கேன் வில்லியம்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேன் வில்லியம்சன்
Kane Williamson in 2019.jpg
இவரைப் பற்றி
முழுப்பெயர் கேன் ஸ்டுவார்ட் வில்லியம்சன்
பிறப்பு 8 ஆகத்து 1990 (1990-08-08) (அகவை 29)
துரன்கா, நியூசிலாந்து
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு நவம்பர் 4, 2010: எ இந்தியா
கடைசித் தேர்வு சனவரி 15, 2011: எ பாக்கிஸ்தான்
முதல் ஒருநாள் போட்டி ஆகத்து 10, 2010: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 1, 2011:  எ பாக்கிஸ்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 5 11 25 38
ஓட்டங்கள் 299 253 1,727 1,309
துடுப்பாட்ட சராசரி 33.22 25.30 43.17 48.48
100கள்/50கள் 1/2 1/0 5/8 4/7
அதிகூடிய ஓட்டங்கள் 131 108 192 108*
பந்து வீச்சுகள் 240 126 2,530 979
வீழ்த்தல்கள் 2 1 32 19
பந்துவீச்சு சராசரி 88.00 103.00 45.56 39.89
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0 1 1
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/45 1/2 5/75 5/51
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 1/– 3/– 25/0 16/–

பிப்ரவரி 7, 2010 தரவுப்படி மூலம்: Cricket Archive

கேன் ஸ்டுவார்ட் வில்லியம்சன் (Kane Stuart Williamson, பிறப்பு: ஆகத்து 8, 1990 நியூசிலாந்து துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் தலைவர் ஆவார். இவர் வலதுகை மட்டையாளர் மற்றும் அவ்வப்போது வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளராக செயல்படுகிறார். 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணித் தலைவராக செயல்படுகிறார்.[1][2] இவர் நியூசிலாந்திலுள்ள வடக்கு மாவட்ட அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வரும் இவர் இங்கிலாந்திலுள்ள கிளவ்செஸ்டெர்ஷயர் மற்றும் யார்க்‌ஷயர் அணிகளுக்காக விளையாடி வருகிறார்.

டிசம்பர் 2007 ஆம் ஆண்டில் வில்லியம்சன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். .[3] 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான நியூசிலாந்து அணியின் தலைவரானார். இவர் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் விளையாடினார். மேலும் 2012 ஐசிசி உலக இருபது20, 2014 ஐசிசி உலக இருபது20, 2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரின் நியூசிலாந்து அணியில் இருந்தார்.இவர் இந்தியாவில் நடைபெற்ற 2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் முழு நேர அணித் தலைவராக இருந்தார்.

இயான் சேப்பல் மற்றும் மார்ட்டின் குரோவ் ஆகியோர் ஜோரூட், விராட் கோலி, கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் சிமித் ஆகியோரை தேர்வுத் துடுப்பாட்டத்தின் சிறந்த நான்கு வீரர்கள் எனத் தெரிவித்தனர்.[4][5].[2][6][7]

2019 உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார். மேலும் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் (578) எடுத்த அணித்தலைவர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு 2019 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருது ஐசிசியால் வழங்கப்பட்டது.

இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

பெப்ரவரி 6, 2015 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இவரை 96,500 அமெரிக்க டாலர் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. 2016 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரை இந்த அணி வென்றது. 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இந்த அணி 460,500 அமெரிக்க டாலர் மதிப்பில் இவரை தக்கவைத்துக் கொண்டது. டேவிட் வார்னர் ,2018 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டுகாலம் சர்வதேச மற்றும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாட பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை தடை விதித்தது.[8][9] இதனால் அணித்தலைவர் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.[10][11]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

ஆகஸ்டு 10, 2010 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இவர் சந்தித்த ஒன்பதாவது பந்தில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இரண்டாவது போட்டியில் அஞ்செலோ மத்தியூஸ் பந்துவீச்சில் இவர் சந்தித்த இரண்டாவது பந்தில் ஓட்டங்கள் எதுவும் சேர்க்காமல் ஆட்டமிழந்தார். அக்டோபர் 14, 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்கள் அடித்தார். அந்தத் தொடரில் நியூசிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் வங்காளதேச அணியிடம் தோவியடைந்தது.[12] பின் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் இடம்பெற்றார்.[13]

சான்றுகள்[தொகு]

 1. "My summer watching the big four".
 2. 2.0 2.1 "Big four? What about Warner?".
 3. "List of First Class Matches Played by Kane Williamson". CricketArchive. பார்த்த நாள் 7 November 2010.
 4. "Virat Kohli, Joe Root, Steven Smith, Kane Williamson ‘Fab Four’ of Tests: Martin Crowe". The Indian Express.
 5. Crowe, Martin (29 August 2014). "Test cricket's young Fab Four". ESPNcricinfo. பார்த்த நாள் 1 January 2018.
 6. "Test cricket's young Fab Four". ESPNcricinfo.
 7. "Virat Kohli, Joe Root, Steven Smith, Kane Williamson ‘Fab Four’ of Tests: Martin Crowe". The Indian Express.
 8. "Tampering trio learn their fate". cricket.com.au. https://www.cricket.com.au/news/player-sanctions-steve-smith-cameron-bancroft-david-warner-australia-cricket-ball-tampering/2018-03-28. 
 9. "Trio suspended by Cricket Australia". பார்த்த நாள் 28 March 2018.
 10. "SunRisers Hyderabad on Twitter" (in en). Twitter. https://twitter.com/SunRisers/status/979263226746753024. 
 11. "Kane Williamson appointed SRH captain for IPL 2018" (in en). Cricbuzz. http://www.cricbuzz.com/cricket-news/101315/kane-williamson-appointed-sunrisers-hyderabad-cricket-team-captain-for-ipl-2018. 
 12. (in en) Williamson, Bennett in Test squad, 2010-10-24, http://www.espncricinfo.com/india-v-new-zealand-2010/content/story/483282.html, பார்த்த நாள்: 2018-05-07 
 13. "Williamson, Bennett in Test squad". ESPNcricinfo. பார்த்த நாள் 7 November 2010.

வெளியிணைப்புகள்[தொகு]

கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: கேன் வில்லியம்சன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேன்_வில்லியம்சன்&oldid=2785224" இருந்து மீள்விக்கப்பட்டது