சந்தா கோச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சந்தா கோச்சர்

சந்தா கோச்சர் (பிறப்பு 17 நவம்பர் 1961) இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி வங்கியின் மேலாண் இயக்குனரும் தலைமை நிர்வாக அலுவலரும் ஆவார். 2015 ஆம் ஆண்டுக்கான டைம் இதழின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இவர் பெயரும் இடம்பெற்றது.[1] ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்புரில் பிறந்த இவர், மும்பையில் உள்ள ஜெய் ஹிந்த் கல்லூரியில் பட்டம் பெற்றார். மும்பையில் வசிக்கும் இவர், தீபக் கோச்சர் என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு ஆர்த்தி, அர்ஜுன் என இரு குழந்தைகள் உள்ளன. அமெரிக்காவின் பிரபல ஃபார்ச்சூன் இதழில், மற்ற உலக அளவிலான சிறந்த பெண் நிர்வாகி பட்டியலில் இவர் பெயர் அடிக்கடி இடம் பெறும். [2] வங்கித்துறையில் சிறப்பாக பங்களித்ததற்காக, 2010 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கி சிறப்பித்தது[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தா_கோச்சர்&oldid=2119141" இருந்து மீள்விக்கப்பட்டது