வீரேந்தர் சேவாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வீரேந்தர் சேவாக்
Virendra sehwag 72.jpg
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
பட்டப்பெயர் வீரு
உயரம் 5 ft 7 in (1.70 m)
வகை Opening batsman, occasional offspinner
துடுப்பாட்ட நடை வலது
பந்துவீச்சு நடை வலது
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 239) 3 நவம்பர், 2001: எ தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு 13 டிசம்பர், 2012: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 228) 1 ஏப்ரல், 1999: எ பாக்கித்தான்
கடைசி ஒருநாள் போட்டி 3 ஜனவரி, 2013:  எ பாக்கித்தான்
சட்டை இல. - [1]
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1997 – present Delhi
2003 Leicestershire
2008 – present டெல்லி டேர்டெவில்ஸ்
தரவுகள்
தே ஒ.ப மு.து ப.அ
ஆட்டங்கள் 102 251 167 321
ஓட்டங்கள் 8,559 8,273 13,196 10,226
துடுப்பாட்ட சராசரி 50.05 35.05 48.87 34.54
100கள்/50கள் 23/32 15/38 38/50 16/55
அதிகூடியது 319 219 319 219
பந்துவீச்சுகள் 3,731 4,392 8,470 5,997
விக்கெட்டுகள் 40 96 105 142
பந்துவீச்சு சராசரி 47.35 40.13 41.84 36.23
5 விக்/இன்னிங்ஸ் 1 0 1 0
10 விக்/ஆட்டம் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/104 4/6 5/104 4/6
பிடிகள்/ஸ்டம்புகள்]] 85/– 93/– 144/– 117/–

6 ஜனவரி, 2013 தரவுப்படி மூலம்: ESPNcricinfo

வீரு என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் வீரேந்தர் சேவாக் (ஆங்கிலம்:Virender Sehwag, பிறப்பு: அக்டோபர் 20, 1978) இந்தியாவின் துடுப்பாளர். வலதுகைத் துடுப்பாளரான இவர் இந்திய அணியின் துவக்கத் துடுப்பாளராகக் களமிறங்குபவர். 1998 இல் ஒருநாள் போட்டிகளிலும் 2001 இல் தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் துவக்க வீரராக அறிமுகமானார். இந்தியா சார்பாகத் தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஓர் இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையாளர் இவர். 2004 மார்ச்சில் பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் 309 ஓட்டங்களையும் 2008 மார்ச்சில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக சென்னையில் 319 ஓட்டங்களையும் பெற்றார்.

தென்னாபிரிக்காவுக்கெதிராக 278 பந்துகளில் 300 ஓட்டங்களைப் பெற்றமை தேர்வுத் துடுப்பாட்டத்தில் அதிவேகமான முச்சதச் சாதனையாகும்; மேலும் இலங்கைக்கு எதிராக டிசம்பர் 2009 மும்பை பிராபோன் அரங்கத்தில் 207 பந்துகளில் அடித்த 250 ஓட்டங்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமானதாகும். டிசம்பர் 8, 2011 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தூரில் நடந்த ஒரு நாள் போட்டியில் 149 பந்துகளுக்கு 219 ஓட்டங்கள் எடுத்து ஒரு நாள் ஆட்டங்களில் 200 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த சாதனையை சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாகப் பெற்றார். தற்போதைக்கு ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்து உலகசாதனை புரிந்தவராக உள்ளார்.[2]

துவக்க கால வாழ்க்கை[தொகு]

சேவாக் வலைப்பயிற்சியில் பந்து வீசுகிறார்

கிருஷ்ணன் (சேவாக்கின் அப்பா), கிருஷ்ணா (அம்மா) சேவாக் தம்பதிக்கு மூத்த மகனாக அக்டோபர் 20, 1978 அன்று பிறந்தார் வீரேந்தர் [3]; அவருடன் பிறந்தவர்கள் மூன்று பேர். டெல்லியின் புறநகர்ப் பகுதியான நஜவ்கட்டில் கோதுமை, அரிசி, வயல் விதைகள் ஆகியவற்றை வணிகம் செய்து வருகின்றது சேவாக்கின் குடும்பம்.[4]

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

உள்ளூர் போட்டிகள்[தொகு]

சர்வதேச ஒருநாள் போட்டிகள்[தொகு]

மொகாலியில் ஏப்ரல் 2009 இல் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதன் முதலாக களமிறங்கிய சேவாக் வெறும் ஒரு ஓட்டம் எடுத்த நிலையில் சோயப் அக்தரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு பந்து வீசிய சேவாக் மூன்று ஓவர்களை வீசி 35 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இப்போட்டியில் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் சரியாக செயல்படாததால் அடுத்த 20 மாதங்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது.[5]

சர்வதேச தேர்வுப் போட்டிகள்[தொகு]

தனக்கு பிடித்தமான "ஊக் சாட்" அடிக்கும் சேவாக்

சர்வதேச இருபது20 போட்டிகள்[தொகு]

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள்[தொகு]

இந்தியன் பிரீமியர் லீக்கின் முதலிரண்டு பருவங்களிலும் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக இருந்த சேவாக், பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துவதற்காக மூன்றாவது பருவத்தில் அணித்தலைவர் பதவியை கவுதம் கம்பீரிடம் விட்டுக் கொடுத்தார். ஆனால் நான்காவது பருவத்தில் கவுதம் கம்பீர் வேறு அணிக்கு சென்று விட்டதால் இவர் மீண்டும் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியன் பிரீமியர் லீக்கின் ஐந்தாவது பருவத்தில் பங்கேற்ற ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக ஐந்துமுறை அரைசதம் அடித்து அசத்தினார்.

இருபது20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்துள்ள ஒரே வீரர் இவர் மட்டுமே.

பெற்ற விருதுகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்ட விருதுகள்[தொகு]

தொடர் நாயகன் விருதுகள்[தொகு]

எண் தொடர் காலம் தொடரில் பங்களிப்புகள்
1 பாகிஸ்தானில் இந்திய அணி தேர்வுத் தொடர் 2003/04 440 ஓட்டங்கள் (3 ஆட்டங்கள், 4 இன்னிங்ஸ், 1×100, 1×50); 6–0–27–0; 2 பிடிகள்
2 இந்தியாவில் தென் ஆப்பிரிக்க அணி தேர்வுத் தொடர் 2004/05 262 ஓட்டங்கள், (2 ஆட்டங்கள், 3 இன்னிங்ஸ், 1×100, 2×50); 1 பிடிகள்
3 இந்தியாவில் பாகிஸ்தான் அணி தேர்வுத் தொடர் 2004/05 544 ஓட்டங்கள் (3 ஆட்டங்கள், 6 இன்னிங்ஸ், 2×100, 1×50); 5–2–14–0; 2 பிடிகள்
4 இந்தியாவில் இலங்கை அணி தேர்வுத் தொடர் 2009/10 491 ஓட்டங்கள் (3 ஆட்டங்கள், 4 இன்னிங்ஸ், 2×100, 1×50); 16–3–47–1; 1 பிடிகள்
5 இலங்கையில் இந்திய அணி தேர்வுத் தொடர் 2010 348 ஓட்டங்கள் (3 ஆட்டங்கள், 5 இன்னிங்ஸ், 2×100, 1×50); 7 இலக்குகள்

ஆட்ட நாயகன் விருதுகள்[தொகு]

எண் எதிரணி இடம் காலம் ஆட்டத்தில் பங்களிப்புகள்
1 மேற்கு இந்தியத் தீவுகள் வான்கேடே அரங்கம், மும்பை 2002/03 1 இன்னிங்ஸ் : 147 (24×4, 3×6); 2–0–7–0
2வது இன்னிங்ஸ் : 1 பிடிகள்
2 பாகிஸ்தான் முல்தான் 2003/04 1 இன்னிங்ஸ் : 309 (39×4, 6×6); 2–0–11–0
2வது இன்னிங்ஸ்: 3–0–8–0; 1 பிடிகள்
3 பாகிஸ்தான் Gaddafi Stadium, Lahore 2006 1 இன்னிங்ஸ்: 254 (47×4, 1×6); 6–0–24–0
4 மேற்கிந்திய தீவுகள் Gros Islet, St Lucia 2006 1 இன்னிங்ஸ்: 180 (20×4, 2×6); 16.1–5–33–3
2வது இன்னிங்ஸ்: 30–9–48–1
5 தென் ஆபிரிக்கா சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் சென்னை 2007/08 1 இன்னிங்ஸ்: 319 (42×4, 5×6); 11–1–37–1
2வது இன்னிங்ஸ்: 22–2–55–1
6 இலங்கை காலி பன்னாட்டு அரங்கம் இலங்கை 2008/09 1 இன்னிங்ஸ்: 201 (22×4, 4×6)
2வது இன்னிங்ஸ்: 50 (6×4, 1×6)
7 இங்கிலாந்து சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் சென்னை 2008/09 1 இன்னிங்ஸ்: 9 (2×4); 1–0–8–0
2வது இன்னிங்ஸ்: 83 (11×4, 4×6); 6–0–22–0
8 இலங்கை பிராபோர்ன் விளையாட்டரங்கம் மும்பை 2009/10 1 இன்னிங்ஸ்: 293 (254); 1 பிடிகள்
2வது இன்னிங்ஸ்:9–2–24–0

ஒருநாள் போட்டி விருதுகள்[தொகு]

தொடர் நாயகன் விருதுகள்[தொகு]

எண் தொடர் காலம் தொடரில் பங்களிப்புகள்
1 நியூசிலாந்தில் இந்திய அணி ஒருநாள் தொடர் 2008/09 299 (5 ஆட்டங்கள், 5 இன்னிங்ஸ், 1×100, 2×50); 2 பிடிகள்
2 இந்தியா, நியூசிலாந்து, இலங்கை முத்தரப்பு தொடர் இலங்கை 2010/11 268 (5 ஆட்டங்கள், 5 இன்னிங்ஸ், 1×100, 1×50);

ஆட்ட நாயகன் விருதுகள்[தொகு]

படைத்த சாதனைகள்[தொகு]

சர்வதேச ஒருநாள் போட்டிகள்[தொகு]

 • சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த இந்திய வீரர்களில் 15 சதங்களுடன் சேவாக் 3-வது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் சச்சின் (48) முதலிடத்திலும், கங்குலி (22) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
 • சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சேவாக் சதமடித்துள்ள 15 ஆட்டங்களில் 14-ல் இந்தியா வெற்றி கண்டுள்ளது.
 • மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்தூரில் 2011 திசம்பர் 8 அன்று 219 ஓட்டங்கள் எடுத்த சேவாக் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்ததில் இரண்டாவது இடத்தைப் பெற்றார். இப்பட்டியலில் ரோகித் சர்மா (264) முதலிடத்தில் உள்ளார். ரோகித் சர்மா (209), சச்சின் டெண்டுல்கர் (200) முறையே மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.
 • 2011 உலக கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடிய முதல் ஐந்து போட்டிகளிலும், முதலாவது பந்தில் நான்கு ஓட்டங்கள் எடுத்து ரசிகர்களை உற்சாகமடைய வைத்தார்.

சர்வதேச தேர்வுப் போட்டிகள்[தொகு]

 • தேர்வுப் போட்டிகளில் குறைவான பந்துகளில் 250 ஓட்டங்களை கடந்தவர்கள் பட்டியலில் முதலிடம். (207 பந்துகள்)
 • தேர்வுப் போட்டிகளில் குறைவான பந்துகளில் 300 ஓட்டங்களை கடந்தவர்கள் பட்டியலில் முதலிடம். (278 பந்துகள்)
 • தேர்வுப் போட்டிகளில் ஒருநாளில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில், இலங்கை அணிக்கு எதிராக 284 ஓட்டங்கள் எடுத்த சேவாக் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
 • சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவர் மட்டுமே தேர்வு போட்டிகளில் ஆறு முறை இருநூறு ஓட்டங்களை கடந்துள்ள இந்தியர்களாவர்.
 • ஆறு முறை இருநூறு ஓட்டங்கள் எடுத்துள்ள சேவாக், தனது முதல் மூன்று இருநூறுகளையும் பாக்கித்தான் அணிக்கு எதிராக அடித்து சாதனை படைத்தார்.
 • தேர்வு போட்டிகளில் பாக்கித்தான் அணிக்கு எதிராக 2004 ஆவது ஆண்டில் 309 ஓட்டங்களைப் பெற்ற சேவாக் தேர்வு போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார். மார்ச் 2008 அன்று சென்னையில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 319 ஓட்டங்களை பெற்று தனது முந்தைய சாதனையை தானே முறியடித்தார்.
 • சர்வதேச தேர்வு போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இருநூறு ஓட்டங்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைப் பெற்ற முதல் வீரர் ஆவார்.
 • துடுப்பாட்ட வரலாற்றில் தேர்வு போட்டிகளில் இரண்டு முச்சதம், மற்றும் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமும் அடித்த ஒரே வீரர் இவர் மட்டுமே.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Why Sehwag's jersey has no number". Mid Day. 2011-02-21. http://www.mid-day.com/sports/2011/feb/210111-Virender-Sehwag-வங்காளதேசம்-Jersey.htm. பார்த்த நாள்: 2013-01-06. 
 2. "ஒரு நாள் போட்டியில் உலக சாதனை". டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்த்த நாள் டிசம்பர் 08, 2011.
 3. virendarsehwag.net
 4. rediff.com
 5. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரேந்தர்_சேவாக்&oldid=2473440" இருந்து மீள்விக்கப்பட்டது