சிவம் துபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவம் துபே
Shivam Dube
Shivam Dube.jpg
2019 இல் துபே
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு26 சூன் 1993 (1993-06-26) (அகவை 28)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
உயரம்6 அடி 0 அங் (1.83 மீ)[1]
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை மித-விரைவு
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 228)15 திசம்பர் 2019 எ மேற்கிந்தியத் தீவுகள்
இ20ப அறிமுகம் (தொப்பி 82)3 நவம்பர் 2019 எ வங்காளதேசம்
கடைசி இ20ப2 பெப்ரவரி 2020 எ நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2016–மும்பை அணி
2019–ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.த ப.அ இ20 இ20ப
ஆட்டங்கள் 16 35 39 13
ஓட்டங்கள் 1,012 614 399 105
மட்டையாட்ட சராசரி 48.19 43.85 16.62 17.50
100கள்/50கள் 2/7 1/1 -/1 -/1
அதியுயர் ஓட்டம் 114 118 54 54
வீசிய பந்துகள் 2,073 1,315 495 129
வீழ்த்தல்கள் 40 34 25 5
பந்துவீச்சு சராசரி 24.27 32.50 29.44 43.20
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 7/53 3/21 3/27 3/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/- 12/- 14/- 8/-
மூலம்: கிரிக்கின்ஃபோ, 2 பெப்ரவரி 2020

சிவம் துபே (Shivam Dube), (பிறப்பு 26 சூன் 1993) ஒரு இந்திய துடுப்பாட்ட வீரர், இவர் உள்நாட்டு துடுப்பாட்டத்தில் மும்பை அணிக்காக விளையாடுகிறார். இவர் ஒரு பன்முக வீரர் ஆவார், அவர் இடது கை மட்டையாளர் மற்றும் வலது கை மித வேகப்பந்து வீச்சாளர். [2] நவம்பர் 2019 இல் இந்தியா துடுப்பாட்ட அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். [3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

துபே 1993 சூன் 26 அன்று மும்பையில் பிறந்தார். 19 ஆவது வயதில் மட்டைப்பந்து விளையாட ஆரம்பித்தார். 23 வயதுக்குட்பட்ட மும்பை அணிக்காக தேர்வு செய்யப்பட்டார் [4]

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

18 சனவரி 2016 அன்று 2015–16 சையத் முஷ்டாக் அலி கோப்பையில் மும்பை அணியில் இருபது20 போட்டியில் அறிமுகமானார். [5] இவர் பிப்ரவரி 25, 2017 அன்று 2016–17 விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணியில் தேர்வானார்.

முதல் தர துடுப்பாட்ட 2017-2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் மும்பை அணிக்காக விளையாடினார், அந்த போட்டியில் முதல் 5 இலக்குகளை வீழ்த்தினார். 2 நவம்பர் 2018 அன்று, 2018–19 ரஞ்சி டிராபியில் ரயில்வேக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற போட்டியில், முதல் தர துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். [6] 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் 8 போட்டிகளில் 23 இலக்குகளை வீழ்த்தினார்.

2018 ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 2019 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். [7] [8]

சர்வதேச போட்டிகள்[தொகு]

அக்டோபர் 2019 இல், வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுபயணத்தில் இந்தியாவின் இருபதுக்கு 20 சர்வதேச அணியில் தேர்வு செய்யப்பட்டார். [9] [10] நவம்பர் 3, 2019 அன்று வங்காளதேச அணிக்கு எதிராக இந்தியாவுக்காக தனது முதல் இருபது20 அறிமுக வீரராக களம் இறங்கினார். [11] மேலும் அந்த மாதத்தில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்தியா ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) அணியிலும் தேர்வு செய்யப்பட்டார். [12] மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, 15 டிசம்பர் 15, 2019 அன்று இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். [13]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவம்_துபே&oldid=2934415" இருந்து மீள்விக்கப்பட்டது