உள்ளடக்கத்துக்குச் செல்

பி. கே. சதுர்வேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி.கே.சதுர்வேதி
பணிஇந்திய அரசாங்கத்தின் திட்டக்குழு உறுப்பினர்.

பி.கே.சதுர்வேதி (B. K. Chaturvedi) என்பவர் ஓர் இந்திய ஆட்சிப் பணியாளர் ஆவார். இவர் இந்திய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரவை செயலாளரும் ஆவார், இவருடைய உள்நாட்டு குடிமைச் சேவைகளை முன்வைத்து இவருக்கு 2010 ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது[1]. இந்திய ஆட்சிப் பணியினருக்கான 1966 ஆம் ஆண்டின் அணியைச் சேர்ந்தவர் ஆவார்.

தொடக்கக்கால வாழ்க்கை[தொகு]

பி கே சதுர்வேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பாடத்தை சிறப்புப் பிரிவாகக் கொண்டு, இயற்பியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும், இவர் இங்கிலாந்தின் மான்செசுட்டர், பல்கலைக்கழகத்தில் 1978 ஆம் ஆண்டு பொது நிர்வாகப் படிப்பையும் படித்தார்.

வாழ்க்கை[தொகு]

இந்திய ஆட்சிப் பணியில் சேர்வதற்கு முன்னர், சதுர்வேதி, அலகாபாத் நகரிலுள்ள மோதிலால் நேரு மண்டல பொறியியல் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

இந்தியாவின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், சதுர்வேதியை 2004 ஆம் ஆண்டில் இந்திய நிர்வாகச் சேவைப் பணியினருக்கான சிறந்தவொரு உயர்மட்டப் பணித்துறைஞராக அலகாபாத்திலிருந்து தேர்ந்தெடுத்தார்.

இந்திய அரசாங்கத்தின் திட்டக் குழு உறுப்பினராகவும்[2], 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பதின்மூன்றாவது நிதிக்குழுவின் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார்

மேற்கோள்கள்[தொகு]

  1. "YearWise List Of Recipients - Bharat Ratna Padma Awards: 1954-2014" (PDF). நடுவண் உள்துறை அமைச்சகம், இந்தியா. 21 மே 2014. Archived from the original (PDF) on 2016-11-15. பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2016.
  2. "திட்டக் குழு உறுப்பினர்கள் பட்டியல்" (PDF). திட்டக் குழு, இந்தியா. 2014. பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2016.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._சதுர்வேதி&oldid=3563181" இலிருந்து மீள்விக்கப்பட்டது