இராகுல் திராவிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராகுல் திராவிட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராகுல் திராவிட்
2012இல் திராவிட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இராகுல் சரத் திராவிட்
பட்டப்பெயர்தி வால் (தடுப்புச்சுவர்), ஜாம்மி,
உயரம்5 அடி 11 அங் (1.80 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை வலச்சுழல்
பங்குமட்டையாளர், குச்சக் காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 207)20, சூன் 1996 எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு24, சனவரி 2012 எ ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 339)3, ஏப்ரல் 1996 எ இலங்கை
கடைசி ஒநாப1,6 செப்டம்பர் 2011 எ இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்19
ஒரே இ20ப31, ஆகத்து 2011 எ இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1990–2012கர்நாடகத் துடுப்பாட்ட அணி
2003ஸ்கொட்லாந்து துடுப்பாட்ட அணி
2000கென்ட் துடுப்பாட்ட அணி
2008–2010ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
2011–2013ராசத்தான் ராயல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.ப.து மு.த.து ப.அ.து
ஆட்டங்கள் 164 344 298 449
ஓட்டங்கள் 13,288 10,889 23,794 15,271
மட்டையாட்ட சராசரி 52.31 39.16 55.33 42.30
100கள்/50கள் 36/63 12/83 68/117 21/112
அதியுயர் ஓட்டம் 270 153 270 153
வீசிய பந்துகள் 120 186 617 477
வீழ்த்தல்கள் 1 4 5 4
பந்துவீச்சு சராசரி 39.00 42.50 54.60 105.25
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/18 2/43 2/16 2/43
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
210/0 196/14 353/1 233/17
மூலம்: கிரிக்இன்ஃபோ, 30 சனவரி 2012

ராகுல் சரத் திராவிட் (Rahul Sharad Dravid); பிறப்பு 11 சனவரி 1973) ஓர் இந்தியத் துடுப்பாட்டப் பயிற்சியாளர் மற்றும் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர், தற்போது அதன் தலைமை பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார். ஆண்கள் தேசிய அணிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு, இந்திய 19 வயதிற்குட்பட்டோர் துடுப்பாட்ட மற்றும் இந்தியா அ அணிகளின் தலைமைப் பயிற்சியாளராகவும் இருந்தார். இவரது பயிற்சியின் கீழ், 19 வயதுக்குட்பட்ட அணி 2016துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது மற்றும் 2018இல் வெற்றி பெற்றது.மட்டையாட்ட பாணிக்காகப் பரவலாக அறியப்படும் இவர்[1] சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் 24,177 ஓட்டங்கள் எடுத்தார். துடுப்பாட்ட வரலாற்றில் சிறந்த துடுப்பாட்டக்காரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[2] டிஃபன்டபிள் மற்றும் தி வால் என்றும் அறியப்படுகிறார்.[3]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

திராவிட் மத்தியப் பிரதேசத்தின் இந்தோரில், மராத்தி பேசும் பிராமண குடும்பத்தில் பிறந்தார்.[4][4] இவரது குடும்பம் பின்னர் கர்நாடகாவின் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தது, அங்கு வளர்ந்தார்.[5] இவரது தாய் மொழி மராத்தியாகும் .[6] திராவிட்டின் தந்தை, சரத் திராவிட், ஜாம் மற்றும் பிரிசர்வ்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தார், இது இவருக்கு ஜாம்மி என்ற புனைப்பெயரை உருவாக்கியது. இவரது தாயார் புஷ்பா, பெங்களூரில் உள்ள பல்கலைக்கழக விஸ்வேசுவரய்யா பொறியியல் கல்லூரியில் கட்டிடக்கலைப் பேராசிரியராக இருந்தார்.[7] திராவிட்டிற்கு விஜய் என்ற ஒரு தம்பி உள்ளார்.[8]

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

திராவிட் 12 வயது முதல் துடுப்பாட்டம் விளையாடத் தொடங்கினார், மேலும் 15 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் அணிகளில் கர்நாடகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[9] முன்னாள் துடுப்பாட்ட வீரர் கேகி தாராபூர், சின்னசாமி அரங்கதில் நடைபெற்ற கோடைக்கால முகாமில் பயிற்சியாளராக இருந்தபோது டிராவிட்டின் திறமையை முதலில் கவனித்தார்.[10] திராவிட் தனது பள்ளி அணிக்காக நூறு ஓட்டங்கள் அடித்தார்.இவர் இலக்குக் கவனிப்பாளராகவும் விளையாடினார்.[8]

சர்வதேச போட்டிகள்[தொகு]

உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தேசிய அணிக்காக 1994 வில்சு துடுப்பாட்டத் தொடருக்காக் அணியில் இடம்பெற்றார். ஆனால் விளையாடும் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 1996 ஆம் ஆண்டு திராவிட் இல்லாத 1996 உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியை தேர்வாளர்கள் அறிவித்தபோது, ஓர் இந்திய நாளிதழ் இது நியாயமற்ற செயல் என கூறியது.[11]

ஒருநாள் போட்டிகள்[தொகு]

1996 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு சிங்கப்பூரில் நடைபெற்ற சிங்கர் கிண்ணத் தொடரில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஏப்ரல் 3, 1996இல் வினோத் காம்ப்ளிக்குப் பதிலாக இவர் தனது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.[12][13] மூன்று ஓட்டங்கள் மட்டுமே எடுத்து முத்தையா முரளிதரன் பந்துவீச்சீல் ஆட்டமிழந்தார். ஆனால் போட்டியில் இரண்டு கேட்சுகளைப் பிடித்தார்.[14] அதைத் தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் பாக்கித்தானுக்கு எதிராக 4 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.[14]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

ஒருநாள் அறிமுகத்திற்கு மாறாக, இவரது தேர்வுத் துடுப்பாட்ட அறிமுகமானது மிகவும் வெற்றிகரமாக இருந்தது. ஐந்து ஆண்டுகளாக உள்நாட்டுத் தொடர்களில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக திராவிட் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.[15][16] சூன் 20, 1996 அன்று இங்கிலாந்துக்கு எதிராக இலார்ட்சில் நடைபெற்ற போட்டியில் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் காயம் காரணமாக அவருக்குப் பதிலாக தேர்வ்த் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[12][17] கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த மஞ்ச்ரேக்கருக்கு, இரண்டாவது தேர்வுப் போட்டியின் காலையில் உடற்தகுதி சோதனை நடத்தப்பட இருந்தது. மஞ்ச்ரேக்கர் இந்த சோதனையில் தோல்வியடைந்தால் அவருக்குப் பதிலாக திராவிட் விளையாடுவார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மஞ்ச்ரேக்கர் உடற்தகுதித் தேர்வில் தோல்வியடைந்ததால், நாணய சுழற்சிக்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பு, அப்போதைய இந்திய பயிற்சியாளராக இருந்த சந்தீப் பாட்டில், டிராவிட்டிடம் அவர் அறிமுகம் ஆவதைத் தெரிவித்தார்.[17]

சான்றுகள்[தொகு]

  1. "Extravagantly sound". ESPNcricinfo. 1 August 2016. http://www.espncricinfo.com/magazine/content/story/258278.html. 
  2. "Is Rahul Dravid the greatest middle-order batsman of all time?". BBC. 9 March 2012. https://www.bbc.co.uk/sport/0/cricket/17310407. 
  3. "9 Instances That Prove 'The Wall' Rahul Dravid is a National Treasure". 11 January 2019. https://www.news18.com/news/buzz/9-instances-that-prove-the-wall-rahul-dravid-is-a-national-treasure-1628847.html. 
  4. 4.0 4.1 . 
  5. "Cricinfo – Players and Officials – Rahul Dravid". http://content-ind.cricinfo.com/india/content/player/28114.html. 
  6. "Keeping the windows". http://www.thehindu.com/thehindu/mag/2004/09/12/stories/2004091200550300.htm. 
  7. "People | The Great Wall of India". Verveonline.com. http://www.verveonline.com/29/people/rahul/full.shtml. 
  8. 8.0 8.1 "Dravid's personal choices". Dravidthewall. http://www.dravidthewall.com/2008/01/his-personal-choices.html. 
  9. "webindia123-Indian personalities-sports-RAHUL DRAVID". http://www.webindia123.com/personal/sports/rahul.htm. 
  10. "Cricinfo – Coach Keki Tarapore reflects on pupil Rahul Dravid". http://content-www.cricinfo.com/england/content/story/103543.html. 
  11. Somani, Saurabh (16 September 2011). "The Rahul Dravid journey in ODIs". http://www.cricbuzz.com/cricket-news/44709/the-rahul-dravid-journey-in-odis. 
  12. 12.0 12.1 "Timeline: Rahul Dravid". ESPNcricinfo. http://www.espncricinfo.com/india/content/player/28114.html?index=timeline. 
  13. "Rahul Dravid Profile@Firstpost". http://www.firstpost.com/topics/rahul-dravid-85633.html. 
  14. 14.0 14.1 "Player Oracle: Rahul Dravid". https://cricketarchive.com/cgi-bin/player_oracle_reveals_results2.cgi?playernumber=2280&testing=0&opponentmatch=exact&playername=dravid&resulttype=All&matchtype=All&teammatch=exact&startwicket=&homeawaytype=All&opponent=&endwicket=&wicketkeeper=&searchtype=InningsList&howout=All&endscore=&playermatch=contains&branding=cricketarchive&captain=&endseason=&startscore=&team=&startseason=. 
  15. . 
  16. Guyer, Julian (20 July 2011). "Lord's feels like home, says Dravid". http://www.cricketcountry.com/news/lord-s-feels-like-home-says-dravid-4118. 
  17. 17.0 17.1 Prabhudesai, Devendra (December 2005). The Nice Guy Who Finished First: A Biography of Rahul Dravid. Rupa Publications. 

வார்ப்புரு:இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஒ.ப.து தலைவர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகுல்_திராவிட்&oldid=3742030" இருந்து மீள்விக்கப்பட்டது