சிவக்குமார சுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவக்குமார சுவாமி
2007-இல் சிவக்குமார சுவாமி
பிறப்புசிவண்ணா
(1907-04-01)1 ஏப்ரல் 1907
வீராப்புரா, மகதி, மைசூர் இராச்சியம்[1]
இறப்பு(2019-01-21)21 சனவரி 2019
(aged 111 ஆண்டுகள், 295 நாட்கள்)[2]
தும்கூர், கர்நாடகம், இந்தியா
மற்ற பெயர்கள்சித்தகங்கா சுவாமிகள், Nadedaduva Devaru, Kayaka Yogi, Trivida Daasohi, Abhinava Basavanna[3]
பணிHumanitarian,
சித்தகங்கா மடத் தலைவர்
அமைப்பு(கள்)சித்தகங்கா கல்விக் கழகம்
விருதுகள்பத்மபூசண் (2015)[2]
கர்நாடக ரத்னா (2007)[4]

சிவக்குமார சுவாமி (Shivakumara Swami, 1 ஏப்ரல் 1907 – 21 சனவரி 2019)[1] இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆன்மீக தலைவரும் கல்வியாளரும் ஆவார். இவர் கர்நாடகத்தைச் சேர்ந்த சித்த கங்கா மடத்தின் தலைவரும் வீர சைவப் பிரிவில் ஒரு முக்கிய தலைவருமாவார். அவருடைய இறப்புக்கு முன்பு அதாவது 111 ஆண்டுகள் 295 நாட்கள் வாழ்ந்தவர் இந்தியாவில் நீண்ட நாட்கள் வாழ்ந்து கொண்டு வாழ்ந்தவர்கள் பட்டியலில் இருந்தார். 2015 ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருதை அளித்தது.[2]

சமூகப் பணி[தொகு]

துவக்கப் பள்ளி முதல் பொறியியல் முதலான கல்லூரி படிப்பு வரை இவர் மொத்தம் 132 கல்வி நிறுவனங்களை தோற்றுவித்துள்ளார். மேலும் இவரது குருகுலத்தில் பத்தாயிரம் பள்ளி செல்லும் வயதில் உள்ள அனைத்து மத சாதி மாணவர்களுக்கும் இலவச உணவு உடை இருப்பிடத்துடன் கல்வி வழங்கப்படுகிறது.[3]

பெருமைகளும் விருதுகளும்[தொகு]

இவரது மனிதநேய பணியைப் பாராட்டி கர்நாடக பல்கலைக்கழகம் 1965ஆம் ஆண்டு இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. மேலும் அவரது நூறாவது பிறந்த ஆண்டான 2007ஆம் ஆண்டு கர்நாடக அரசு மாநிலத்தின் உயர்ந்த விருதான கர்நாடக ரத்னா விருதினை அளித்தது.[4] 2015 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூஷன் விருது அளித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Who was Shivakumara Swami?". The Indian Express (in Indian English). 21 January 2019. பார்க்கப்பட்ட நாள் 21 January 2019.
  2. 2.0 2.1 2.2 Bhuvaneshwari, S. (21 January 2019). "Siddaganga Mutt head Shivakumara Swamy passes away" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/siddaganga-mutt-seer-passes-away/article26049720.ece?homepage=true. பார்த்த நாள்: 21 January 2019. 
  3. 3.0 3.1 "Shivakumara Swami's 111 years will be remembered as a life dedicated to simplicity, learning and service to society". Firstpost. 21 January 2019. https://www.firstpost.com/india/shivakumara-swamis-111-years-will-be-remembered-as-a-life-dedicated-to-simplicity-learning-and-service-to-society-5936501.html. பார்த்த நாள்: 21 January 2019. 
  4. 4.0 4.1 "Seer turns 110, devotees seek Bharat Ratna". The New Indian Express. 1 April 2017. http://www.newindianexpress.com/states/karnataka/2017/apr/01/seer-turns-110-devotees-seek-bharat-ratna-1588518.html. பார்த்த நாள்: 21 January 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவக்குமார_சுவாமி&oldid=2888797" இலிருந்து மீள்விக்கப்பட்டது