ஆடம் வோஜசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆடம் வோஜசு
Adam Voges
Adam Voges.jpg
ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஆடம் சார்லசு வோஜசு
பட்டப்பெயர் கென்னி, ஹாங்க்
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலக்கை
பந்துவீச்சு நடை மென் இடக்கை மரபுவழா
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 442) 3 சூன், 2015: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு 20 ஆகத்து, 2015: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 163) 20 பெப்ரவரி, 2007: எ நியூசிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி 2 நவம்பர், 2013:  எ இந்தியா
முதல் இ20ப போட்டி (cap 28) 11 டிசம்பர், 2007: எ நியூசிலாந்து
கடைசி இ20ப போட்டி 13 பெப்ரவரி, 2013:  எ மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2002–2015 மேற்கு ஆத்திரேலியா
2007 ஆம்ப்சயர்
2008–2012 நோட்டிங்கம்சயர்
2010 ராஜஸ்தான் ராயல்ஸ்
2011 மெல்பர்ன் ஸ்டார்சு
2012–2014 பெர்த் ஸ்கோர்ச்சர்சு
2013–2015 மிடில்செக்சு
தரவுகள்
தேர்வுஒ.நா.பஇ20பமு.த
ஆட்டங்கள் 11 31 7 175
ஓட்டங்கள் 922 870 139 11,923
துடுப்பாட்ட சராசரி 76.83 45.78 46.33 46.57
100கள்/50கள் 3/3 1/4 0/1 27/62
அதிகூடிய ஓட்டங்கள் 269* 112* 51 269*
பந்துவீச்சுகள் 18 301 12 3,388
வீழ்த்தல்கள் 0 6 2 53
பந்துவீச்சு சராசரி 46.00 2.50 33.90
5 வீழ்./ஆட்டம் 0 0 0 0
10 வீழ்./ஆட்டம் 0 n/a n/a 0
சிறந்த பந்துவீச்சு 1/3 2/5 4/92
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 9/– 7/– 3/– 236/–

11 டிசம்பர், 2015 தரவுப்படி மூலம்: Cricinfo

ஆடம் சார்லஸ் வோஜசு (Adam Charles Voges, பிறப்பு: 4 அக்டோபர் 1979) முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மிடில்செக்சு, மேற்கு ஆத்திரேலிய அணிகளின் தலைவராகவும் விளையாடியுள்ளார். இவர் 2015 சூன் மாதத்தில் தனது முதலாவது தேர்வுப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடினார்.[1] இவரின் தேர்வுத் துடுப்பாட்ட சராசரி 61.87 ஆகும். 20 தேர்வுப் போட்டிகளுக்கு மேல் விளையாடியவர்களில் டான் பிராட்மனுக்கு அடுத்தபடியாக உள்ளார். 2016 ஆம் ஆண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் கனவுத் தேர்வு அணியில் இவர் இடம்பெற்றார்.

அக்டோபர் , 2012 ஆம் ஆண்டில் மார்கஸ் நார்த் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியதால் இவர் வெஸ்டர்ன் ஆத்திரேலிய அணியின் பொறுப்புத் தலைவராக நியமிக்கப்பட்டார். பிக் பாஷ் தொடரின் முதல் பருவத்தில் இவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினார். அதற்கு அடுத்த பருவத்தில் பெர்த் ஸ்கார்செர்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும் இவர் ஹாம்ப்ஷயர், நாட்டிங்காம்ஷயர், மற்றும் மிடில்செக்ஸ் அணிகளுக்காக இங்கிலாந்து மாகாணத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். 2010 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் ஜமைக்கா அணிக்காக விளையாடினார்.

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

சூன் 3, 2015 இல் ரூசோவில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 332 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 130 ஓடங்கள் எடுத்தார். இதில் 13 நான்குகளும் 1 ஆறுகளும் அடங்கும். இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 9 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்று சாதனை படைத்தார்.[2][3][4]

டிசம்பர் 11,2015 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ரிக்கி பாண்டிங்கின் 209 ஓட்டங்கள் எனும் சாதனையையும், டக் வால்டர்ஸ்சின் சாதனையான 242 ஓட்டங்கள் எடுத்த சாதனையையும் முறியடித்தார். மேலும் இந்த அணிக்கு எதிராக இருநூறு ஓட்டஙகளையும் அடித்தார். இதன்மூலம் அதிக வயதானவர்கள் ஆத்திரேலிய அணிக்காக இருநூறு அடித்தவர்கள்வரிசையில் நான்காவது இடம்பிடித்தார். இதற்கு முன்னதாக டான் பிராட்மன், அலன் போடர் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் இந்தச் சாதனையைப் புரிந்தனர். ஜேக் ரைடர் மட்டுமே 35 ஆவது வயதில் இருநூறு அடித்தார்.

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

பெப்ரவரி 20,2007 இல் ஆமில்டன், நியூசிலாந்தில் நடந்த நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 10 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 1 ஆறு ஓட்டங்கள் அடங்கும். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 1 இலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5]

பன்னாட்டு இருபது20[தொகு]

டிசம்பர் 11, 2007 இல் பெர்த்தில் நடைபெற்ற பன்னாட்டு இருபது20 போட்டியில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்தார்.[6]

பன்னாட்டு சதங்கள்[தொகு]

தேர்வுச் சதங்கள்[தொகு]

ஆடம் வோஜசின் தேர்வுச் சதங்கள்
# ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகரம்/நாடு அரங்கு ஆண்டு முடிவு
1 130* 1  மேற்கிந்தியத் தீவுகள் டொமினிக்காவின் கொடி உறொசோ, டொமினிக்கா வின்சர் பூங்கா 2015 வெற்றி
2 119 9  நியூசிலாந்து ஆத்திரேலியாவின் கொடி பேர்த், ஆத்திரேலியா மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம் 2015 சமம்
3 269* 11  மேற்கிந்தியத் தீவுகள் ஆத்திரேலியாவின் கொடி ஹோபார்ட், ஆத்திரேலியா பெல்லரைவ் ஓவல் அரங்கம் 2015 -

ஒருநாள் பன்னாட்டு சதங்கள்[தொகு]

ஆடம் வோஜசின் பன்னாட்டு ஒருநாள் சதங்கள்
# ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகரம்/நாடு அரங்கு ஆண்டு முடிவு
1 112* 17  மேற்கிந்தியத் தீவுகள் ஆத்திரேலியாவின் கொடி மெல்பேர்ண், ஆத்திரேலியா மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் 2013 வெற்றி

ஆட்டநாயகன் விருது[தொகு]

வ எ தொடர் ஆண்டு செயல்பாடு முடிவு
1 ஃபிரான்க் வாரல் தொடர் 2015/16 ஓட்டங்கள்: 375 (2 நூறுகள்); ஆட்டப்பகுதி – 2, – 2, சராசரி – NA, ஸ்டிரைக் ரேட் – 83.14 (3 போட்டிகள்)  ஆத்திரேலியா 2–0 எனும் கணக்கில் தொடரை வென்றது.[7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடம்_வோஜசு&oldid=2718964" இருந்து மீள்விக்கப்பட்டது