ரிக்கி பாண்டிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரிக்கி பாண்டிங்
Ricky Ponting YM.jpg
ஆத்திரேலியா ஆஸ்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரிக்கி தாமஸ் பாண்டிங்
பட்டப்பெயர் Punter
பிறப்பு 19 திசம்பர் 1974 (1974-12-19) (அகவை 44)
லாந்ஸெஸ்டாந், டாஸ்மேனியா, ஆத்திரேலியா
உயரம் 1.78 m (5 ft 10 in)
துடுப்பாட்ட நடை வலக்கை
பந்துவீச்சு நடை வலக்கை மிதவேகம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.ப.து.மு.தபட்டியல் அ
ஆட்டங்கள் 168 375 289 456
ஓட்டங்கள் 13,378 13,704 24,150 16,363
துடுப்பாட்ட சராசரி 51.85 42.03 55.90 41.74
100கள்/50கள் 41/62 30/82 82/106 34/99
அதிக ஓட்டங்கள் 257 164 257 164
பந்து வீச்சுகள் 575 150 1,506 349
இலக்குகள் 5 3 14 8
பந்துவீச்சு சராசரி 54.60 34.66 58.07 33.62
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/0 1/12 2/10 3/34
பிடிகள்/ஸ்டம்புகள் 195/– 160/– 309/– 195/–

20 பெப்ரவரி, 2014 தரவுப்படி மூலம்: Cricinfo

ரிக்கி தாமஸ் பாண்டிங் (Ricky Thomas Ponting, டிசம்பர் 19, 1974) அவுஸ்திரேலிய முன்னாள் துடுப்பாட்டக்காரர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான இவர் ஒரு வலதுகை மட்டையாளர் ஆவார் . 2003 மற்றும் 2007 ஆண்டுகளின் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் போட்டியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணித் தலைவராக இருந்துள்ளார். அனைத்துக் கால துடுப்பாட்டத்தில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1] ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் பொற்காலமாகக் கருதப்படும் 2004 முதல் 2011 ஆண்டு வரையிலான கால தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் 2002 மற்றும் 2011 இல் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் அணித் தலைவராக இவர் இருந்தார். வலது கை மட்டையாளராகவும், சிறந்த களவீரராகவும், அவ்வப்போது பந்துவீச்சாளராகவும் செயல்பட்டார். 2000 ஆம் ஆண்டின் தசாப்த வீர்ராகத் தேர்வானார்.[2] 2003 மற்றும் 2007 ஆண்டுகளின் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் போட்டியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியிலும் 1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்ற ஆத்திரேலிய அணியில் ஸ்டீவ் வா தலமையிலான அணியிலும் இடம் பெற்றிருந்தார்.

ஆத்திரேலிய உள்ளூர்ப் போட்டிகளில் தஸ்மானியன் டைகர்ஸ் அணிக்காகவும் உள்ளூர் இருபது 20 போட்டிகளில் ஹோபர்ட் ஹர்ரிகேன்ஸ் அணிக்காகவும் ,இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் 2008 ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடினார். நவீன துடுப்பாட்ட சகாப்தத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணியின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் பிறயன் லாறா ஆகியோருடன் அறியப்படுகிறார். கடந்த ஐம்பது ஆண்டு கால துடுப்பாட்ட வரலாற்றில் தேர்வுத் துடுப்பாட்டத் தரவரிசைகளில் அதிகபட்ச புள்ளிகள் பெற்ற வீரர் எனும் சாதனையை டிசம்பர் 1, 2016 இல் படைத்தார். பின்னர் இந்தச் சாதனையானது இதே அணியைச் சார்ந்த ஸ்டீவ் சிமித்தால் டிசம்பர், 2017 இல் முறியடிக்கப்பட்டது.[3]

1992 ஆம் ஆண்டில் தஸ்மானியாவிற்காக இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். அப்போது இவரின் வயதானது 17 ஆண்டுகள் மற்றும் 337 நாட்கள் ஆகும். மிக இளம்வயதில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்தார். இவரின் முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் தென்னாப்பிரிக்காவில் 1995 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரானது ஆகும். இவரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டம் அதே ஆண்டில் பெர்த்தில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரானது ஆகும்.அந்தப் போட்டியில் இவர் 96 ஓட்டங்கள் எடுத்தார்.

இவர் மொத்தம் 160 தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் 370 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் போட்டிகளில் விளையாடி ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீர்ரர்களிலேயே அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 13,000 ஓட்டங்களை எடுத்த ஒரே ஆத்திரேலிய வீரர் ஆவார். இதற்கு முன் இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், ஜாக் கலிஸ்ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். புள்ளிவிவரங்களின் படி வெற்றிகரமான அணித்தலைவராக இருந்துள்ளார். 2004 முதல் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளிகளில் 77 தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் 44 போட்டிகளில் இவர் தலைமையேற்ற அணி வெற்றி பெற்றுள்ளது. துடுப்பாட்ட வரலாற்றில் இவர் 100 தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அணியில் இடம்பிடித்த ஒரே வீர்ரர் இவர் ஆவார்.[4][5][6][7] மேலும் 262 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியில் இடம் பிடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[8]

சான்றுகள்[தொகு]

  1. https://www.telegraph.co.uk/sport/cricket/international/australia/9712982/Michael-Vaughan-Ricky-Ponting-was-the-best-batsman-I-ever-played-against.html
  2. http://www.espncricinfo.com/decadereview2009/content/story/443957.html
  3. Smith closes in on Bradman, reaches joint-second highest batting points ever. ICC-Cricket.com. Retrieved 20 Dec 2017.
  4. ESPNcricinfo Staff (29 December 2010). "The proudest century". ESPNcricinfo. பார்த்த நாள் 30 December 2010.
  5. ESPNcricinfo Staff (29 December 2010). "Statistics / Statsguru / Test matches / Batting records-Most Test wins". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 19 January 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 30 December 2010.
  6. ESPNcricinfo Staff (29 December 2010). "Jump before you are pushed, Chappell tells Ponting". ESPNcricinfo. பார்த்த நாள் 30 December 2010.
  7. Ponting celebrates 100 Test wins – Rediff.com Cricket. Rediff.com (2011-09-03). Retrieved on 2013-12-23.
  8. ESPNcricinfo Staff (29 December 2010). "Statistics / Statsguru / One-Day Internationals / Batting records-most ODI wins". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 31 October 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 30 December 2010.

வார்ப்புரு:ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்


வெளியிணைப்புகள்[தொகு]

கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ரிக்கி பாண்டிங்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிக்கி_பாண்டிங்&oldid=2720928" இருந்து மீள்விக்கப்பட்டது