பா. முத்துராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பா. முத்துராமன் (Balasubramanian Muthuraman) என்பவர் ஒரு பொறியாளர் மற்றும் தொழில் துறை நிருவாகி ஆவார்.[1] இவர் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தார்.  தொடக்கத்தில் 1966 இல் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். இரும்பு உருக்கும் உற்பத்தியிலும் பொறியியல் வளர்ச்சியிலும் அனுபவம் பெற்ற பிறகு டாடா ஸ்டீல் நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் மாற்றப்பட்டார். இறுதியாக மேலாண்மை இயக்குநராக இருந்தார். தமது 70 ஆம் அகவையில் டாடா குழுமத்திலிருந்து ஒய்வு அடைந்தார்.[2] இவருக்குப் பத்ம பூசண் விருதை 2012 ஆம் ஆண்டில் நடுவணரசு வழங்கியது.

படிப்பு[தொகு]

சென்னையில் இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தில் உருக்கியலில் பொறியியல் பட்டம் பெற்றார். பொது மேலாண்மைப் பயிற்சியில் பட்டமும் பெற்றார்.

பிற பதவிகள்[தொகு]

ஜாம்செட்பூர் எக்ஸ் எல் ஆர் ஐ சேவியர் மேலாண்மைப் பள்ளியில் தலைவராகவும், கரக்பூரில் இந்தியத் தொழில் நுட்ப நிறுவனத்தின்   ஆளுநர் போர்டு தலைவராகவும் இருந்தார்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._முத்துராமன்&oldid=2888820" இலிருந்து மீள்விக்கப்பட்டது