மட்டையாட்ட சராசரி (துடுப்பாட்டம்)
துடுப்பாட்டத்தில் மட்டையாட்ட சராசரி என்பது ஒரு மட்டையாளர் எடுத்த ஓட்டங்களின் மொத்த எண்ணிக்கையை அவர் எத்தனை முறை ஆட்டமிழந்தாரோ அந்த எண்ணிக்கையைக் கொண்டு வகுப்பதன் மூலம் பெறப்படுகிறது. இது ஒரு துடுப்பாட்டக்காரரின் மட்டையாடும் திறனைக் கணிக்க உதவுகிறது. தேர்வுத் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச சராசரி ஆத்திரேலிய வீரர் சர் டான் பிராட்மனின் 99.94 ஆகும். இன்றுவரை எந்த வீரராலும் முறியடிக்க இயலாத இவ்வளவு அதிகமான சராசரியைப் பதிவு செய்ததால் புள்ளியியல் அடிப்படையில் பிராட்மன் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார்.[1]
முன்னணி ஓட்ட சராசரிகள்
[தொகு]தேர்வுத் துடுப்பாட்டம்
[தொகு]தர. | மட்டையாளர் | போ. | ஆட்ட. | ஆகா. | ஓட்ட. | அதி. | சரா. | காலம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | டான் பிராட்மன் | 52 | 80 | 10 | 6,996 | 334 | 99.94 | 1928–48 |
2 | ஸ்டீவ் சிமித் | 68 | 124 | 16 | 6,973 | 239 | 63.75 | 2010–present |
3 | ஆடம் வோஜசு | 20 | 31 | 7 | 1,485 | 269* | 61.87 | 2015–16 |
4 | கிரகாம் பொலொக் | 23 | 41 | 4 | 2,256 | 274 | 60.97 | 1963–70 |
5 | ஜார்ஜ் ஹெட்லே | 22 | 40 | 4 | 2,190 | 270* | 60.83 | 1930–54 |
6 | ஹெர்பட் சட்கிளிஃப் | 54 | 84 | 9 | 4,555 | 194 | 60.73 | 1924–35 |
7 | எடி பெயின்டர் | 20 | 31 | 5 | 1,540 | 243 | 59.23 | 1931–39 |
8 | கென் பாரிங்டன் | 82 | 131 | 15 | 6,806 | 256 | 58.67 | 1955–68 |
9 | எவர்டன் வீக்கஸ் | 48 | 81 | 5 | 4,455 | 207 | 58.61 | 1948–58 |
10 | வால்ரர் ஹமொண்ட் | 85 | 140 | 16 | 7,249 | 336* | 58.45 | 1927–47 |
மூலம்: Cricinfo Statsguru. இந்ச அட்டவணை குறைந்தபட்சம் 20 ஆட்ட முறைகள் மட்டையாடிய வீரர்களை உள்ளடக்கியது.* குறியீடு ஆட்டமிழக்காததைக் குறிக்கிறது. கடைசியாக புதுப்பித்தது: 30 நவம்பர் 2019.
முதல் தரப் போட்டிகள்
[தொகு]தர. | மட்டையாளர் | போ. | ஆட்ட. | ஆ.கா. | ஓட்ட. | அதி. | சரா. | காலம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | டான் பிராட்மன் | 234 | 338 | 43 | 28,067 | 452* | 95.14 | 1927–49 |
2 | விஜய் மேர்ச்சன்ட் | 150 | 234 | 46 | 13,470 | 359* | 71.64 | 1929–51 |
3 | ஜார்ஜ் ஹெட்லே | 103 | 164 | 22 | 9,921 | 344* | 69.86 | 1927–54 |
4 | அஜய் சர்மா | 129 | 166 | 16 | 10,120 | 259* | 67.46 | 1984–2001 |
5 | பில் போன்ஸ்போர்ட் | 162 | 235 | 23 | 13,819 | 437 | 65.18 | 1920–34 |
6 | பில் உட்ஃபுல் | 174 | 245 | 39 | 13,388 | 284 | 64.99 | 1921–34 |
7 | பத்தும் நிஸ்சன்கா | 27 | 50 | 6 | 2,817 | 217 | 64.02 | 2016–present |
8 | சந்தனு சுக்வீகர் | 85 | 122 | 18 | 6,563 | 299* | 63.10 | 1987–2002 |
9 | கே. சி. இப்ராகிம் | 60 | 89 | 12 | 4,716 | 250 | 61.24 | 1938–50 |
10 | ஹனுமா விஹாரி | 76 | 120 | 14 | 9,965 | 262 | 59.82 | 2010–present |
மூலம்: Cricinfo Statsguru. இந்த அட்டவணை குறைந்தபட்சம் 50 ஆட்ட முறைகள் மட்டையாடிய வீரர்களை உள்ளடக்கியது.* குறியீடு ஆட்டமிழக்காததைக் குறிக்கிறது. கடைசியாக புதுப்பித்தது: 30 நவம்பர் 2019
ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகள்
[தொகு]தர. | மட்டையாளர் | போ. | முறை. | ஆ.கா. | ஓட்ட. | அதி. | சரா. | காலம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | ரயான் டென் டோசேட் | 33 | 32 | 9 | 1,541 | 119 | 67.00 | 2006–11 |
2 | விராட் கோலி | 239 | 230 | 39 | 11,520 | 183 | 60.31 | 2008–present |
3 | பாபர் அசாம் | 74 | 72 | 10 | 3,359 | 125* | 54.17 | 2015–present |
4 | இமாம்-உல்-ஹக் | 37 | 37 | 5 | 1,723 | 151 | 53.84 | 2017–present |
5 | மைக்கேல் பீவன் | 232 | 196 | 67 | 6,912 | 108* | 53.58 | 1994–2004 |
6 | ஏ பி டி வில்லியர்ஸ் | 228 | 218 | 39 | 9,577 | 176 | 53.50 | 2005–18 |
7 | ஜோ ரூட் | 143 | 135 | 21 | 5,856 | 133* | 51.36 | 2013–present |
8 | ஜொனாதன் ட்ரொட் | 68 | 65 | 10 | 2,819 | 137 | 51.25 | 2009–13 |
9 | ஷாய் ஹோப் | 69 | 64 | 9 | 2,785 | 170 | 50.63 | 2016–present |
10 | எம் எஸ் தோனி | 350 | 297 | 84 | 10,773 | 183* | 50.57 | 2004–present |
மூலம்: Cricinfo Statsguru. இந்த அட்டவணை குறைந்தபட்சம் 20 ஆட்ட முறைகள் மட்டையாடிய வீரர்களை உள்ளடக்கியது.* குறியீடு ஆட்டமிழக்காததைக் குறிக்கிறது. கடைசியாக புதுப்பித்தது: 30 நவம்பர் 2019.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sir Donald Bradman". Players and Officials. Cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 27 April 2006.