பர்வீன் சுல்தானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்வீன் சுல்தானா
பிறப்பு10 சூலை 1950 (1950-07-10) (அகவை 73)
பிறப்பிடம்நகோயான், அசாம், இந்தியா
இசை வடிவங்கள்காயல், பஜனைகள், துமிரிஸ்
தொழில்(கள்)இந்துஸ்தானி இசை
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்1962– வாழ்பவர்

பேகம் பர்வீன் சுல்தானா (Begum Parveen Sultana பிறப்பு: சூலை 10, 1950) ஒரு இந்துஸ்தானி இசைப் பாடகியாவார் .[1] இவர் இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்மசிறீ (1976), பத்ம பூசண் (2014) விருதுகளையும், சங்கீத நாடக அகாதமி, வழங்கிய சங்கீத நாடக அகாதமி விருதினையும், (1998), இந்தியாவின் தேசிய அகாடமி ஆஃப் மியூசிக், வழங்கிய நடனம் மற்றும் நாடகத்திற்காகவும் வழங்கப்பட்ட விருதினையும் பெற்றுள்ளார்.

இளமை வாழ்க்கை[தொகு]

இந்தியாவின் அசாமிலுள்ள நகோயான், என்ற இடத்தில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இக்ரமுல் மஜித் மற்றும் ஈரானைச் சேர்ந்த மரூஃபா பேகம் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தாத்தா ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரானுக்கு புலம் பெயர்ந்துள்ளார். இவர் ஆரம்பக் கல்வியை மிஷன் பள்ளியில் பயின்றுள்ளார். தனது மகள் பர்வீனின் திறமையைக் கவனித்த மருஃபா தனது கணவரிடம் மகளுக்கு குருவாக இருந்து பாடல்களை கற்றுக் தர கோரினார். பர்வினின் தந்தை மிகவும் கண்டிப்பானவராக இருந்தார், லதா மங்கேஷ்கரின் பாடல்களைக் கேட்கவும், இந்திய பாரம்பரிய பாடலாசிரியர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும் அனுமதித்தார். பின்னர் தனது தாத்தா முகம்மது நஜீஃப் கான் என்பவரிடம் ஆரம்ப பயிற்சியைப் பெற்றார். பின்னர் அவர் பைரெந்திர குமார் ஃபூகன் மற்றும் ஹிரன் சர்மா ஆகியோரிடமிருந்தும் இசையை கற்றுக் கொண்டார் [2] பின்னர் அவரது தந்தையின் ஆலோசனையின்படி, அவர் வங்காளத்தின் பண்டிட் சின்மோய் லஹிரியிடம் இசை கற்றுக் கொண்டார். பண்டிட் சின்மோய் லஹிரியின் வீட்டிற்கு சென்றபோது ஒரு நாள் தனது குருவும் எதிர்கால கணவருமான தில்சாத் கானை சந்தித்தார். பின்னர் இவரை தனது தில்சாத் சீடராக ஏற்றுக்கொண்டார். ஆப்கானிஸ்தானில் உள்ள ஜோஷ்ன் என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் தில்ஷாத் கானுடன் சேர்ந்து இவரது முதல் பாடலை பாடியுள்ளார். அசைவ மற்றும் சைவ உணவுகள் இரண்டிலும் பர்வீனுக்கு விருப்பமுண்டு . அரங்க நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமான முகபாவங்களை உறுதிப்படுத்த ஒரு பெரிய கண்ணாடி முன் மணிக்கணக்கில் பயிற்சி மேற்கொள்வார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

1962இல் பர்வீன் 12 வது வயதில் தனது முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். அப்துல் மஜ்ஜித்தின் அசாமிய படமான மோரம் திரிஷ்னா என்ற படத்தில் தனது முதல் பாடலை ஆரம்பித்தார்.அதன் பிறகு பாலிவுட் படங்களான "காதர் : ஏக் பிரேம் கதா , "குத்ரத் , "தோ பூந்த் பானி ,பகீஷா, மற்றும் பல அசாமிய படங்களிலும் பாடியுள்ளார், விக்ரம் பட் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 1920 என்ற படத்திலும் பாடியுள்ளார். .[3] 1981 இல் வெளியான குத்ரத் படத்தில் இடம் பெற்ற ஹுமெய்ன் தும்சே பியார் கித்னா என்ற பாடலை பாடியுள்ளார். எச் எம் வி ,பாலிடர், மியூசிக் இந்தியா, பாரத் ரெக்கார்ட்ஸ், ஆவிடாஸ், சோனா டிஸ்க் மற்றும் அமினோ போன்ற இசை நிறுவனங்களுக்கு பாடியுள்ளார்.

1976 ஆம் ஆண்டில் தனது 25வது வயதில் பத்மஸ்ரீ விருதினை பெற்றுள்ளார்.

Parveen Sultana அர்க்யாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 2011

சொந்த வாழ்க்கை[தொகு]

உஸ்தாத் தில்ஷாத் கானை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு.

விருதுகள்[தொகு]

 • பத்மஸ்ரீ விருது, 1976
 • கந்தர்வ கலாநிதி , 1980
 • மியான் தான்சேன் பரிசு ,1986
 • அசாம் அரசு வழங்கிய சங்கீத் சம்ரக்கி, 1994
 • பிலிம் ஃபேர் சிறந்த பெண் பாடகிக்கான விருது - குத்ரத் படத்திற்காக பாடிய ஹுமெய்ன் தும்சே பியார் கித்னா என்ற பாடலுக்காக விருது ,1981
 • சங்கீத நாடக அகாதமி விருது, 1999
 • அசாம் அரசு வழங்கிய ஸ்ரீமன்ட் சங்கர் தேவ் விருது .
 • 2014:இந்திய அரசு வழங்கிய பத்ம பூசண் விருது [4]

திரைப்பட வரலாறு[தொகு]

பர்வீன் பல படங்களில் பல பாடல்களை வருடம் முழுவதும் பாடி தனது குரல் வளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Parveen Sultana". Archived from the original on 25 சனவரி 2013.
 2. পাৰবীন চুলতানা, ধ্ৰুপদী সংগীতৰ প্ৰসিদ্ধ শিল্পী, বহুমুখ, Ajir Asom's Wednesday Special Edition, 16 May 2012
 3. Express Features Service (30 ஆகத்து 2008). "Malhar Magic". Express India. Archived from the original on 21 செப்டெம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 5 சூன் 2012.
 4. "Padma Awards Announced". Press Information Bureau, Ministry of Home Affairs. 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்வீன்_சுல்தானா&oldid=3791932" இலிருந்து மீள்விக்கப்பட்டது