சோபனா ராணடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோபனா ராணடே
Shobhana Ranade
முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானி ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருதை சோபனா ரணடேவுக்கு அளித்து பாராட்டுதல்
பிறப்பு26 அக்டோபர் 1924 (1924-10-26) (அகவை 99)[1]
இந்தியா, புனே
பணிசமூக சேவகர்
விருதுகள்பத்ம பூசண்
ஜம்னாலால் பஜாஜ் விருது
சிஎன்என் ஐபிஎன் ரியல் ஹீரோஸ் 2012 வாழ்நாள் சாதனை விருது
இரவீந்திரநாத் தாகூர் பரிசு
பூனேவின் பெருமை விருது
இராஜிவ் காந்தி மானவ் சேவா விருது
தேசிய விருது
மகாத்மா காந்தி விருது

சோபனா ராணடே (Shobhana Ranade) (பிறப்பு 26 அக்டோபர் 1924) என்பவர் இந்திய சமூக செயற்பாட்டாளர் மற்றும் காந்தியவாதியாவார். ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்றோருக்கு ஆற்றிய சேவைகளுக்காக இவர் சிறப்பாக அறியப்படுகிறார். இவரது  சமுதாய சேவையை பாராட்டும் விதமாக,  2011 ஆண்டு இவருக்கு இந்திய அரசின் மூன்றாவது உயரிய விருதான, பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[2]

வாழ்கைவரலாறு[தொகு]

மகாராட்டிரத்தின்புனேவில் 1924இல் ரானடே பிறந்தார். இவரது வாழ்வின் திருப்பு முனையாக 1942இல் இவரது 18ஆவது வயதில் புனேவில்  ஆகா கான் அரண்மனையில் காந்தியைச் சந்தித்ததார்.   இதன் விளைவாக சோபனா அப்போதிருந்து தன் வாழ்நெறியா காந்தியக் கொள்கைகளை தேர்ந்தெடுத்துக்கொண்டார்.[3]

சோபனா ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தார். 1955இல் அசாமுக்குப் பெயர்ந்து அங்கே இவர், ‘சிசு நிகேதன்’ என்ற பள்ளியைத் தொடங்கினார். திக்பாய் எண்ணெய் நகரத்தில் முதல் குழந்தை நல மையத்தையும் உருவாக்கினார். அதிம் ஜாதி சேவா சங்கத்தைத் துவக்கி, அதன்வழியாக நாகா பெண்களுக்கு நூற்பு பயிற்சியளிக்கும் ஒரு திட்டத்தைத் துவக்கினார்.

1979 இல் இவர் புனேவுக்குத் திரும்பி, காந்தி நேஷனல் மெமோரியல் சொசைட்டியை நிறுவி,  அகா கான் அரண்மனையை மையமாகக்  கொண்டு  பெண்களுக்கான ஒரு பயிற்சி நிறுவனத்தைத் உருவாக்கினார்.

1998 ஆம் ஆண்டு, காந்தி தேசிய நினைவு சங்கத்தின் கீழ், கஸ்தூர்பா மகாலா காதி கிராமியோதிக் வித்யாலயாவை  நிறுவினார். இது சுற்றியுள்ள 20 கிராமங்களில் உள்ள ஏழைப் பெண்களின் வணிகம்  மற்றும் திறண்களைக் கூட்டும் நோக்கில் துவக்கப்பட்டது.

பால்கிராம் மகாராஷ்டிரா என்ற பெயரில் மகாராஷ்டிர மாநிலத்தில் எஸ்ஓஎஸ் குழந்தைகள் கிராமத்தைத் தொடங்கினார். அதில் இப்போது 1600 ஆதரவற்றக் குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர். புனேவில் உள்ள சிவாஜி நகரில்,  சாலைவாழ் குழந்தைகளின் கல்வி, மறுவாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்டு ராணடேவால் நிறுவப்பட்ட தி ஹெர்மன் மீனர் சமூக மையம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. அதில் தற்போது  112 சிறுவர்கள் மற்றும் 138 சிறுமிகளான  சாலைவாழ் குழந்தைகளின் கல்வி, மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு சிறுவர் நலத்திட்ட திட்டமாக புனேயில் உள்ள சாஸ்வாட்டில் ராணடே நிறுவிய பால்கிரியா மற்றும் பல்சாடன் ஆகும்.   இந்த மையங்கள் இப்பொழுது 60 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் ராண்டே கங்கையைக் காப்போம் இயக்கத்தில் ஆர்வம் காட்டி, காந்தி நேஷனல் மெமோரியல் சொசைட்டி வழியாக கங்கையை மாசில் இருந்து காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுவருகிறார்.[4]

காந்தியைத் தனது இளம்வயதில் சந்தித்த ஆகாகான் அரண்மனையை மையமாக வைத்தே இன்னும் தனது பணிகளை சோபனா ராணடே தொடர்ந்துகொண்டிருக்கிறார்..

விருதுகளும், பரிசுகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Encyclopaedia of women biography: India, Pakistan, Bangladesh, Volume 3. A.P.H. Pub. Corp. 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8176482641. 
  2. "Padma announcement". http://www.rediff.com/news/report/padma-awards-2011-the-winners/20110126.htm. பார்த்த நாள்: 12 August 2014. 
  3. "Real Heroes profile" இம் மூலத்தில் இருந்து 7 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131007021257/http://www.realheroes.com/shobhana-ranade.php. பார்த்த நாள்: 12 August 2014. 
  4. "Save Ganga". http://www.savegangamovement.org/index.php?option=com_content&task=view&id=97&Itemid=130. பார்த்த நாள்: 12 August 2014. 
  5. "Jamnalal Bajaj" இம் மூலத்தில் இருந்து 7 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150207163013/http://www.jamnalalbajajfoundation.org/awards/archives/2011/women--and--child-welfare/shobhana-ranade. பார்த்த நாள்: 12 August 2014. 
  6. "CNN IBN award". https://www.youtube.com/watch?v=QC6Xo9zwbPY. பார்த்த நாள்: 12 August 2014. 
  7. "KGNMT" இம் மூலத்தில் இருந்து 12 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140812210933/http://www.kgnmt.org/awards.htm. பார்த்த நாள்: 12 August 2014. 
  8. "Rajiv Gandhi Manav Seva Award". http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=30110. பார்த்த நாள்: 12 August 2014. 
  9. "Balgram" இம் மூலத்தில் இருந்து 12 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140812205725/http://balgram.com/trustees_founder_members.html. பார்த்த நாள்: 12 August 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபனா_ராணடே&oldid=3742884" இருந்து மீள்விக்கப்பட்டது