ஆர். கே. ஸ்ரீகண்டன்
ஆர். கே. ஸ்ரீகண்டன் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | சனவரி 14, 1920 |
இறப்பு | பெப்ரவரி 17, 2014 | (அகவை 94)
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
ஆர். கே. ஸ்ரீகண்டன் (R. K. Srikantan) (சனவரி 14 1920 - பெப்ரவரி 17 2014 )[1][2] தென்னிந்தியாவைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
கர்நாடக மாநிலத்தின் ருத்ரபட்டணம் எனும் ஊரில் பிறந்தவர். இவரின் தந்தை ஆர். கிருஷ்ணசாஸ்த்ரி ஹரிகதை வித்துவான் ஆவார். ஸ்ரீகண்டனின் தாத்தா நாராயணசுவாமி என்பவர் ஒரு வீணையிசைக் கலைஞராவார். ஆரம்பத்தில் தந்தையாரிடம் இசையினைக் கற்ற ஸ்ரீகண்டன் பின்னர் தனது சகோதர் ஆர். கே. வேங்கடராம சாஸ்த்ரியிடம் மேற்கொண்டு இசையினைக் கற்றுக்கொண்டார். மைசூரிலுள்ள பனுமையா உயர்பள்ளியில் பள்ளிக்கல்வியினை முடித்தபிறகு, மைசூரின் மகாராஜா கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்றார்.
தொழில் வாழ்க்கை[தொகு]
அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், முசிரி சுப்பிரமணிய ஐயர், மைசூர் வாசுதேவாசார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்ற அக்காலத்து புகழ்பெற்ற இசைக் கலைஞர்களிடம் பாடம் கேட்டு தன்னை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டார் ஸ்ரீகண்டன்.
மறைவு[தொகு]
ஸ்ரீகண்டன் பெப்ரவரி 17, 2014 அன்று பெங்களூரில் காலமானார்[3].
சிறப்புகள்[தொகு]
இவரின் பாட்டுமுறை, நாகசுவர பாணியில் அமைந்திருந்ததாக இசை விமரிசகர்கள் கருதுகிறார்கள். அதிக அளவு நாகசுவர இசையினை இவர் கேட்டு வளர்ந்ததே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
இவரின் 60 ஆண்டுகளுக்கும் மேலான இசைப்பணியில், இரண்டு மணி நேரக் கச்சேரியைத் தனது 92-வது வயதிலும் ஸ்ரீகண்டனால் தர முடிந்தது.[4][5]
பெற்ற விருதுகளும் பட்டங்களும்[தொகு]
- கான பாஸ்கரா விருது, 1947
- சங்கீத நாடக அகாதமி விருது, 1979[6]
- சங்கீத கலாநிதி விருது, 1996. வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை[7]
- நாத யோகி, 2007. வழங்கியது: பார்த்தசாரதி சுவாமி சபா, சென்னை
- பத்ம பூசண் விருது, 2010. வழங்கியது: இந்திய அரசு [8]
- பத்ம விபூசண் விருது, 2011. வழங்கியது: இந்திய அரசு
- வாணி கலா சுதாகரா விருது, 2013.[9] ; வழங்கியது: தியாக பிரம்ம ஞான சபா
- கேரள சங்கீத நாடக அகாதெமியின் சுவாதி புரஸ்கரம் விருது [10]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ R.K. Srikantan turns 93 The Hindu 14.01.2013
- ↑ "Eminent Carnatic vocalist R K Srikantan passes away". THE TIMES OF INDIA. 18 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "R.K. Srikantan passes away". The Hindu. 18-2-2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி) - ↑ பிரமிப்பு 92 வயதிலும் கணீரென்று குரல் தினமணி 6.1.2013
- ↑ http://www.thehindu.com/features/friday-review/music/his-art-belies-his-age/article4268922.ece
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018. Archived from the original on 2018-03-16. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
- ↑ "AWARDS - SANGITA KALANIDHI". மியூசிக் அகாதெமி. 23 டிசம்பர் 2018. 23 டிசம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.pib.nic.in/newsite/erelease.aspx?relid=69364
- ↑ http://www.thehindu.com/news/cities/chennai/vani-kala-sudhakara-awards-conferred/article5441210.ece
- ↑ கர்நாடக இசைக் கலைஞர் ஆர்.கே.ஸ்ரீகண்டனுக்கு கேரள சங்கீத உயர் விருது தினமணி 27.6.2009
வெளியிணைப்புகள்[தொகு]
- He was an outstanding teacher
- Devotion of a lifetime - ஒரு சிறப்புக் கட்டுரை
- R.K. Srikantan: Homage through memories
- Voice of a Generation - வாழ்க்கை வரலாற்று நூல் குறித்த கட்டுரை 1
- Simply Srikantan - - வாழ்க்கை வரலாற்று நூல் குறித்த கட்டுரை 2
உசாத்துணை[தொகு]
'நாத முனி' எனும் தலைப்பிலமைந்த கட்டுரை (பக்கம் எண்: 32), தினமணி இசைவிழா மலர் (2011-2012)