ஸ்டீவ் சிமித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்டீவ் சிமித்
Steve Smith.jpg
ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஸ்டீவன் பீட்டர் சிமித்
பிறப்பு 2 சூன் 1989 (1989-06-02) (அகவை 30)
சிட்னி, ஆத்திரேலியா
உயரம் 1.76 m (5 ft 9 12 in)
வகை சகலதுறை
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை கழல் திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு சூலை 13, 2010: எ பாக்கிஸ்தான்
கடைசித் தேர்வு சனவரி 3, 2011: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 182) பிப்ரவரி 19, 2010: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 2, 2011:  எ இங்கிலாந்து
சட்டை இல. 49
முதல் இ20ப போட்டி (cap 43) பிப்ரவரி 5, 2010: எ பாக்கிஸ்தான்
கடைசி இ20ப போட்டி சனவரி 14, 2011:  எ இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2007– நிவ் சவ்த் வேல்ஸ் புளு (squad no. 19)
2010– ரோயல் செலஞ்சர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 5 15 23 35
ஓட்டங்கள் 259 240 1,516 821
துடுப்பாட்ட சராசரி 28.77 26.66 42.11 35.69
100கள்/50கள் 0/2 0/0 4/6 0/4
அதிகூடிய ஓட்டங்கள் 77 46* 177 92
பந்து வீச்சுகள் 372 503 2,988 1,271
வீழ்த்தல்கள் 3 17 41 33
பந்துவீச்சு சராசரி 73.33 25.82 48.17 33.75
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0 1 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 3/51 3/33 7/64 3/33
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 1/– 6/– 28/– 16/–

பிப்ரவரி 7, 2011 தரவுப்படி மூலம்: [1]

ஸ்டீவன் பீட்டர் சிமித்: (Steven Peter "Steve" Smith, பிறப்பு: சூன் 2 1989) ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் மட்டையாளர் மற்றும் முன்னாள் அணித்தலைவர் ஆவார்.[1][2]ஏப்ரல், 2018 அன்றைய நிலவரப்படி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தேர்வுத் துடுப்பாட்டத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார்[3][4]. டிசம்பர் 30, 2017 இல் தேர்வுத் துடுப்பாட்ட தரவரிசையில் 947 புள்ளிகள் பெற்றார். இது துடுப்பாட்ட வரலாற்றில் வீரர் ஒருவர் பெறும் இரண்டாவது அதிகபட்ச புள்ளியாகும்.டான் பிராட்மன் 961 புள்ளிகளோடு முதல் இடத்தில் நீடிக்கிறார்.[5] சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[6][7] உள்ளூர் துடுப்பாட்டப் போட்டிகளில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.[8][9]

வலது கை சுழற்பந்துவீச்சாளராக முதலில் அணிக்குத் தேர்வானார்[10] தற்போது மட்டையாளராகவிளையாடி வருகிறார்.[11] 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் சில தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். அதன் பின் 2013 ஆம் ஆண்டுகளில் இருந்து இவருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைத்தது. 2015 ஆம் ஆண்டின் இறுதியில் மைக்கேல் கிளார்க்கிடம் இருந்த அணித்தலைவர் பொறுப்பு இவரிடம் வந்தது. அதன் பின்பு நான்காவது வீரராக விளையாடி வருகிறார்.[12]

இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதைப் பெற்றார்.[13] மேலும் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதையும், 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான ஆலன்பார்டர் பதக்கத்தையும் , 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆத்திரேலியத் தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருது,[14] 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆத்திரேலிய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதுகளைப் பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டில் விசுடன்[15] துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது இவரை சிறந்த வீரராக அறிவித்தது.[16] 2014 ஆம் ஆண்டில் மார்ட்டின் குரோவ் என்பவர் ஜோ ரூட், விராட் கோலி, கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் சுமித் ஆகிய நான்கு இளம் வீரர்கள் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்கள் எனத் தெரிவித்தார்.[17][18]

மார்ச், 2018 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டத்தில் பந்தை சேதப்படுத்தியதாக விமர்சனத்திற்கு உள்ளானார்.[19][20] பின் ஆத்திரேலியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விசாரணைக்குப் பின் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட இவருக்கு ஓராண்டு தடைவிதித்தது.[21]

ஆரம்பகாலவாழ்க்கை[தொகு]

ஸ்டீவ் சுமித் சூன் 2 1989 இல் சிட்னி, ஆத்திரேலியாவில் பிறந்தார். இவரின் தந்தை பீட்டர் ஆத்திரேலியாவைச் சார்ந்தவர், இவர் வேதியியல் பிரிவில் பட்டம் பெற்றவர் ஆவார்[22]. தாய் கிலியன்,[23]இலண்டன் நாட்டைச் சேர்ந்தவர். சுமித் மேனாய் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். 17 ஆவது வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு இங்கிலாந்தில் துடுப்பாட்டம் விளையாடச் சென்றார்.[24][25]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவரின் தாய் இலண்டன் நாட்டைச் சார்ந்தவர் என்பதனால் இவருக்கு ஆத்திரேலியா மற்றும் இலண்டன் ஆகிய இருநாடுகளின் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.[26] இவர் மக்குவாரி பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் சட்டம் பயின்ற டேனி வில்லிஸ் என்பவருடன் பொருத்தம் வலுப்படுத்தலில் (டேட்டிங்) இருந்து வந்தார்.[27] சூன், 2017 இல் இவர்களின் உறுதிபார்த்தல் அறிவிப்பு வெளியானது[28]. தெ ஜர்னி (பயணம்) எனும் இவரின் சுயசரிதை நூல் அக்டோபர் 25, 2017 இல் வெளியானது.[29][30]

சான்றுகள்[தொகு]

 1. "Steven Smith". ESPNcricinfo. பார்த்த நாள் 28 March 2018.
 2. "Steve Smith – cricket.com.au". பார்த்த நாள் 28 March 2018.
 3. "Live Cricket Scores & News International Cricket Council". பார்த்த நாள் 28 March 2018.
 4. "Smith, Ashwin top ICC Test rankings for 2015". ESPNcricinfo. பார்த்த நாள் 31 December 2015.
 5. "ICC Player Rankings". பார்த்த நாள் 28 March 2018.
 6. "Ashes: Is Steve Smith the best since Donald Bradman?". BBC (16 December 2017). பார்த்த நாள் 28 March 2018.
 7. https://www.cricbuzz.com/amp/cricket-news/97213/100-reasons-to-celebrate-steve-smith-india-vs-australia-2nd-cricket-odi-kolkata
 8. "Steven Smith's extraordinary 50". பார்த்த நாள் 28 March 2018.
 9. "Steven Smith Profile – ICC Ranking, Age, Career Info & Stats – Cricbuzz". பார்த்த நாள் 28 March 2018.
 10. "Smith's growth underlined by 100th game".
 11. "My summer watching the big four".
 12. "Steven Smith – Player Profile – Test Cricket". பார்த்த நாள் 28 March 2018.
 13. "Steven Smith claims top ICC awards". ESPNcricinfo. பார்த்த நாள் 28 December 2015.
 14. கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: Steven Smith
 15. Brettig, Daniel. "Steven Smith – Wisden Cricketers of the Year 2015". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 7 August 2017 அன்று பரணிடப்பட்டது.
 16. Martin, Ali (13 April 2016). "Wisden 2016: Stokes, Bairstow, Smith, McCullum and Williamson are players of the year". The Guardian (London). https://www.theguardian.com/sport/2016/apr/13/wisden-2016-england-transformation-stokes-bairstow-smith-mccullum-williamson. 
 17. "Test cricket's young Fab Four". ESPNcricinfo.
 18. "Virat Kohli, Joe Root, Steven Smith, Kane Williamson 'Fab Four' of Tests: Martin Crowe". The Indian Express.
 19. "Bancroft charged, Smith admits ball tampering ploy". Cricket.com.au. https://www.cricket.com.au/video/cameron-bancroft-ball-tampering-charge-yellow-tape-steve-smith-senior-players-australia-cape-town/2018-03-25. 
 20. CNN, Lucie Morris-Marr,. "Australia cricket captain to sit out Test over ball-tampering scandal". CNN. https://edition.cnn.com/2018/03/25/sport/cricket-australia-ball-tampering-intl/index.html. 
 21. "Tampering trio learn their fate". cricket.com.au. https://www.cricket.com.au/news/player-sanctions-steve-smith-cameron-bancroft-david-warner-australia-cricket-ball-tampering/2018-03-28. 
 22. Barrett, Chris (15 December 2014). "Steve Smith goes from teenage club sensation to Australian cricket captain". The Sydney Morning Herald. http://www.smh.com.au/sport/cricket/steve-smith-goes-from-teenage-club-sensation-to-australian-cricket-captain-20141215-127mi3.html. பார்த்த நாள்: 26 January 2015. 
 23. Bull, Andy (9 May 2010). "Steve Smith spins from England's grasp to boost Australia's attack". The Guardian. https://www.theguardian.com/sport/2010/may/08/steve-smith-england-australia. பார்த்த நாள்: 24 March 2011. 
 24. Hooper, James (11 January 2010). "Young leg-spin tyro Steven Smith sets his sights on Test cricket heights". Herald Sun. http://www.heraldsun.com.au/sport/young-leg-spin-tyro-steven-smith-sets-his-sights-on-test-cricket-heights/story-e6frf9if-1225817877445. பார்த்த நாள்: 26 January 2015. 
 25. Brettig, Daniel (18 November 2013). "Learning on the job". Cricinfo Magazine. http://www.espncricinfo.com/magazine/content/story/689705.html. பார்த்த நாள்: 26 January 2015. 
 26. "Steve Smith almost played cricket for England". news.com (20 November 2017). பார்த்த நாள் 29 April 2018.
 27. Webster, Andrew (16 December 2014). "How love turned Steve Smith from cricket tragic to Australian Test captain". The Sydney Morning Herald. http://www.smh.com.au/sport/cricket/how-love-turned-steve-smith-from-cricket-tragic-to-australian-test-captain-20141216-128dsf.html. பார்த்த நாள்: 26 January 2015. 
 28. "Australian cricket captain Steve Smith announces engagement to Dani Willis". news.com.au (News Corp Australia). 29 June 2017. http://www.news.com.au/sport/sports-life/australian-cricket-captain-steve-smith-announces-engagement-to-dani-willis/news-story/a92a345245742068751d7a51e3826c48. 
 29. Smith, Steve (25 October 2017). "The Journey: My story, from backyard cricket to Australian Captain". Allen & Unwin. பார்த்த நாள் 28 March 2018.
 30. https://www.allenandunwin.com/browse/books/general-books/sport/The-Journey-Steve-Smith-with-Brian-Murgatroyd-9781760630539
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவ்_சிமித்&oldid=2721489" இருந்து மீள்விக்கப்பட்டது