகலதுறை ஆட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
தேர்வு அறிமுகம் (தொப்பி [[{{{country}}} தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|404]])6 நவம்பர் 2008 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006 – presentதஸ்மானியா
2005லீசெஸ்டர்ஷயர்
2004 – 2006நியூ சவுத் வேல்ஸ் புளூசு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு மு.த. பட்டியல் அ
ஆட்டங்கள் 2 33 17
ஓட்டங்கள் 71 966 243
மட்டையாட்ட சராசரி 23.66 23.56 24.30
100கள்/50கள் 0/0 1/5 0/1
அதியுயர் ஓட்டம் 32 101* 52*
வீசிய பந்துகள் 743 5,659 785
வீழ்த்தல்கள் 13 78 18
பந்துவீச்சு சராசரி 43.23 46.87 38.61
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 1 n/a
சிறந்த பந்துவீச்சு 8/215 8/215 3/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 24/– 9/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், 24 அக்டோபர் 2009

ஜேசன் ஜோன் கிரேசா (Jason John Krejza[1] பிறப்பு: 14 ஜனவரி 1983, சிட்னி, ஆஸ்திரேலியா) ஓர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர். இவரது தந்தையார் செக்கோசுலோவாக்கியாவில் கழகநிலை உதைபந்தாட்ட வீரராக விளங்கினார். இவரது தாயார் போலந்தில் பிறந்தவர். "கிரேசி" என்பது இவரது புனைபெயர் ஆகும்.[1]

சர்வதேச போட்டிகள்

[தொகு]

இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆகஸ்டு மாத போட்டியில் இவர் ஆத்திரேலிய ஏ அணியில் விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும் ஆத்திரேலிய 15 பேர் கொண்ட அணியில் இவர் இடம்பெற்றார். இவரின் தேர்வினைப் பற்றி ஆத்திரேலிய தேர்வுக் குழுவின் தலைவர் ஆண்ட்ரூ ஹில்டிச் கூறுகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தஸ்மானிய தொடரில் ஜேசன் சிறப்பாக விளையாடினார். இருந்தபோதிலும் இந்தியாவில் உள்ள துடுப்பாட்ட மைதானனங்களின் தன்மைகளைப் பொறுத்தே இவரைத் தேர்வு செய்தோம் எனக் கூறினார். மேலும் வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சாளர்கள் இந்தியாவில் சிறப்பாக செயல்பட முடியும் எனக் கருதினர்.

இவர் அணியின் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்பட்டார். பிரஸ் மெகைன் முதன்மைப் பந்துவீச்சாளராக இருந்தார். ஆனால் இவருக்கு காயம் ஏற்பட்டதனால் இவர் தாயகம் திரும்பினார். ஆனால் இந்திய லெவன் அணியில் உள்ள வீரர்களை இவரால் வீழ்த்த இயலவில்லை.இதன் பயிற்சிப்போட்டியில் 31 ஒவர்கள் வீசி 199 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பாற்ற இயலவில்லை. அதனால் இந்தத் தொடரின் முதல்மூன்று போட்டிகளில் கேமரன் வைட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

பின் நாக்பூரில் நடைபெற்ற நான்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியினை சமன் செய்து போர்டர்-காவஸ்கர் கோப்பையினை தக்கவைத்தது. இவர் ஸ்டூவர்ட் கிளார்க் மற்றும் ஒயிட் ஆகியோருடன் இணைந்து பந்துவீச்சினார். ராகுல் திராவிட்டின் இலக்கினை முதல் இலக்காகக் கைப்பற்றினார்.[1] இதன் முதல் ஆட்டப் பகுதியில் 215 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 8 இலக்குகளைக் கைப்பற்றினார்.[2] இதன்மூலம் அறிமுகப் போட்டியில் 5இலக்குகள் பெற்ற 14 ஆவது ஆத்திரேலிய வீரர் ஆனார். மேலும் அறிமுகப் போட்டியில் அதிக ஓட்டங்கள் கொடுத்த பந்துவீச்சாளர் மற்றும் அதிக இலக்குகள் எடுத்த பந்து வீச்சாளர் ஆகிய சாதனைகளைப் படைத்தார்.[3] மேலும் தனது முதல்தரத் துடுப்பாட்டப் போட்டியின் அறிமுகப் போட்டியில் 91 ஓட்டங்கள் கொடுத்து 4 இலக்குகள் கைப்பற்றிய தனது சொந்த சாதனையை இவர் முறியடித்தார்.[4][4] இரண்டாவது ஆட்டப் பகுதியில் 143 ஓட்டங்கள்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியின் முடிவில் 358 ஓட்டங்கள் கொடுத்து 12 இலக்குகளைக் கைப்பற்றினார்.[1] இதன்மூலம் ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் கொடுத்த இரண்டாவது வீரரானார். டாம்மி இசுக்காட் இதற்கு முன்னர் 1929 ஆம் ஆண்டில் ஜமைக்காவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 374 ஓட்டங்கள் கொடுத்து 9 இலக்குகளைக் கைப்பற்றியதே முதல் இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி தோல்வியடைந்தது இருந்தபோதிலும் இவர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.[5]

பெப்ரவரி 6, 2011 இல் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். 4 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்தார். பந்துவீச்சில் 9 ஓவர்கள் வீசி 53 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[6]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Jason Krejza", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-24
  2. "4th Test: India v Australia at Nagpur, Nov 6-10, 2008". espncricinfo. பார்க்கப்பட்ட நாள் 2011-12-13.
  3. "4th Test: India v Australia at Nagpur, Nov 6-10, 2008". espncricinfo. பார்க்கப்பட்ட நாள் 2011-12-13.
  4. 4.0 4.1 Jamie Alter (November 2008). "Stunning Krejza keeps India to 441". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2008-11-07.
  5. Frindall, Bill (2009). Ask Bearders. BBC Books. pp. 128–129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84607-880-4. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  6. "7th ODI, England tour of Australia at Perth, Feb 6 2011 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-24
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேசன்_கிரேசா&oldid=3986842" இலிருந்து மீள்விக்கப்பட்டது