புய எலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புய எலும்பு
Humerus - anterior view.png
புய எலும்பு அமைவிடம் சிவப்பு வண்ணத்தில்
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்humerus
MeSHD006811
TA98A02.4.04.001
TA21180
FMA13303
Anatomical terms of bone

புய எலும்பு (ஆங்கிலம்:Humerus)[1] மேற்கையில் உள்ள ஒரு நீள எலும்பு வகை ஆகும். இது தோள்பட்டை மற்றும் முழங்கை பகுதிக்கு இடையில் அமைந்த எலும்பு ஆகும். புய எலும்பு மேல்முனை, கீழ்முனை மற்றும் நடுவே தண்டு பகுதியை கொண்டுள்ளது. இது தோள்பட்டை மூட்டு மற்றும் முழங்கை மூட்டு பகுதிகளை கொண்டது.

அமைப்பு[தொகு]

புய எலும்பு முப்பரிமாண படம்

புய எலும்பின் மேல்முனையில் உள்ள கோளவடிவ தலைப்பகுதி தோள் எலும்பு வெளிப்புற குழி வடிவ பகுதியுடன் இணைந்து தோள்பட்டை மூட்டை உருவாக்குகிறது. இதன் கீழ்முனை இணைப்பு பகுதி அரந்தி எலும்பு மற்றும் ஆரை எலும்பின் மேல்முனையின் இணைப்பு பகுதியுடன் இணைந்து முழங்கை மூட்டை உருவாக்குகிறது.

பெரும்பாலான பாலூட்டிகளில் மனிதர்களைப் போலவே புய எலும்பு கரங்களை உடலுடன் இணைக்கும் பகுதியாகவே உள்ளது. ஆனால் இதன் நீளம் மாறுபடுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Harper, Douglas. "Humerus". Online Etymology Dictionary. 6 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. Romer, Alfred Sherwood; Parsons, Thomas S. (1977). The Vertebrate Body. Philadelphia, PA: Holt-Saunders International. பக். 198–199. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-03-910284-X. https://archive.org/details/vertebratebody0000rome_a5a9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புய_எலும்பு&oldid=3581707" இருந்து மீள்விக்கப்பட்டது