ரஸ்கின் பாண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரஸ்கின் பாண்ட்

பிறப்பு ரஸ்கின் பாண்ட்
19 மே 1934 (1934-05-19) (அகவை 88)
காசோலி, இமாச்சலப் பிரதேசம், இந்தியா
தொழில் எழுத்தாளர், கவிஞர்
நாடு இந்தியர்
எழுதிய காலம் 1951-நடப்பு
இலக்கிய வகை சமகாலத்திய இலக்கியம்
கருப்பொருட்கள் தன்வரலாறு, பகுதி தன்வரலாறு, புனைவு, அபுனைவு, குறுநாவல், சிறுவர் இலக்கியம்

ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond, பி. மே 19, 1934) பிரித்தானிய வம்சாவளியில் பிறந்த ஒரு இந்திய எழுத்தாளராவார்.[1] ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் மற்றும் குழந்தைகளுக்கான எழுத்தாளர்கள் ஆகியோரிடையே ஒரு தனிப்பெரும் முன்னோடியாகக் கருதப்படுகின்றார். 1992இல் ”அவர் ட்ரீஸ் ஸ்டில் குரோ இன் டெஹ்ரா” (Our trees still grow in Tehra) என்ற சிறுகதை தொகுப்புக்காக இந்திய சாகித்திய காதமியின் சாகித்ய அகாடமி விருது பெற்றார். 1999 இல் குழந்தைகள் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ் விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ரஸ்கின் பாண்ட் இமாச்சல பிரதேசத்தில் கசோலி என்ற இடத்தில் பிறந்தார். அவரது தந்தை ஆப்ரி அலெக்சாண்டர் பாண்ட் இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய வேந்திய வான்படையில் பணியாற்றினார். அவருக்கு எல்லன் மற்றும் வில்லியம் பாண்ட் என்ற சகோதரியும் சகோதரரும் உண்டு. ரஸ்கினுக்கு 8 வயதான போது, அவருடைய பெற்றோரிடையே மணமுறிவு ஏற்பட்டது. அவரது தாய் ஒரு இந்தியரை மீண்டும் மண்ம் புரிந்தார். அவருடைய தந்தைக்கு அடிக்கடி மலேரியாவும் ஜாண்டிசும் ஏற்பட்டு இறந்தார். இதன் பின்னர் ரஸ்கின் தன்னுடை பத்து வயதில் டெஹ்ராவில் உள்ள தன் பாட்டியிடம் சென்றுவிட்டார். தனது குழந்தைப் பருவத்தை இளைஞர் பருவத்தையும் சிம்லா, ஜாம்நகர், மசூரி, டெராடூன், மற்றும் லண்டன் ஆகிய ஊர்களில் கழித்தார். 1960கள் முதல் லாண்டோரில் வாழ்ந்தார்.

இலக்கிய நடை[தொகு]

அவருடைய பல படைப்புகள் இமயமலை அடிவாரத்தில் உள்ள மலை நகர வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டவை. பாண்ட் அத்தகைய சூழலில் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார். அவரது முதல் புதினமான "த ரூம் ஆன் த ரூஃப்". அவருக்கு 17 வயதான போது எழுதப்பட்டு 21 வயதாகும் போது பிரசுரிக்கப்பட்டது. அது டெஹ்ராவில் கூரை மீது உள்ள அறை ஒன்றில் அவருடைய நண்பர்களுடன் வாடகைக்குத் தங்கி இருந்த அனுபவங்கள் சிலவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட புதினர். "ரூம் ஆன் த ரூஃப்" அவருக்கு 1957 ஆம் ஆண்டுக்கான ஜான் லெவ்லின் ரைஸ் நினைவுப் பரிசைப் பெற்றுத் தந்தது. அது முதல் அவர் முன்னூற்றுக்கும் அதிகமான சிறு கதைகள், கட்டுகரைகள், புதினங்களும், குழந்தைகளுக்கான 30 நூல்களும் எழுதியுள்ளார். தனது சுயசரிதையினை இரு பாகங்களாக வெளியிட்டுள்ளார் - ”சீன்ஸ் பிரம் எ ரைட்டர்ஸ் லைஃப்” என்ற பாகத்தில் ஆங்கிலேய-இந்தியாவில் அவர் வளர்ந்த பருவ வருடங்கள் பற்றி விவரிக்கிறார்; ”த லாம்ப் இஸ் லிட்” என்ற பாகத்தில் இதழ்களில் வெளியான அவருடைய கட்டுரைகள் மற்றும் தொடர்களைத் தொகுத்துள்ளார். தற்போது தனது தத்துக்குடும்பத்துடன் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள முசோரியில் வாழ்ந்து வருகிறார்.

குறிப்பிடத்தக்க படைப்புகள்[தொகு]

  • த ஐஸ் ஹேவ் இட் (சிறு கதை)
  • எ பிளைட் ஆஃப் பீஜியன்ஸ் (நாவல்)
  • ஆங்க்ரி ரிவர்
  • த வுமன் ஆன் பிளாட்பார்ம் 8
  • த டைகர் இன் த டனல்
  • த ரோட் டு சிம்லா

குறிப்புதவிகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2008-06-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஸ்கின்_பாண்ட்&oldid=3351758" இருந்து மீள்விக்கப்பட்டது