நூறு (துடுப்பாட்டம்)

துடுப்பாட்டத்தில், நூறு அல்லது சதம் (Century) என்பது மட்டையாளர் ஒருவரால் ஒரு நுழைவில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை அடைதலைக் குறிக்கும்.[1] இரண்டு மட்டையாளர்கள் இணைப்பாட்டமாக 100 ஓட்டங்களை அடைந்தால், அது நூற்று இணைப்பாட்டம் என அழைக்கப்படும். பொதுவாக, துடுப்பாட்ட வீரர்களின் புள்ளிவிபரங்களில் நூறுகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படும். 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களும் புள்ளிவிவரங்களில் நூறுகளாகவே கணக்கெடுக்கப்படுகின்றன.
மட்டையாளர் ஒருவர், ஒரு நுழைவில் 50 ஓட்டங்களை அடைதல், ஐம்பது அல்லது அரைச்சதம் (Half-century) எனப்படும். இதன் பின்னர், அவர் 100 ஓட்டங்களை அடைவாராயின், புள்ளிவிவரங்களில் அது ஐம்பதாகக் கணக்கெடுக்கப்படமாட்டாது.
நூறுகள் தொடர்வான பதிவுகள்[தொகு]
முதல் தரத் துடுப்பாட்டம்[தொகு]
முதல் தரத் துடுப்பாட்டத்தில் முதன்முதலில் 100 நூறுகளை அடித்தவர் டபிள்யூ. ஜி. கிரேஸ் ஆவார்.[2] இவர் 1895இல் இவ்விலக்கை அடைந்தார்.[2] முதல் தரத் துடுப்பாட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான நூறுகளை அடித்தவர் ஜாக் ஹாப்ஸ் ஆவார்.[3] இவர் முதல் தரத் துடுப்பாட்டத்தில் 199 நூறுகளை அடித்துள்ளார்.[3]
தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]
தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதலாவது நூறானது, துடுப்பாட்ட வரலாற்றில் முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலேயே, ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரரான சார்லஸ் பானர்மேனால் இங்கிலாந்துக்கு எதிராக அடிக்கப்பட்டது. தேர்வுத் துடுப்பாட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான நூறுகளை அடித்தவர் சச்சின் தெண்டுல்கர் ஆவார். இவர் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 51 நூறுகளை அடித்துள்ளார்.
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான நூறுகளை அடித்தவர் சச்சின் தெண்டுல்கர் ஆவார். இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் 49 நூறுகளை அடித்துள்ளார்.
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Martin Williamson. "A glossary of cricket terms". ESPN Cricinfo. 20 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 S. Rajesh (2 ஆகத்து 2010). "An early pioneer". ESPN Cricinfo. 20 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 "Most hundreds in a career". ESPN Cricinfo. 20 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
வெளியிணைப்புகள்[தொகு]

