டக் பொலிஞ்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டக் பொலிஞ்சர்
Doug Bollinger.jpg
ஆத்திரேலியா ஆத்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் டக் ஏர்வின் பொலிஞ்சர்
பட்டப்பெயர் டக்
பிறப்பு 24 சூலை 1981 (1981-07-24) (அகவை 38)
பால்காம்ஹில் சிட்னி, ஆத்திரேலியா
உயரம் 1.92 m (6 ft 3 12 in)
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை இடது
பந்துவீச்சு நடை இடதுகை விரைவு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 405) சனவரி 3, 2009: எ தென்னாபிரிக்கா
கடைசித் தேர்வு திசம்பர் 3, 2010: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி ஏப்ரல் 24, 2009: எ பாக்கிஸ்தான்
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 6, 2011:  எ இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2002–இன்று நிவ் சவ்த் வேல்ஸ் புளு
2010–இன்று சென்னாய் சுப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 12 32 69 88
ஓட்டங்கள் 54 40 326 87
துடுப்பாட்ட சராசரி 7.71 10.00 7.58 6.69
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதிக ஓட்டங்கள் 21 30 31* 30
பந்து வீச்சுகள் 2,401 1,594 12,377 4,346
இலக்குகள் 50 50 240 125
பந்துவீச்சு சராசரி 25.92 24.16 28.13 27.23
சுற்றில் 5 இலக்குகள் 2 2 12 2
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 2 0
சிறந்த பந்துவீச்சு 5/28 5/35 6/47 5/35
பிடிகள்/ஸ்டம்புகள் 2/– 7/– 23/– 17/–

பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: Cricket Archive

டக்லஸ் எர்வின் பொலிஞ்சர் (Douglas Erwin Bollinger, பிறப்பு: சூலை 24, 1981) ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இடதுகை மட்டையாளர் மற்றும் விரைவு வீச்சாளரான இவர் நியூ சவுத்து வேல்சு புளூசு அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஆத்திரேலியத் தேசிய அணிக்காகவும் விளையாடியுள்ளார். மேலும் இங்கிலாந்திலுள்ள வோர்செஸ்டெர்ஷயர் மாகாணத் துடுப்பாட்ட அணி மற்றும் கென்டி மாகாணத் துடுப்பாட்ட அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். மேலும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் , சிட்னி சிக்சர்ஸ்,மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்காக இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பெப்ரவரி5, 2018 இல் அனைத்து வடிவ துடுப்பாட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[1]

இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

2010 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அனி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்தின் சகலத் துறையரான ஜேக்கப் ஓரம் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பொலிஞ்சர் பிரீமியர் லீக்கின் இரண்டாவது பகுதியில் தான் சென்னை அணிக்காக விளையாடினார். ஏனெனில் அவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றிருந்தார். சென்னை அணிக்காக விளையாடும் நான்காவதுஆத்திரேலியத் துடுப்பாடட் வீரர் இவர் ஆவார். இதற்கு முன்னதாக மாத்தியூ எய்டன், மைக்கேல் ஹசி மற்றும் ஜோர்ஜ் பெய்லி ஆகியோர் விளையாடியுள்ளனர். இவரின் முதல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 246 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி ஷேன் வாட்சன் உட்பட இலக்குகளை வீழ்த்தினார். மேலும் யூசுப் பதான் அடித்த பந்தை எல்லைக் கோட்டின் அருகே வைத்து கேட்ச் பிடித்ததால் இந்தப் போட்டியின் கேட்ச் ஆஃப் தெ மேட்ச் விருது பெற்றார்.இந்தப் போட்டியில் சக பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 13 ஓட்டங்களை சராசரியாக கொடுத்த போது இவர் 3.75 மட்டுமே கொடுத்தார்.இந்ர்தப் போட்டியில் சென்னை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 15 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசினார். இதன்மூலம் அந்த அணியை 139 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் வீசிய முதல் ஓவரிலேயே வீரேந்தர் சேவாக் மற்றும் திலகரத்ன டில்சான் ஆகியோரது இலக்கினை வீழ்த்தினார். இதில் நான்கு ஓவர்கள் வீசி 24 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.[2] பின் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான் அரையிறுதிப் போட்டியில் நான்கு ஓவர்களை வீசி 13 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இலக்குகளை வீழ்த்தி அணியை இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கு உதவினார். இதுவே இவரின் சிறப்பான பந்துவீச்சாக அமைந்தது. பின் இந்தத் தொடருக்கான கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி கைப்பற்றியது. இவரின் வருகைக்கு முன்னர் 8 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே சென்னை அணிவென்றிருந்தது.

சான்றுகள்[தொகு]

  1. "Bollinger retires as Sheffield Shield resumes". ESPN Cricinfo. பார்த்த நாள் 5 February 2018.
  2. "50th match (N), Indian Premier League at Chennai, Apr 15 2010 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, retrieved 2018-05-17
"https://ta.wikipedia.org/w/index.php?title=டக்_பொலிஞ்சர்&oldid=2720008" இருந்து மீள்விக்கப்பட்டது